திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -11
Hiiii வாசகர்களே ✨
காதலில் நம்பிக்கை இருந்தால் போதாதா?
உடலின் மூலம் உத்திரவாதம் தேவையா!!?
கண்கள் பார்த்து கொண்டால் மட்டும் போதாதா!!?
உடலின் திரை உதிர்த்து கண் பார்த்து
கை அதை தொட்டு அனுபவிக்க வேண்டுமா!!!!?
அதற்கு அனுமதிக்க வில்லை என்றால்,
அந்த பெண்ணின் காதல் பொய் என்றாகி விடுமா!!!?
இப்படி பட்ட பல கேள்விகள் இருந்தும், ஏந்திழை எனக்கு ஒன்றிற்கு கூட விடை தெரியவில்லை!!!
“ஷ்ரேயா நான் உன் கிட்ட தான் பேசறேன்!
பதில் சொல்லு!!!” என்று காட்டமாக ஜெஷ்வந்த் மாலை 5 மணிக்கு ஒரு குறுஞ் செய்தி போட்டு இருந்தான்…
“ஹான்… நான் 512 /600 மார்க் வாங்கி இருக்கேன்!!” என்று மட்டும் பதில் சொல்ல,
“எங்க சேர்ந்து இருக்க!!?” என்று உடனே பதிலுக்கு கேட்டு இருந்த அதே கேள்வியை மாற்றி கேட்டான்…
நான் சேர்ந்து இருக்கும் கல்லூரி பற்றி சொல்லியதும், “சரி” என்று எக்கி கொண்டான்…
நான் thanks சொன்னேன்.…
“எதுக்கு??”
“அது நீங்க தானே அன்னிக்கு பிசிக்ஸ் எடுகேஷன் தேர்வுக்கு ஹெல்ப் பண்ணீங்க…” என்றேன் நான் இன்னும் பழையதை மறக்கவில்லை என்று சொல்வதற்காக…
என் காதல் துவங்கி 1 ஆண்டு ஆக போகிறது!! எங்களுக்கு பொது தேர்வுகள் தான், முதல் அட்டவணை படியோ, இல்லை ஒத்தி வைத்த அட்டவணை படியோ நடக்காமல் போனதே தவிர, இடையில் சில நாட்கள் பள்ளிகள் திறந்த 20 நாளில் எங்களை மாடல் தேர்வு எழுத வைத்து, பயாலஜி, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பிசிக்கல் எடுகேஷன் ஆகிய செய்முறை தேர்வுகளும் நடத்தி விட்டு இருந்தனர்…
அதன் பின்னர் தான் மீண்டும் ஊர் அடங்கு உத்தரவு போட்டு, அரசாங்கம் அனைவரையும் ஆல் பாஸ் செய்ய வைத்து இருந்தது!!!
அதன் படி நான் ரெகார்ட் எழுதும் போதே ஜெஷ்வந்த் இடம் கேட்டு விட்டேன், “அண்ணா எதற்காக இஷ்ட பட்ட விளையாட்டை பற்றி எழுத சொல்லி இருக்கிறார்கள்?!!”
“அதுவா பிராக்டிகல் எக்ஸாம் அன்னிக்கு உன் கிட்ட அதை பத்தி தான் கேள்வி கேட்பாங்க…”
“ஓ! ஓகே தேங்க்ஸ் அண்ணா..”
என நான் உஷாராக கோடை பந்து பற்றி எழுதாமல், எனக்கு நிஜமாகவே பிடித்த கிரிக்கெட் பற்றி எழுதி இருந்தேன்!!
