முத்தமழை

அத்தியாயம் – 1
 

 

          அழகான பச்சை கம்பளம் போர்த்திய அந்த வயல்வெளிகளை பார்க்க பார்க்க, அத்தனை ஆசையாகவும், மனதிற்கு இதமாகவும் இருக்கும். அந்த ஊரின் நுழைவு வாயில் இருந்தே இந்த பச்சை கம்பளங்கள் நம்மளை வரவேற்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக காத்திருக்கின்றன. பசுமைக்கு பெயர் போன ஊர் என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு.

 

      பூஞ்சோலையூர் பெயருக்கு ஏற்றது போல் அந்த ஊருக்குள் நுழைந்தாலே பூக்களின் நறுமணம் நமது நாசியை துளைக்கும். ஒரு ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு வலது புறம் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தில் அப்போது தான் நாத்து நட்டு இருப்பார்கள் போல,

 

       அதன் ஓரங்களில் கட்டு மஸ்தான தேகமுடைய இருபத்தி நான்கு வயதுடைய இளைஞன். வயலின் ஓரமாக சென்று வரப்புகளை  முறுக்கேறிய தன் புஜத்தின் பலத்தைக் கொண்டு, மண்வெட்டியை லாவகமாக பிடித்து ஒரு வித தோரணையோடு வெட்டும். அந்த அழகை பார்க்கவே பெண்கள் கூட்டம் இருக்க தான் செய்தது.

 

          கிராமத்தில் பிறந்து விட்டான் என்பதற்காக அவன் கருப்பு என்று சொல்லிவிட முடியாது. வெயிலில் அலைவதால் அவனது நிறம் மாநிறமாக தெரிகிறது. ஒருவேளை ஏசி அறையிலே அமர்ந்து செய்யும் வேலையில் இருந்திருந்தால் அவனது நிறம் சற்று கூடுதலாக கூட தெரியக்கூடும்.

 

    (ஏன்ப்பா ஹீரோ உன்ன பத்தி தான் பேசிட்டு இருக்கேன். கொஞ்சமா நிமிர்ந்து உன் திருமுகத்த காட்டு ) என்றதும் அவன் உடனே நிமிர்ந்து பார்க்க,

 

    ( என்னடா  நான் பேசுனது அவனுக்கு கேட்ருச்சா )

 

     ” ஏலே  கதிரு ஊட்டுல அத்தன சோழி கிடக்கு. இங்கன என்னல பண்ணிட்டு இருக்க, உன்னோட ஆத்தா இப்பதான் என் புள்ளய காணோமூணு தேடிட்டு கிடக்குது” என்று வயதான மூதாட்டி பேசிய பேச்சுக்கு தான் அவன் நிமிர்ந்து பார்த்தது.

 

     ” வாத்தா வரப்பு வெட்டிட்டு வாரேன்னு தானே சொல்லிட்டு வந்தேன். அதுக்குள்ள மறந்துபுடுச்சாமா. “
 

 

   ” அப்படியால சரி சரி நீ சோழிய பாரு. கஞ்சி தண்ணி ஏதாவது குடிச்சியால , வீட்ல இருந்து கொடுத்து அனுப்புறேன்னு சொன்னாகலா. உங்க வூட்ல இருந்து தான் நானும் வாரேன். என்கிட்ட கொடுத்துவிட்டு இருக்கலாமுல்ல. “
 

 

   ” அத்த குடுத்து விடுறேன்னு சொல்லிருக்கு. இந்த வேகாத வெயில்ல உன்  உடம்ப தூக்கிட்டு நடக்கிறதே, உனக்கு பெரிய பாடு .இதுல நீ எனக்கு சாப்பாடு கொண்டு வரியாக்கும் சரிதேன். நீ மொத பத்திரமா வூடு போய் சேராத்தா. “

 

     ” என்னால இப்படி சொல்லிப்புட்ட வயசானாலும் என் உடம்பு இரும்பாக்கும் ” என்று வீரமங்கையாக மூதாட்டி மாறி கூறவும்.

 

      தன்னுடைய தெத்து பல் தெரிய அழகாக சிரித்த கதிரவனோ, ” ஆமாமா நீ இரும்பு மனுசி தான் பார்த்து பதனமா போ. “என்று அனுப்பியவன். மீதி இருந்த வரப்புகளை முழுமூச்சுடன் வெட்டிக் கொண்டு இருந்தான்.

 

     வெட்டி முடித்து நிமிர்த்து பார்க்கும் பொழுது தூரத்தில் அன்னநடை நடந்து ஒயிலாட்டம் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.

