தூவானம் -1

மும்பையின் அரபிக்கடல் தன் அலைகளால் கரையைத் தீண்டிக் கொண்டிருந்த அந்த நிசப்தமான இரவு. 

Bandra West, Carter Roadல் வானத்தை முட்டும் அந்த நவீன சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு, அந்தப் பகுதிக்கே ஒரு மகுடம் வைத்தது போல நின்றிருந்தது.

அதன் 23வது மாடியில் அமைந்திருந்த அந்த Lounge Club Bar, வெளியுலகின் இரைச்சலே தெரியாத ஒரு தனி உலகம்.

அங்கே மென்மையான Soft Jazz இசை காற்றில் மிதந்து கொண்டிருக்க, மெல்லிய நீலநிற விளக்குகள் அந்த இடத்திற்கு ஒரு மர்மமான அழகைத் தந்து கொண்டிருந்தன.

பார் கவுண்டரின் ஓரத்தில், அந்த மங்கலான வெளிச்சத்தில் அவன் அமர்ந்திருந்த தோரணையே ஒரு தனி அதிகாரம் தெரிந்தது. ஒருபக்க தோளில் மடித்து போட்ட ரேமண்ட் கோட், கசங்காத வெள்ளை நிறச் சட்டை, மணிக்கட்டில் மின்னும் விலையுயர்ந்த கடிகாரம் என அவன் ஒரு Classic பிம்பமாகத் தெரிந்தான்.

இடது கை சட்டையை மடித்துவிட்டு, கையை உயர்த்தியவன் இரண்டு சொடுக்குகள் போட, அடுத்த நொடியே பார்டெண்டர் அவன் முன் ஆஜரானான்.

அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை…  “Macallan Eighteen.. Neat..”  என கம்பீரமான குரலில் கட்டளையிடுவது போல சொல்ல 

பார்டெண்டர் லாவகமாக கண்ணாடிக் கோப்பையில் அந்த தங்க நிறத் திரவத்தை ஊற்றி மெதுவாக நகர்த்தினான். அவன் அதை ஒரு போர் வீரன் தன் களைப்பைத் தீர்க்க அருந்துவது போல ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டு கவுண்டரில் அந்த கோப்பையை வைக்க, “டப்!” என்ற அந்தச் சத்தம் எதிரொலித்தது.

மீண்டும் இரண்டு சொடுக்குகள்.

“Repeat..” அவன் குரலில் இருந்த அந்த காந்த ஈர்ப்பு பார்டெண்டரை ஒரு இயந்திரம் போலச் செயல்பட வைத்தது. இரண்டாவது முறையும் அதே வேகம், அதே மௌனம்.

மூன்றாவது முறையும் ‘Repeat’ வருமென பார்டெண்டர் பாட்டிலைத் தயார் செய்ய, அவனோ தன் கோட் பையிலிருந்து ஒரு பிளாட்டினம் கார்டை எடுத்து கவுண்டரில் வைத்தான்.

“Johnnie Walker Blue Label… One bottle.” என அவன் சொன்னது ஒரு ஆர்டர் அல்ல, அந்த இரவை விலை கொடுத்து வாங்கும் ஒரு முடிவு.

பார்டெண்டர் வியப்புடன் அவனைப் பார்த்தான். “சார், இது லிமிடெட் எடிஷன்… இப்போதே வேண்டுமா?”

அவன் மெல்லத் தலை நிமிர்ந்து தன் தீர்க்கமான கண்களால் அவனை ஒரு தரம் பார்த்தான். அந்தப் பார்வையில் இருந்த தீவிரம் பார்டெண்டரை மேற்கொண்டு பேச விடவில்லை.

“இதோ சார்..” என கார்டை தேய்த்துவிட்டு, அந்த நீல நிறப் பாட்டிலை அவன் முன்னால் வைத்தான்.

அந்த விலை உயர்ந்த பாட்டிலை அவன் கைகள் வேட்டையாடும் மிருகத்தைப் போலக் கவ்விக்கொண்டன. எந்தவிதக் கண்ணாடிக் கோப்பையும் அவனுக்குத் தேவைப்படவில்லை. பாட்டிலின் மூடியைத் திறந்தவன், அதன் வாய் பகுதியில் தன் உதடுகளால் ஒரு முத்தம் பதிப்பது போல வைத்து, அப்படியே தலையைச் சரித்து வான் நோக்கி உயர்த்தியவன்.

“மடக்.. மடக்..”  என தொண்டைக் குழியில் இறங்க, அந்த நீல நிறத் திரவம் அவனது நரம்புகளில் அனலாகப் பாய்ந்தது.

