பகை வளர்ந்தது

 

 

இப்பொழுது காலை 9 மணி. காலையிலேயே நாலு மணிக்கு எழுந்திருச்ச நிலா, வீட்ல இருந்து வெளியில் கிளம்பும் பொழுது நேரம் சரியாக இருக்கு வீட்டு வேலை எல்லாம் செஞ்சு முடிப்பதற்கு.

ரொம்ப பரபரப்பான அந்த சிட்டில, எல்லாரும் ஏதோ ஒரு வகையில ரொம்ப மாடர்னாகவே இருக்காங்க. ஆனா இவள் பார்க்கிறதோ ஒரு ஐடி கம்பெனி வேலை. ஆனா…

அந்த மாதிரி அவளுடைய உடைகள் இருக்காது. அவளும் இருக்க மாட்டா. முட்டிக்கு கீழே வரைக்கும் தைத்து வைத்திருக்கிற சுடிதார், அதுவும் பழைய மாடல்.

தலை நிறைய சொத சொதன்னு தேங்காய் எண்ணெய் பூசி கொள்வாள். தலைக்கே குளிச்சாலுமே எண்ணெய் தேய்க்காமல் வெளியில போற பழக்கம் அவளுக்கு இல்லை.

பாட்டி மாதிரி ஒரு ஹேண்ட் பேக். அவளோட செருப்பு நூற்றுக்கு நூறு சதவீதம் பாட்டி செருப்பு தான். அவளுக்கு எத பார்த்தாலும் பயம்.

இந்த விஷயம் அவள் இருக்கிற பிளாட்டில, அதுக்கப்புறம் அவள் பஸ் ஏற போற வரைக்கும் இருக்கிற தூரம் வரைக்கும் இருக்கிற ஆட்களுக்கு நல்லா தெரியும். அதனால அவள் போகும்போதெல்லாம் வழக்கமான கிண்டல், நக்கல். அது மட்டும் இல்லாம, அவள் பயங்கரமா பயப்படுவாள்னு தெரிஞ்சதால வேணும்னே பயப்படுற மாதிரியே அவள் பக்கத்தில் வந்து மிரட்டுவது… இப்படி எக்கச்சக்கமான விஷயங்களை கடந்து தான் அவ பஸ் ஏறணும்.

சைக்கிள் கூட அவளுக்கு ஓட்ட தெரியாது.

இந்த நிலைமையில் அவள் கேட்டை கடந்து போகும்போது என்ன பெரிய விஷயம் பண்ணிட்டு இருக்க போல…

“பார்த்தேன்… பார்த்தேன்… ஒன்னுக்கு ரெண்டு தடவை பார்த்தேன்… நீ யார் வீட்டுக்குள்ள இருந்து வந்தேன்னு பார்த்தேன்…”

இப்படி அந்த வாட்ச்மேன் அவளை கிராஸ் பண்ணும் பொழுது, வேணும்னே சத்தமாக அவளை பார்த்து கிண்டல் பண்ற மாதிரி பேசினான். ஆனா அவளோ அங்கிருந்து வேக வேகமாக நடந்து அந்த இடத்தை கடந்து ஓடினாள்.

மனசெல்லாம் ஒரு மாதிரி படபடன்னு இருந்துச்சு. “அப்பா கிட்ட போய் இந்த வாட்ச்மேன் அண்ணா ஏதாவது சொல்லிடுவாங்களோ? அப்படி அப்பா கிட்ட சொன்னா என்ன ஆகும்?” இப்படி எல்லாம் அவள் மனசுக்குள்ள பயம் அளவுக்கு அதிகமாக இருக்கு.

அதை யோசிச்சுக்கிட்டே அவள் நடந்து போகும்போது,
“ஏய்… வந்துருச்சுடா அது…”
இப்படி சொல்லிக்கிட்டு ஒரு மூணு ஆட்டோ டிரைவர்கள் வந்து,

“மேடம் என்னோட ஆட்டோவுல ஏறுங்க…”
“மேடம், அவன் வேணாம்… மேடம் என்னோட ஆட்டோவுல இருங்க…”

ன்னு மூணு பேரும் வேணும்னே அவளை வம்பு இழுக்கும் பொழுது, அவள் பதட்டத்துல என்ன பண்ணனும்னு தெரியாம, மூணு பேரையும் இனி எப்படி கடந்து போகணும்னு பதற்றத்தோடு வேக வேகமாக ஓடினாள்.