 

     அவளைப் பார்த்ததும் ‘இந்த புள்ள பள்ளிக்கோடத்துக்கு போகலையா ? இது கிட்ட ஆரு சோறு கொடுத்து விட்டா” என்று வாயில் முணு முணுத்தபடியே வரப்பிலிருந்து வெளியே வந்தவன்.

 

     மண்வெட்டியை ஓரமாக வைத்துவிட்டு அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தன் கை, கால்களை கழுவிக் கொண்டிருந்தான்.

 

     தூரத்திலிருந்து அவனைப் பார்த்தபடி வந்தவளது இதயம் அவனை நெருங்க நெருங்க படபடவென அடித்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் இன்று  அவள் செய்ய போகும் காரியம் எந்த வகையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவளுக்கே தெரியாது. ஆனால் சொல்லிவிட வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் அவள் மனதில் இருந்தது. 
 

 

     தன் படபடக்கும் இதயத்தை சீராக்க முயன்ற படியே அவனை நோக்கி தாவணியில் அடியெடுத்து வைக்கும் இந்த பாவை யார் .
 

 

     கதிரவனின் மாமன் மகள் மலர்விழி. மலருக்கு கதிர் என்றால் அத்தனை பிரியம். சிறுவயதிலிருந்து பாசமாக இருந்த அந்த உறவு. அவள் வயதுக்கு வந்ததும் அவன் அவளுக்காக குச்சி கட்டும் பொழுது, அவள் மனதில் தோன்றிய புதுவிதமான உணர்வு. நாள் ஆக ஆக அது காதலாக உருமாறி இதோ மூன்று வருடங்களாக தன் மாமன் மீது வைத்திருந்த காதலை இன்று அவனிடம் கூற போகிறாள்.

 

       அதற்கு அவனது பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்று அவளால் யோசிக்க முடியவில்லை. இன்று காதலர் தினம் நேற்று பள்ளியில் அவளது தோழி ஆனந்தி சொன்னதையே மனதில் உருபோட்டபடி வந்தவள். அவன் அருகில் வந்ததும்,

 

     ” ஏபுள்ள பள்ளிக்கூடத்துக்கு போகலையா நீ. உன்னை யார் இந்த சோழியெல்லாம் பாக்க சொல்றா”
 

 

   ” அது அது ஆத்தா “என்று அவளோ தன் இமைகள் படபடக்க அவனைப் பார்த்து வார்த்தைகள் தந்து அடிக்க கூற,

 

    “என்ன ஆத்தாவா. இப்பதான் என்ன காணோமுன்னு தேடிட்டு கிடந்துச்சாம்”

 

    ” இல்ல மாமா. அது என்னோட ஆத்தா. “
 

 

    ” ஓ அம்முனி எதுக்கு லீவு போட்டீங்க இன்னைக்கி? “என்று கேட்டபடியே அவன் சாப்பிடுவதற்காக அமர,

 

      அவளோ அவள் எடுத்து வந்த அடுக்கு கேரியரை கீழே வைத்துவிட்டு அவனுக்கு எதிரே அமர்ந்து, அவன் முகத்தை பார்க்காமல் அந்த அடுக்கு கேரியரை கழட்டியப்படியே “அது இன்னைக்கு கிளம்பு கிளம்பறதுக்கு லேட் ஆயிடுச்சு மாமா. “
 

 

    “லேட்டாயிடுச்சுன்னு எனக்கு ஒரு ஃபோன் போட்டு இருக்கலாம்ல்ல புள்ள. நான் வந்து உன் டீச்சர்கிட்ட சொல்லி வுட்டுட்டு வந்துருப்பேன்ல. இதுக்கெல்லாம பள்ளிக்கோடத்துக்கு போகாம இருப்பாங்க. ” என்று அவன் அதற்கும் அவளை திட்டிக் கொண்டிருக்க, 
 

 

   அவளோ அதற்கு மேல் எதுவும் பேசாமல்  அவனுக்கு உணவை எடுத்து பரிமாறிக் கொண்டிருந்தாள்.