உச்சந்தலைக்கு ஏறிய போதை, அவனது நிதானத்தை ஒரு நொடியில் சிதைக்க, “தொப்!” என்ற சத்தத்துடன் பாட்டிலை கவுண்டரில் வைத்த அதே வேகத்தில், அவனது பாரமான தலையும் அதன் அருகிலேயே சரிந்தது.

சில நொடிகள் அந்த மரத்துப் போன அமைதி… பின் மெல்லத் தன்னைத் தேற்றிக்கொண்டு எழுந்தான்.

அந்த உயர்ந்த ஸ்டூலில் இருந்து தடுமாற்றத்துடன் இறங்கியவன், பாட்டிலை விடவில்லை. அதன் வாய் பகுதிக்குள் தனது ஆள்காட்டி விரலை நுழைத்து, ஒரு கொக்கியைப் போலப் பிடித்துக்கொண்டு, சரிந்த நடையுடன் அந்தப் பாரின் கதவைத் திறந்து வெளியேறினான்.

அங்கே காத்திருந்த Lift கதவுகள் அவனுக்காகவே திறந்தது போல இருந்தது. உள்ளே நுழைந்தவன், அந்த வரிசையான பட்டன்களைப் பார்த்தான். கண்களில் போதை மறைக்க, “தன் உலகம் எங்கே இருக்கிறது?” என ஒரு நிமிடம் மூளைக்குள் தேடினான். பின் சட்டென்று ’13’ என்ற எண்ணை அழுத்தினான்.

லிப்ட் 23லிருந்து 13க்கு இறங்கியது, லிப்ட் கதவு திறந்ததும் அந்தத் தளத்தின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு இரைச்சல் அவனது காதுகளைத் தாக்கியது.

அவனது Condo கதவு முன்னால் நின்றபோது, உள்ளே இருந்து தெறித்த Rock Music சத்தம் சுவர்களை அதிர வைத்துக் கொண்டிருந்தது. கதவைத் தட்டும் பொறுமை கூட அவனிடம் இல்லை. கை வைத்து தள்ளியபோது, அது மெல்லத் திறந்தது.

உள்ளே நுழைந்தவனுக்கு ஒரு கணம் கண்கள் கூசின. நீலமும் ஊதாவும் கலந்த விளக்குகள் அந்த அறையை ஒரு மாயலோகம் போலக் காட்டின. DJயின் அதிரடி இசை தரையைத் துடிக்க வைத்துக் கொண்டிருந்தது. சுமார் பத்துக்கும் மேற்பட்டோர், யார் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு போதையில் பிணைந்து ஆடிக்கொண்டிருந்தார்கள்.

அங்கே தெரிந்த முகங்களில் எவை உண்மையான உறவுகள், எவை அந்த இரவோடு மறையும் கள்ள உறவுகள் என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு காமமும் போதையும் கலந்திருந்தது.

அவன் உள்ளே செல்லச் செல்ல, காற்றில் மதுவின் வாசனையையும் மீறி ஒரு விசித்திரமான மணம் கமழ்ந்தது. அது ஒரு ரம்மியமான, மூளையை மயக்கக்கூடிய ஒரு Illegal Drugன் வாசனை. புகையிலையும், ஏதோ ஒரு வேதிப்பொருளும் கலந்த அந்த வாசனை அங்கே சட்டவிரோதக் கொண்டாட்டம் உச்சத்தில் இருப்பதை அவனுக்கு உணர்த்தியது.

கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருந்த அந்த மனிதர்களைப் பார்த்தபோது, அவனது முகத்தில் கசப்பும் வெறுப்பும் ஒருசேரக் குடியேறியது. கையில் இருந்த பாட்டிலை மீண்டும் உயர்த்தியவன், அதன் எரியும் சுவையைத் தொண்டையில் இறக்கிவிட்டு, நேராக அந்த DJ மேடையை நோக்கி நடந்தான். அவன் நடை தள்ளாடினாலும், அவனது நோக்கம் தெளிவாக இருந்தது.

ஒலிக் கலவைகளில் மும்முரமாக இருந்த அந்த இளைஞன், இவனது திடீர் வருகையைக் கண்டு நிமிர்ந்தான். அவனது கண்களைச் சந்தித்த அந்த செல்வந்தன், தன் ஒற்றை விரலால் காற்றில் உயர்த்தியவன் “Stop the music” என மரணக் கட்டளையிட்டான். 

அடுத்த நொடி, அந்த மாளிகையே செவிடானது போல நிசப்தம் நிலவியது. இசை நின்ற அதிர்ச்சியில் அங்கிருந்தவர்கள் சிலையாக நின்றார்கள்.

