நீ அங்கேயே நில்லு.. ஆட்டோவை இங்க வர சொல்றேன்னு சொல்லிட்டு அவன் வேகமாக அவள் பக்கத்தில் வரும்போது, ஒரு கார் நிலாவை இடிக்கிற மாதிரி பயங்கர ஃபாஸ்ட் ஆக வந்துச்சு.
நிலா…ன்னு சத்தம் போட்டுக்கொண்டே அவன் வேகமா அவள் கைய புடிச்சு இழுத்து கீழே விழுந்தான், அவளை மார்போடு அணைத்தபடி…
ஆட்டோக்காரர், அய்யோ…ன்னு ஓடி வந்தார்.
ஆனா அதுக்குள்ளேயே, நோ சினேகா… இப்படி சத்தம் போட்டுக்கிட்டு அவள் கைய புடிச்சு அவளை பாதுகாப்பாக அதுல இருந்து காப்பாத்திட்டான்.
கார் நிக்காம பயங்கர ஃபாஸ்ட்டா போச்சு. அது சினேகா உடைய கார்.
கீழே விழுந்ததுல அங்க வேலியில போட்டு வந்த ஒரு கம்பி அவனுடைய தோள்பட்டையை பதம் பார்த்தது.
அவனுடைய வலது கைல நேரா ஒரு கோடு, ரொம்ப ஆழமாக.. பயங்கர ரத்தம்.
எப்படி போறாங்க பாரு…
என்னப்பா ஆச்சு உனக்குன்னு சொல்லிக்கிட்டு ஆட்டோக்காரர் பக்கத்துல வர, உச்சகட்ட பயத்துல இருந்து நடுங்கி கொண்டு அவன் கைகளுக்குள்ள தஞ்சம் புகுந்தவள் போல, கண்களை இறுக்கி மூடிக்கொண்டு குறுகி அவன் மீது இருக்க,
ஆட்டோக்காரர் வந்ததுமே… அய்யோ இரத்தம்.. எழுந்திருப்பா.. இப்படி சொல்லிக்கிட்டு அவனோட கைய பிடிக்க, அப்போதான் அவளும் எழுந்திருச்சு, பார்த்தா,
அய்யய்யோ… இவ்வளவு ரத்தம் போகுதே, இப்படி சொல்லிக்கிட்டு அவளுடைய பேக்ல இருந்து அவள் முன்னாடி போட்டு இருந்த அந்த டிரஸ் உடைய துப்பட்டாவை எடுத்து அவனுடைய கையில வேக வேகமாக கட்டினாள்.
கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய கண்ணு சொருக ஆரம்பிச்சது. ரத்தத்தை பார்த்ததுமே அவள் பதற்றத்தோடு, அண்ணே தூக்குங்க.. சீக்கிரமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்னு ரெண்டு பேரும் சேர்ந்து அவனை வேகமாக ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்து அழைத்துக் கொண்டு போனாங்க,
ஆனா வீட்ல நீங்க பெரிய ரணகளமே நடந்துட்டு இருக்கு. என்னடி புள்ள வளர்த்து வச்சிருக்க?…
அவன் கூட ஓடிப் போயிட்டா போல, அவனும் இல்லை இவனும் இல்லை, எத்தனை நாள் இப்படி ஒரு வேஷத்தை போட்டு சுத்திட்டு இருந்தீங்க?.. இன்னைக்கு உங்களை கொல்லாம விட மாட்டேன், அவரு தன்னோட மனைவி லட்சுமி அடி நொறுக்கிட்டாரு.
எனக்கு சத்தியமா தெரியாது. அவ இந்த மாதிரி பண்ணுவான் நான் நினைச்சு கூட பாக்கவே இல்ல, அடிக்காதீங்கன்னு சொல்லி அவங்க அங்க பயங்கரமா தான் பொண்ணு மேல கோபத்தோடு இருக்க,
ஆனா இங்க ஹாஸ்பிடல்ல ரொம்ப பதற்றத்தோடு விக்ரமைக் கொண்டு வந்து சேர்த்தாங்க.
அவன் கையில ரெண்டு தையல் போட்டாங்க, அதை அவள் பார்த்துக்கொண்டே தான் இருந்தா. அது ஒரு சாதாரண கிளினிக். பெரிய ஹாஸ்பிடல் கிடையாது. பக்கத்துல எமர்ஜென்சிக்காக கொண்டு வந்து சேர்த்த இடம்.
