விழியோரம் கசியும்
நீர்த் துளிகளோ,
உன் நினைவாய்
பூத்த முத்துக்களே…!
இதயத்தின் ஆழத்தில்
நீ தந்த வடுக்களோ
நான் சூடிக்கொள்ள வந்த ஆபணங்களே!
வலியை சூடிய காதலே – 7
“ஏய் நிறுத்துங்கப்பா எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க” என்று கர்ஜித்தார் பஞ்சாயத்து பெரியவர், அதைக் கேட்காமல் ராஜதுரையும் பாண்டிதுரையும் கத்திக் கொண்டே இருக்க,
“பெரியவரு பேசுறாரு இல்ல கத்துறதைக் கொஞ்சம் நிறுத்துங்கப்பா கௌரவம் கௌரவம்னு பேசிக்கிட்டு அடிதடி வரைக்கும் போறது இந்த ஊர் பஞ்சாயத்துக்கு அழகல்லப்பா, எப்பா ராஜதுரை, பாண்டிதுரை நீங்க என்ன தான் உரிமை அது இதுன்னு ஆயிரத்த பேசினாலும் இது சட்ட காலம்பா,
அந்த பொண்ண பார்த்தா நல்லா படிச்சு நல்லது கெட்டதுன்னு நாலும் தெரிஞ்ச பொண்ணாத் தெரியுது, அவளுக்கு என்ன வேணும்னு அவளே சொல்லட்டும்” என்று பெரியாள் சொல்ல
“இங்க பாருங்க ராஜதுரை, பாண்டிதுரை நீங்க என்னதான் உரிமை கொண்டாடினாலும், சட்டம்னு ஒன்னு இருக்கு, இப்போ இங்க நிக்கிற பொண்ணு ஒன்னும் விவரம் தெரியாத சின்னப் புள்ள இல்ல,
அவவயசுக்கு வந்த பொண்ணு, அவளுக்கு என்ன விருப்பமோ அது தான் எங்க தீர்ப்பும்” என்று கூறிய
பெரியவர் நிஷாலினியை ஏறிட்டுப் பார்த்தார், கூட்டத்தின் இரைச்சல் அடங்கியது,
”இந்த ஊர் பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வருது, ஒரு பொண்ணோட விருப்பத்துக்கு மாறா இங்க எதுவும் நடக்கக்கூடாது, எம்மா பொண்ணே இங்க பாரும்மா,
இப்போ இங்க ரெண்டு தரப்புல நிக்கிறாவங்களும் ரத்த சொந்தம் தான், நீ யாரு கூட இருக்கணும்னு ஆசைப்படுறியோ அவங்க கூட போகலாம், அதை மீறி உன்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது நீ பயப்படாம சொல்லும்மா” என்றார் பெரியவர்,
முழுப் பஞ்சாயத்தும் நிஷாலினியின் பதிலுக்காகக் காத்திருந்தது, ராஜதுரையும் பாண்டிதுரையும்,
“எங்க பக்கம் தான் சொல்லுவா” என்ற கர்வத்தோடும், ஒருவித ஏளனத்தோடு பார்த்தனர்,
நிஷாலினியின் பிடியைத் தளர்த்தி கையை விடுவித்தான் ஆரியன்,
அவளது உடல் இன்னும் வேகமாக நடுங்க பதற்றம் கூடிக்கொண்டிருந்தது, அவள் மெல்லத் தலை நிமிர்ந்து ஆரியனைப் பார்த்தாள், அவன் கண்களில் இருந்த அந்த உறுதி அவளுக்குள் ஒரு மின்னலைப் பாய்ச்சியது,
“இங்க உன் பக்கத்துல தான் நான் இருக்கேன், உன் மனசுல என்ன தோணுதோ அதைச் சொல்லு, பயப்படாத, என்னை மீறி உன்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது, ட்ரஸ்ட் மீ” என்றான் ஆரியன்,
அவன் கொடுத்த ஊக்கத்தையும் தைரியத்தையும் தனக்குள் ஏற்றிக் கொண்டு, பிறகு அவள் பஞ்சாயத்தாரைப் பார்த்துத் நடுங்கிய குரலில் பேசினாள்,
“என்னை இங்க கூட்டிட்டு வந்தது ஆரி தான், எனக்கு இந்த ஊர்ல யாரையும் தெரியாது, அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, நான் ஆரி கூடவே இருக்கத்தான் ஆசைப்படுறேன், அவர் கூடவே போயிடுறேன், என்னை விட்டுடுங்க” என்று உறுதியாகச் சொன்னாள்,
