மௌன ராகம் 7

அத்தியாயம் 7: 

​கல்லூரி வளாகத்தின் பிரதான வாயிலில் கவிவர்ஷன் தனது பைக்கை நிறுத்தினான். இன்று அந்த இடமே ஒரு போர்க்களத்தைப் போலக் காட்சியளித்தது. வழக்கமாக மாணவர்களின் சிரிப்பொலி கேட்கும் அந்த இடத்தில், இன்று ஒருவிதமான கனத்த மௌனம் நிலவியது. கவிவர்ஷன் மெல்ல நடந்து சென்ற போது, அவனது கண்கள் அந்தப் பழைய நூலகக் கட்டிடத்தைப்பார்த்தன.

​அந்தநூலகம் தான் அவர்களின் காதலின் மௌன சாட்சி. அந்த நினைவுகள் கவியின்ம னதிற்குள் ஒரு மெல்லிய தென்றலாக வீசின.

​அது ஒரு அழகான மாலைப் பொழுது. நூலகத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கவிவர்ஷன் படித்துக் கொண்டிருந்தான். அப்போது தான் பிரக்யு முதன் முதலில் அவனது அருகில் வந்து அமர்ந்தாள். அவளது மேனியிலிருந்து வந்த அந்த பாரிஜாதமலரின் வாசம் இப்போதும் கவியின் நாசியில் படிந்திருப்பது போலவே இருந்தது.

​”கவிஞரே… இந்தப்பாட்டுக்கு என்ன அர்த்தம்?” என்று அவள் கேட்டபோது, அவளது குரலில் இருந்த அந்த நடுக்கம் கவியைத்திகைக்க வைத்தது.

​கவிவர்ஷன் அவளது கண்களைப் பார்த்தான். “இந்த வரிகளுக்கு அர்த்தம் அன்பைப் பகிர்ந்து கொள்வது பிரக்யு. ஆனா, உன் கண்களைப் பார்த்தா ஆயிரம் கவிதைகளுக்கு அர்த்தம் தேடணும்னு தோணுது,” என்றான்.

​பிரக்யு வெட்கத்தில் தலைகுனிந்தாள். “உங்களுக்குப் புகழத் தான் தெரியுமா? இல்ல உண்மையாவே சொல்லுறீங்களா?” என்று அவள் கேட்டபோது, வெளியே லேசாக மழை பெய்யத் தொடங்கியது.

​இருவரும் ஜன்னல் ஓரம் வந்து நின்றனர். மழைத்துளிகள் ஜன்னல் கம்பிகளின் வழியாகத் தெறித்து பிரக்யுவின் கன்னங்களில் விழுந்தன. கவிவர்ஷன் துணிந்து தனது கைக்குட்டையை எடுத்துஅவளது கன்னத்தைத் துடைக்க முயன்றான். அந்த ஒரு நொடித் தீண்டலில், மின்சாரம் பாய்ந்தது போல இருவரும் சிலிர்த்துப்போயினர்.

​”இந்த மழை நிக்கவே கூடாதுன்னு தோணுது கவி,” என்று பிரக்யு முணுமுணுத்தாள். அன்று அந்த நூலகத்தின் அமைதியில், வார்த்தைகளை விட அவர்களின் மௌனமே அதிகக் கதைகளைப் பேசியது.

​அந்தஇனிமையான நினைவுகளை உதறிவிட்டு கவிவர்ஷன் நிகழ்காலத்திற்கு வந்தான். இன்று அந்தத் தீண்டல் இல்லை, அந்த மழை இல்லை. இன்று இருப்பது அதிகாரத்தின் முழு உருவம் மட்டுமே.

​கல்லூரிநிர்வாகக் குழுவின் அறைக்கு வெளியே ஹர்ஷாந்த் தனது லேப்டாப்புடன் தயாராக நின்றான். “அண்ணா… எல்லாம் ரெடி. அந்த,மனுஷன்உள்ளே தான் இருக்காரு. பிரக்யு அண்ணியும் உள்ளே போயிட்டாங்க,” என்றான் ஹர்ஷாந்த்.

​கவிவர்ஷன்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். ஒரு பெரிய வட்டமேசையைச் சுற்றி பிரின்சிபால், கல்லூரி முதல்வர் மற்றும் சில பேராசிரியர்கள் அமர்ந்திருந்தனர். ஒரு மூலையில் ரூபன் தனது கௌரவமான உடையில், அதிகாரத் தோரணையில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் பிரக்யு தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. அவள் இரவு முழுவதும்அழுதிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

​”வா கவிவர்ஷன்… உன் மேல சுமத்தப்பட்ட புகார்ருக்கு என்ன சொல்லப் போற என்ன விளக்கம் இருக்கு?” என்று பிரின்சிபால் கறாராகக் கேட்டார்.அந் நிமிடம் தன் மூன்று வருட கல்லூரி வாழ்க்கைஇ  தான் சம்பாதித்த நற் பெயர் எல்லாம் கண்முன் வந்து நின்றது. கவி வரிஷனைப் பற்றி கல்லூரயில் அனைவருக்கும் தெரியும் இருப்பினும் இப்படி  தன்னை குற்றவாளியாக நிற்க வைத்து கேட்டது  என்ன ….ரூபனின் பணம் தானே 

​கவிவர்ஷன்ரூபனை நேராகப் பார்த்தான். “சார்… விளக்கம் கொடுக்க வேண்டியது நான் இல்லை. யாரோஒருத்தரோட வற்புறுத்தலால இங்க சாட்சி சொல்லவந்திருக்கிற பிரக்யு தான் சொல்லணும். ”பிரக்யு… பயப்படாதே, உண்மையைச் சொல்லு. நான் உன்னை எப்பவாவதுமிரட்டியிருக்கேனா?” என்று கனிவான குரலில் கேட்டான்.