 

     “என்ன வூட்ல ஏதாவது விசேஷமா புள்ள. இத்தனை ஐட்டத்த கொடுத்துவிட்டு இருக்காக “
 

 

     இதை எல்லாம் மலர்தான் தன் மாமனுக்காக ஆசையாக செய்தாள். ஆனால் அதை சொல்ல கூட அவளுக்கு அத்தனை தயக்கமாக இருந்தது. அவள் எதுவும் கூறாமல் அவனுடைய தட்டு காலியாக காலியாக  வைத்துக் கொண்டே இருக்க,

 

    “போதும் புள்ள எம்புட்டு சாப்பிடுறது. நீ சாப்புட்டியாட்டி “என்றதும் அவளோ பொய்யாக தலையாட்ட,

 

        சரி என்றபடி துண்டை உதறி தோளில் போட்டவன். கை அலம்ப சென்று விட்டான். அவளோ அந்த கேரியரை எல்லாம் எடுத்து அடுக்கி வைத்த படி எழுந்து நிற்க,

   

அவனோ அவளை கண்டுகொள்ளாமல் “சரி பார்த்து வீட்டுக்கு போ ட்டி” என்று திரும்பி நடக்க போக,
   ” மாமா” என்று இவள் அழைத்ததும் என்ன என்று இவன் திரும்பிப் பார்க்க,

    ” உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றதும் நெற்றியை சுருக்கி அவளை பார்த்தவன் ” சொல்லு” என்றபடி அவளை நெருங்கி வர,

    அவளுக்கு மீண்டும் அவளது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்து விட்டது. எப்படி ஆரம்பிப்பது எதை சொல்வது என்று ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. ஆனால் இன்று கண்டிப்பாக சொல்லி விட வேண்டும் என்ற வைராக்கியம் அவளுக்கு இருந்ததால்,

    அவள் பின்னே ஒளித்து வைத்திருந்த அந்த கிரீட்டிங் கார்டையும், ரோஜா பூவையும் சேர்த்து அவனிடம் நீட்ட,

    அவனோ அவளை பார்த்தபடி ” என்ன? “
   ” இந்தாங்க ” என்று அவள் படபடக்கும் விழிகளுடன் அவனிடம் கொடுக்க, 
 

 

இது வரை யார் கேள்வி கேட்டும்…….✍️

 

பதில் கூற விரியாத என் இதழ்கள் …….,,,✍️

 

உன் ஒரு வார்த்தை கேள்விக்காகவே ……✍️

 

பதில் கூற காத்திருக்கிறது……….,,,,,,✍️

 

யார் பார்த்தும் திரும்பி பார்க்காத ……..✍️

 

என் கண்களின் இமை அசைவு …..,,,,✍️

 

உன் ஒரு விழி பார்வையாவது ………,,,,✍️

 

என் மேல் படுமா என்று இமை மூடா காத்திருக்கிறது ………✍️

 

இப்படி காதலித்து கொண்டு இருக்கும் என் காதலை….,,,✍️

 

புரிந்துகொள்ளாமல் இருக்கும் உன்னை………✍️

 

என்ன சொல்வது என்று புரியாமல் ……..,,,,,✍️

 

காதலித்து கொண்டு இருக்கிறேன்…..✍️

 

உன் மேல் இருக்கும் காதலால் ……,,,,✍️
 

 

    அதைப் படித்தபடியே அவளை பார்த்தவன். அவள் கடைசியாக எழுந்திருந்த இப்படிக்கு உன் மேல் உயிரையே வைத்திருக்கும் உன் மாமன் மகள் மலர்விழி என்பதை அவன் படிக்கவில்லை. 
 

 

    “யாரு புள்ள இத உனக்கு கொடுத்தது ” என்று அவனோ கண்களில் கோபத்துடன் அவளிடம் கேட்க,

 

     அவளோ எச்சிலை கூட்டி விழுங்கி “அது மாமா. அதிலேயே போட்டு இருக்கு ” என்று கூறியதும், அவன் பார்வை அந்த கிரீட்டிங் கார்டுக்கு மீண்டும் சென்றது.
 

 

   அந்த நேரம்  நொடி கூட தாமதிக்காமல் அவனது உயர்த்திற்கு எக்கி,  அவனது சட்டை காலரை பிடித்திழுத்து, அவனது இதழ்களில் தன்னுடைய இதழ்களை அழுத்தமாக ஒட்டி எடுத்து ” ஐ லவ் யூ மாமா “என்றதும் கதிர் கண்களிளோ அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
 

 

    அவள் செய்துவிட்ட காரியத்தால் அவள் உடல் எல்லாம் நடுங்கிப் போய் நின்றவள். அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் இருக்க, கதிருக்கும் நடந்த விஷயத்தை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்த கிரீட்டிங் கார்ட்டை கையில் இருந்து இறக்கியவன்.
 

 

    அவளையே கூர்ந்து விழிக்க, அவளோ அமைதியாக விழிகளை உயர்த்தி தன் மாமனை நிமிர்ந்து பார்க்க, அடுத்த நொடி அவள் கன்னத்தில் பளார் என்ற சத்தத்துடன் அவனது ஐவிரல்களும் அவள் கன்னத்தில் பதியும் அளவு அரை விழுந்திருந்தது. 
 

