திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -8
Hiiii வாசகர்களே ✨
அடுத்த நாள் காலை விடிந்தது, என் அண்ணன் டாக்டர் பயிலும் மாணவன் என்பதால், அவனுக்கு முன் உரிமை கொடுத்து கொரோனா வாக்சின் போட அழைத்து இருந்தார்கள்…
கொரோனா நேரம் கூட்டம் இருக்காது என்று பார்த்தால் அங்கு தான் மதுரையே கூடி இருந்தார் போல் இருந்தது!! அது ஒரு பள்ளி வளாகம், அதுவும் அவனின் கல்லூரி தாண்டி தான் செல்ல வேண்டிய ஒரு இடத்தில் இருந்தது…
அவ்வாறு முன் உரிமை கொடுத்து, வாக்சின் ஊசி போட போகும் போது யாரேனும் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் கூட அழைத்து வரலாம்…
அதுவும் இது வரை பாதிக்க படாத நபர் ஆக இருக்க வேண்டும்!!
ஆகவே நானும் என் அண்ணா கூட சென்று, அந்த பள்ளியில் 8:45 போய் நின்றால், மணி இப்போது 2:15 உச்சி வெயில் மண்டையை பிளந்தது!!
என் அண்ணனோ அவனின் கல்லூரியில் இருந்து வந்த பிற மாணவர்கள் இடம் பேசி கொண்டு இருப்பதில் மூழ்கி போய் இருக்க, எனக்கு போர் அடுத்து மொபைல் எடுத்து நோண்டினேன்…
அப்போது தான் ஏகப்பட்ட மெசேஜ் பிரகதி இடம் இருந்து வந்தது இருப்பதை நான் கண்டேன்!! வாட்ஸ்ஆப் செயலிலும், இன்ஸ்டாகிராம் செயலிலும் கூட எனக்கு பல அழைப்புகள் விடுத்து இருந்தாள்…
ஆம்! என் சீன மாடல் மொபைலில் சிம் கார்டு இல்லை, வெறும் வாட்ஸ்ஆப் மட்டும் தான் உபயோகத்தில் இருந்தது!!
டேட்டா பேக் ரிசார்ஜ் மட்டும் தான் இருக்கும், ஆகையால் இன்கமிங் அவுட் கோயிங் கால் வராத ஒரு நிலை… வீட்டில் இருக்கும் யார் மொபைலை என்னிடம் தர மாட்டார்கள், ஏற்கனவே தான் சொல்லி இருந்தேனே…
ஆகையால் என் அண்ணன் கவனிக்காத போது, தள்ளி சென்று பிரகதி எண்ணிற்கு வாட்ஸ்அப் கால் செய்தேன்!! அவள் அழைப்பை ஏற்கவே இல்லை…
ஆகையால், மீண்டும் அதே இடத்திற்கு வந்து அமர்ந்து நான் மெதுவாக வாட்ஸ்அப் செய்திகளை படிக்க ஆரம்பித்தேன்!! அதில் எனக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை…
ஆகவே இன்ஸ்டாகிராம் சென்று பார்த்தால், காத்து இருந்தது ஜோடியாக அவர்கள் செய்த சம்பவம்.!!
ஆம்! ஆகாஷ் இடம் இவள் சொந்த கணக்கின் பாஸ் வர்டு இருந்து உள்ளது!!
அதில் பார்த்து தான், என் தனி அக்கவுண்ட் வழியாக பிரகதி அவனை ஆழம் பார்க்க வருவதை உணர்வு தப்பி பிழைத்து இருந்தான்…
அது போக இன்று காலை, ஜெஷ்வந்த் இடம் பிரகதி பேசிய குறுஞ் செய்திகளை பார்த்து கொதிப்பு அடைந்து, அடுத்த சண்டைக்கு அடி தளம் இடும் வகையாக பேச ஆரம்பித்து இருக்கிறான்…
அதில் பிரகதி, “எனக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை!! ஷ்ரேயா தான் இந்த பையனை காதலிக்கிறாள்… அவளுக்காக தான், நான் அவன் இடம் பேசி சிங்கிள் ஆ? இல்லை அவன் கமிட்டட் ஆ? என்று தெரிந்து கொள்ள முயற்சித்தேன்!!” என்று தேரை இழுத்து என் பெயரோடு கேட்டு தெருவில் விட்டு விட்டாள்…
“ஓ!!! முதல் காதலா…???
அந்த பொண்ணுக்கு எல்லாம் காதல் வருதா!!?” என்ற ஆகாஷ், ஜெஷ்வந்த் கணக்கில் சென்று அவனின் புகை படம் அனைத்தையும் பார்த்து இருக்கிறான், பிரகதி அக்கவுண்டில் இருந்தே!!!
அது மட்டும் இன்றி, என் தனி பட்ட அந்த அக்கவுண்ட் சென்று ஜெஷ்வந்த்காக நான் செய்த அனைத்து வீடியோ பதிவுகளையும் பார்த்து உள்ளான்!!
“இவ்வளோ லவ் இருந்தா, நேரடியா அவன் கிட்டயே சொல்ல வேண்டிய தானே!!
