முதல் முத்தம்…

மைதிலி (மைலி) சித்தார்த் (சித்)  இருவரும் குறுகிய காலமே காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவசர அவசரமா  திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், திருமணமாகி இந்த குறுகிய வருடத்தில் இருவருக்கும் இடையே சண்டை என்ற ஒன்று பெரிதாக வந்ததே இல்லை…

எல்லாத்துக்கும் ஒரு தொடக்கம் வேணும்ல? இதோ இன்னைக்கு தான் அந்த சண்டையின் தொடக்க நாளாக இருக்குமோ என்று ஒவ்வொரு நாளும் சித்தார்த்தின் மனம் சற்று பயத்துடனேயே அவனை வழி நடத்திக் கொண்டிருந்தது, அதற்கு ஏற்றது போல்… பயபுள்ள இன்னைக்கும் ஒரு முக்கியமான நாள் அதை நம்ம சித் மறந்துட்டான்… இதோ நீங்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சண்டை இன்னும் சற்று நேரத்தில்…

அப்புறம்…. சொல்ல மறந்துட்டேன்…

நம்ம மைதிலி ஒரு டாக்டர்.

அப்ப நம்ம சித்?

இத போய் அவன் கிட்ட, 
நீ என்னடா பண்ற? அப்படின்னு கேட்டா… சும்மா கத கதையா சொல்லுவான் பாருங்க அத வச்சு நம்ம பத்து படம் எடுக்கலாம், அதனால நம்ம சித் சார் என்ன பண்றாருன்னு ஆராய்ச்சி எல்லாம் செய்து தெரிந்து கொள்ள வேண்டாம் ஃப்ரீயா விடுங்க, பயபுள்ள மாட்டும் போது வச்சு செஞ்சு அவன பத்தி தெரிஞ்சுக்கலாம்…

சித்தார்த் அவனோட ஆபீஸ் நாற்காலியில் உட்கார்ந்து ரொம்ப சின்சியரா தூங்கிட்டு இருக்கான், எல்லோருக்கும் தூக்கத்தில் கனவு தான் வரும் ஆனால் நம்ம சித்தார்த்துக்கு கனவுக்கு பதிலாக ஃப்ளாஷ் பேக் அதிலேயும், சித்தார்த்  மைதிலியிடம் முதன் முதலில் காதலை சொன்ன தருணம் அவனது நினைவுகளில் ஆனந்த அருவியாய் ஓடிக்கொண்டிருக்கிறது…

“டேய் உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது எனக்கு இந்த காதல் மயிரெல்லாம் பிடிக்காதுன்னு”

“என்ன மைலி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட? நீ என்னை எப்படி திட்டித் தீர்த்தாலும் சரி ஐ லவ் யூ…. ஐ லவ் யூ தான்”

“சரி சொல்லு டா உன்னை நான் லவ் பண்ண ஏதாவது மூணு ரீசன் சொல்லு அப்புறம் அத பத்தி நான் யோசிக்கிறேன்?”

“ஹேய்! சூப்பர் டி… என்கிட்ட ஆயிரம் ரீசன் இருக்கு”

“நீ மொத மூணு ரீசன் சொல்றா முண்டம், கல்யாணத்துக்கு அப்புறம் மீதி இருக்கிற தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு ரீசன்னையும் கேட்டு தெரிஞ்சுக்கிறேன்”

“சரி சொல்றேன் முதல் ரீசன்…”

என்று சித்தார்த் ஏதோ சொல்ல வார்த்தை எடுக்க அதை பாதியிலேயே  நிறுத்திவிட்டு…

“ஹே! நீ இப்ப என்ன சொன்ன…? கல்யாணத்துக்கு அப்புறம், அப்படின்னு ஏதோ சொன்னல்ல? ஹே! ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்! சொல்லுடி என்னை லவ் பண்றியா நீ?”

