திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -7
Hiiii வாசகர்களே ✨
கட்டிய கணவனை எமன் வாயில் இருந்து மீட்டு விட்டு, அவரும் வீடு திரும்பினார் என் தாய்!!
மூன்று நாள் கழித்து அன்று இரவு தான் உணவு உண்டேன் நான்… அதுவும் அம்மா வந்த மறு நொடி வரிந்து கட்டிக் கொண்டு சமைத்தது தான்!!
கொழுக் மொழுக் என்று இருந்த நான், தண்ணீரை கண்ணில் காணாத செடி போல் வாடி இளைத்து சொங்கியாக காட்சி அளித்தேன்!!
அதிலும் எனக்கு என்று தனி அறை கிடையாது! அப்பா அம்மாவின் படுக்கை அறையை தான் பகிர்ந்து கொண்டு இருந்தேன், தரையில் மெத்தை போட்டு உறங்குவேன்… மழை வந்தால், மெத்தையும் நானும் ஹாலில் கிடப்போம், தெப்பம் போல் மிதப்பது தவிர்ப்பதற்கு!!
அங்கே என் அண்ணனுக்கு மட்டும் தனி அறை, டாக்டர் படிப்பு படிக்கிறான் அல்லவா!!? அதான்… பாட்டி வந்ததோடு அவன் அறையில் குடி புகும் வரை!!
இப்படியே நாட்கள் நகர்ந்ததில், ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வந்தது!! இரவு முதல் முறையாக, நான் 12 மணி வரை தூங்காமல் அவனுக்கு விஷ் பண்ண காத்து இருந்தேன்!!
சரியாக 11:59 ஆரம்பித்து, நான் வரைந்த ஒரு ஓவியம் அவனுக்கு அனுப்பி வாழ்த்து மெசேஜ் டைப் செய்து அனுப்பி வைத்தேன்!!
உடனடியாக எனக்கு பதில் வரவில்லை!!
நான் அவனுடன் பேசிய முதல் வார்த்தை என் பிறந்த நாளுக்காக, அவனுக்கு முதல் முறை உரையாடலை தொடங்கியதும் அவன் பிறந்த நாளுக்காக தான்!!
ஆம்! அந்த ஓவியத்தில் அவனை, இந்திய அணியின் ப்ளூ நிற ஜெர்சியில் அவன் மட்டையை தோள் மீது வைத்து கொண்டு, கேப் 🧢 அணிந்து களம் இறங்குவது போல் அச்சு அசல் தத்ரூபமாக வந்து இருந்தது!!
அதையே தான் அனுப்பி விட்டு, 1 மணி வரை காத்து இருந்து பிறகு என்னை அறியாமல் தூங்கி போனேன்!!
அடுத்த நாள் கண் விழித்ததும், 6 மணிக்கு நான் ஆன்லைன் வகுப்புக்கு லாகின் செய்யாமல் இன்ஸ்டாகிராமில் லாகின் செய்து பார்த்தேன்… அப்படி ஒரு மட்டற்ற மகிழ்ச்சி, என் மனம் ஆனந்த தாண்டவம் ஆட துவங்கியது!!
ஆம்! அவன் வெறும் ஒரு வார்த்தை தேங்க்ஸ் என்று பதில் சொல்லி இருந்தான்… இது மட்டும் இல்லாமல், தனி பட்ட ரகசிய அக்கவுண்ட் தொடங்கி, வீடியோ எடிட்டிங் கற்று கொண்டு அவனின் பதிவுகள் பக்கம் பக்கம் போட்டு இருந்தேன்!
கிட்ட தட்ட அதன் எண்ணிக்கை 250 ஐ தாண்டி இருந்தது!! முதலில் எடுத்த ஸ்கிரீன் ஷாட் அனைத்தையும் சேகரித்து வைக்க துவங்கியது, நாள் முடிவில் அவனின் ஃபேன் பேஜ் போல் உரு எடுத்து விட்டது!!
ஊரில் உள்ள காதல் பாடல் வரிகள் முழுக்க அவனே!!😍
காணும் இடம் எல்லாம் அவனே…
கேட்பது அவன் பெயர் மட்டுமே!
என் நெஞ்சம் ஒவ்வொரு இதை துடிப்பிலும் அவனையே நேசம் கொண்டு துடித்தது!!
“வானே வானே வானே
நான் உன் மேகம் தானே
என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே…
தும் தும் தும் தும் தும் தும்
மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே…
தும் தும் தும் தும் தும் தும்
சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே
அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம் தவிர
எதுவும் இல்லையே அன்பே“
அப்படியே நாட்கள் உருண்டோட, என் 10 ஆம் வகுப்பு தோழி இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி இருந்தாள்…
10 ஆம் வகுப்பில் நாங்கள் 6 பேர் ஒரு குழு,
நானும் என் அருகில் அமரும் தோழியும் இணை பிரியா தோழிகள்… ஆனால் நான் குழுவில் இருப்பினும், அவ்வளவாக ஒப்ப மாட்டார்கள் என்னிடம் யாரும்…
என் பின்னால் அமர்ந்து இருக்கும், பெண்ணுக்கு என்னை மிகவும் பிடிக்கும் அது எனக்கே தெரியும்!