அவன் அரைகுறையான மயக்கத்தோடு அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே வலியில் துடித்துக் கொண்டிருந்தான். அனஸ்தீசியா கொடுத்து பார்த்தாலும் அவனுக்கு அது வேலை செய்யவில்லை.
அவனை பார்த்து பார்த்து அவள் அழுதபடி கண்களை அந்த புடவையால் துடச்சு வெறும் சோகமாக உட்கார்ந்திருந்தாள்.
எல்லாம் முடிஞ்சிருச்சு. காலையில நீங்க கூட்டிட்டு போங்க, கொஞ்சம் அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று சொல்ல,
அவன் பக்கத்துல ஒரு சேர் போட்டு அவள், எதுக்காக இப்படி பண்ணீங்க?… என்னை கார் இடிச்சா இடிச்சுட்டு போகட்டும்.
நான் உயிரோடு இருந்து என்ன ஆகப்போகுது?… வீட்டுக்கு ரொம்ப பாரமாக, இந்த உலகத்துக்கும் சுமையாக நான் இருந்து என்ன செய்யப் போறேன்?…
எதுக்கு விக்ரம்?…
நான் எல்லாம் ஒரு ஆளா?… ராசி கெட்ட கழுதை, சாகறதுக்கு கூட கொடுத்து வைக்காதது மாதிரி நீங்க பண்ணிட்டு இருக்கீங்க, இதுல கூட எனக்கு லக்கு இல்லாம போயிடுச்சு பாருங்க, என்னால உங்களுக்கு இவ்வளவு பெரிய காயம் என்று அவள் கண்ணீரோடு அவன் கிட்ட, அவனை நிமிர்ந்து பார்க்காமல் பேசிக் கொண்டே இருக்க,
அவனால முழு சுயநினைவோடு இருக்க முடியல, ஒரு மாதிரி அரை மயக்கத்திலேயே அவளுடைய கைகளை இறுக்கமாக பிடித்தான்.
என்னால நீ எதுக்கு சாகணும்?… வந்தது வேற யாரும் இல்லை, காலையில் நீ என் கூட சேர்ந்து ஒரு பொண்ண தூக்கிட்டு வந்தேன் இல்ல, என்னோட ரூமுக்கு, அவள்தான் உன்னை ஆக்சிடென்ட் பண்ண பார்த்தது. அது அவளுடைய கார் தான். நான் தான் உன் கிட்ட சாரி கேக்கணும் இப்படி சொல்ல,
புரியல,
அவங்க எதுக்கு என்னை இந்த மாதிரி பண்ணனும்?… நான் ஒன்னுமே பண்ணலையே.. வேற எதுவும் பிரச்சனையானு சொல்லி அவள் கேட்கும்போது, ஆமா..
என் பிரண்டோட ஒரு பார்ட்டிக்கு போயிருந்தேன். அங்க தான் இந்த சினேகாவை எனக்கு தெரியும். வந்ததுல இருந்து ரொம்ப ஒரு மாதிரி வழிஞ்சு பேசிட்டு இருந்தா, எனக்கு அது புடிக்கல, அவாய்ட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ இருந்து என்னை துரத்தி துரத்தி வீடு வரைக்கும் வந்துட்டா,
ஒரு ரெண்டு மாசம் ஆக இதே டார்ச்சர் தான்.
உங்க அப்பா எங்கள தப்பா புரிஞ்சுகிட்டு சத்தம் போட்டுட்டு இருந்தாரு. அதனால அவள் சண்டைக்கு போகும்போது நான் தடுத்தேன். அவள உள்ள எடுத்துட்டு வந்துட்டேன். அதுல அவளுக்கு டவுட் வந்துருச்சு.. இவ்வளவு அழகான என்னை நீ அவாய்ட் பண்ணும் போதே தெரியும், வேற ஏதோ ஒரு விஷயம் மனசுக்குள்ள இருக்குன்னு அவளே கற்பனை பண்ணிக்கிட்டு உன்னையும் என்னையும் தப்பா பேசிட்டா,
நான் அவளை அனுப்பி வச்சுட்டேன், வீட்ல இருந்து,
உங்கள நான் சும்மா விட மாட்டேன். பாரு நான் என்ன பண்றேன்னு சொல்லிட்டு அவள் கோபமா அங்க இருந்து போயிட்டா, அவ செஞ்ச வேலை தான் இது எல்லாம்..