“டேய் லூசு, இதுவே இப்பதான் உனக்கு புரியுதா? இங்க பார்ரா நான் உன்னைய லவ் பண்றேன்… ஆனா நீ என்னை லவ் பண்றத நான் இன்னும் அக்சப்ட் பண்ணல, என்ன நான் சொல்றது  உனக்கு புரியுதா?”

“இல்ல… எனக்கு புரியல… நீ என்ன சொல்றன்னு எனக்கு சுத்தமா புரியல! நீ என்னைய…. நான் உன்னைய…. ஹே! மைலி குழப்பாத ப்ளீஸ், சொல்லு நீ என்னை லவ் பண்றியா இல்லையா?”

“இங்க பார் டா, நான் உன்னைய…’

என்று மைதிலி மீண்டும் அதையே சொல்ல சட்டென்று இடைமறித்த சித்தார்த்

“எம்மா தாயே! நீ எதையும் சொல்ல வேண்டாம்… ஆனா எனக்கு ஒன்னு நல்லா புரியுதுடி…”

“என்ன புரியுது?”

“ம்ம்ம்… நானும் அதை கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன்…”

“பாத்தியா… பாத்தியா… டேய் உன் ஆம்பள புத்திய காட்டுற பாரு… இத்தனை நாளா கெஞ்சிக்கிட்டு இருந்த இப்ப நான் உன்னை லவ் பண்றேன்னு  சொன்னதும் எனக்கே கவுண்டர் கொடுக்கிறியா?  ஃபிராடு… ஃபிராடு”

“இங்க பாரு அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல டி மைலி”

“டேய்! நான் சொல்றத முழுசா கேளு… நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா ரெண்டு கண்டிஷன்”

“என்னடி ஷாம்பு கண்டிஷனர்னு எதையெதையோ அடுக்கிட்டே போற… சரி… சரி… முறைக்காத… சொல்லு உன் கண்டிஷனர் என்னான்னு நானும் அது  என்னான்னு தான் தெரிஞ்சுக்கிறேன்.”

“கண்டிஷன் என்னன்னா!!, நமக்கு இப்ப கல்யாணம் ஆனாலும் நான் உன் லவ்வ அக்செப்ட் பண்ற வரைக்கும்

லவ்வ அக்செப்ட் பண்ற வரைக்கும்??? என்று சித்தார்த் இழுக்க

“நீ எனக்கு முத்தமே தரக்கூடாது”

“அப்ப கண்டிஷனர் நம்பர் டூ? “

“அதான் சொன்னேனே, முத்தமே தரக்கூடாதுனு…”

“அப்ப கண்டிஷன் நம்பர் ஒன்?”

“நான் உன் லவ்வ அக்செப்ட் பண்றது தான் கண்டிஷன் நம்பர் ஒன்…”

“ஏய்! என்னடி கொழப்புற… நான் முத்தமே கொடுக்காம எதுக்குடி உன்னைய கல்யாணம் பண்ணனும்? இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்லேயே இருக்கலாமே?”

“ம்ம்ம்… இருக்கலாமே… அப்ப போய் அப்படியே இரு…”

“ஹேய்! செல்லம் நான் அப்படி சொல்லலடி மைலி”

“அப்ப எனக்கு முத்தம் கொடுக்குறதுக்கு தான் நீ என்னையே காதலிக்கிற அப்புறம் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிற அப்படித்தானே?”

“ஏய்! நான் அப்படி சொல்லலடி அதுவும் தான்… அப்ப இதுக்கு பதில் சொல்லு? நீ எப்ப என்னோட லவ்வ எப்போ அக்சப்ட் பண்ணுவ? சொல்லு… சொல்லு…. ப்ளீஸ்”

“டேய்! டேய்! ரொம்ப கெஞ்சாத… சரி சரி உனக்காக கண்டிஷன்ல ஒரு சின்ன ரிலாக்ஸேஷன் பண்றேன்…”

“என்னடி? முத்தத்தை இப்ப கொடு அப்புறம் லவ்வ அக்செப்ட் பண்றேன் அப்படின்னு எதாவது சொல்லப் போறியா?”

