திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -6
Hiiii வாசகர்களே ✨
முதல் ரேங்க் வாங்கும் நான் படி படியாக ஒன்பதாம் வகுப்பில் இருந்து, ஒரு ஆவரேஜ் மாணவையாகி வந்து நின்றேன்!
இது சிறந்ததோ இல்லையோ,
என் கல்வி சிறந்தது இந்த வகுப்பில் நான் எழுதிய முதல் தேர்வு…
தாவர இயலில், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இங்கிலீஷ் ஆகிய சப்ஜெக்ட்களில் முதல் மதிப்பெண் பெற்றேன்!!
ஆகையால் ஒரு வகையில் நான் வைஸ் பிரின்சிபால் ஆசிரியையின் அபிமான மாணவியாக விட்டேன்! ஆனால் கெமிஸ்ட்ரி சற்று நொண்டியது, பிசிக்ஸ் ஒரே அடியாக ஃபைல் ஆகி விட்டு இருந்தார் அம்மணி!!
எங்கள் விலங்கியல் ஆசிரியை நான் முதல் மதிப்பெண் வாங்கிய தகவலை சொல்லி, பின் வேண்டா வெறுப்பாக ஜஸ்ட் பாஸ் போட்டு விட்டாள்…
இவ்வளவுக்கும் வைஷூக்கு கெமிஸ்ட்ரி வராது, என்று நான் தான் காண்பித்தேன் தேர்வில் அருகில் அமர்ந்து கொண்டு…
அதே போல் அவளும் எனக்கு பிசிக்ஸ் காண்பித்தாள், அதே போல் இருவரும் அருகருகே அமர்ந்து இருக்கையில்…
அப்படியும் அவளுக்கு 20 மார்க் போட்டு பாஸ், எனக்கு 16 போட்டு ஃபைல் ஆக்கி இருந்தாள் அந்த ஆசிரியை… 17.5 மார்க் எடுத்தால் பாஸ்!! அது போட்டு விட கூட மனம் வராததற்கு காரணம் என் நேர்மை எனலாம்…
ஆம்! என் பெற்றோர் நிற்க வைத்து மாறி மாறி “ஏன் பிசிக்ஸ் மட்டும் இவ்வளோ கம்மி!!!!?” என்று கேட்க, எனக்கு பொய் சொல்ல வராமல் பட்டென உண்மையை போட்டு உடைத்து விட்டேன், புதிதாய் வந்து இருக்கும் அம்மணியின் உண்மை பற்றி!
உடனடியாக கிளாஸ் டீச்சர் ஆகிய இங்கிலீஷ் நடத்தும் அம்மணிக்கு என் தாய் கால் செய்து, புகார் கூறினார் “ஒழுங்காக நடத்துவதில்லை… யாருக்குமே புரியாமல் என்னத்தை நடத்தி விட்டு செல்கிறார்…?
இதற்காகவா ஒரு லட்சம் ரூபாய் பீஸ் கட்டுகிறோம்!!”
என்று காட்டமாக ஒரு காட்டு காட்டியதற்கு, அம்மணி 6 மாதமாக நடக்கும் அனைத்து தேர்விலும் எனக்கு 16 போட்டு விட்டு, அவளால் இயன்றதை காட்டி கொண்டு இருந்தாள்… அப்போது தானே நன் மதிப்பெண் பெற்ற பிற ஆசிரியர் முன்பாக நான் ஸ்டஃப் ரூமில் நின்று ஒன்றரை மார்க் வேண்டி கெஞ்சுவேன்!!
“எப்போ பாரு இப்படி வந்து நிக்க வேண்டியது!!”😏 என அந்த பல்லி முகத்தை வேறு அஷ்ட கோணலாக சுளித்து கொண்டு சொல்லி காண்பிப்பாள்…
ஒரு மாதம் கடந்து இருந்து நிலையில், கோவிட் பரவ ஆரம்பித்தது!!