​ரூபன்இடைமறித்தார். “பிரின்சிபால் சார்! இவன் முன்னாடியே என்மகள் பேச மாட்டா. இவனைவெளியே போகச் சொல்லுங்க. பிரக்யு… சொல்லுமா, இவன் உன்னைத் தொந்தரவுசெஞ்சது உண்மைதானே?” என்று அதட்டினார்.

​பிரக்யுநடுங்கினாள். அவளுக்கு மீண்டும் ரூபன் விடுத்த மிரட்டல்கள் நினைவுக்கு வந்தன. “ஆமா… சார்… இவன்…” என்று அவள் இழுத்தபோது, கவிவர்ஷன்குறுக்கிட்டான்.

​”ஒரு நிமிஷம்சார்! பிரக்யு பேசுறதுக்கு முன்னாடி, ரூபன் சாரோட ‘ரூபன் எக்ஸ்போர்ட்ஸ்’ கம்பெனியைப் பத்தின ஒரு சின்ன வீடியோவை அவர் பார்க்கணும்னுஆசைப்படுறேன்,” என்று கவிவர்ஷன் சைகை செய்தான்.

​ஹர்ஷாந்த்உடனடியாக லேப்டாப்பை ஆன் செய்து, அங்குள்ளபெரிய திரையில்  சிலஆதாரங்களைக் காட்டினான். ரூபன் செஞ்சிருந்த வரி ஏய்ப்பு புகார்கள், போலி நிறுவனங்களின் பெயர்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் திரையில் ஓடின.

​ரூபனின்முகம் வெளுத்தது. அவர் பதற்றத்துடன் எழுந்தார். “என்ன இது? இதெல்லாம் பொய்! நிறுத்துங்க!” என்று கத்தினார்.

​கவிவர்ஷன்அமைதியாகச் சொன்னான், “இது பொய்யா இல்லையான்னுவருமான வரித்துறை முடிவு பண்ணும் சார். இது மட்டும் வெளியிலபோனா, உங்க இத்தனை காலக்கௌரவம் மண்ணாகிடும். நீங்க உங்க கௌரவத்துக்காக ஒருஏழை மாணவனோட வாழ்க்கையைச் சிதைக்க நினைச்சீங்க. இப்போ உங்க கௌரவமே கேள்விக்குறியாஇருக்கு.”

​அறையில்இருந்த பேராசிரியர்கள் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ரூபன் திகைத்து நின்றுவிட்டார்.

​கவிவர்ஷன்மீண்டும் பிரக்யுவின் பக்கம் திரும்பினான். “பிரக்யு… இனிமே உன்னை மிரட்ட யாருமே இல்லை. உன் மனசுல இருக்கிறதைச்சொல்லு. அந்தப் பழைய பூந்தோட்டத்துல நாமசந்திச்சப்போ, நீ சொன்னியே… ‘உன்கவிதை தான் என் சுவாசமேன்னு. அந்த சுவாசம் இப்போ பொய்யா?”

​அனைவர்முன்னிலையிலும் பிரக்யு விம்மி விம்மி அழுதாள். திடீரென அவள் நிமிர்ந்து தன்தந்தையைப் பார்த்தாள். “இல்லை சார்! கவிவர்ஷன் எந்தத் தப்பும் செய்யலை. அவரைப் பத்தி நான் கொடுத்த புகார்எல்லாம் பொய். எங்க அப்பா வர்சனை தீர்த்துக்கட்டுவேன்னு மிரட்டுனதுனாலதான் நான் அப்படி எழுதிக்கொடுத்தேன். நான் கவிவர்ஷனை நேசிக்கிறேன். அவர் இல்லைன்னா நான் செத்துடுவேன்!” என்று கதறினாள்.

​அரங்கமேநிசப்தமானது. ரூபன் அப்படியே நாற்காலியில் சரிந்தார். ஒரு பெரிய தொழிலதிபரின்அதிகாரம், ஒரு கவிஞனின் உண்மையின்முன்னால் மண்டியிட்டது.

​பிரின்சிபால்கண்ணாடி வழியாக ரூபனைப் பார்த்தார். “ரூபன் சார்… நீங்க இவ்வளவு கீழ்த்தரமா இறங்குவீங்கன்னு நான் நினைக்கல. கவிவர்ஷன்மேல இருந்த தற்காலிக நீக்கம் இப்போவே ரத்து செய்யப்படுது. கவி… நீ போகலாம்,” என்றார்.

​கவிவர்ஷன்வெளியே வந்தான். பிரக்யு ஓடி வந்து அவன்கைகளைப் பற்றிக்கொண்டாள். கல்லூரியின் வராண்டாவில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அது ஒரு வெற்றிப்பார்வை மட்டுமல்ல; அது ஒரு புதியஆரம்பத்தின் அடையாளம்.

​”கவி… இனிநாம சேர்ந்து இருக்கலாம்ல?” என்று பிரக்யு மெல்லக் கேட்டாள்.

​கவிவர்ஷன்அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். “இனி யாராலும் நம்மைப்பிரிக்க முடியாது பிரக்யு. நம் மௌனங்கள் பேசிமுடிச்சாச்சு, இனி நம் வாழ்க்கை பேசும்.”

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மௌன ராகம்
2,527 124 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page