அன்று வைவா கேட்க, கோடை பந்து வீராங்கனை ஆகிய ஆசிரியை வந்து லெப்ட் ரைட் வாங்கி விட்டார் அனைவரையும்… வைத்து செய்தது பற்றாக் குறைக்கு, ஒழுங்காக படித்து விட்டு மீண்டும் வந்து பதில் அளிக்க சொல்லி பலரையும் வெளியே பின் தங்க வைக்க, இருந்த 7 PET ஆசிரியர்களும் ரத்த கொதிப்பு அடைந்து, தலை வலியில் எங்களை வறுத்து எடுக்க தொடங்கினார்கள்…
7 பிரிவுகளில், நான் ஒருவள் மட்டும் கிரிக்கெட் பற்றி எழுதி இருக்கவும் ஜெஷ்வந்த் நேற்று சொல்லி கொடுத்த அதே கேள்விகளை கேட்க, நான் டான் டான் என்று பதில் அளித்து விட்டு ஓடியே வந்து விட்டேன், இரண்டு யோகா ஆசனங்கள் செய்து காண்பித்து விட்டு…
ஒரு PET சார் வந்து எனக்கு கை குலுக்கி வாழ்த்து சொல்லி, வீட்டுக்கு அனப்பி வைத்தார்… எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி.!!
வேனில் நான் மட்டுமே தனியாக, ஒரு கிராமத்து பாதை வழியாக கடந்து பயணித்து பள்ளிக்கு செல்ல தயங்கி சங்கட பட்டு கொண்டு அடிக்கடி, தேர்வு இல்லாத நாட்களில் லீவ் எடுக்கவும், என் தந்தை கடிந்து கொண்டதன் படி, என் தாய் என் வகுப்பு ஆசிரியருக்கு அழைத்து புகார் சொல்லி விட்டார்…
அதை தேர்வு முடித்து வந்த என்னிடம் அவர் அதை பற்றி விசாரித்தார்… நான் என் அம்மா அப்படி சொல்லி இருக்க மாட்டார் என்று கண் மூடி தனமான நம்பிக்கையில் சொல்லி மறுக்கவும், என் அம்மா அனுப்பி இருந்த குறுஞ் செய்தியை அவரின் மொபைலில் எடுத்து காட்டி சொன்னார்…
நான் அப்படியே இடிந்து போய் விட்டேன்!!!
என்னை மிகவும் பிடித்த வைஸ் பிரின்சிபால் மேடம் அதன் பின்னர் அழைத்து, அந்த புகாரை பற்றி கூற, அவரிடமே உண்மை காரணத்தை சொல்லி விட்டேன்…
“இத உன் அம்மா அப்பா உன் கிட்ட கேட்கலையா!!!?” என்று அவரே வியந்து கேட்டார்…
அழுது கொண்டே “ஆம்! என்னிடம் கேட்கவே இல்லாமல் எனக்கே தெரியாமல் புகார் கூறி விட்டார்கள்…” என்று உண்மையை சொல்லும் போதே அழுது விட்டேன்…
அவருக்கே என்னை பார்க்க பாவம் ஆகி போனது… என்னை சமாதானம் செய்து, பின்னர் தான் “நாளையில் இருந்து மறு ஊர் அடங்கு உத்தரவு வந்து இருப்பதை சொல்லி, இனி வரவே வேண்டாம், வீட்டுல பாதுகாப்பான உணர்வோட ஹாப்பியா இரு… ஆல் தி பெஸ்ட்!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்!!
எனக்கே அசிங்கமாக இருந்தது!!
ஆகவே அந்த வருத்தத்தில் நான் நினைத்தது போல், முதலில் வீட்டிற்கு சென்றதும் அவனுக்கு நன்றி சொல்ல மறந்து இந்த சோகத்தில் அழுது கரைந்தேன்!!
ஆம்! ஜெஷ்வந்த் தான் அவர்கள் போன ஆண்டு அவன் எங்கள் பள்ளியின் கிரிக்கெட் அணி கேப்டன் என்பதால் கேட்ட கேள்விகளை என்னிடம் சொல்லி இருந்தான்… அதே தான் எனக்கு கேட்டு இருந்தார்கள்!!!
“மட்டையின் அளவு!
பந்தின் சுற்று அளவு!
பவுண்டரி எல்லை அளவு!