“மேடம்… ஒருநாள் இல்ல ஒரு நாள் உங்களை நாங்க ஆட்டோவுல ஏற்றாம விடமாட்டோம் மேடம்…”
“ஐ.டி. மேடம்…”
“எங்களுக்கு கொஞ்சம் வருமானத்தை கொடுங்க…”

இப்படி அவளை ரொம்ப டீஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.

இது எப்போதும் அவளுக்கு நடக்கிற ஒரு விஷயம் தான். ஆனா யாருமே இதைக் கேட்கவும் மாட்டாங்க. கண்டுக்கவே மாட்டாங்க.

கரெக்டா 9:10க்கு பஸ் வந்துரும். ஆனா இத்தனை பேர் அவ கடந்து போறதுக்குள்ளேயே அந்த பஸ் எடுத்துருவாங்க.

அதையும் அவள் ஓடிப்போய் தான் ஏறணும்.

“ஸ்டாப் அண்ணா… பஸ்ஸ கொஞ்சம் ஸ்டாப் பண்ணுங்க…”

இப்படி பவ்யமா கத்திக்கிட்டு அந்த பஸ் பின்னாடி ஓடுவா.

அடிச்சு புடிச்சு பஸ் உள்ள அந்த கூட்டத்துக்குள் ஏறினதுமே, அங்கிருந்து டிரைவர் ஒரு பக்கம் பயங்கரமாக சத்தம் போடுவார்.

“ஏய் மாங்கொட்டை மூஞ்சி…”
“அறிவு இல்லையா உனக்கு?”
“எல்லாரும் எத்தனை மணிக்கு வந்து பஸ்ல ஏறி உக்காந்தா, நீ மட்டும் எப்ப பார்த்தாலும் ஓடி வந்து தான் ஏறுவியா?”
“எங்கேயாவது விழுந்து தொலைஞ்சு எங்கள கேஸ்ல மாட்டிவிட்டு தொலையாத…”
“தினமும் உனக்கு இதே பொழப்பா போயிடுச்சு.”
“அடுத்த தடவை ஓடி வந்து ஏறுன… அவ்வளவுதான்… பாத்துக்க…”

“வந்து சேருது பாரு…”

இப்படி எல்லாம் பேச்சு வாங்கிகிட்டு அந்த பஸ்ல தினமும் வந்துட்டு இருக்கா. எல்லாருமே அவளை பார்த்து சிரிப்பாங்க அந்த பஸ்குள்ள.

ஸ்கூல் போற பசங்க கூட அவளை கிண்டல் பண்ணுவாங்க. அவள் சீட் பிடிச்சு உட்கார்ந்து இருந்தா கூட, சில நேரம் அந்த ஸ்கூல் பசங்க அவளை எழுப்பி விட்டு நிக்க வச்சுடுவாங்க.

அந்த அளவுக்கு சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அவள் விட்டுக் கொடுத்து போறது அவள் நினைச்சுக்க, ஆனா பயப்படுறதாக மத்தவங்க நினைச்சுக்கிறாங்க. ரெண்டும் கலந்த நிலைமையில அவள் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவளாக அவளை அவளே பார்த்துக் கொள்கிறாள்.

ஆனால் ஒரு விஷயத்தை தவிர…

ஆபீஸ்ல இருக்குற அர்ஜுன்…

“ஆபீஸ்ல யாருமே என்கிட்ட ஒழுங்கா பேச மாட்டாங்க. ஆனா அர்ஜுன் அப்படி இல்ல…”

டெய்லி அவள் கிட்ட பேசாம அவன் போக மாட்டான். இத்தனை விஷயத்தை கடந்து அவள் போவதற்கான ஒரு முக்கியமான காரணம் அர்ஜுன்.

அவனைப் பார்த்தாலே அவள் மனசுக்குள்ள ஏதோ பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சிடுது.

அந்த ஆபீஸ்ல அவள் சந்தோஷமா இருப்பதற்கு காரணமே அவன் மட்டும்தான். அவனை பார்ப்பதற்காகவே லீவு எடுக்காமல் போய்கிட்டு இருக்கா.

இரண்டு பஸ் மாறி அவளுடைய ஆபீஸ்க்கு வந்துட்டா. அந்த கம்பெனியில் இருக்கிற வாட்ச்மேன் எல்லாருக்கும் வணக்கம் வைப்பார். ஆனா யாருமே அவரை கண்டுக்கவே மாட்டாங்க.