ஆனால் பேச மாட்டாள்…
இப்போது பேசும் போது கூட, ஹரிணி en வாழ்வில் இல்லையா!!? என்று கேட்டு உறுதி செய்து கொண்டு தான் பேசினாள் பிரகதி…
ஆம்! என்று என்னிடம் இருந்து பதில் வந்ததும், முழுக்க முழுக்க அந்த ஞாயிற்று கிழமை இரு தோழிகளுமாக மணி கணக்கில் கதை பேசினோம், இந்த இரண்டு ஆண்டில் நடந்த அனைத்தையும் பற்றி…
அத்தோடு பிரகதி இப்போது யாரோ ஒரு வகுப்பு மாணவனையே காதலிப்பதாக சொன்னாள்… நான் மகிழ்ந்தேன்!
அத்தோடு நிற்கும் பார்த்தால், அவள் காதலன் ஆகிய ஆகாஷ் என்னோடு பேச துவங்கினான்…
எனக்கு முற்றிலும் பிடிக்கவில்லை!
ஆனால் அதை சொல்ல எனக்கு வார்த்தை வரவில்லை… பேசிய இரு நாட்களிலேயே, “அந்த பையன் அவளுக்கு ஏற்றவன் இல்லை!!” என்று எனக்கு தெரிந்து விட்டது!
ஆனால் இப்போது தான் காதலித்து, இந்த விடுமுறையில் தான் பேசி பழகி காதல் பகிர்ந்து கொண்டு இருந்த நிலையில், எனக்கு அவர்களை பிரிக்க ஏனோ மனம் வரவில்லை!!
அது எந்த அளவுக்கு அவன் டாக்சிக் என்றால், அவளோடு என்னை ஒப்பிட்டு பேசுவான்… ஒரு நாள் நானும் அவளும் வீடியோ கால் பேசும் போது, அவனும் அடம் பிடித்து இணைந்து கொண்டு என் வீடியோவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்தது மட்டும் இல்லாமல் “நான் எடுத்து இருக்கேனே!!” என்று அறிக்கை வேறு விட்டான்…
என் இடம் அவள் பழைய காதல் பற்றி கேட்டு, எனக்கு தெரியாது என்று உண்மையை சொன்னால் கூட என்னோடும் அவளிடம் சண்டைக்கு நிற்பான்…
இது ஒரு கட்டத்தில், எங்கு வந்து நின்றது?
என்றால் அவர்கள் சண்டைக்கு என்னை இழுத்து பஞ்சாயத்து வைப்பார்கள்!!
முதலில் அவன் தான் சண்டை நடக்கும் போதே நடுவில் எனக்கு மெசேஜ் செய்து தகவலை சொல்லி விடுவான், அவன் சொல்லிய கதை படி பார்த்தால் தவறு அவள் மேல் முழுக்க இருப்பது போல் தெரியும்…
சற்று நேரத்தில் அழுது கொண்டே பிரகதி, எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனைப்புவாள்…
அதில் பார்த்தால், அவன் தான் சண்டையை ஆரம்பித்தது போல் இருக்கும்!!
கிட்ட தட்ட இது வாரத்திற்கு 5 முறை குறைந்த பட்சம் சண்டை நடக்கும்…
அதற்கு நான் தான் குரூப் ஒன்று தொடங்கி, இருவரையும் அவரவர் கருத்தை சண்டையை பற்றி சொல்ல வைத்து, நான் எதுவுமே சொல்லாமல் அவர்களாகவே பேசி தீர்த்து கொள்ள வைப்பேன்…
நான் பார்த்த போதே, 4 முறை பிரேக் அப் ஆகி இணைந்து விட்டார்கள்!! “இது இப்படியே தொடர்வது நல்லது இல்லை! வாழ்க்கையே பாதித்து விடும்…” என்று நான் பூடகமாக சொன்னேன்…
ஆனால் காதல் மயக்கத்தில் இருந்த பிரகதிக்கோ என் வார்த்தைகள் சீரியஸ் ஆக தோன்றவில்லை!! பிறகு தான், அப்படியே பேச்சு வாக்கில் அவர்கள் காதலித்த கதையை பற்றி அவள் சொல்லும் போது எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது!!