ஒரு நாள் காலை கண் விழித்து நான் குளித்து யூனிஃபார்ம் மாட்டி கிளம்பியும் விட்டேன், மகள் விரைவில் எழுந்து விட்டாள் என கமுக்கமாக இருந்த என் தந்தை, நான் வேன் வரும் நேரம் வெளியேறியும் போது தான், வாயை திறந்து லீவ் என்று உண்மையை சொன்னார்…
“ஏன் எதுக்கு எப்படி…???” என்றேன் என் காதுகளை நானே நம்ப முடியாமல்…
ஆம்! பின்ன, காய்ச்சல் வயிற்று வலி என்றால் கூட என் தந்தை லீவ் போட அனுமதிக்க மாட்டார்.!! அவ்வாறு இருக்க, அவரே வாய் மொழிந்து லீவ் என்று கூறினால், எவ்வாறு நான் நம்புவது??
என் பாட்டி வாயை திருந்து, “என் பையனையே பார்த்து எதிர் கேள்வி கேட்குறியா!!?” என்று ஒரு சண்டைக்கு பிள்ளையார் சுழி போடவும், என் தந்தை தாயையும் மகளையும் OFF செய்ய, அம்மா மொபைலில் என் வகுப்பு வாட்ஸ்அப் குழுவில் வந்து இருக்கும் செய்தியை எடுத்து காண்பித்தார்!!
கண்களை சுருக்கி படிக்க ஆரம்பித்த என் இதழில் புன்னகை மலர்ந்தது…
COVID காரணமாக அரசாங்க கட்டளை படி, ஊர் அடங்கு உத்தரவின் பெயரில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றானது!!
“போடு ஆட்டம் போடு!” 🥳🤩💃
என நான் முதலில் தோளில் மாட்டி இருந்த ஸ்கூல் பையை கழற்றி சோஃபாவில் வீசினேன்!!
ராஜா வீட்டு பிள்ளைகள் போல் மரியாதையுடன் நடத்தும் ஒரு பள்ளியில் சென்னையில் படித்து வந்த நான், மதுரைக்கு வந்து இவ்வாறு சிறை போல் ஒரு பள்ளியில் சேர காரணமான என் தமயனுக்கு விடுப்பு இல்லை…
அப்போது என்றால் இரட்டிப்பு உற்சாகம் இருக்காதா!!!💃💃
ஆம்! என் அண்ணனுக்கு நீட் தேர்வில் கவர்மெண்ட் சீட் பல் மருத்துவம் படிப்பதற்கு கிடைத்தது, சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக…
முதலில் ஒரு நான்கு மாசம் ஹாஸ்டலில் தாக்கு பிடித்தான்… ஆனால், கிட்ட தட்ட தினம் சரக்கு அடிக்கும் பிற மாணவர்கள் மத்தியில் டீட்டொடெல்லர் அவனால் தாக்கு பிடிக்க இயலாமல், வாந்தி எடுத்து அவன் பயிலும் அதே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருந்தான்!!
அதனால், ஒரு ஆண்டு இல்லை… இல்லை..
ஒன்பது மாதம், கல்லூரி அருகில் இருக்கும் ஒரு வீட்டின் மாடியில் இருந்த l ஒரு அறையை வாடகைக்கு எடுத்து கொடுத்து இருந்தோம்!!
அங்கே சாப்பாட்டு பிரச்னை!!
கிட்ட தட்ட ஒரு நல்ல உணவகத்திற்கு, 45 நிமிடம் பயணித்து தெப்பக்குளம் அருகில் போக வேண்டும், இல்லையெனில் பெரியார் பஸ் நிலையம் வர வேண்டும்!!