டேய்!, நீ இப்படியே ஓவரா பேசிக்கிட்டே இருந்தேனு வச்சுக்கோ நான் உனக்கு கொடுக்க வந்த ரிலாக்சேஷனும் கிடைக்காம போயிடும்… என்ன ஓகேவா?”

“சாரி… சாரி நான் எதுவும் குறுக்க குறுக்க பேசல நீயே கண்டினியூ பண்ணு… உன்னோட ரிலாக்சேஷன”

என்று சித்தார்த் தனது முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு மைதிலியின் பதிலுக்காக ஏக்கத்துடன் நின்று கொண்டிருந்தான்.

“அந்த ரிலாக்சேஷனு என்னன்னா… உனக்கு எப்ப எல்லாம் என் மேல கோவம் வருதோ அப்பலாம் நீ எனக்கு முத்தம் தரலாம்….”

“அடியே! ரொம்ப ஓவரா போற டி, இதெல்லாம் எங்கள் காதல்   கண்டிஷன்னு யார்கிட்டயாவது போய் சொன்னா…”

என்று சித்தார்த் சொல்லி முடிப்பதற்குள் மைதிலி குறுக்கிட்டு

“ஆமா நான் இன்னும் முழுசா சொல்லியே முடிக்கல… அதுக்குள்ள எதுக்கு நீ முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கிட்டு பேசுற? மொத இத சொல்லு, நீ யாரு கிட்ட போய் இதெல்லாம் சொல்ல போற?”

“இல்ல… இல்ல… நான் எதுவும் யார்கிட்டயும் சொல்லல அத்தா! நீ மொத உன் கண்டிஷன் அப்புறம் அந்த ரிலாக்சேஷனு என்னான்னு சொல்லி முடி எனக்கு லைட்டா தலையை சுத்துது”

“அப்படி வா வழிக்கு… உனக்கு எப்ப எல்லாம் என் மேல கோவம் வருதோ அப்பலாம் நீ எனக்கு முத்தம் தரலாம்…”

“அதைத்தான் சொல்லிட்டியே அடுத்த சொல்லுடி”

“என்னைய முழுசா சொல்ல விடு டா”

“சரி சொல்லு…”

“உனக்கு எப்ப எல்லாம் என் மேல கோவம் வருதோ அப்பலாம் நீ எனக்கு முத்தம் தரலாம். எப்ப நமக்கு குழந்தை பிறக்குதோ, அப்ப நான் உன்னோட லவ்வ அக்செப்ட் பண்ணிக்குவேன் அதுக்கப்புறம் நமக்குள்ள எந்த கண்டிஷனும் கிடையாது நீ எப்ப வேணாலும் இஷ்டம் போல எனக்கு நீ முத்தம் தரலாம் இதுதான் அந்த கண்டிஷன்  ரிலாக்ஸேஷன் என்ன ஓகேவா?”

“ஆமா இதெல்லாம் நீ இப்பதான் யோசிச்சியா? இல்லை என்னை பார்த்து முதல் நாலே யோசிச்சிட்டியா?”

“ஏன் அப்படி கேக்குற?”

“இல்ல… நான் உனக்கு, பார்க்க இளிச்சவாயனா இப்பதான் தெரிகிறனா? இல்ல முதல் நாளிலிருந்தே தெரிகிறனானு கேட்டேன்?”

“டேய்! ஓவரா பேசாத, இஷ்டனா என்னை லவ் பண்ணு இல்லன்னா போடா”

“ஏய் செல்ல குட்டி ஜூ!..ஜூ!..ஜூ!.. கோச்சுக்காதடி… எனக்கு ஒன்னு மட்டும் புரியல… இல்லை… இல்லை எனக்கு நிறைய புரியல அதுல இந்த ஒன்னு மட்டும் ரொம்ப! நான் உனக்கு முத்தமே தரக்கூடாதுனு சொல்ற ஆனால் குழந்தை பிறந்த உடனே என்னோட லவ்வ அக்சப்ட் பண்றேன்னு சொல்ற… முத்துமே தராம எப்படி டி குழந்தை?”

