காற்றினிலே வரும் கீதம் 1

அத்தியாயம் 1

 “ ஹல்லோ…எவ்ரி ஒன்..ஹாப்பி பிரெஷ் குட் மார்னிங்…டு ஆல்…நான் உங்க ஆர் ஜே மீரா,அண்ட் திஸ் இஸ் ஏர்.. எஃப். எம் 90.2.. காற்றோடு சுகமாக… இன்னைக்கு காலையிலேயே சுகம்ம்மா…பிரஷ்..ஷா. உங்க எல்லாருக்கும் அமையனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு விஷ் பண்றேன். எப்பவும் போல இன்னைக்கும் நம்ம சூப்ப..ரான ஒரு டாபிக்,பத்தி பேச போறோம்.. அத பத்தி தெரிஞ்சுகிறதுக்கு முன்னாடி….இந்த சூப்பர் எவர்கிரீன் பாட்ட கேளுங்க…!” என்றாள் ஆர்.ஜே மீராவாக குதூகலிக்கும் மயூரி.

 பாடலை அவள் ஒழிக்க விட்டபடி தானும் குதூகலித்தாள். “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா “என்று பாடல் ஓட அதற்கு உடலை அசைத்தபடி அடுத்து பேசுவதற்கு குறிப்புகள் எடுத்து கொண்டிருந்தாள்.

அவள் அருகில் அவள் தோழி பிரியாவோ அவள் குதூகல பேச்சை ரசித்தபடி “ஹலோ மேடம்…வார்த்தைல தான் இதெல்லாம்…நிஜத்தில் துளி கூட இல்லை.. “என்று கிண்டல் செய்ய 

மயூரி சிரித்த முகத்துடன்.. பிரியா காதை பிடித்து திருகினாள். 

“ஸ்ஸ்.. ஆ…வலிக்குது டி…சரி சாரி” என்றாள் பிரியா.

 பிரியா அவளுடன் கல்லூரியில் பயிலும் தோழி,அதற்குள் பாடல் நிறைவடைய மயூரி மீண்டும் மீராவாகி போனாள்.

“என்ன..மக்களே … இந்த பாட்ட வச்சே…நம்ம டாபிக் என்னன்னு கண்டுபிடிச்சு இருப்பீங்க…நீங்க நினைக்கிறது ரொம்ப சரி.இன்னைக்கு… நாம மன உறுதி, தைரியம், தில், கட்ஸ், அஞ்சாமை அப்படிங்கிறத பத்தி தான் பேச போறோம்.. “என்று இடைவெளி விட்டு..அவள் மீண்டும் தொடர்ந்தாள்.

“என்ன பிரண்ட்ஸ்…இதை பத்தி பேசுறதுக்கு என்ன இருக்குன்னு நினைக்கிறீங்களா? இருக்கே… நிறைய…!இன்னைக்கு நம்ம மனசுல இந்த நொடி நம்ம தைரியமா தான் இருக்கோம்னு நினைச்சா…. அது ரொம்ப தப்பு….!.. என்ன இப்படி சொல்லிட்டேன்னு யோசிச்சு கிட்டே இந்த ரெண்டு பாட்ட கேட்டுட்டு வாங்க..!” என்று பாடலை ஒலிக்க செய்தாள்.

மயூரியை ரசித்தபடி இருந்த ப்ரியாவை கவனித்த மயூரி.. என்ன என்பது போல் புருவம் உயர்த்தி கேட்க ஒன்றும் இல்லை என்று நமட்டு சிரிப்புடன் தொடரும்படி செய்கை செய்தாள் பிரியா. பாடல்கள் முடிந்தவுடன் மயூரி தொடர்ந்தாள்.