மாதம் இரு முறை,
டாக்சி வைத்து ஜங்ஷன் இறங்கி, AC ட்ரைனில் டிக்கெட் புக் செய்து கொடுக்க வந்து செல்வான்…
அதுவும் முடியாமல், குடும்பமாக இடம் பெயர்ந்தோம் அவன் இரண்டாம் ஆண்டு பாதி கடந்து இருந்த நிலையில்… “படிக்க நேரம் கிடைப்பதில்லை!!” என்ற காரணத்திற்காக…
இப்போது நடுவில் தாத்தா இறந்த ஓரிரு மாதம் கடந்து இருந்த நிலையில், பாட்டி எங்கு பார்த்தாலும் கணவர் வந்து வா என்று அழைப்பது போல் இருக்கிறது நடு அளவும், மனம் கேளாமல் என் தாய் கையோடு அழைத்து வந்து விட்டார்…
ஆகவே இப்போது இந்த ஊர் அடங்கு நிலையில், ஐந்து பேர் மூன்று வேளை அமர்ந்து சாப்பிட வேண்டும்!! ஒரு மிட்டில் கிளாஸ் குடும்பத்திற்கு இது கஷ்டம் தானே…
ஆயினும், என் தாய் வழக்கம் போல் எதற்கும் தயார் என்று முதலில் மளிகை பொருட்களை முதலில் வாங்கி வர சொன்னார்…
என் தந்தை வாங்கி விட்டு, அதோடு ஒரு உலா வேறு சென்று விட்டு வந்த நிலையில் இரண்டு வாரத்தில் என் தாய்க்கு கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ் என்று வந்து விட்டது!!
அவர் பார்த்த வீட்டு வேலைக்கு என்னை டிஃபோல்ட் ஆக நியமிக்க, நான்கு பேருக்கு மூன்று வேளை சமைத்து போட்டு நடு நடுவில் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொண்டேன்!!
தாய்க்கு மட்டும் சீரியஸ் என்பதால், மருத்துவமனையில் அனுமதித்தார்கள்…
தந்தை பாட்டியை வீட்டிற்குள் தனிமை படுத்தி கொள்ள சொல்லி இருந்த நிலையில், இந்த வேலை எல்லாம் என் தலையில் விடிந்தது!!
ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு நிற்க கூட முடியாமல், ஆம்புலன்ஸ் வரவழைத்து சென்று அம்மா இருக்கும் அதே கவர்மெண்ட் மருத்துவமனையில் சேர்த்தனர்…
உடல் நிலை சரி இல்லாததோடு, என் அப்பாவையும் அவர் வார்டுக்கு சென்று சென்று பார்த்து கொண்டார் என் தாய்…
பாட்டிக்கு ஒன்றுமே இல்லை, நான்கு நாட்களில் வீடு திரும்பி வந்து விட்டார்…
வீட்டில் நான் சமைக்கும் சோறு தொண்டைக்குள் இறங்க வில்லையாம்…
காய் கறி எதுவும் இன்றி நாக்கு செத்து போயிற்று, என்று கழுவி ஊற்றி விட்டு தானே சமைத்து தானே உண்டார்…
என் அண்ணன் பாட்டி பாட்டி என வெளியில் சென்று, கடையில் இருந்து காய் வாங்கி வந்ததில் அவனுக்கும் ஒரு கை கிடைத்தது!!
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எங்களுக்கு வகுப்பு என்றானது… பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு வேகமாக சில்லபஸ் முடிக்க வேண்டி…
இரண்டு நாட்கள் எனக்கு ஒரு பொட்டு சோறு கிடைக்கவில்லை!! கேட்டாள் நான் தனி அறையில் அடைந்து கொண்டு இருக்கிறேனாம்!!
நான் கேட்கவும் இல்லை!!
“என் தாய் கொடுத்த தெம்பு இருக்கிறது!” என பாத்ரூம் குழாயில் தண்ணீர் பிடித்து குடித்து என் உயிரை, உயிர் கொடுத்தவள் மீண்டு வருவதற்காக பிடித்து வைத்து இருந்தேன்!!