ஆனா இவளாகவே அவர்கிட்ட போய்,
“குட் மார்னிங் அண்ணே…”
ன்னு சொன்னாலும் கூட, அவர் ஒரு மாதிரி ஏளனமாக பார்த்துட்டு திருப்பி சொல்லவே மாட்டார்.

இதுதான் தராதரம் பார்க்கிறதுக்கான முதல் நிலைப்படி.

மத்தவங்க பயங்கரமாக மேக்கப் போட்டுட்டு வராங்க. ஆனா சாதாரணமா தனக்கு பிடிச்ச மாதிரி வர பொண்ணு, அவருக்கு ரெஸ்பெக்ட் கொடுத்தாலும் கூட, ரெஸ்பெக்ட் கொடுக்காத ஆட்கள் மேல தான் அவருக்கு அளவுக்கு அதிகமான ஈர்ப்பும் மரியாதையும் இருக்கு.

இப்படி ஒவ்வொரு இடமாக டீஸ் பண்றது, அவமானப்படுத்துவது, அவமரியாதையாக நடத்துவது… இப்படி எக்கச்சக்கமான விஷயங்களை அவள் ஒவ்வொரு நாளுமே சந்தித்து, அவள் மனது பழகி போயிடுச்சு.

இப்போ அவள் வேகமாக ஆபீஸ்க்குள்ள போனதுமே, அங்கேயும் இதுபோல தான். சின்ன சின்ன விஷயங்கள் கூட அவளை காயப்படுத்துற மாதிரி நடந்தது.

ஆனா,
“ஹாய் நிலா… இப்பதான் வந்தீங்களா?”
“இன்னைக்கு என்ன பஸ் லேட் ஆயிடுச்சா?”

இப்படி ஒரு குரல் கேட்கும்.

“சாப்பிட்டியா நிலா?”
“நீ உங்க வீட்ல என்ன சாப்பாடு?”

இப்படி எல்லாம் கேட்டுக்கிட்டே அர்ஜுன் அவள் பக்கத்துல வந்து நிற்பான்.

ரொம்ப ஹான்சமான ஒரு பையன். பார்மலா டிரஸ் பண்ணி, ஒரு பிட்டான உடம்போட, வசீகரமான முகத்தோட, அவன் எல்லாத்தையும் அட்ராக்ட் பண்ணிடுவான்.

இதற்கான பதில் அவளுடைய சிரிப்பு மட்டும் தான்.

அவன்கிட்ட ஒழுங்கா கூட அவள் பேச மாட்டாள். அவன் பேசினால் அவள் மனசுக்குள்ள ஒரே வெட்கமாக இருக்கும்.

அவன் ஒரு நாள் வராட்டி கூட, அவள் கண்கள் அவனை தேடிக் கொண்டே இருக்கும்.

சில நேரத்துல “ஏதாவது டவுட் கேட்க வரேன்னு” அவளோட உக்காந்திருக்கும் சேர் பின்னாடி நின்னுகிட்டு, கால வச்சு அவளை ஆட்டிவிட்டு, நிலாவுக்கு பின்பக்கமாக நின்று நிறைய சந்தேகங்கள் கேட்டுக் கொண்டிருப்பான்.

அப்போ அவளுக்கு இன்னும் நெருக்கமாக இருப்பது போல தோன்றும்.

அப்படி ஒரு விஷயம் மட்டும் நடந்தா, அவளுக்கு ராத்திரி முழுவதும் தூக்கமே வராது… இதை நினைச்சு…

அதே நேரத்துல…

சினேகா ரொம்ப நேரம் கழிச்சு கண் முழிச்சிட்டா. விக்ரம் நியூஸ் பேப்பரை கையில் வைத்தபடி, அவனுடைய வீட்டு நிலைபடிக்கு பக்கத்துல நின்றபடி படிச்சிட்டு இருக்கான்.

அந்த நேரத்துல அவள் அவன் பின்பக்கமாக வந்து இறுக்கமாக கட்டி அணைத்தாள்.

இதைக் பார்த்ததுமே அவன் அவளுடைய கைகளை உதறி விட்டான்.

ஆனால் அவளோ இன்னும் நிதானத்திற்கு வராமல், மறுபடியும் மறுபடியும் அவனை வற்புறுத்தி கட்டிப்பிடிக்கும் போது, அந்த நேரத்துல நிலாவுடைய அப்பா சங்கர் வெளியில வந்தார்.