“தைரியம்னு சொல்றது… நமக்கு எல்லா நேரங்கள்லயும் தேவைதான்.. இருக்கவும் செய்யும்..ஆனா ரொம்ப முக்கியமான நேரத்துல.. அதை நம்ம விட்டுருவோம்…என்ன தோழமைகளே… நான் சொல்றது சரிதானே.. இல்லைனு நினைச்சிங்கன்னா…. இதை பத்தி யோசிச்சுட்டே இந்த பாட்ட கேளுங்க..!”என்றபடி மறுபடியும் வேறு பாடலை ஒலிக்க விட்டு திரும்பி அடுத்து தான் பேசுவதற்காக எடுத்த நோட்சை சரிபார்த்தாள்.

 பிரியாவோ “ மயூரி… நீ இன்னைக்கு சொல்றத உன் மனசுலயும் கொஞ்சம் எடுத்துக்கிட்டு…அதன்படி நீயும் வாழ்க்கையில மாறினா…” என்றவள் சட்டென எழுந்து அந்த அறையின் கதவின் அருகே ஓடினாள்.

அங்கிருந்து மயூரியை பார்த்து

“ நல்லா தான் இருக்கும் ஆனா நீ தான் லூசாச்சே எப்பிடி மனசுல தைரியம் வரும்…”என்று பலிப்பு காட்டியவளை முறைத்தாள் மயூரி.

அவள் வேலையில் இருப்பதாள் எழுந்து ஓட முடியவில்லை இல்லையேல் பிரியாவின் நிலை அவ்வளவு தான்.இதை உணர்ந்தே அவள் வாயில் வரை ஓடி சென்றாள், மயூரியை பார்த்து சிரித்தபடி மீண்டும் கூறினாள்.

“நீ உன் ஷோ முடிச்சுட்டு வா.. நான் ரிசப்ஷன் அக்கா கிட்ட கொஞ்ச நேரம் மொக்கை போட்டுக்கிட்டு இருக்கேன்… மறுபடி, மறுபடி உன்கிட்ட அடி வாங்க என்னோட உடம்புல தெம்பு இல்ல…” என்றபடி சென்று விட்டாள்.

 அவள் சென்ற திசையை இன்னும் முறைத்தபடி “ அந்த பயம் இருக்கணும்” என்று கூறிய மயூரியின் மனதில் தோன்றாமல் இல்லை..

‘ தான் எதற்காக இவ்வளவு அஞ்சி வாழ்க்கையை நடத்த வேண்டும்’ என்று 

அதற்குள் பாட்டு நிறைவு பெற அவள் கவனம் குதூகலமாக அங்கே சென்றது.

“என்ன மக்களே.. நல்லா யோசிச்சீங்களா.. இப்ப தெளிவா சொல்றேன்…நல்லா கேட்டுக்கோங்க…!நாம எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும்,எவ்வளவு பணம் இருந்தாலும்,எவ்வளவு தைரியத்தோட இருக்கிறதா நினைச்சாலும்…. நம்மளோட லைஃப்ல முக்கியமான கட்டம்னு ஒன்னு இருக்கும், அப்போதான் நம்ம தைரியத்தை கைவிடாமல் சரியான முடிவாக எடுக்கணும்.ஆனா…. நம்மள்ல பல பேர் அந்த சரியான தருணத்தில் அடுத்தவங்க மேல பழியை போட்டுட்டு நம்ம தைரியசாலி மாதிரி நடிப்போம்.  என்னப்பா எல்லாருக்கும் அது எப்படின்னு புரியலையா…? இந்த பாட்ட கேட்டுட்டு வாங்க…புரியும்”என்றாள்.

 பாட்டை ஒலிக்க செய்தவள்.. தன் இருக்கையில் சாய்ந்தபடி யோசிக்க துவங்கினாள். தானும் அப்படிப்பட்ட செயலை செய்கிறோமோ..? என்று மனம் சோர்வுற்றது ஆனால் சட்டென மற்றொரு மனம் இல்லை என்று அடித்துக் கூறியது. 

