சூர்யா, ஆறடி உயரத்திற்குச் சற்றே கூடுதலானவன்! கட்டுக்கோப்பான உடல்வாகும், வெயிலில் அலைந்து விளையாடியதால் உருவான ‘டேன்’ நிறமும், அவனுக்கு ஒரு முரட்டுத்தனமான அழகைத் தந்திருந்தது. கிரிக்கெட் உலகில் அவன் பெயரே, ‘The Smiling Storm!’.
அந்த பெயருக்கு ஏற்றபடி, அவன் சிரித்தால் அங்கு சூறாவளி வீசப்போவது நிச்சயம்! பதினான்கு வயதில் ஐபிஎல் போட்டி மூலம் உலகினுக்கு அறிமுகமானவன். மிகக் குறைந்த வயதில், சென்ச்சுரி அடித்த ஒரே ஐபிஎல் பிளேயர் அவன் தான். தற்போது நடந்து முடிந்த உலகக்கோப்பை இறுதி போட்டியிலும், தோல்வியின் பிடியில் இருந்த இந்திய அணியை மீட்டெடுத்து, வெற்றி பெறச் செய்தான்.
அந்த வெற்றிக் களிப்பில் மின்னிக் கொண்டிருந்த கருவண்டுக் கண்களும், செதுக்கிய முகவெட்டும் அவனை ஒரு கிரேக்கச் சிலையைப் போலக் காட்டின. அவன் அணிந்திருந்த கையில்லாத பனியன், அவனது அகன்ற தோள்களுக்கு இன்னும் கம்பீரத்தைச் சேர்த்தது.
இத்தனையும் தாண்டி அவன் முகத்தில் ஒருவித இறுக்கம் நிலைத்து நின்றது. அது அவன் எதிரில் நடுங்கிக் கொண்டிருந்த பூர்ணிமாவை, இன்னும் இன்னும் அச்சுறுத்தியது. அவன் தந்த அத்தனை பேப்பர்களிலும் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட்டாள் பேதை.
“இப்பவாவது என் அபியை திருப்பி கொடுத்துடு சூர்யா, ப்ளீஸ்…”
பதில் ஏதும் சொல்லாமல் அந்தப் பேப்பர்களை கையில் எடுத்து, ஒரு குரூரமான புன்னகையோடு அவளது கையெழுத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சூர்யா… சூர்யா…” அவள் ஜெபம் போல திரும்பத்திரும்ப கெஞ்சினாள். ஒரு இளக்கார பார்வை பார்த்துவிட்டு, வேகமாய் தனது அறையை நோக்கி நடந்தான்.
ஓடிவந்து அவன் காலை பிடித்துக் கொண்ட பூர்ணிமா, “அபிய தந்திடு” என்று அவன் முட்டியில் தலையால் முட்டினாள்.
கொத்தாய் அவள் கூந்தலை இறுக்கிப்பிடித்தவன், “என்ன பத்தி தெரிஞ்சும், கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழலாம்னு நினைச்சியா? நீ பாவம்னு எனக்கு தோணுற வரைக்கும் அவள உன் கண்ணுலையே காட்ட மாட்டேன்” என்று கூறி, தள்ளி விட்டான்.
“ஆ!” என்று அலறிபடி தரையில் விழுந்தவள் திரும்ப எழுந்திருக்கவே இல்லை.
சூர்யா அந்த பேப்பர்களை பத்திரப்படுத்திவிட்டு, திரும்ப ஹாலுக்கு வந்தான். விழுந்த இடத்திலேயே கிடந்தாள் அவள். அப்போதுதான் அவள் மயங்கி கிடக்கிறாள் என்பதே அவன் புத்திக்கு உரைத்தது. கடந்து செல்ல நினைத்து ஓரடி எடுத்து வைத்தான்.
“சூர்யா… பயமா இருக்குடா… வந்துடு… எனக்கு பயமா இருக்கு சூர்யா!” என்று அத்தனை மயக்கத்திலும் அவன் பெயர் சொல்லி பிதற்றினாள்.
அத்தோடு அவன் கால்கள் நகராமல் வேர் பிடித்தது போல நின்றுவிட்டது. சிறு வயதில் எப்போதும் இப்படித்தான், அவனைத் தேடி தவிப்பாள். அவன் விழிகள் தன்னிச்சையாய் அவள் பக்கம் திரும்பின! துப்பட்டா தரையில் துவண்டு கிடக்க, மெல்லிய காட்டன் சுடி அவள் மொத்த உடல் வனப்பையும் அவனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
பின்னந் தலையை அழுந்தக் கோதியவன், “கோகிலா!” என்று கத்தினான்.
அவ்வளவு நேரம் அங்கு நடப்பதை எல்லாம் ஒளிந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேலைக்காரி கோகிலா, “எசாமான்!” என்றபடி ஓடி வந்து நின்றாள்.
