மென்மையான என் விரல்கள் வன்மையான உன் விரல்களுடன் கை கோர்க்கவே விரும்புகிறது “
…..ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று….
பாகம்-1
டிக் டிக் என்ற சத்தத்துடன் நிமிட முள் 9.55 ஐக் காட்ட, தனது மெர்சிடேஸ் பென்ஸ் இ 350 செடான் புதிய ரக காரில் வந்து இறங்கினான் வர்மா. இன்று வர்மா சிமெண்ட்ஸ் குரூப் ஆஃப் கம்பெனிஸின் புதிய சிஇஒ வாக பொறுப்பு ஏற்க வந்திருக்கிறான் வர்மா. வர்மாவின் அப்பா ராஜவர்மன் சென்னையின் புகழ் பெற்ற பிசினஸ் மேன்களில் ஒருவர்.
இவர்களது பூர்வீகம் ராஜ பரம்பரையைச் சேர்ந்தது. ஆரம்ப காலத்தில் இருந்தே வணிகத்தில் முதலீடு செய்ததில் பல வகை தொழில்களில் இவர்களின் சாம்ராஜ்யம் நிறுவப்பட்டு வெற்றியும் பெற்றதால், ராஜவர்மனின் தந்தை குலசேகர வர்மன் தனது நான்கு வாரிகளுக்கும் ஒவ்வொரு துறையில் நிர்வாகப் பொறுப்பை வழங்க, ராஜவர்மனுக்கு கட்டுமான தொழில் கிடைக்க, அவரும் அதில் தனது திறமையைக் கொண்டு வர்மா குரூப்ஸ் ஆஃப் கன்ஸ்டரக்ஷன் இன்று இந்திய அளவில் பேர் பெற்று விளங்குகிறது.
கன்ஸ்டரக்ஷன்க்கு முக்கியமாக விளங்கும் சிமெண்ட் தயாரிப்பிலும் வர்மா சிமெண்ட் தான் சிறப்பாக இருக்க, அதை தன் மகன் பொறுப்பில் விட ஆசைப்பட்ட ராஜவர்மன் இன்று சிஇஒவாக தன் பெருமைக்கும், பாசத்திற்கும் உரிய மாறவர்மனை பொறுப்பேற்க இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
த்ரீ பீஸ் கிரேய் கலர் பிசினஸ் சூட்டில், ஜெல் படிந்த நேர்த்தியான சிகையோடு, கண்களில் கூலர்ஸ், அவன் உயரமும், அவனுக்கு பொருந்தி போகின்ற உடையும், அவனுக்கு நேர்த்தியான அழகையும், மேன்லி லுக்கையும் கொடுக்க, அவனுடன் எப்போதும் இருக்கும் தனது உதவியாளன், நண்பன் விஜயுடன் தந்தை சொன்ன பொறுப்பினை ஏற்க வந்தவனுக்கு, நேரம் மிகவும் முக்கியம்.
தனக்கு கீழ் வேலை செய்பவர்களையும் எப்படி இருக்க வேண்டும் என்ற தகுதிகளை நியமித்தவன் விஜய்க்கு சிஎப்ஒ சீப் பைனான்சியல் ஆபீஸராக பொறுப்பு கொடுத்து விட்டு, தனக்கு பர்சனல் அசிஸ்டன்ட்டாக நியமிக்க நேர்காணல் நடத்தியவன் “ஆராண்யாவை ” தேர்வு செய்தான்.
வர்மாவின் அப்பா ராஜவர்மன் மிடுக்கான கம்பீர தோற்றத்தில் இருப்பவர் , அம்மா மகிழ்வதினி தோற்றத்திலும், அழகிலும், குணத்திலும் அவர் ராணியாகத் தான் இருப்பார். வர்மாவின் தங்கை, கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், முதலீட்டாளர்கள் சூழ, வர்மாவை அவனது இருக்கையில் அமர வைக்க, அவனது பார்வை அவன் புதிதாய் நியமிக்கப்பட்ட பர்சனல் அசிஸ்டன்ட் ஆராண்யாவைப் பார்க்கும் முன்னே,
“எக்ஸ்கியூஸ்மீ என முன்னே வந்தவள் அவனிடம் ஒரு கோப்பை வழங்கிட, அதை வாங்கியவன் பிரித்து பார்த்து படிக்குமாறு கண் காட்ட,
அனைவரின் பார்வையும் ஆராண்யாவைத் தழுவியது. இள ஆரஞ்சு நிற சில்க் காட்டன் புடவை அவளின் கோதுமை நிறத்திற்கு எடுப்பான தோற்றம் தர, அவளின் நீள கூந்தலுக்கும், அஞ்சனம் தீட்டிய வேல் விழியில் எதையும் புரிந்து கொண்டு திடமாய் செய்யும் மிளிர்வு, வர்மா கண்ணில் சொன்னதை கச்சிதமாய் பிடித்துக் கொண்டு, படிக்கத் தொடங்கினாள்.