இருவரும் பதினொன்றாம் வகுப்பில் ஒரே பிரிவு, ஆனால் பன்னிரண்டாம் வகுப்பில் வெவ்வேறு பிரிவு… அது நாள் வரை ஆகாஷ் வேறு ஒரு பெண்ணுடன், காதலில் இருந்து விட்டு அவள் கழட்டி விட்டதும் வீராப்பு காட்டுவதற்காக, பிரகதி இடம் காதலை சொல்லி இருக்கிறான் அடுத்த வாரத்திலேயே!!
கேட்கும் அனைவருக்கும் இது புரிந்தும், இதை என் தோழியால் உணர விடாத படி காதல் மழையை அவள் மீது பொழிய, அவளும் மதி மயங்கி போய் இருந்து இருக்கிறாள்… எந்த அளவு என்றால், அவன் ஆடை அற்ற புகைப்படம் கேட்டதும் இவள் மறுக்காமல் அன்பும் அளவு!!
இவர்கள் காதல் கதியே அதோ கதையாகி போன நிலையில் தான், பிரகதி ஒரு நாள் ஆகாஷ் மீது இருந்த சந்தேகத்தில் ஆழம் பார்க்க என்னிடம் ஒரு போலியான கணக்கு உருவாக்கி தரும் படி கேட்டால்…
நானோ j பற்றி பதிவுகள் போட்ட, கணக்கின் பாஸ் வர்டு சொன்னதும், அதில் லாகின் செய்த பிரகதி ஆகாஷ் கணக்கில் சென்று அவனிடம் வேறு யாரோ பெண் போல மெசேஜ் அனுப்பி விட்டவள், வெளியேறாமல் நான் போட்டு இருக்கும் பதிவு அனைத்தையும் பார்த்து விட்டாள்..
ஆனால், அது ஆன்லைன் வகுப்பில் மும்முரம் ஆகி இருந்த எனக்கு தெரியாமல் போய் விட்டது!! அவர்கள் பள்ளியில் அவ்வளவாக, எந்த பொது தேர்வு டென்ஷன் இன்றி இருக்க மாலை வரை நான் போட்ட பதிவுகளை ஒன்று விடாமல் பார்த்து இருக்கிறாள்..
இதற்கு இடையில் ஆகாஷ் ஃபாலோ ரெக்வெஸ்ட் கொடுக்க, அதை ஏற்காமல் வெறும் குறுஞ் செய்தி மட்டும் அனுப்பி விட்டு இருக்க, ஆசை எப்படியோ உணர்ந்து உஷார் ஆன அவன் “நான் கமிட்டட்!!” என்று பேச்சை முடித்து கொண்டான்…
இது எதையும் தெரியாமல், தெரிவை நான் 6 மணிக்கு தான் அனைத்து வகுப்புகளும் முடிந்த நிலையில் அவள் மெசேஜ் பார்த்தேன்!!
உணர்ச்சி வேகத்தில், தெரியாமல் j பற்றி போட்டு இருந்த கணக்கை அவளிடம் கொடுத்ததை எண்ணி அப்போது தான் மானசீகமாக தலையில் அடித்து கொண்டேன்!!
“ஹேய் ஷ்ரேயா… இவன யாரு டி!!??
இவ்வளோ எடிட் பண்ணி போஸ்ட் போட்டு தளி இருக்க..!!
ஆனா என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல…”
“அது.. அது வந்து டி…” என்று அவள் விடுத்த அழைப்பில் நானே முழுக் கதையையும் சொல்லி முடித்தேன்…
சொல்ல போது கூட அவனை j அண்ணா என்று தான் குறிப்பிட்டு சொல்ல, பிரகதி
“லூசு ஷ்ரேயா!!! லவ் பண்ற பையனை போய் அண்ணா அண்ணான்னு மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லுற!!” என்று கடிந்து கொண்டாள்…
“என்ன இது… இதுக்கு பேர் தான் லவ் ஆ!!!?”
“ஆமா!!! இல்லையா பின்ன…”
“அப்படி எதுவும் இருக்காது டி… எனக்கு just அந்த அண்ணாவை டெய்லி ஒரு வாட்டி பார்த்தாலே போதும்…” என்று நான் சொல்ல…
ஆனால், பிரகதியோ “ஹே அதெல்லாம் இல்ல!! இரு நான் பேசி பாக்குறேன், பையன் எப்படின்னு!! சிங்கிள் ஆக இருந்தா டக்குன்னு உன் லவ்வை அவன் கிட்ட சொல்லிறு…” என்று படக்கென அழைப்பை துண்டித்து விட்டாள்…
ஏழரை சனி மற்றும் கண்டக சனி இரண்டும்
அன்று முதல், என் வாழ்வில் ஓபன் கங்னம் ஸ்டைல் பாட்டு போட்டு ஆடி பாடி கூடி கும்மி அடித்து போன நாள் அது…
அப்படி என்ன நடந்தது?
என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨
Thanks for reading மக்களே🩷