“இவளுக்கு மயக்கத்தை தெளிய வச்சு விரட்டி விடு…”
“சரிங்க ஐயா…” என்றவள், தனக்கு தெரிந்த முதலுதவிகளை செய்தாள். அவள் சிகிச்சைக்கு பலனாய் அரை விழி திறந்தாள் பூர்ணிமா.
“ஐயா, உடம்பு நெருப்பா கொதிக்குதுங்க. உடம்புல சுத்தமா சுரணை இல்ல. இந்த பொண்ணு இப்போதைக்கு எழுந்திரிக்காது போல!” என்று கூற, அவனுக்கு வெறி இன்னும் அதிகமானது.
“உடம்புல சுரணை இல்லையா? பத்து நிமிஷத்துல நான் வரவைக்கிறேன்” என்றவன், அவளைத் தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு விறுவிறுவென மாடி நோக்கி நடந்தான்.
‘ஆத்தி, நான் எதுவும் பார்க்கல சாமி!’ என்று தப்பித்து ஓடத்தான் யோசித்தாள் கோகிலா.
பின்னே?! அவன் கோபத்திற்கு அதிகாரத்தில் இருப்பவர்களை அச்சப்பட்டு ஒதுங்கிக் கொள்வார்கள். அவளோ இந்த வேலையை நம்பி பிழைப்பு நடத்துபவள். அவனை எதிர்க்கத் துணிவாளா?
“சூர்யா… சூர்யா…” என்று அப்போதும் அவன் பெயரை துதித்துக் கொண்டே இருந்தாள் பூர்ணி.
அவளை பொம்மை போல தன் அறைக்கு தூக்கிச் சென்றவன், தன் கிங் சைஸ் பெட்டில் வீசினான். அந்த பிரம்மாண்ட அறையின் ஏசி, மேனியில் பட்டதும் குத்தீட்டியாய் குத்தியது போல உணர்ந்தாள்.
“நான் போகணும்… அபிய குடு!” அவள் வார்த்தைகள் அவளுக்கே கேட்கவில்லை.
ஒற்றைக்கையால் தன் பனியனை கழற்றி வீசி எரிந்தவன், அப்படியே அவள் மீது படர்ந்தான். அத்துமீறி அவளை உடலெங்கும் அவன் விரல்கள் உறவாடியது. குளிரால் உடல் விரைத்து இருந்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல் சூடேற, அவன் செய்யும் செயல் புத்திக்கு உரைக்கத் துவங்கிற்று.
“என்ன பண்ற? எனக்கு அடுத்தவாரம் கல்யாணம். விடுடா…” என்று துள்ளி துடித்தாள்.
அவள் துள்ளலையும் துடிப்பையும் சூர்யா பொருட்படுத்துவதாக இல்லை. தேகமெங்கும் முத்தத்தால் நிறைத்தான். அவன் அழுத்திப் பிடித்த பாகம் எல்லாம் சிவந்து கன்றிப் போனது. ஐந்தே நிமிடத்தில் அத்தனை குளிரையும் கடந்து உடல் வெப்ப நிலைக்குப் போக, அவளுக்கு வியர்த்து விட்டது.
“என்னை விட்ரு… என்னை விட்ரு…” என்று விடாமல் அனத்திக் கொண்டிருந்த அவள் இதழில் இறுதியாய் ஓர் முத்தமிட்டான்.
மூச்சுக்கு திணறியவள், முடிந்த மட்டும் அவனை தன்னை விட்டு தள்ளிவிட முனைந்தாள். அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை போலும்! தூசு போல தட்டிவிட்டு, இதழ் வழியே உயிரை உறிஞ்சி எடுத்தான். விளைவு?! மீண்டும் மயக்கத்தில் விழுந்தாள்.
திரும்ப அவள் கண் விழிக்கும் பொழுது அடுத்த நாள் பொழுது விடிந்திருந்தது. சூர்யா கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தான். பூர்ணிமாவின் உடல் இன்னும் முழுதாக உணர்வுகளை மீட்டிருக்கவில்லை. மயங்கியதற்கு பிறகு இரவில் என்ன நடந்தது என்று அவளுக்கு தெரியவில்லை.
லேசாக தன்னை மூடி இருந்த போர்வையை விலக்கி பார்த்தவளுக்கு, ஓர் நொடி உயிரே போய்விட்டது. உடலில் ஒட்டுத் துணி இன்றி கிடந்தாள். தனக்கு என்ன ஆனது? என விளங்காது போக, அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவள் அழுவதை கண்ணாடி வழியாக பார்த்த பிறகும் அவனிடம் சிறு குற்ற உணர்ச்சியும் இல்லை.
இவள்தான் விம்மியபடி, “ஏன் இப்படி செஞ்சீங்க?” என்றாள்.
“ஹான்?” ஒற்றைப் புருவம் உயர்த்தி மிரட்டினான் அவளை.
“நான்தான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னேன்தான? அப்புறம் எதுக்காக…” அவள் வார்த்தைகள் அப்படியே திக்கி நின்றது. காரணம், அவன் இவளை நோக்கி நடந்து வந்தான்.
