திரையிட்டு விலகாதே! -4

திரையிட்டு விலகாதே! 

அத்தியாயம் -4

Hiiii வாசகர்களே ✨ 

அவனின் அந்த நீள நீள விரலின் ஸ்பரிசம் என் மீது நான் கொண்ட நாளும் வந்தது!!

ஆம்! 

ஒரு நாள் மாலையில், நாங்கள் காத்து கொண்டே நின்று இருந்தோம்… எந்த மரமோ நிழலோ பிரைவேட் வேன் பார்க்கிங் இடத்தில் இருக்காது…

சோதனைக்கு என்று அந்த நாளில், மேக மூட்டத்தோடு காண பட்ட வானம், திடீர் என கார் மேகங்கள் சூழ்ந்து மழை கொட்ட துவங்கியது!!

ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கு பள்ளி 3:30 மணிக்கு முடிந்து விடும்… ஆகவே எங்கள் வேன் அந்த மதிய ட்ரிப் போனது, இன்னும் திரும்பவில்லை… அனைத்து வேன்கள் கிளம்பி விட்ட நிலையில், வாட்ச்மேன் தாத்தா இடம் மொபைல் வாங்கி கால் பேசி என்னுடன் வரும் மற்ற இரு மாணவிகளும் கூட வீட்டில் இருந்து ஆள் வந்து, அழைத்து சென்று விட்டார்கள்…

அவர்களுக்கு பக்கத்து தெரு, ஆகவே அது சாத்தியம்… ஆனால் எனக்கு வாய்ப்பு இல்லை!!

ஆகவே 6 மாணவர்களோடு, நான் ஒரு மாணவி மட்டுமே மழையில் தொப்பலாய் நனைந்து குளிரில் நடுங்கிய படி நின்று இருந்தேன்!!

அது மதுரை, பெண்கள் இவ்வாறு எல்லாம் நிற்க விட மாட்டார்கள்… கௌரவ குறைச்சல், வீட்டு நிலை, குடும்ப மானம் என தத்துவம் வகுப்புக்கார்கள்… 

ஆனால், சென்னையில் இருந்து சென்று இருந்த எனக்கோ இது எல்லாம் அப்போது தெரியாது!! நான் பாட்டிற்கு நனைந்து நகுங்கினாலும், 6 பேரோடு சற்று இடைவெளி விட்டு இயல்பாக நின்று கொண்டு இருக்க, வீட்டிற்கு கிளம்பும் ஆசிரியர்கள் எல்லாம் ஒரு மாதிரி பார்த்து கொண்டே சென்றார்கள்…

டிசம்பர் மாதம் என்றால் கூட, மழை வரும் என்று mum எச்சரிக்கையோடு ரெயின் கோட் உடன் வரலாம்… மழை பெய்வதோ, அக்டோபர் மாதம்..!! 

யாரால் கணிக்க முடியும்?

தவிர எனக்கு வீட்டில் இருந்து வந்து அழைத்து செல்லும் அளவு எல்லாம் பாக்கியம் இல்லை!! நான் கால் செய்து வேன் வரவில்லை என்று சொல்ல, என் தந்தை தான் அழைப்பை ஏற்று “ஓ லேட் ஆகுமா!! சரி பொறுமையா வா…” என்று அழைப்பை துண்டித்து விட்டார்…

ஒரு வழியாக வேன் வந்தது!!

நான் மட்டும் தனியாக இருந்ததால், முன்னால் கோ பாஸ் இருக்கையில் ஏறிக் கொண்டேன்… அன்று, அதிசயமாக 6 மாணவர்களில் யாரும் என்னிடம் போட்டி போட வில்லை..!!

நான் தடக்கென ஏறி அமர்ந்து விட, பின்னால் பாய்ஸ் ஏறி நீ தள்ளி நான் தள்ளி என்று கத்தி கொண்டு இருக்கையில், வெடுக்கென யாரோ இழுத்த இழுப்பில், என் தலை பின்னால் சரிந்தது!!

நான் அமைதியானவள் தான்!

ஆனால் சுர் என்ற கோபம் நொடியில் வந்து விடும், அப்பாவை போல…

ஆகவே, தீயாய் முறைத்து கொண்டு திரும்பி பார்க்க,😡 இழுத்தது அவன் தான்!!

ஏறி அமர்ந்து உள்ளே நகர்வதற்காக, நான் அமர்ந்து இருக்கும் இருக்கையின் முதுகு சாய்க்கும் பகுதியில் கை ஊன்றி தளி அமர, அப்போது அவன் நீள விரலில் என் தலை ரிப்பன் பவ் மாட்டி இழுத்து அவிழ்ந்து விட்டது!!