தினம் தாய் ஹாஸ்பிடலில் இருந்த படி அழுவார், தந்தை கொடுக்கும் மாத்திரைகளை எல்லாம் போட மறுக்கிறார் என… கொஞ்சம் சீரியஸ் ஆனால், வேண்டிலேட்டோரில் தான் வைக்க வேண்டும் என்று சொல்லி சென்று விட்டார்கள் மருத்துவர்கள் என்றும்…
தினம் கண் முன்பாக, தன்னை சுற்றி பல உயிர்கள் பிரிந்து கோரமான மரண ஓலம், அவர்களின் உறவினர்கள் வந்து அழும் அழுகை எல்லாம் சகித்து கொண்டு, எனக்காக அவரும் அங்கே அந்த கொடிய கிருமியோடு, தன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்..
இந்த நிலையில் எனக்கு இருந்த ஒரே ஆறுதல் அவன் முகம் காண்பது தான்!!
ஆம்! எனக்கு ஆன்லைன் கிளாஸ் லிங்க் பார்க்க வேண்டி புது மொபைல் வாங்கி கொடுத்து இருந்தார்கள்… 5 ஆயிரம் ரூபாய் சைனீஸ் மாடல் தான்.!!
ஆனால், அதில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவன், மதுரையில் பிரபல பழமையான ஒரு கல்லூரியில் B.Com சேர்ந்து இருப்பது தெரிய வந்தது!!
காலேஜ் போட்டோ பகிர்ந்து இருந்தான்…
அடுக்கு அடுத்து, எனக்கு பிடித்த சிவப்பு நிற R15 பைக்கில் உலா வந்து ஒரு ரீல் வீடியோ பதிவு செய்து இருந்தான்!!
அதை ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து, நான் அதை தத்ரூபமாக ஒரு காகிதத்தில் உயிர் கொடுத்து இருந்தேன்!!
ஆம்! நான் ஒரு ஓவிய கலைஞராக அந்த கொரோனா மாதங்களில் உருவெடுத்தேன்!
என் முழு உயிரும் அதில் ஊற்றி, கொஞ்சம் கொஞ்சமாக அதில் மூழ்கி வெளியே நடக்கும் நாடகத்தில் இருந்து விடு பட்டு அதை கற்று கொண்டேன், சுயமாக அதே இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்து…
அதில் முழுக்க முழுக்க ஒரு நாள் அமர்ந்து அவனின் பல புகை படங்களை என் பென்சில் கொண்டு அவனுக்கு காகிதத்தில் புத்துயிர் கொடுத்தேன்!!
அதிலும் நான் அது வரை டாம் அண்ட் ஜெர்ரி, சோட்டா பீம், டோரா, சிண்ட்ரெல்லா என்று ஒரு வட்டத்திற்குள் என் திறனை பூட்டி வைத்து இருந்தேன்!
அது அனைத்தும் தவிடு பொடியாக்கி, முயற்ச்சி செய்து செய்து ஒரு உயிர் கொண்ட மனிதனின் ஓய்வத்தை வரைந்து, அதில் கடைசியாக அவனின் அந்த காந்த கண்கள் வரைந்து அதில் நான் ஈர்க்க பட்டு, முதுகு தோள் வலி எல்லாம் மறந்து சிரிப்பேன்!!
வீட்டில் நடக்கும் ரண படுத்தும் நிகழ்வு அனைத்தையும் தாண்டி, இது எனக்கு ஒரு ஆறுதல்❤️🩹❤️🩹
பெற்ற தாய் போல், எந்த எதிர் பார்ப்பும் இல்லாத ஷ்ரேயாவின் இந்த முதல் காதல் துவங்கும் முன்பே மண்ணில் புதைத்து எப்படி? என்று அடுத்து அத்தியாயத்தில் காண்போம்!!
Thanks for reading மக்களே 🩷