வர்மா சிமெண்ட்ஸ் குரூப் ஆஃப் கம்பெனியில் சிஇஒவாக பொறுப்பேர்க்கும் நான் சில புதிய நிபந்தனைகளை, நிர்வாகம் சார்ந்த மாற்றங்களை முதலில் தெளிவு படுத்திய பின்னரே நிர்வாகப் பொறுப்புகளை ஏற்க உள்ளேன்.
நம்பர் 1 நான் பொறுப்புகளை நிர்வகிக்க நியமித்திருக்கும் ஆட்கள் என் அனுமதி இன்றி எந்த முடிவும் எடுக்க கூடாது.
நம்பர் 2 நேரம் பணியில் இருப்பவர்கள் சரியான நேரத்திற்கு வேலையில் இருப்பதும், குறித்த நேரத்தில் முடிப்பதும் முக்கியம் இதில் தவறினால் உடனடி பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
நம்பர் 3 வர்மா சிமெண்ட்ஸ்ல இன்வெஸ்ட் பண்ணி இருக்குற இன்வெஸ்டர்ஸ் போட்ருக்குற ஒப்பந்தத்தை முன்னாடியே கேன்சல் பண்ண நினச்சா பாதி அமௌன்ட் மட்டும் தான் கொடுக்க முடியும். அதில் கம்பெனிக்கான இழப்பீடு தொகையும் வசூலிக்கப்படும்.
நம்பர் 4 கம்பெனி ரூல்ஸ் and கண்டிஷன்ஸ் மீறுற ஒர்க்கர்ஸ் கம்பெனி தகவல்களை வெளியே சொல்ற துரோகிகள் எந்த பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள்.
நம்பர் 5 உண்மை, நேர்மை, உழைப்பு இந்த மூன்றும் தான் வர்மாவோட தாராக மந்திரம் அதை இங்க வேலை செய்றவங்களும் கடைபிடிக்கணும்.
ஆரண்யா தனது இனிமையான குரலில் படித்து முடித்ததும் அங்கே அமைதி மட்டுமே நிலவியது. ராஜவர்மனுக்கோ மகனை நினைத்து பெருமிதம், மகன் தன்னை விட கண்டிப்புடனும், திறமையுடனும் செயல் படுவான் என்ற எண்ணத்தில் மிதக்க, அவரின் துணைவியோ ‘பொறுப்பு ஏத்துக்குறதுக்கு முன்னாடியே இவ்ளோ கண்டிஷன்ஸ் போடறான், இன்னும் என்னென்ன பண்ண போறானோ, நான் எப்போதும் வணங்கும் சிவன் தான் அவனுக்கு துணையா இருக்கணும், மனதில் மகனுக்காக வேண்டுதல் வைத்தவர்’ கணவனைப் பார்க்க, அவரோ பார்த்தியா என் மகனை கண்ணால் காட்டி பேச, சரி தான் என்பது போல் தான் மகிழ்வதனியும் தலை அசைக்க,
அவர்களின் புதல்வியோ “அப்பா அண்ணன் சூப்பர் பா, மை பிரதர் அல்வேய்ஸ் பர்பக்ட்” அப்பாவிடம் சிரிப்புடன் சொல்ல, அவரும் ஆமோதித்தார்.