அனல் தெறிக்கும் பார்வை கொண்டு நான் திரும்ப, அவனே அதிர்ந்து போய் விட்டான்… அப்படியே தள்ளு முள்ளு எல்லாம் நின்று, நிசப்தம் நிலவ குளறிய படி “ஸ்… ச… சாரி!!” என்று இரு கையையும் தோள் மேல் உயர்த்தி, துப்பாக்கி முனையில் மாட்டி இருக்கும் கைதி போல் கூற, எனக்கு வந்த கோபம் இறங்கி வடிந்து, படக்கென அடக்க முடியாமல் சிரிப்பு தான் வந்து விட்டது!! 😄

அனைவரும் ஒன்று கூடி கேட்க, லேட் ஆக வந்ததற்கு பனிஷ்மென்ட் என்ற பெயரில் வடை வாங்கி தர சொல்லி ஒரே ஆர்பாட்டம் செய்தனர்… பள்ளி வளாகம் தாண்டியதும், மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பானடி திரும்பும் இடத்தில் புதிதாய் அப்போது தான் திறந்த டீ கடையில் வண்டியை நிறுத்தி, இறங்கி போய் வடை வாங்கி வந்து கொடுத்தார் டிரைவர்…

பின்னால் இருக்கும் 6 பேரில், 5 பேர் “எப்படியும் நான் இதை விரலால் கூட தொட மாட்டேன்!” என அவர்களாகவே முடிவு செய்து, என் பங்கையும் அமுக்க பார்த்தனர்… நானும் வாய் திறந்து கேட்க, மனம் வராமல் வயிறு பசித்தாலும் மௌனமாகவே இருந்தேன்..!!

அப்போது ஜெஷ்வந்த் குரல் ஓங்கி ஒலித்தது!! “ஹே!!! தான் திண்ணிகளா… அதான் ஆளுக்கு ரெண்டு இருக்குல்ல!! அதை குடுங்கடா…” என்றான்..

அடுத்த நொடி, என் தோளில் ஒரு விரலால் சுரண்டி என்னிடம் ஒரு வடையை வாங்கி கொடுத்தான்… எனக்கு இஞ்சி, மிளகு எல்லாம் வரும் மெது வடை சுத்தமாக பிடிக்காது!! நிஜமாகவே நான் அதை வெளி கடைகளில் வாங்கினால், விரலால் கூட தொட மாட்டேன் என்பது சத்தியமான உண்மை!!

ஆனால், வாழ்வில் முதன் முறையாக அவன் கொடுத்தான் என்பதற்காக அதை வாங்கி கொண்டேன்… ஆனால், நன்றி சொல்ல கூட எனக்கு வாய் வார்த்தை வரவில்லை..!!!

ஆகவே, ஆபரேஷன் செய்யாத குறையாக அந்த ஒரு வடையை பிரித்து உள்ளே இருக்கும் எல்லா இஞ்ஜி, பச்சை மிளகாய், மிளகு எல்லாம் நீக்கி விட்டு சாப்பிட்டு முடித்தேன்!! 

ஆனால் என்ன? என் கை முழுவதும் எண்ணெய் காடாகி போயிற்று…

அதையும் அவன் கவனித்தானோ என்னமோ, என் பின்னால் அமர்ந்து கொண்டு… அந்த வடைகள் வாங்கி வந்த காக்கி கவரை என்னிடம் நீட்டினான், கை துடைப்பதற்காக… 🙈 

அதற்குள் இரண்டு வடைகள் அமுக்கி முடித்த அனைவரும் கை துடைத்து, அதுவும் எண்ணெயாக தான் இருந்தது ஆனால் அவன் கொடுத்து விட்டானே..

ஆகவே வாங்கி கையில் இருந்த குப்பை எல்லாம் போட்டு, அதன் முனையில் விரல் துடைத்தேன்!!

நான், தெரு ஓரம் இருக்கும் கார்பரேஷன் குப்பை தொட்டிக்காக காத்து கையில் அதை பந்தாக சுருட்டி காத்து கொண்டு இருக்க, “அதை இங்க கொடு!!” என வாங்கி டிரைவர் அங்கிள் வெளியே வீசினார் ஜன்னல் வழியாக…

தற்செயலாக நடந்த ஸ்பரிசம் இவ்வாறு சென்றது எனில், வேண்டும் என்றே பெற்ற ஸ்பரிசம் என் உள் ஆழம் வரை என்னை உலுக்காமல் இல்லை!!

ஆம்! இது நடந்து சில நாட்களில் என் பிறந்த நாள் வந்தது…

கலர் டிரஸ் எல்லாம் இல்லை! ஆனால், கை நிறைய சாக்லேட் வாங்கி கொண்டேன்!! குறிப்பாக அவனுக்கு கொடுக்க வேண்டி, ஆசிரியர்களுக்கு என்று சொல்லி 20 ரூபாய் டைரி மில்க் 6 வாங்கி கொண்டு, ஆவலாக காரில் ஏறினேன்!!