நீ எதுக்கு இந்த மாதிரி நெகட்டிவ் ஆக பேசுற, உனக்கு ஏதாவது பிரச்சனையா?…
எப்போவும் சுடிதார் தானே போட்டு இருப்ப, இது என்ன பயங்கர மாடர்ன் ஆ இன்னைக்கு வந்து இருக்க, யூ லுக் சோ பியூட்டிஃபுல்..
இப்படி அவன் சொல்லும்போது,
அவள் ஒரு மாதிரி வெறுமையாக சிரிச்சா,
தங்கச்சிக்கு எக்கச்சக்கமான வரன் வருது. ஆனா எனக்கு அப்படி இல்லை, என்னை பார்த்ததுமே எல்லாரும் ஓடிப் போறாங்க, என்னை எல்லாரும் அசிங்கப்படுத்துறாங்க. இதோட 30 ஆவது மாப்பிள்ளைக்கு மேல கடந்து போயிடுச்சு. யாராவது உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் இப்படி சொல்ல மாட்டாங்களான்னு நான் தினம் ஏங்கிட்டு இருக்கேன். குடும்ப வாழ்க்கைக்காக குடும்ப சுகத்துக்காக இல்லை, அவ்வளவு அவமானம்.
எத்தனையோ பேர் வரும் போதெல்லாம் ஒரு மேக்கப் போட்ட பொம்மை மாதிரி போய் அங்க நிக்கணும். அவங்க கீழே என்னை ஸ்கேன் பண்ணி ரிப்போர்ட் எழுதுற மாதிரி எனக்கு மார்க் போடுவாங்க. ரொம்ப அசிங்கமா இருக்கும்.
ஒவ்வொருத்தருக்கு ஒரு ஒரு குறை என் மேல அவங்களுக்கு தெரியுது. என் முடி சுருட்ட முடி. எண்ணெய் தேய்க்காமல் இதை சீவ முடியாது.
அதனால நான் எப்போதுமே குளிச்சிட்டாலும் கூட காய வைத்து எண்ணெய் தேச்சுடுவேன். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், அதனால நான் எப்போதுமே விபூதி குங்குமத்தோடு இருப்பேன். எனக்கு இவங்கள மாதிரி எல்லாம் டிரஸ் பண்ணி பழக்கம் இல்லை. எனக்கு அப்படி பண்ணும் போது ஏதோ கூச்சமாக இருக்கும். தெரியாத ஒரு விஷயத்தை எப்படி திடீர்னு அசால்டா பண்ண முடியும், கொஞ்சம் கொஞ்சமா நான் கத்துக்க மாட்டேன்னா அது புரியாம என் தங்கச்சிக்கு நான் இடைஞ்சலா இருக்கேன், நீங்க வீட்ல இருக்கிற எல்லாரும் என்ன அவமானப்படுத்திட்டே இருப்பாங்க.
எனக்கு பிரண்ட்ஸ் யாரும் இல்லை, யாரும் என் கூட பழக மாட்டாங்க. தினமும் இங்கு நடக்கிறது எல்லாம் பார்க்கும்போது செத்துப் போயிடலாம்னு தோணுது. இந்த உருவ கேலி என் அளவுக்கு அதிகமா டீஸ் பண்றது, எத்தனையோ…
என் தங்கச்சி சொல்றா, நீ மட்டும் இல்லன்னா என்னோட வாழ்க்கை சூப்பரா இருந்திருக்கும், ரெண்டு வருஷமா நீ வீட்ல இருந்துகிட்டு என் உயிர வாங்கிட்டு இருக்கன்னு என்கிட்ட ஒழுங்கா பேசுறது கூட கிடையாது.
என்னோட அப்பா அம்மா அதுக்கும் மேல… கோவில் கோவிலா கூட்டிட்டு போய் பரிகாரம் என்ற பெயரில் அசிங்க படுத்துவாங்க, 25 வயசு ஆனா நான் கல்யாணம் பண்ணியே ஆகணுமா?..
எனக்கு என்ன மாடல் டிரஸ் போட பிடிக்காதா?.. அப்படியெல்லாம் போடக்கூடாது என்று சொல்லி கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க, ஆனா என் தங்கச்சி மீறி போய்ட்டா, நான் உங்க பேச்சைக் கேட்டது இப்போ அவங்களுக்கு அவமானமா போயிடுச்சு. தினம் சோறு கூட சாப்பிட முடியாத அளவுக்கு என்ன அவ்வளவு கேவலமா பேசுவாங்க,
ரோட்ல வந்தா எல்லாரும் என்னை ஏதோ ஒரு கோமாளி மாதிரி பார்க்கிறாங்க, இது எல்லாம் நான் வாங்கி வந்த வரம்.