சிறு சலசலப்பு அங்கே நிலவ, தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றவன் “குட் மார்னிங் எவரி ஒன். திஸ் இஸ் ரைட் டைம் டு என்டர் த கம்பெனி இன் மை ப்ரெசென்ஸ் இஸ் குட் டு எவரி ஒன், நான் சொல்லி இருக்குற கண்டிஷன்ஸ் எல்லாமே நான் எடுத்தது இதுல எல்லாரும் சேர்ந்து சரியா செஞ்சு முடிப்பீங்கனு நினைக்குறேன். எனக்கு ரொம்ப பேசுறது பிடிக்காது, செய்றது தான் பிடிக்கும். அதுவும் தரமான செய்கையா இருக்கணும்”
அவன் பேசி முடித்ததும் கைத்தட்டல் களுடன் தனது இருக்கையில் அமர்ந்தவன் கையெழுத்திட்டான். அப்பா, அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கியவன், விஜய் வாழ்த்து சொல்ல லேசாக அணைத்து வாழ்த்தினை ஏற்றுக் கொள்ள, ஆரண்யாவும் தனது வாழ்த்தினை சொல்ல, “தேங்க்ஸ், யுவர் ஒர்க் குட்” என்றவன் மற்றவர்களின் வாழ்த்தினை ஏற்று நன்றி சொல்ல, விஜயிடம் “மீட்டிங் அரேஞ்ச் பண்ணு ” அவனோ ஆரண்யாவிடம் திரும்பி கேட்க “5 மினிட்ஸ் சார்” என்றவள் மீட்டிங்கை ஏற்பாடு செய்தாள்.
கம்பெனியில் பணிபுரியும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மீட்டிங்கில் இருக்க, அங்கேயும் வர்மா சொன்ன கண்டிஷன்ஸ் படித்துக் காட்ட, அதில் தொழிலாளர்களுக்கான சலுகைகளும் இருந்தது. லோன், உதவித்தொகை பற்றிய தகவல்களும் இருக்க, அனைவருக்கும் பயம் இருந்தாலும் அவன் கொடுத்த சலுகைகள் அவன் மேல் நல்ல மதிப்பைக் கொடுத்தது.
அடுத்து கம்பெனிக்கு சென்றவன் மூலப் பொருள்கள், உற்பத்தி, குடோன் என ஒவ்வொன்றாக பார்வையிட, விஜய் தான் நொந்து போனான். கூடவே அவனையும் அல்லவா இழுத்துச் செல்கிறான்.
“விஜய் ஈவினிங் கவர்மேன்ட் காண்ட்ராக்ட் விஷயமா ஒரு மீட்டிங் இருக்கு, 5’ஒ கிளாக் ரெடியா இரு” சாப்பிட்டுக் கொண்டே சொல்ல,
“டேய் கொஞ்சமாவது ரெஸ்ட் கொடு டா காலைல இருந்து பம்பரம் மாதிரி சுத்த வச்சிட்டு இருக்க, முடியல டா, மூச்சு விட கூட நேரம் கொடுக்க மாட்ற”
அவன் சொல்வதை வர்மா காதில் வாங்கியதாக தெரியவில்லை. சாப்பிட்டு முடித்தவன் இன்டெர்காமில் ஆரண்யாவைத் தொடர்பு கொண்டவன் உள்ளே வர சொல்ல, அவளும் உடனே வர,
விஜயோ மனதில் ‘இவனுக்கு மட்டும் எப்படி தான் இவ்ளோ பர்பஃக்டா வந்து மாட்றங்களோ தெரியல, எள்ளுன்னா எண்ணையா வந்து நிக்குறா, நான் எப்படி இனிமேல் இவனை சமாளிக்க போறேனோ, இப்போ வேற ப்ரோமோஷன் கொடுத்துட்டான் வச்சி செய்யப் போறான், கேட்டனா இவனை ‘நொந்தபடி அவளைப் பார்த்தவன்
“ஏன் மா அவன் தான் இப்டி இருக்கானு பார்த்தா நீ என்ன மா அதுக்கு மேல இருக்க, கூப்பிட உடனே வந்து நிக்குற, சாப்பிட்டயா இல்லையா, உங்க பாஸ் சொன்னதும் உடனே வந்துட்ட, கதவுக்கு பின்னாடியே நின்னுட்டு இருந்தியா” விஜயின் இயல்பான பேச்சில் சிரித்தவள், வர்மா என்ன சொல்ல போகிறார் என்பதை பார்க்க,