ஏனெனில் தன் குடும்பத்திற்கு தெரியாமல் இந்த ஆர் ஜே வேலையில் அவள் இரு மாதமாக இருக்கிறாள்.ஒரு நாள் கூட அவள் தன் நிகழ்ச்சியை தவறவிட்டதில்லை. 

இப்படி ஒரு திருட்டுத்தனம் செய்யவும், அதை யாரும் அறியாமல் காக்கவும் கூட…தைரியம் வேண்டும் தானே என்று எண்ணினாள். அவள் மன ஓட்டத்தை தடுத்தது பாடலின் முடிவு. மீண்டும் பேச துவங்கினாள் உற்சாக குரலில்..

“பிரண்ட்ஸ்…நான் சொன்ன விஷயத்தை யோசித்து பார்த்தீர்களா..? நல்லா யோசிச்சு இருப்பீங்கன்னு நம்புறேன்.நமக்கு ஒரு பிரச்சனைனு வரும்போது.. நாம தான் தைரியமாக முன்னாடி நகர்ந்து போகணும். “

“எனக்கு யாரும் உதவ இல்லை,எனக்கு துரோகம் பண்ணிட்டாங்க…என்ன கீழே போட்டு மிதிக்கிறாங்க.. எனக்குன்னு யாரும் நிக்கல…நான் சாய்ந்து அழுகிறதுக்கும்,என்ன ஆறுதல் படுத்தவும் யாரு இல்லன்னு புலம்பாதீங்க….பாஸ்..! இது எல்லாமா நாம நமக்கே இருந்துக்கனும்….ஒரு சின்ன வெற்றினா நாமளே நம்ம தோளில் தட்டி கொடுத்துக்கிறதுக்கும்….ஒரு தோல்வினா நம்ம கண்ணை நம்மளே தொடச்சிட்டு எந்திரிச்சு நிக்கிறதுக்கும்… தைரியமும் இருக்கணும்… மன உறுதி இருக்கணும்…இருந்தா போதும்.நம்மள தடுத்து நிறுத்துற சக்தி… இந்த பூமியில யாருமே இல்ல…! நான் சொன்னதை பற்றி யோசிங்க தலைவா…!” என்று பாடலை ஒலிக்க செய்தாள்.

 அவள் மனம் மீண்டும் தான் பேசியதையும் தான் தன் குடும்பத்தோடு நடந்து கொள்வதையும் எண்ணி தவித்தாள். ஆனால் இம்முறை உறுதி கொண்டாள்.. ஏதாவது சந்தர்ப்பம் அமையும் போது தான் நினைத்ததை குடும்பத்துடன் பகிர்ந்து அவர்கள் சம்மதத்துடன் தன் இலக்கில் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணினாள்.

 அவள் உறுதி பூண்ட நிமிடம் அவளின் குதூகலம் மீண்டும் வந்து பற்றிக்கொள்ள அலைவரிசையில் தன் குரலை ஒலிக்கச் செய்தாள்.

“ மக்களே கட்ஸ் ன்றது… நமக்கு உள்ளே இருக்கிறதுதான். தப்புனா… யார வேணா தட்டிக் கேட்க மட்டும் வரக்கூடாது. நமக்கு நாமே நம்மள உயர்த்திகிறதுக்கும் கட்ஸ்தான் தேவை….! நீங்கள் ஏழையா இருக்கலாம், உடல்ல சில ஊனத்தோட கூட இருக்கலாம், இல்ல பணக்காரரா இருந்து யாரும் இல்லாத தனிமைல கூட இருக்கலாம்…எதுவா இருந்தாலும், என்ன தடையாய் இருந்தாலும், நீங்க இருக்க துறையில… உங்க லைப்ல… தைரியமா நெஞ்ச நிமிர்த்தி தலையை நிமிர்த்தி சொல்லுங்க… ‘ஐ கேன் டூ இட் அண்ட் ஐ வில் டூ இட்..!’என்று கூறியவள்.