பிட்ச் அளவு…
ரன்கள் எவ்வாறு எல்லாம் சேகரிக்கலாம்?” அவன் சொல்லி இருந்த இதே கேள்வி தான், எனக்கும் கேட்க பட்டது…
அது ஆனால் என் நினைவுக்கு வரவே இல்லை… ஏன் என்றால், வீட்டிற்கு வந்ததும் நான் என் அண்ணன் சட்டையை எடுத்து போட்டு கொண்டு போனதற்காக என்னை குடும்பமாக, குற்றவாளி போல் நிற்க வைத்து கழுவி ஊற்றி, ஏற்கனவே சிதறி போய் இருந்த என் மன நிலையை இன்னும் நொறுக்கி அனுப்பி இருந்தார்கள்!
அதன் பின் ஏதோதோ நடந்து, இருவரும் பேசிக் கொள்ளாத நிலைக்கு சென்று, பிளாக் செய்யும் அளவு சம்பவம் ஆகி இருந்த நிலையில்… அதற்கு பிறகு இப்போது பேசும் போது தான், நன்றி தெரிவிக்க…
அவனோ கூலாக “இனிமே நமக்குள்ள நோ சாரி நோ தேங்க்ஸ்!!” என்று எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக என் புதைந்து போன காதலுக்கு தண்ணீர் ஊற்றினான்..
நான் தான் எதை எடுத்தாலும், கண் மூடி தனமாக நம்புவேனே.!!
ஆகையால் அவன் ஊற்றிய ஒரு சொட்டு நீரில் என் சிதைந்து மண்ணுக்கு அடியில் புதைந்த காதல் துளிர் விட்டது!!
“நீ ஏன் உன் போட்டோ எல்லாம் இன்ஸ்டாவில் போடுறதே இல்ல…?”
என்று கேட்டான் அடுத்த படியாக…
மர மண்டை நானோ, அமர்ந்து விளக்கம் கொடுத்தேன்!! பூடகமாக நான் மற்றவரின் தவறான வக்கிர பார்வைக்கு இரையாக விரும்பாததை தெரிவித்தேன்…
“சரி அப்போ எனக்கு உன் போட்டோ அனுப்பி வைக்கிரியா!!?”
“ஹான்!!!?”
“நான் அப்படி பாக்குற ஆள் எல்லாம் இல்ல!” என்று சிரித்து இயல்பாக பேச, நானும் நம்பி மூன்று போட்டோ மட்டும் அனுப்பி வைத்தேன்…
அதன் பிறகு எதுவுமே பேசவில்லை!
அப்படியே நாட்கள் கழிய, அவனின் பிறந்த நாள் வந்ததற்கு, நான் தான் முதலில் 12 மணி வரை முழித்து இருந்து வழக்கம் போல், வாழ்த்து கூறினேன்!!
“போன வாட்டி மாதிரி எந்த கிஃப்ட் எல்லாம் இல்லையா???”
“இல்ல… நீங்க என்னைய அன்பிளாக் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாதுல..”
“ஹான் ஓகே ஓகே…” என்று வெகு இயல்பாக எதுவுமே நடக்காதது போல், பேசி பேசி என் குடும்பத்தில் உள்ள அனைவரின் விவரங்களையும் அறிந்து கொண்டான்…
வெகுளி எனக்கோ பேசவே தெரியாமல், வெறும் அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்து கொண்டே வர, அவனோ, “உன் நம்பர் அனப்பு!!” என்று கேட்க அடுத்த நொடி நான் பகிர்ந்து விட்டேன்…
அதன் பிறகு, அடுத்த நாள் நான் தனியாக இருப்பதை உறுதி செய்து கொண்டவன் எனக்கு கால் செய்து பேசினான்…
அப்போது தான் என்ன பேசுவது என்று அவனுக்கே தெரியாமல், அவனுக்கு அம்மா அக்கா இருப்பதாகவும் அவர்கள் வேலை செய்யும் இடம், வீடு இருக்கும் இடம் பற்றி எல்லாம் பேசி தெரிவித்தான்…
எனக்கு என்ன?
அவன் என் உடல் சார்ந்த எந்த கேள்வியும் கேட்காமல் இருப்பதே பெரிய விஷயமாக தோன்றியது..!!