அப்படி இருக்கும்போது இந்த கார்ல அடிபட்டு சாகுறது ஒன்னும் அவ்வளவு ஒன்னும் கஷ்டமான விஷயம் இல்லை என்று நினைக்கிறேன், எனக்கு நிம்மதியான ஒரு விஷயம் தான் அவள் கண்கலங்கி கொண்டு பேசும்போது,
அவள் பேசி முடிக்கிற வரைக்குமே அவனுடைய கைகளை எடுக்கவே இல்லை, இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டே இருந்தான்.
நீ எதுக்கு இந்த மாதிரி நினைக்கணும்?… யாரு என்ன சொன்னாலும் இது உன்னோட வாழ்க்கை. நீ ஒன்னும் விலைபொருள் கிடையாது. அடுத்தவங்க உன்ன விலை பேசி வாங்கிட்டு போறதுக்கு,
நாளைக்கு இருந்து உனக்கு ஒரு புது வாழ்க்கை ரெடியா இருக்குன்னு நினைச்சுக்க, போய் தூங்குன்னு சொல்லிட்டு அவன் கொஞ்சம் கொஞ்சமாக கண்களை மூட,
அவளுக்கு எங்க போய் தூங்கங்கன்னு தெரியல, இன்னொரு பக்கம் இது ஒரு கிளினிக் ப்ராப்பரான ரூம் இல்ல, அதனால அவனுடைய கட்டிலிலேயே தலையை சாய்த்து அங்கேயே உறங்கினாள்.
கொஞ்ச நேரத்திலேயே அவளுக்கு பயங்கரமாக தூக்கம் வந்தது. ஏதோ அவள் மனசுக்குள்ள இருந்த சில விஷயங்களை வெளிப்படையாக பேசுனதுனால, எத பத்தியும் யோசிக்காமல் அவள் நல்லா தூங்கிட்டா, இடையில் கண் முழிச்சு பார்த்து விக்ரம் அவள் தலையை தடவி கொடுத்துக் கொண்டே அவளை பார்த்தபடியே அவனும் தூங்கினான்.
இப்ப காலையில எட்டு மணி ஆயிடுச்சு. அவன டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்பி வைக்கும் போது இரண்டு பேருமே அங்கிருந்து பேசிகிட்டே வெளியில் வர, ஆமா உங்க வீட்ல நீ இன்பார்ம் பண்ணியா?.. என்ன சொன்னாங்கன்னு சொல்லி அவன் கேட்கும்போது, அவள் தலையிலேயே அடிச்சுக்கிட்டா..
அய்யய்யோ, நான் வீட்ட பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையே, உனக்கு இந்த மாதிரி ஆயிடுச்சுன்னு தெரிஞ்சதும் நான் அந்த பதட்டத்திலேயே இருந்தேன்.
நேத்து போன் ஆன் பண்ணி பார்த்தேன், on ஆகல, அதுக்கப்புறம் நான் அதை யூஸ் பண்ணவே இல்ல, இப்படி அவள் தலையிலேயே அடிச்சுக்க,
சரி விடு, நான் தான் இருக்கேன் இல்ல, உங்க வீட்ல நான் பேசுகிறேன். இப்படி சொல்லி அவன் நடக்கும்போது கொஞ்சம் தடுமாறி தான் நடந்தான். காலில் சின்ன சுளுக்கு மாதிரி இருக்கு, அதை யாரும் கவனிக்கல, அதனால கொஞ்சம் தாங்கி தாங்கி நடக்கும்போது அவள் ஹெல்ப் பண்ற மாதிரி அவனோட கையை பிடித்துக்கொண்டு ஆட்டோவில் ஏறி இரண்டு பேரும் புறப்பட்டாங்க, ஆனால் அங்கே… அந்த பிளாட்டே ரொம்ப பரபரப்பாகவே இருந்துச்சு. நைட் யாரையுமே தூங்க விடாத அளவுக்கு சங்கருடைய சத்தம், அந்த அளவுக்கு டென்ஷன்ல அவ்வளவு கத்திக்கிட்டு இருந்தாரு..
இது தெரியாம ரெண்டு பேரும் சேர்ந்து வர்றாங்க, இனி என்ன நடக்கப்போது என்று அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்.