மீண்டும் தன் ஷோவிற்கான விளம்பரதாரர்களை கூறி முடித்து 

“ ஓகே கய்ஸ் நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு… நாம இன்னைக்கு பேசின விஷயங்கள் உங்களுக்கு கொஞ்சம்மே கொஞ்சம்… உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்… எதுவா இருந்தாலும் யாராயிருந்தாலும் தைரியமா… நின்னு ஃபேஸ் பண்ணுங்க… ஜெயிச்சு காட்டுங்க… கைஸ் இது ஏர் எப். எம். 90.2…காற்றோடு சுகமாக…” என்று கூறி விடை பெற்றாள் மயூரி என்கிற ஆர் ஜே மீரா.

 பேசி முடித்தவள்,அந்த அறையில் இருந்து தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறியவளை புன்னகையுடன் எதிர்கொண்டாள்..அந்த எஃப் எம் இன் டீம் ஹெட் சோனா.அவள் மயூரியின் கையை பற்றி 

“வாவ் சூப்பர் மயூரி நீ எடுக்கிற டாபிக் ரொம்ப சிம்பிளா தெரிஞ்சாலும்.. ரொம்ப அழகா மோட்டிவேட் பண்ற..வெரி குட் கீப் இட் அப்.. “என்று கூறியவள் முன்னே பாதி மடங்கி 

“தேங்க்யூ சோனா… எல்லாம் தங்கள் கிருபை…!”என்றாள் மயூரி ஆங்கில பாணியில்..

 பின் ரிசப்ஷனில் அமர்ந்து இருந்த பிரியாவின் அருகில் இருந்த தன் கல்லூரி பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். இருவரும் வெளியே வந்து பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தபடி கேட்டாள் பிரியா 

“ என்ன மேடம் தைரியத்தை பத்தி பேசி.. பிச்சு உதறிட்டிங்க.. ஆனா வாழ்க்கையில…ம்ஹும்… ஏன் டி உன்னால அதை ஃபாலோ பண்ண முடியல…”என்றாள்.

மயூரியோ “நான் யாரையும் ஃபாலோ பண்ண மாட்டேன்.என்னதான் எல்லாரும் ஃபாலோ பண்ணுவாங்க..ஏன்னா நான் ரொம்ப ஸ்பெஷல்.. “ என்று மயூரி தன் சுடிதாரில் இல்லாத காலரை தூக்கிவிட்டாள். 

அவள் பின் தலையில் தட்டிய பிரியா “இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல… ஏன் டி நீ மாசம் 15,000 சம்பாதிக்கிற..ஒரு ஆர். ஜெ ஆகிட்டே…இதை உங்க வீட்ல சொன்னா என்ன டி பிரச்சனை வரும்…”என்றாள் பிரியா.

“அது உனக்கு சொன்னா புரியாது டி..!” என்றாள் மயூரி சலிப்புடன்.

“ உன்னை கொல்ல போறேன் பாரு… இதையேதான் ரெண்டு மாசமா சொல்லிட்டு இருக்க… சொன்னா தான் டி தெரியும்… புரியுமா, புரியாதானு.. முதல்ல நீ சொல்லு… அதுக்கப்புறம் புரியுதா புரியலையானு..நான் முடிவு பண்ணிக்கிறேன்…” என்றாள் சற்று கடுப்பாக..

“ நான் எப்படி சொல்றது…” என்று வானத்தை பார்த்து தன் தாடையைத் தேய்த்தாள் மயூரி.

“ம்ம்…இவ்ளோ நேரம் ஓயாம பேசுச்சே அந்த வாயால தான்.. “ என்றாள் சற்று எரிச்சலுடன் பிரியா.

“சரி சரி… ஓவரா மொக்க போடாத சொல்றேன்.. “ என்று கூறிய மயூரி தன் குடும்ப நிலையை கூறத் துவங்கினாள்.

 

 

 

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page