கையில் பேனாவினை சுழற்றிய படி “ம்ம் ஆரண்யா”
“எஸ் சார்”
“ஈவினிங் கவெர்மென்ட் காண்ட்ராக்ட் சம்பந்தமா மீட்டிங் இருக்கு, நீங்களும் வர மாதிரி இருக்கும், நான் சொன்ன ஒர்க்லாம் முடிச்சிட்டு, ஷார்ப்பா 5’ஒ கிளாக் ரெடியா இருங்க, அங்க மீட்டிங் முடிச்சிட்டு உங்களை வீட்ல ட்ரோப் பண்ணிடுவேன், இஸ் இட் ஓகே”
“ஓகே சார்”
ஆரண்யா வெளியே சென்றதும். “இவ என்ன டா ரோபோ மாதிரி இருக்கா, நீ சொன்னதை அவ்ளோ பெர்பக்ட்டா செய்றா, இன்டெர்வியூ பண்ணும் போது நீ அவளை செலக்ட் பண்ணத பார்த்து ரொம்ப அழகா இருக்காளே அதான் செலக்ட் பண்ணேனு நினச்சேன். இவளை நீ பார்க்க கூட இல்லையே “
விஜய் பேசிகொண்டிருக்க வர்மா மேசையின் மீது இருந்த ரோஜா பூங்கொத்தினைப் பார்த்தவன் அதில் இருந்த பெயரினைப் பார்த்ததும் அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட, அதை எட்டிப் பார்த்த விஜய் “நிதிஷா” பெயரினைப் பார்த்து, “இவ அங்கிளோட பார்ட்னர் ரிஷிகுமார் பொண்ணு தான, இவளை எப்போ டா கரெக்ட் பண்ண”
விஜய் ஏடா கூடாமாக பேச,
அவனை முறைத்த வர்மா “உனக்கு ப்ரோமோஷன் கொடுத்ததே தப்பு, இப்பவே அதை கேன்சல் பண்ணிட்டு பழைய படி, என் கூடவே திரி அதான் உனக்கு சரியா வரும்”
பதறிய விஜய் ” வேணா பாஸ் அந்த விபரீத முடிவு எடுக்காதீங்க, எதோ நான் செஞ்ச புண்ணியம் இப்போ தான் ஆபீஸ் ல இருக்குற அளவுக்கு வந்திருக்கேன் அதை தடுக்காம இருந்தாலே போதும். எனக்கு ஒரு சந்தேகம் பாஸ் எப்படி முடியுது உன்னால, காலேஜ் டைம் நல்லா தானே சாக்லேட் பாயா இருந்த, உன் பின்னாடி எவ்ளோ பேரு சுத்துனாங்க டா பேசுவ ஆனா லவ் சொன்னா மட்டும் நோ சொல்லிடுவ, இப்பவும் அப்டியே மெய்ண்டைன் பண்ற, கிரேட் டா மச்சான்.
நான் மட்டும் உன் இடத்துல இருந்திருந்தா இந்நேரம் ம்ம் ஆனா பாரு எவ்ளோ லவ் வச்சிருக்கேன் தெரியுமா அதை யாருக்கு கொடுக்கலாம்னு காத்துட்டு இருக்கேன் ஒருத்தியும் சிக்க மாட்றா, உனக்கு பாரு கியூல இருக்கு, பொக்கே கொடுக்குது, பி. ஏ வா இருக்கு இன்னும் என்னென்ன ” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, வர்மாவுக்கு போன் வர, திரையைப் பார்த்தவன் எரிச்சல் அடைந்தான்.
போனை சைலண்டில் போட்டவன், இன்று நடக்கப் போகும் மீட்டிங் பற்றிய கோப்பினை பார்க்க ஆரம்பிக்க,
விஜயோ’யாரும் வேணான்னு சொல்ற நீ சீக்கிரமே ஒரு பொண்ணு கிட்ட மாட்டப் போற பாரு மச்சான், இது என் சாபம்’ மனதிலே சாபம் இட, விஜயின் சாபம் பலிக்குமா வரப்போகும் அத்தியாயங்களில் பார்க்கலாம்….