பஞ்சாயத்தில் ஒரு நிமிடம் நிசப்தம் நிலவியது, ராஜதுரையும் பாண்டிதுரையும் அதிர்ச்சியிலும் அவமானத்திலும் சிலையாக நின்றனர்,
”நல்லது, பொண்ணு தன் விருப்பத்தைச் சொல்லிட்டா, இனிமே யாரும் அவளை வற்புறுத்தக் கூடாது, அந்த பொண்ணு டாக்டரோட பாதுகாப்புல இருக்கட்டும் பஞ்சாயத்து முடிஞ்சது!” என்று தீர்ப்பளித்தார் பஞ்சாயத்து பெரியவர்,
“இதை எல்லாம் ஏத்துக்க முடியாது, அதெப்படி கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணும் பையனும் ஒன்னா இருக்க முடியும், இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என்று
கணீரென ஓங்கி ஒரு குரல் கேட்க யாருடா அது என்று அனைவரும் திரும்பி பார்த்தால் அங்கே பூவிதழினி நின்று கொண்டிருந்தாள்,
(மை மைண்ட் வாய்ஸ்:
இது என்னடா வம்பா போச்சு ஆளாளுக்கு வந்து பஞ்சாயத்தை முடிக்க விட மாட்டீங்கறீங்களே…!)
அவள் சொன்னதைக் கேட்டதும் மீண்டும் அங்கே சலசலப்பு ஏற்பட, என்ன நடக்குமோ என்ற பயத்தில் ஆரியனைப் பார்த்தாள் நிஷாலினி,
தனக்கும் நிஷாலினிக்கும் திருமணமான விஷயம் தெரிந்தால் அதன் பின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை அறிந்து தான் நிஷாலினியிடம் இருவருக்கும் திருமணமானதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று கூறியிருந்தான் ஆரியன்,
“அந்த பொண்ணு சொல்றதும் ஒரு நியாயம் தாம்ப்பா ஒன்னு கல்யாணமான இரண்டு பேர் ஒரு வீட்ல இருக்கலாம் தப்பில்ல, இல்லையா குடும்பத்தோட இருக்கிற பையனா இருந்தாக் கூட பரவாயில்லன்னு விட்டிடலாம்,
அம்மாவும் வேண்டா அப்பாவும் வேண்டாமுன்னு சொல்லி தனியா இருக்கிற பையன் கூட எப்படி ஒரு வயசு பொண்ண தங்க வைக்கிறது, பாக்கிறவங்க நம்ம ஊரை தான் தப்பா பேசுவாங்க” என்று கூட்டத்தில் ஆளாளுக்கு சலம்ப,
“அந்தப் பொண்ணு டாக்டர் கூட தான் இருக்கிறதுக்கு விருப்பமுன்னு சொல்லுது, ஊர் வழக்கமோ அது தப்புன்னு சொல்லுது, அதுக்கு என்ன பண்ணலாம் இந்த பிரச்சனைக்கு எப்படிப்பா தீர்ப்பு சொல்றது” என்று ஆனானப்பட்ட பெரியாளே புலம்ப,
பஞ்சாயத்து ஆட்களுக்கு மத்தியில் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தும் எதற்கும் தீர்வு கிடைக்காமல் குழம்பித் தவித்தனர், இதற்கிடையில் பூவிதழினி வேறு நிஷாலினியை நான்காக மடித்து மென்று தின்று விடுவாள் போலும் அப்படி ஒரு முறைப்போடு நின்றிருந்தாள்,
பஞ்சாயத்து ஆட்களும் எவ்வளவு கலந்தாலோசித்தாலும் என்ன தீர்ப்பு சொல்வது என்று திணறினார்கள், கடைசியில் பெரியாள் தான் தொண்டையை செருமிக் கொண்டு பேச்சை ஆரம்பித்தார்,
“தென்றலூர் பஞ்சாயத்துன்னு சொன்னாலே சுத்துப் பட்டு அறுவத்துரண்டு கிராமத்துக்கும் நல்லாத் தெரியும், அப்படி ஒரு பேர்போன பஞ்சாத்து, எத்தனையோ ஊர்ல இருந்து நம்ம பஞ்சாயத்துக்கு பிராது வந்திருக்கு,