அப்புறம் அந்த பையன் வேற யார் கூடவாச்சும் கம்மிட் ஆகிட போறான்…”
“ஐயோ…. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்! நீ வாய வெச்சுட்டு சும்மா இரு…
அவ இது வரை அந்த அண்ணா கிட்ட முகத்துக்கு நேர நின்று பேசுனது கூட இல்ல!! நேர பொய் எப்டி லவ் பண்றேன்னு சொல்லுவா…??”
“ஹேய் அதுக்குன்னு என்ன அவ்வையார் ஆக வர வெயிட் பண்ணுவாளா?? பாலகட்டும் பழகட்டும்னு!!!”
“டேய்… சும்மா இருடா!!
ஏதும் வேலையை பார்த்து விட்டுராத…”
“நீ சும்மா இரு டி…
நான் ஷ்ரேயாக்கு ஹெல்ப் தான் பண்ண போறேன்!!”
“டேய் வேணாம் டா… வேணாம்.…
நான் சொல்றதை கேளு!!”
என்று பிரகதி பேசுவதையே செவி மடுக்காமல், செவிடன் போல் ஆகாஷ் அவன் போட்ட திட்டத்தை நிறை வேற்ற ஆரம்பித்தான்…
அதிலும், அவன் கணக்கில் இருந்து கூட பேசாமல், நேரடியாக நேற்று பேசிய பிரகதி அக்கவுண்டில் இருந்து, ஜெஷ்வந்துக்கு குறுஞ் செய்தி அனுப்பி விட…
ஜெஷ்வந்த் ஆன்லைனில் இருந்த உடன்,
அடுத்த நொடி ரிப்ளை செய்து, இருவரும் பேச துவங்கி உள்ளார்கள்…
நேரடியாக “நீங்க சிங்கிள் ஆ!!?” என்று தான் பேச ஆரம்பித்து இருந்தான் ஆகாஷ்.
ஜெஷ்வந்த் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பதற்கு, பிரகதி அதுவும் ஷ்ரேயாவின் தோழி நேற்று பேச துவங்கியவள் நேரடியாக இன்று இவ்வாறு கேட்கவும்,
“ஏன் கேக்குற!!?”😂
என இலகுவாக பதில் சொல்ல…
இம்முறை ஆகாஷ் இற்கு பற்றி கொண்டு வந்தது, “உங்க மேல எனக்கு எல்லாம் ஒன்னும் இன்ட்ரெஸ்ட் இல்ல!! நான் பிரகதி பாய் பிரெண்ட் தான் பேசுறேன்.…
எங்க பிரெண்ட் ஸ்ரேயாவுக்கு தான் உங்க மேல ஒரு கிரஷ் இருக்கு!! அதான் கேக்குறேன்…” என்று கொஞ்சம் கூட ஈன மானம் இல்லாமல், மாமா வேலை பார்க்க வந்து இருப்பதை மார் தட்டி சொல்லி கொண்டான்…
இப்போது இது அனைத்தையும் நான், பார்வதியின் அக்கவுண்டில் லாகின் செய்து படித்து கொண்டு இருந்தேன்!!
எனக்குநடுத்த வரி, ஜெஷ்வந்த் அனுப்பிய பதிலை ஸ்குரோல் செய்து படிக்க கைகள் நடுங்கியது, கண்கள் குளம் கட்டி பார்வை திரையிட்டது!!
எனக்கு அதற்கு சுத்தமாக தைரியமே இல்லை!!
ஆயினும், அழுகையை புறம் கையால் துடைத்து கொண்டு இயல்பாக இருப்பது போல் காட்டி கொண்டேன், பொது வெளியில் என் உணர்வுகளை கொட்ட விரும்பாதவளாக நான்!!
ஜில்லிட்டு விறைத்து போன என் விரலி விரலை கொண்டு மேலும் ஸ்குரோல் செய்ய, அங்கே ஜெஷ்வந்த் செருப்படி கொடுத்தார் போல் ஒரு பதில் அனுப்பி இருந்தான்….
“எனக்கும் யார் கிட்டயும் வழியனும்னு
வேண்டுதல் எல்லாம் ஒன்னும் இல்ல!!
பிரகதி ஷ்ரேயா ரெண்டு பேருமே எனக்கு சிஸ்டர் தான்.!!
உன்ன மாறி, சிஸ்டர் மாதிரின்னு கடலை போடுற ஆளும் நான் கிடையாது!!”
என்று சொல்லி, பிளாக் செய்து விட்டு இருந்தான்…
ஆகவே இப்போது ஜெஷ்வந்த் பொறுத்த வரை, “ஷ்ரேயா என்ற பெண் பார்க்க ஊமை கோட்டான் போல் இருந்து கொண்டு, காதல் இருக்கிறது என்று, அதை நேசம் கொண்ட என்னை தவிர ஊர் முழுக்க சொல்லி திரிபவள்!! அதுவும் யாரோ ஒரு பையன் இடம் கூட, வெட்கம் இன்றி இதை எல்லாம் பகிர்ந்து கொள்பவள்.!!” என என்னை பற்றி கீழ் தரமாக நினைத்து விட்டான்…
ஆனாலும் ஆகாஷ் விடாமல் பேசி இருந்தான்!! ஜெஷ்வந்த் அதன் பின்னர் தான் பொறுமை இழந்து பிளாக் செய்து இருந்தான்…
“ஐயோ அவ நல்ல பொண்ணு ப்ரோ…
இது வரைக்கும் யாரையுமே லவ் பண்ணது இல்ல!!