இதுநாள் வரை நான் கேள்வி பட்ட காதல் கதைகள் அப்படி விஷ தன்மையோடு இருந்தன அல்லவா..?
அது துளி கூட இவன் இடம் இல்லை!
இவன் மற்றவர்கள் போல் இல்லை!
என்று ஆழமாக நம்பினேன்…
அழைப்பை துண்டித்ததும் கூட, என்னிடம் குறுஞ் செய்தி அனுப்பி பேசி கொண்டு இருந்தான்… “உன் வாய்ஸ் அவ்வளோ சாஃப்ட் ஆக இருக்கு!!” என்று அவன் குரலில் எனக்கு அவன் கொடுத்த முதல் கம்பிளிமென்ட் என்னை வானில் சிறக்கின்றி பறக்க வைத்தது!!
“நைட்டுக்கு சாப்பாடு என்ன?”
“ஹான்! நான் போய் அம்மா சொல்றதை சமைக்கணும்… சோ எனக்கே தெரியாது!”
“உனக்கு சமைக்க எல்லாம் தெரியுமா??!”
“ஹான்! தெரியும்…”
“என்னைய இன்னும் லவ் பண்றியா!!!?”
“ஹக்!!! அது… அதான் நீங்க வேண்டாம்னு சொல்லிட்டீங்களே!!”
“ஹா… ஆமா!! அது என் நிலைமை அப்போ அப்படி இருந்துச்சு…”
“பரவாயில்லை… விடுங்க!!”
“ஹ்ம்ம் சரி, நீ போய் பாரு!! Bye ❤️”
எனக்கு அவன் அனுப்பிய சிவப்பு நிற இதய எமோஜியைக் காணவும், அது நிஜமாகவே அவன் கணக்கு தானா? என்று ஒரு முறை சரி பார்த்து கொண்டேன், என் கண்களை என்னாலேயே நம்ப முடியாத அவளாக…
இரவு உணவு எல்லாம் சமைத்து, சாப்பிட்டு நாளை தேவை ஆனவற்றை செய்து கொடுத்து விட்டு வந்து, நான் அந்த சாட் முழுக்க ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவு செய்து மகிழ்ந்தேன்!!
ஜெஷ்வந்த் கூட சாப்பிட்டு முடித்து வந்தவன், மீண்டும் பேச துவங்கினான்…
அப்போது என்னிடம் “சாரி கட்டுன போட்டோ இருந்தா அனுப்பு…” என்றான்
நானும் சட்டென இருந்த மகிழ்வான மன நிலையில், எதை பற்றியும் யோசிக்காமல் 4 போட்டோ அனுப்பி வைத்தேன்!!
ஆனால், என் மகிழ்ச்சி வெகு நேரம் நிலைக்க வில்லை!! ஏனெனில் அவன் என்னுடைய தனி பட்ட கணக்கிற்கு ஃபாலோ ரெக்வெஸ்ட் கொடுத்து இருப்பதாகவும் அதை ஏற்கும் படி என்னிடம் பேசி கொண்டே சொன்னான்…
இல்லை! இல்லை!!
சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஏற்கும் படி கட்டளை இட்டான்…
அதன் பின் என்ன நேர்ந்தது?
என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨
உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்!
இன்றைய தலைமுறை ஆன 2k கிட்ஸ் உடைய காதல் ஏன் இவ்வாறு ஏன் இவ்வாறு உடல் சார்ந்து ஒரு உறவாக உருவெடுக்கிறது!!!!?
எதிர் காலத்தின் உத்திர வாதத்துக்காக!?
இல்லை, நம்பிக்கை இன்மையா!!!?
நம்பிக்கை இல்லாத இடத்தி இவ்வாறு காதல் உணர்வு உண்மையாக இருக்கும்??
மெய் காதல் மறந்து போய்
இப்போது இந்த கலி காலத்தில்
மெய் காதலுக்கு முக்கிய துவம்
தருவது ஏன்?
Thanks for reading மக்களே ✨