எந்த பஞ்சாயத்தும் தீர்த்து வைக்க முடியாத பல பஞ்சாயத்த கூட நல்ல தீர்ப்பா சொல்லி வந்த வழக்கை முடிச்சு குடுத்திருக்கு, அப்படி பேரும் புகழும் இருக்கிற பஞ்சாயத்து,
ஒரு சின்னப் புள்ளைக்கு தீர்ப்பு சொல்ல முடியாம இவ்வளவு நேரம் ஆகுறத நினைச்சா மனசுக்கு கஷ்டமாத்தா இருக்கு என்ன செய்ய, நாங்களும் இந்த தீர்ப்பு சொன்னா சரியா இருக்குமா,
இல்ல அந்த தீர்ப்பு சொன்னா சரியா இருக்குமான்னு பலவாட்டி கலந்து பேசிட்டோம் ஆனா எதுவும் சரிப்பட்டு வர்ற மாதிரி தெரியல, அதான் ஒரே யோசனையா இருக்கு” என்று கம்பீரமாக ஆரம்பித்து இழுவையாக முடித்து வைத்தார் பெரியாள்,
பிரச்சனையின் வீரியம் அறிந்து
அங்கே கணத்த அமைதியே நிலவ யாருக்கு என்ன சொல்வதென்று புரியாமல் முழித்துக் கொண்டு நின்றனர், அந்த அமைதியை கிழிக்க ஆரியனே வாதத்தை ஆரம்பித்தான்,
“இவ்ளோ பெரியவங்க அனுபவசாலிங்க நிறைஞ்ச சபையில ஒரு சின்ன பையன் சொல்லலாமா வேண்டாமான்னு தெரியல இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு எங்கிட்ட ஒரு வழி இருக்கு” என்றான் ஆரியன்,
அதைக் கேட்டதும் ஆர்வமான பெரியாள்,
“சிறுசென்ன பெருசென்ன டாக்டரே நீ படிச்ச பையன் பகுத்தறிவு தெரிஞ்சவ நீ தயங்காம சொல்லுப்பா, நியாயமா இருந்தா நாங்களே ஏத்துக்கறோம்” என்றார்,
இங்கு நடக்கும் குழப்பங்களையும் கூச்சல்களையும் தனக்கு சாதகமாக்கி தன் குடும்பத்தை இணைக்க நினைத்தவன் தன் திட்டத்தை சொல்ல ஆரம்பித்தன் ஆரியன்,
“இப்ப என்ன இந்த பொண்ணு தனியா வந்து எங்கூட தங்ககூடாது அவ்ளோ தான, அதனால சக்கரவர்த்தி குடும்பத்தில இருந்து ஒரு ஆளும், துரையய்யா குடும்பத்துல இருந்து ஒரு ஆளும்,
இரண்டு பேரா சேர்ந்து அந்த பொண்ணு கூட்டுட்டு என்கூட வரச்சொல்லுங்க, அப்போ யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காதுல்ல” என்று சொல்ல பஞ்சாயத்தார்களுக்கே இந்த யோசனை சரியெனப் பட்டது,
“படிச்சவ படிச்சவன் தான்யா, புடிச்சாம் பாரு பாயிண்ட, அப்புறமென்ன பொண்ணுக்கு சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பத்துல இருந்து ஒவ்வொரு ஆள் அந்த பொண்ணுகூட போய் தங்குங்க, இதுதான் இந்த பஞ்சாயத்தோட தீர்ப்பு, இதுல யாருக்காவது எந்த பிரச்சனையாவது இருக்காயா” என்று பஞ்சாயத்து பெரியவர் கேட்க,
“இனி பிரச்சனை எப்படி இருக்கும் இரண்டு பேருக்குமே பொதுவான தீர்ப்புல்ல, இரண்டு குடும்பத்துக்கும் இப்ப சொல்றது தான் இனிமே இந்த பொண்ணை தனித்தனியா உரிமை கேட்டு பஞ்சாயத்தை கூட்டக் கூடாது அவ்வளவு தான் இனி பஞ்சாயத்து கலையலாம்” என்று
பஞ்சாத்து பெரிய மனுஷர்கள் தீர்ப்பு வழங்கி விட்டு மேடையை விட்டு எழுந்து நின்று கைகூப்ப மொத்த கூட்டமும் தீர்ப்பு கிடைத்ததை நினைத்து அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றது,
இருதரப்பு குடும்பத்தார்கள் மட்டும் அங்கே நின்றிருக்க, ரஞ்சிதம் நிஷாலினியின் அருகே சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்,