“டேய் லூசு… நீ எனக்கு முத்தம் தரக்கூடாதுனு தான் நான் சொன்னேனே தவிர, நான் உனக்குத் முத்தம் தர மாட்டேன்னு  சொல்லவே இல்லையே…!”

என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே… சட்டென்று சித்தார்த்தை இறுகக் கட்டியணைத்து அவன் கன்னத்திலும் கண்களிலும் மைதிலி முத்த மழையை தூவிக் கொண்டிருந்தாள்…

மைதிலியை இறுகப்பற்றி தனது காதலையும் கோபத்தையும் உடல் சூடாக மாற்றி அவள் மீது பாய்ச்சிக் கொண்டிருந்தான் முத்தத்தை கொடுக்க முடியாமல்.

மைதிலியை இறுக அணைத்துக் கொண்டே இரு உதடுகளும் உரசிக் கொள்ளும் இடைவெளியில் அவனது உதடுகள் இவ்வாறாக அசைந்தது…

“மைலி, எனக்கு ஒன்னு மட்டும் சொல்லு… இதழோடு இதழ் வச்சு ஸ்ட்ராங்கா ஒரு முத்தம் கொடுத்தா அது யார் கணக்குல வரும்?”

“டேய்! அதையும் நான் தான் கொடுக்கணும், அதுவும் என் கணக்குல தான் வரும், நீ கொடுக்கக் கூடாது ஜஸ்ட் நான் கொடுக்கிறத நீ வாங்கிக்கணும்… என்ன புரிஞ்சுதா?”

என்று மைதிலி சொல்லி முடிக்கும் பொழுது… புரிந்தது என்று சித்தார்த் உதடுகள் அசையும் முன்னரே… சித்தார்தின் உதடுகள் எந்த சலனமும் இன்றி மைதிலியின் இதழுக்குள் முத்தமாய்… அவனுடைய காதலை ஆழம் பார்த்துக் கொண்டிருந்தது….

ச்ச்ச்… ச்ச்ச் என்று முத்தத்தின் சத்தம் கேட்காமல் டிரிங்… டிரிங் என்ற சத்தம் சித்தார்த்தின்
முகத்தை சற்றே சுளிக்கும் படி மாற்றியது

சின்சியரா தூங்கிக் கொண்டு, மைதிலிக்கும் சித்தார்த்துக்கும் இடையே நடந்த அழகான முத்த முற்றுகையை முற்று பெறாமல் முடிவுக்கு கொண்டு வந்த சத்தம் எதுவென்று சற்று கோபத்துடன் கண் திறந்து பார்க்க…

ஆபீஸ் இன்டர் காமில் ஒரு அழைப்பு இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது, அதே நேரத்தில் அவனுடைய மேசையின் மீது வைத்திருந்த செல்போனில் மைதிலியின் அழைப்பும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது… இரண்டும் சேர்ந்து கொண்டு சித்தார்த்தின் முகத்தை முத்த யுத்தம் மனநிலையில் இருந்து மரண யுத்தகள மாவீரனின் மனநிலைக்கு ஒவ்வொரு ரிங்கிற்கும் முகம் மாறிக்கொண்டே சென்றது….

எதையும் யோசிக்காமல் சட்டென்று  மைதிலியின் செல்போன் அழைப்பை எடுக்காமல் பயபுள்ள இன்டர்காம் அழைப்பை எடுத்தான், ஏன்னா தலைவர் டிசைன் அப்படி…

ஹாய்! சித் குட் மார்னிங்,  கொஞ்சம் ஆபீஸ் ரிசப்ஷனுக்கு வரியா?”

“குட் மார்னிங்… மே ஐ நோ ஹூ இஸ் திஸ்?”

“ஹா! நான் உன் பொண்டாட்டி….”

முத்தங்கள் தொடரும்…

 

❤️ Loading reactions...
2 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page