பார்க்க எவ்ளோ அழகா இருக்கா!!?
வாய்ஸ் கூட அவ்ளோ சாப்ட் ஆக இருக்கும்!
அவளுக்கு ஓகே சொல்ல உங்களுக்கு என்ன?!!! கசக்குதா????”
“இத பாரு எனக்கு…
நான் இப்போதைக்கு யாரையும் லவ் பண்றதா இல்ல!!
உன் கிட்ட நான் விளக்கணும்னு அவசியமும் இல்ல!!
புரியுதா!!!?” என்று சொல்லி இருந்தான் ஜெஷ்வந்த் பொறுமை இழந்தவனாக…
“ஐயோ எனக்கு இல்ல
உங்களுக்கு தான் புரியல…
இந்த பாருங்க எவ்ளோ டீப் ஆக அவ உங்களை லவ் பண்றான்னு!!!!?” என்று சொல்லி, நான் வைத்து இருந்த தனி பட்ட கணக்கில் இருந்த போட்டோ வீடியோ பதிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அவனுக்கு குறுஞ் செய்தியில் அனுப்பி விட்டு இருந்தான் ஆகாஷ்…
“அப்படியே லவ் பண்ணாலும்
உங்க பிரெண்ட்டை நான் லவ் பண்ண மாட்டேன்!! போதுமா????” என்று சொல்லி விட்டு தான் பிளாக் செய்து இருந்தான்…
அந்த ஸ்கிரீன் ஷாட் ஆகாஷ் பகிரும் முன், என் கணக்கில் வந்து ஜெஷ்வந்த் தனதாக எடுத்து விளக்கி இருந்தான்…
“இந்த பாரு எனக்கு இப்போ தான் பிரேக் அப் ஆகி இருக்கு!!! சோ எனக்கு…
என்னால உடனே எல்லாம் ஒடஞ்சதை ஒட்ட வைக்கிறதுக்காக உன்னை லவ் பண்ணி உன்னைய யூஸ் பண்ண நான் விரும்பல…
நான் எப்போவுமே உனக்கு ஒரு அண்ணனா உனக்கு தேவையான ஹெல்ப் பண்ணுவேன்!! பட் லவ் மட்டும் வேண்டாம்!
ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்…
இப்போதைக்கு நீ 12th எக்ஸாம் கவனம் செலுத்தி படிக்கிறது மட்டும் பாரு…”
அதைக் கூட நான் திறந்து படிக்காமல், இவள் குறுஞ் சோதியைந்தான் முதலில் திறந்து இருந்தேன்!!
அவன் எப்போது நான் எடுத்து சேமித்து இருந்த அவனின் புகைப் படம் அனைத்தையும் பார்த்தானோ, அத்தோடு என்னை வெறுத்து விட்டான், என்பது எனக்கு புரிந்தது…
வரிசை குறைந்து கொண்டே வர, மாலை 3:40 மணிக்கு எனக்கு ஊசி போட பட்டது!!
கை விண்ணு விண்ணு என்று வலி எடுக்க, எனக்கு வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியில் ஜெஷ்வந்த் படிக்கும் கல்லூரி வளாகத்தை தாண்டுவதற்குள் அழுகை முட்டி கொண்டு, அணை உடைப்பெடுத்து ஊற்று எடுக்க ஆரம்பித்தது!!
நடுங்கும் கரத்தில் “சாரி அண்ணா!” என்று மட்டும் அவனுக்கு பதில் அனுப்பி விட்டு, வீடு வந்து சேர்ந்தேன்!!
வீட்டிற்கு வந்து மதிய உணவு உண்டு, அனைவரும் உறங்க சென்று விட்டனர்…
நான் மட்டும் தனியாக ஹாலில் அமர்ந்து அழுது கரைந்து ஓய்ந்து உறங்கி போய் இருந்தேன் என்னை அறியாமல்…
மாலை 5 மணிக்கு, அப்பா வந்து எழுப்பும் போது, அவரே என் உடல் உஷ்ணத்தை உணர்ந்து பயந்து விட்டார்…
என் உடல், என் உள்ளம் போல் கணலாய் கனன்று கொண்டு, கண்ணை திறக்க விடாமல் சுட்டெரித்து கொண்டிருந்தது!!
ஆனால் அவர்களோ, “கொரோனா தடுப்பு ஊசி போட்டது அப்படிதான் ஒரு நாளைக்கு காய்ச்சல் இருக்கும்… ரொம்ப எழுந்தரிக்க முடியாம இருக்கிறது போல் இல்லாமல் இயல்பாக இரு!!” என ஒரே போல் சொல்லி விட்டு நகர்ந்தனர்…
அதன் பின்னர் என்ன நடந்தது!!?
என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨
Thanks for reading மக்களே🩷