அன்று மூவர் வரவில்லை என்ற காரணத்தால், இருப்பவர்களுக்கு நார்மல் சாக்லேட் கொடுத்தேன்!! அவன் கோ பாஸ் இருக்கையில் அமர்ந்து இருக்க, எக்கி எல்லாம் முயற்ச்சி செய்து கொடுக்கவில்லை…

அப்படியே விட்டு விட்டேன்…

ஆனால் பள்ளி வந்த உடன், அவன் என் இருக்கையில் கொடுத்து வைத்து இருந்த பள்ளி பையை எடுக்க பின்னால் வந்தான்..

வேண்டும் என்றே மெதுவாக, பள்ளி பையை மாட்டி கொண்டே, அதற்காக காத்து இருந்த நான் அவன் கையில் வாங்கி வந்த டைரி மில்க்கை கொடுக்க, அவன் கேள்வியாக பார்த்தான்…

“பர்த்டே!!” என்று அவனிடம் நான் பேசிய முதல் வார்த்தை அது தான்…

“ஹாப்பி பர்த்டே!!” என்று உற்சாக குரலில் வாழ்த்தி விட்டு, கையை நீட்டினான்… நானே அதை எதிர் பார்க்க வில்லை!!

ஆனால், அதே சமயம் நீட்டியதை நான் மறுக்கவும் இல்லை!! கை பிடித்து கொள்ள, அவன் ஹேன்ட் ஷேக் செய்து அதன் பின்னரே டைரி மில்க்கை வாங்கி கொண்டான்…

அந்த ஒரு நிகழ்வு தான் என் பதின் ஆறாவது பிறந்த நாளில் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசாக என் மனம் குத்து ஆட்டம் போட்டது!! கனா படத்து ஹீரோ போல், போகும் அவன் பின்னால் பல்லை காட்டி சிரித்து கொண்டே நடந்தேன்!!

என் மனதிலோ பாடல் ஓட துவங்கியது…

“ஒத்தை அடி பாதையில தாவி ஓடுறேன்…

அத்தை பெத்த பூங் குயில தேடி வாடுறேன்!

சந்தன மாலை அள்ளுது ஆள 

வாசம் ஏறுதே…

என் கிளி மேலே சங்கிலி போல 

சேர தோணுதே!!

சக்கரை ஆல சொக்குது ஆள

மாலை மாத்த நானும் வரட்டுமா!!!??

அழகே அழகே ஆண் அழகே!! ஹான்…

தரையில் நடக்கும் பேர் அழகே!!

நிலாட்டம் உன் பின்னால 

நான் ஓடி வந்தேனே…

ஒரு வாட்டி என்ன பாரேன் மா….”

ஒரு வழியாக வகுப்புக்கு சென்று நான் அமர்ந்து விட்டேன், பலரும் சுற்றி வந்து கை குலுக்கி விட்டு சென்றார்கள் தான், ஆனால் அது போல் இல்லை…

அந்த குளிர்ந்த கைகள், சற்று என்னை விட பெரிதாய் இருந்தது… ஆனால் விரல்கள் ஒல்லியாக நீள நீளமாக இருக்கையில் அதில் அவன் போட்டு குளித்த சோப்பு வாசம் வீசியது!! 

வேண்டும் என்றே வெறும் போட்டிலோடு வந்த நான், ஆசிரியை வரும் முன் சென்று தண்ணீர் பிடித்தேன்… அவனை காண்பதற்காக தான்!!

“பலமுறை நீயும் பாக்காம போனா

இரும்புக்கு மேல துரும்பென ஆனேன்.

உசுர உனக்கே நேந்து விட்டேன்

இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்!!

உயிரே உயிரே என்னுயிரே

உலகம் நீதான் வா உயிரே…

மனசெல்லாம் கண்ணாடி

உடைக்காத பந்தாடி

வதைக்காத கண்ணே கண்மணியே!!!” 

என்று ஏக்க பெரும் மூச்சோடு, மீண்டும் வகுப்புக்கு சென்றேன்…

முதலில் அட்டென்டன்ஸ் எடுக்க எங்கள் வகுப்பு ஆசிரியை வந்ததோடு, இங்கிலீஷ் டெஸ்ட் பேப்பர் கொடுத்து சென்றார்…

அம்மணி தூங்கி வழிந்த படி திருத்தி இருக்க, பல பிழைகள் இருந்தன… அதன் பின், முதல் வகுப்பு எடுக்க ஆசிரியர் வந்து விட்டார் என எதுவுமே திருத்தி கொடுக்காமல் நழுவி சென்று விட்டார் அம்மணி…

மூன்றாம் பீரியட் வகுப்பு ஆசிரியர் வரவில்லை அன்று பள்ளிக்கு, ஆகவே வெட்டியாக அமர்ந்து இருக்கும் போது வைஷூ என் விடை தாளை எடுத்து, நான் எழுதி இருப்பதை படிக்கும் போது தான், முதலில் 5 மார்க் போடாமல் இருப்பதை கண்டு அறிந்தாள்…

அது, எவ்வாறு அவன் வகுப்பில் சென்று என்னை நிற்க வைத்தது?

என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! 😃😃

Thanks for reading மக்களே 🩷 

❤️ Loading reactions...
4 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page