மேடையில் ஏறி நின்றவன், போதையில் கரகரப்பான குரலில் மிக மென்மையாகச் “All of you… get out.” என சொன்னான்

ஆனால், அங்கிருந்த எவரும் நகரவில்லை. போதையும் இளமையும் ஏறிய அந்தக் கூட்டம், அவனை ஒரு பைத்தியக்காரனைப் போலப் பார்த்தது. அங்கங்கே கிசுகிசுப்புகள் எழுந்தன.

“யார் இவன்?”, “நடுவிலே வந்து கெடுக்கிறான்!” என்ற ஏளனப் பேச்சுகள் அவன் காதுகளில் வந்து விழுந்தன.

அந்தச் சிறு சலசலப்பு அவனது பொறுமையின் கடைசி நூலிழையை அறுத்தெறிந்தது. ரத்த நாளங்கள் புடைக்க, அருகில் இருந்த பிரம்மாண்டமான DJ Speakerயை  ஓங்கி ஒரு மிதி மிதித்தான். அது அலறியபடி கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது. அந்தச் சத்தம் அங்கிருந்தவர்களின் போதையை ஒரே நொடியில் இறக்க 

இந்த முறை, “ALL OF YOU… GET LOST!”  என அவன் சிங்கம் போலக் கர்ஜித்தான்

அவனது ஆக்ரோஷத்தைக் கண்ட கூட்டம், கையில் இருந்த ஒயின் கிளாஸ்களை அங்கேயே போட்டுவிட்டு, அலறி அடித்துக்கொண்டு கதவை நோக்கி ஓடியது. 

இருப்பினும், ஒருத்தி மட்டும் அசையவில்லை.

சிகப்பு நிற Velvet Wrap உடையில், தொடை வரை தெரிந்த அந்த அரைகுறை ஆடையுடன், அங்கிருந்த விளக்குகளின் வெளிச்சத்தில் ஒரு தீப்பிழம்பு போலத் தெரிந்தாள் அவள்.

சிதறிக் கிடக்கும் கண்ணாடித்துண்டுகளின் மீது தனது ஹை-ஹீல்ஸ் செருப்புகள் சத்தமிட, அவனை நோக்கி ஆக்ரோஷமாக முன்னே வந்தவள்.

“Baby… what is this? Why are you behaving so cheaply in front of everyone? Don’t you feel any shame?” என்று அவள் எறிந்த வார்த்தைகள், அவனைச் சுட்டெரிக்கும் அனலாகத் தாக்க.

அவன் அவளை மெல்ல நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பார்வையில் போதையை விட ஆழமான ஒரு ஏமாற்றம் இருந்தது. அவளின் அரைகுறை ஆடையும், அதில் தெரிந்த தேகமும் அவனுக்கு அழகாகத் தெரியவில்லை, மாறாக அது அவனது கௌரவத்தில் விழுந்த கீறலாகத் தெரிந்தது. ஆத்திரத்தில் கையில் இருந்த பாட்டிலை கடைசி சொட்டு வரை குடித்துவிட்டு, அதைத் தூர வீசி எறிந்தான். அது சிதறித் தெறித்த கண்ணாடித் துண்டுகள் அவள் அணிந்திருந்த அந்த சிவப்பு வெல்வெட் உடையின் மினுமினுப்பைப் பிரதிபலித்தன.

DJ மேடையிலிருந்து மின்னல் வேகத்தில் இறங்கி வந்தவன், அவளது கழுத்தைப் பற்றி தள்ளிக்கொண்டே சுவரோடு சேர்த்தான். அவனது கைகள் ஆத்திரத்தின் அழுத்தத்தைக் காட்டின.

“எதுடி அசிங்கம்? எது அசிங்கம்?! இந்த மாதிரி டிரஸ் போட்டுக்கிட்டு, எவன் கூடயோ இடிச்சுக்கிட்டு ஆடுறியே… இதெல்லாம் உனக்கு அசிங்கமா தெரியலையா?”

திமிராக அவனது கைகளைத் தட்டிவிட்டவள், “Baby, it’s fashion! இதெல்லாம் ஒரு மேட்டர்னு இப்போ வந்து நிக்குற? நீயெல்லாம் ஒரு Rich peopleனு சொல்லிக்காத, உன் எண்ணம் ரொம்ப சீப்!” என்று முகத்துக்கு நேராக கத்த.

அவன் பலமாக சிரித்தான்… அந்தச் சிரிப்பில் வலி இருந்தது. “எது சீப்? நீ ஒரு தமிழ் பொண்ணு! தமிழ்நாட்டுல இருந்து வந்த நீ, எவனோ ஒருத்தன் கூட இப்படி நெருக்கமா கட்டிப்பிடிச்சு ஆடுறது உனக்குத் தப்பா தெரியல, ஆனா நான் கேக்குறது தப்பா?”