 

    அவளுக்கோ உடலெல்லாம் அதிர கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவனைப் பார்க்க,

 

   ” பிச்சுப்புடுவேன் பிச்சு பள்ளிக்கோடத்துக்கு போற வயசுல உனக்கு லவ்வு கேக்குதா லவ்வு. இரு உன் ஆத்தா கிட்ட சொல்லி வைக்கிறேன். என்ன ஒரு தகிரியம் ட்டி உனக்கு. வெட்கமில்லாமல் இப்படி ஒரு காரியத்தை பண்ற, இதுதான் உன் பள்ளிக்கோடத்துல சொல்லி கொடுத்தாகலா . வீட்டுக்கு போ இன்னைக்கு உங்க அப்பன் கிட்ட  சொல்லி உன் தோல உரிக்க சொல்லுதேன். முளைச்சி மூணு இல விடல. அதுக்குள்ள லவ்வாம் லவ்வு. ” என்று அவளை திட்டி அந்த கிரீட்டிங் கார்டை அவள் மேலே தூக்கி எறிந்தவன்.

     அவளை திரும்பியும் பார்க்காமல் செல்ல, இவளோ கண்கள் கண்ணீர் வழிய அவள் எடுத்து வந்த கேரியரை மட்டும் எடுத்துக் கொண்டு விசும்பி விசும்பி அழுத படியே அங்கிருந்து சென்றாள். புத்தம் புது மலராக அவனை நோக்கி வந்தவள். இப்பொழுது கசங்கிய மலராக செல்ல, செல்லும் அவளை தூரத்தில் இருந்து பார்த்தவனுக்கு ஆத்திரம் இன்னும் அடங்கிய பாடில்லை.

    அவனை பொறுத்தவரை மலர்விழி சிறு பெண். அத்தை மகள் என்பதால் அன்பு, பாசம் எல்லாம் அவனுக்கு இருக்கிறது. ஆனால் கல்யாணம் செய்து கொள்ளும் அளவெல்லாம் அவன் நினைத்ததே இல்லை. என்ன ஒரு தகிரியம் இந்த குட்டச்சிக்கு என்று அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவன். இதற்கு மேல் வேலை செய்ய முடியாது என்று வயலில் இருந்து வெளியே வர,

   அங்கே அவன் விசிறி அடித்த அந்த கிரீட்டிங் கார்டு இருக்க, யாரும் பார்த்தால் என்ன ஆவது என்று அதை எடுத்து பத்திரப்படுத்தியவன். வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான்.

🌀🌀🌀🌀🌀

 

     நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவள். திடுக்கென்று கண் விழிக்க, அருகில் இருந்த ஆனந்தியோ சலிப்புடன் அவளை பார்த்து, ” என்னடி அதே கனவா” என்றதும் எதிரில் இருந்த ஹரிஷோ,
   ” என்ன கனவு” என்று இருவரை மாறி மாறி பார்க்க,

     அது என்று ஆனந்தி ஆரம்பிக்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல ஹரிஷ் ” என்று கூறிய மலர்விழி ஆனந்தியை முறைத்து “வண்டியை நிப்பாட்டிட்டாங்க பாரு எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா போ “என்று ஆனந்தியை அனுப்ப பார்க்க ,
    “என்ன நான் வாங்கிட்டு வரணுமா? இந்த தடிமாட அப்புறம் எதுக்கு நான் கூட்டிட்டு வந்தேன்.
    ” போடா மலருக்கு ரொம்ப பசிக்குதாம் ஏதாவது வாங்கிட்டு வா போ ” என்று அவள் அவனை துரத்த ஹரிஷ்ஷோ ஆனந்தியை முறைத்தபடியே ட்ரெயினில் இருந்து கீழே இறங்கி சென்றான்.

   ” லூசாடி நீ ஹரிஷ் கிட்ட போய் என்ன சொல்ல போற “
   “உன்னோட ஏழு வருஷ காதலை சொல்லலாம்னா நீ தான் தடா போடுறியே “
   ” ஒன்னு பண்ணு போஸ்டர் அடிச்சி ஒட்டு. மூஞ்ச பாரு தேவையில்லாத வேலை பார்க்காத “

   ” எப்படியும் உன் மாமன பார்க்க தான நீ இப்ப போற “
   “நான் என் அக்காவோட நிச்சயத்துக்கு போறேன்.”
   ” அப்ப நீ உன் மாமாவை பார்க்க மாட்ட”
   ” ஏய் ஆனந்தபவன் ஹரிஷ் வரான் “
    ” ஓகே ஓகே. எதுவும் பேசலடி போதுமா? “

– தொடரும்
 

 

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
முத்த மழை
391 7 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page