அவள் கொஞ்சி கொஞ்சி அவன்கிட்ட அளவுக்கு அதிகமான உரிமை எடுத்துக்கிட்டு,
“என்ன டார்லிங்…”

“ரொம்ப ஓவரா போய்கிட்டு இருக்க…”

இன்னும் இது எத்தனை நாளைக்கு தான் இப்படி பேசிக்கிட்டு அவனை வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது, ஒரு சின்ன கலாட்டா மாதிரி அவன் கையை தட்டி விட, அவள் மறுபடியும் அதுபோல பண்ண…

இதை சங்கர் பார்த்தார்.

பயங்கர கோபத்தோடு,
“ஏய் தம்பி… உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது?”
“இது ஃபேமிலி இருக்கிற இடம்.”
“இங்கே வந்து நீ இப்படி அசிங்கம் பண்ணிட்டு இருக்க…”
“கதவை மூடிக்கிட்டு எதுவும் பண்ணாம, இப்படி தொறந்து போட்டு குடும்பம் இருக்கிற வீட்டுப் பக்கமா அசிங்கம் பண்ணிட்டு இருக்க வெக்கமா இல்லையா உனக்கு?”
“இதுக்கு தான் பேச்சுலர் இங்க வைக்க கூடாதுன்னு நானு அசோசியேஷன்ல பேசிக்கிட்டே இருக்கேன்.”
“ஆனா யாருக்கும் புரிய மாட்டேங்குது…”
“ஒரு ஒழுக்கம் இல்லாம இப்படி கீழ்த்தரமா நடந்துக்கிறவானுங்கன்னு நான் எவ்வளவோ சொன்னேன்…”

“ஏதோ தெரு நாய்கள் மாதிரி கண்ட இடத்துல கண்டதையும் பண்ணிக்கிட்டு…”

இப்படி அவர் கோபமாக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கும்போது, இதைப் பார்த்த சினேகா,

“How dare you?”

“Hey old man… உன்ன தான் கேட்கிறேன்.”
“என்ன தகுதி இருக்குனு நீ இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க?”
“ஓங்கி காதுலையே சப்புனு ஒரு அறை விட்டேன்னு வை… அப்ப புரியும் யாரு தெரு நாய்ங்கன்னு…”

“ஆள பாரு…”
“எங்க வீட்டுல நாங்க என்ன வேணும்னாலும் பண்ணுவோம்.”
“நீ எதுக்கு எங்க வீட்டை எட்டி பார்த்துட்டு இருக்க?”
“சரியான பட்டிக்காடான்…”
“ஆள பாரு… நெத்தில ஒரு பட்டை… கேவலமா…”

இப்படி அவள் வாய்க்கு வந்தது எல்லாம் பேசும்போது, அதை பார்த்துட்டு விக்ரம்,

“சினேகா… ஸ்டாப்…”

“அவர் எங்க பக்கத்து வீட்டுக்காரர்.”
“இப்படி மரியாதை இல்லாம பேசாத.”
“அவர் வயசு என்ன?”
“அவர்கிட்ட போய் எப்படி மரியாதை இல்லாம நடந்துக்குற?”
“நீ முதல்ல உன்னோட வீட்டுக்கு கிளம்பு.”
“கேப் புக் பண்றேன்.”
“நீ ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல இருக்க கூடாது…”

ன்னு அவன் ரொம்ப கோபமா சொல்லும்போது, சங்கர் அதுக்கு மேல கோபமாக அங்கிருந்து விறு விறுன்னு வெளியில் கிளம்பிட்டார்.

அவருக்கு பயங்கர அசிங்கமா போயிடுச்சு.

இப்போ நேரா அசோசியேஷன் தலைவரை தான் பார்க்கப் போறார்… அவ்வளவு கோபமாக.

வாட்ச்மேன், சங்கர் குடும்பத்தை பழி வாங்கணும்னு காத்துக்கிட்டு இருக்கான்.

அதே நேரத்துல இங்க, சினேகா விக்ரமுக்கும் சங்கருக்கும் இடையில ஒரு கோபத்தை உருவாக்கி விட்டுட்டா.

விக்ரமுக்கு அவர் மேல கோபம் இல்லாட்டியும், சங்கருக்கு விக்ரம் எப்போதுமே பிடிக்காது. ஒரு குடிகாரனாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கிற நிலைமையில, விக்ரமை வைத்துத்தான் அந்த வாட்ச்மேன் வர போற மாப்பிள்ளை வீட்டுல இருக்கிறவங்க கிட்ட, விக்ரமையும் நிலாவையும் சேர்த்து வைத்து சொல்ல ரெடியாக இருக்கான்.

இனி என்ன நடக்க போகுது…?

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page