“என்ன… தமிழ்நாட்டுல இருந்து வந்தா, புடவை சுத்திக்கிட்டு மூலைல உட்காரணும்னு சொல்றியா? காலத்துக்கு ஏத்த மாதிரி மாறத் தெரியாத ஆளு நீதான்!” 

“ஆமாண்டி… அந்தத் தமிழ் பண்பாடு உன்கிட்ட இருக்கும்னு நம்பித் தானே நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா நீ இப்போ எவன் கூடயோ ஆடிக்கிட்டு இருக்க… நமக்கிக் கல்யாணமாகி எத்தனை நாள் ஆச்சு? எங்கடி நான் கட்டுன தாலி? உன் கழுத்துல அந்தத் தாலி கூட இல்லையே… அதை எங்கே கழட்டி வச்சிருக்க?!”

“இந்த டிரஸ்க்கு தாலி எல்லாம் மேட்ச் ஆகாது பேபி… அதான் கழட்டி வச்சுட்டேன். Common, it’s just a piece of thread! இதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயம். ஏன் இன்னும் பழைய காலத்து ஆளு மாதிரிப் பேசிக்கிட்டு இருக்க? Come to the modern lifestyle! நீயும் மாற மாட்டேங்கிற, என்னையும் இப்படி டார்ச்சர் பண்ற!” என அவள் அலட்சியமாகச் சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

“ஷ்சிட்… என்ன பேசுற நீ? உனக்கு தாலி அசிங்கமா? ஆனா இந்த மாதிரி அரைகுறையா ஆடை போடுறது உனக்கு நாகரீகமா?” என அவனது குரல் நடுக்கத்தில் இருந்தது.

“ஓ மை காட்! உனக்கு என்ன ஆச்சு? குடிச்சிட்டு வந்து என்கிட்ட ஆர்க்யூ பண்ணாத. உன்னோட வசதி என்ன? செல்வாக்கு என்ன? கௌரவம் என்ன? இந்த மும்பைக்கே நீ ஒரு பெரிய ஆளு… ஆனா நீயும் உன் எண்ணமும் இன்னும் அந்த கிராமத்துத் தனத்தை விட்டு மாறல. Shame on you baby!” என்று அவள் விரலை நீட்டி ஏளனமாகச் சிரித்தாள்.

“பணம் இருந்தா பண்பாட்டை வித்துடணுமாடி? நாகரீகமென்ற பேர்ல உன் உடம்பை ஊருக்கே காட்டிட்டு ஆடுறதுக்கு பேரு தான் மாடர்ன் வாழ்க்கையா? நீ படிச்ச படிப்பு இதத்தான் உனக்கு சொல்லிக் கொடுத்துச்சா?”

“ஸ்டாப் இட்! எனக்கு எப்படி வாழணும்னு தெரியும். உன்னோட இந்த தமிழ் பொண்ணு சென்டிமென்ட் எல்லாம் என்கிட்ட காட்டாத. இது மும்பை… இங்க இப்படித்தான் இருக்கணும்!” என கத்தினாள்.

அவளது ஒவ்வொரு வார்த்தையும் அவனது ஆண்மையையும், அவன் காதலித்த அந்த குணத்தையும் கொச்சைப்படுத்துவது போல இருந்தது. கட்டுக்கடங்காத கோபத்தில், அவன் கையை ஓங்கி வீசினான் .…

“பளார்!” என அந்தச் சத்தம் அந்த விசாலமான அறையில் எதிரொலிக்க, அவள் ‘ஆ…’ என்று அலறியபடி அருகில் இருந்த பஞ்சு மெத்தை கட்டிலில் சரிந்தாள்.

“நீயெல்லாம் ஒரு பெண்ணா? இல்ல, ஒரு மனுஷப்பிறவியா? உன் மேல வச்சிருந்த அன்புக்கு நீ கொடுத்த பரிசு இதானா?” என ஆக்ரோஷமாகக் கத்தியவன், மேசையின் மேல் இருந்த கார் சாவியை வெடுக்கென எடுத்தவன் கதவை ‘டமார்’ என சாத்திவிட்டு வெளியேறிய வேகமாக நடந்தான்.

கீழ்தள பார்க்கிங்கில் நின்றிருந்த அந்த Benz கார், அவனது ஆத்திரத்தைப் போலவே சீறிக்கொண்டு அந்த ஆடம்பர அடுக்குமாடியை விட்டு வெளியேறியது.

மழை பெய்து ஓய்ந்திருந்த மும்பையின் ஈரமான சாலையில் அவனது காரின் வேகம் அதிகரிக்க, எங்கே போகிறோம் என்ற இலக்கின்றி அவன் பறந்து கொண்டிருந்தான். 

தூறல் தொடரும் .…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page