“சக்ரவர்த்தி குடும்பத்துல இருந்து ஒரு ஆள் வந்தாச்சு, அப்புறம் என்ன அப்படியே துரையய்யா குடும்பத்துல இருந்து ஒரு ஆள் வந்தா இந்த இடத்தை காலி பண்ணலாம்” என்று
ஆரி நக்கலாக மூவரையும் பார்த்து கேட்க, அவர்கள் விறைப்பாக நிற்க,
“இது ஒன்னும் சரிப்படுற மாதிரி தெரியல, உங்களுக்கு எப்ப வரனும்னு தோணுதோ அப்ப வாங்க நாங்க இப்ப கிளம்பறோம் என்றவன்,
“வா நிஷா நாம போலாம்” என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு நான்கு எட்டுகள் வைக்க,
“ஒரு நிமிஷம்” என்று செல்லதுரையின் குரல் கேட்டு நின்று திரும்பி பார்த்தான் ஆரி,
“என் குடும்பத்து சார்பா என் மவன் ராஜதுரை வருவான்” என்று கூறிவிட்டு திரும்பி ராஜதுரையைப் பார்த்தார்,
“டேய் மவனே, நம்ம வீட்டு மகாலச்சுமிய கூட்டிட்டு தான் வீட்டுக்கே திரும்பி வர்ற, அதுவரைக்கும் என் முன்னாடி வரக்கூடாது, இது உன் அய்யன் செல்லதுரையோட உத்தரவு” என்று கூறிவிட்டு திரும்பி பாரகமல் நடந்தார் செல்லதுரை,
அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜதுரை, கேள்வியோடு அண்ணனைப் பார்க்க,
“டேய் ராசு நம்ம அய்யா எது சொன்னாலும் சரியா இருக்கும்டா, நீதான் அந்த சக்கரவர்த்தி குடும்பத்துக்கு சரியான ஆளு, போடா போய் நம்ம வீட்டு புள்ளைய நம்ம வீட்டுக்கு கூட்டுட்டு வர்ற வழியைப் பாரு” என்று கூறி தகப்பன் பின்னாலேயே சென்று விட்டான் பாண்டிதுரை,
வேறு வழியின்றி திரும்பியவன் ஆரியனைப் பார்க்க அவனோ நமட்டுச் சிரிப்போடு தகப்பனைப் பார்த்தான்,
“டேய் என்னடா என்னைப் பார்த்தா நக்கலா தெரியுதா, இருடா நான் யாருன்னு இனிமே காட்டுற, நீ டாக்டருன்னு சொல்லி சீனைப் போட்டுட்டு திரியுறதுக்கெல்லாம் ஆப்படிச்சு,
உன் வாயால நானும் துரையய்யா குடும்பத்து வாரிசுன்னு சொல்லி எங்கய்யா கால்ல விழுந்து கதற வைக்கல நான் ராஜதுரை இல்லடா” என்று சொல்ல அதைக் கேட்டு இன்னும் சத்தமாக சிரித்தான் ஆரியன்,
“சிரிடா மகனே இன்னும் எவ்வளவு வேணாலும் நல்லா சிரிச்சுக்கோ” என்று கூறி விட்டு ஆரியனின் வீட்டை நோக்கி நடந்தார் ராஜதுரை,
தன் பல வருட எண்ணம் பலிதம் ஆன வெற்றிக் களிப்பில் புன்னகையோடு நிஷாவின் கைகளைப் பிடித்து நடந்தவன் முன்னால் வந்து நின்றாள் பூவிதழினி,
அவளைக் கண்டதும் முகத்தில் இருந்த சிரிப்பு சட்டென மறைந்து இதயமே பிளவுற்றது போல் வலிக்க, தலைகுனிந்தபடியே அவளை விலகி நடந்தான்,
தன் குடும்பத்தை ஒன்றாக இணைக்க தன் காதலை பலியிட்டான் என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம் அதை யாரிடம் சொல்லி வேதனை போக்குவது என்று தெரியாமல் தனுக்குள்ளேயே புதைத்து புதைத்து மருகுகிறான் ஆரியன்,
ஆரியனின் இந்த தியாகம் சரியா?
ஆரியன் தன் காதலை பலி கொடுத்து குடும்பத்தை இணைக்க போரிடுவது ஏன்?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