ஸ்லோமோஷனில் அவள் அருகே வந்தவன், “அப்போ இதுக்கு என்னடி அர்த்தம்?” என்று அவள் வலது கை உள்ளங்கையை, அவள் முகத்தருகே விரித்து காட்டினான். அதில் சூரியன் உருவத்தை மருதாணியாக தீட்டி வைத்திருந்தாள்.
“எம்மேல அவ்வளோ ஆசையாடி உனக்கு? நான் உன்னை கொல்ல நினைச்சுட்டு இருக்கேன்? நீ வேற ஏதோ நினைப்புல இருக்க போல?” என்று சொல்லி சிரித்தான். அவளுக்கோ தன் சொல்பேச்சு கேட்காத மனதை நினைத்து அவமானமாக இருந்தது.
“அது உன் கையில இருக்கிற வரைக்கும் உன்னை விட மாட்டேன். அழிஞ்சதுக்கு பிறகு எங்க வேணாலும் போ, எவனை வேணாலும் கட்டிக்கோ…” என்று அவன் கூற, இவளுக்கு அழுகை அதிகமானது.
“ஏய், சும்மா நசநசக்காத. நேத்து நான் உன்னை ஒண்ணும் பண்ணல. என் லெவலுக்கு நீயெல்லாம் வொர்த்தா? எனக்கு தெரியாம கல்யாணம் வரைக்கும் போனதுக்காகத்தான் இந்த பனிஷ்மெண்ட். மரியாதையா வாய மூடிட்டு, பத்து நிமிஷத்துல ரெடி பண்ணிட்டு கீழ வா. இல்லனா, கொஞ்சம் முன்ன நடக்கலைன்னு சொன்னதை நடத்தி காட்டிடுவேன்…”
சொல்லிவிட்டு அவன் போக்கில் கீழே போய்விட்டான். இவளுக்கு எழுந்து நிற்கும்போது தலை சுற்றிக் கொண்டு வந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது, காய்ச்சலும் இன்னும் குறைந்தபாடில்லை. ஆனாலும் முடிந்தவரை விரைவாக தயாராகி கீழே சென்றாள். அவள் வருவதற்குள் சூர்யா சாப்பிட்டு முடித்து கிளம்பி விட்டான். ஒப்புக்காக கூட நீ சாப்பிடு என்று அவனும் சொல்லவில்லை, இவளும் கேட்கவில்லை.
காரின் முன் இருக்கையில் அவளை கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டு, அவனே டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான். வண்டி சாலையில் சீறி பாய்ந்தபடி பறந்தது. அது போய் நின்ற இடம் ஊரின் மிகப் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்.
பூர்ணி, “அபி இங்கேயா இருக்கா?” என்று அந்த கட்டிடம் முழுவதும் பார்வையால் துளாவினாள்.
பதில் சொல்ல வேண்டியவனோ, அவளுக்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்தான். விதியே என இவளும் பின்னால் ஓடினாள். ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் வழியெல்லாம் எல்லோரும் இவனை வாய் பிளந்து கொண்டு பார்த்தனர். இவனோ யாரையும் மனிதர்களாக கூட மதிக்கவில்லை. ரசிகர்கள் நெருங்க முயன்றால், ஹோட்டல் பணியாட்கள் தடுத்துப் பிடித்தனர்.
நேராக ஏழாவது மாடியின் இறுதி அறைக்கு சென்றவன், காலிங் பெல்லை அழுத்தாமல், தன் கைவசம் இருந்த கார்டு மூலமாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
நடந்ததையெல்லாம் பார்த்தே பூர்ணிக்கு புரிந்து விட்டது, ‘இது அவன் அடிக்கொரு முறை புழங்கும் இடம்!’ என…
இரண்டு படுக்கை அறை, ஒரு ஹால், அகன்ற பால்கனி என விலாசமான அறை அது. எப்படியும் ஒரு நாள் வாடகையாக குறைந்த பட்சம் ஐம்பதாயிரம் வசூலிக்க கூடும் எனுமளவு அங்கே பணச் செழிப்பு கொட்டி கிடந்தது.
அவன் உள்ளே நுழைந்த அடுத்த கணம், “பேபி…” என கத்தியபடி, ஒரு நவநாகரீக யுகதி ஓடி வந்து அவன் தோளை தொத்திக் கொண்டாள்.
அவளின் கையில்லாத சட்டையை, தோள் பட்டையில் இருந்த நூல் முடிச்சு இழுத்துப் பிடித்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. இடை பிரதேசத்தை வெளிப்படையாக காட்டும் அளவுக்கு, தொளதொள பேண்ட் தொப்புளுக்கு கீழே தொங்கிக் கொண்டிருந்தது. பியூட்டி பார்லர் தயவால், கூந்தல் முதல் கால் நகம் வரை பளபளவென மின்னிட, ஒரு சினிமா நடிகை போல இருந்தாள் அவள்.
அவளைப் பார்த்த பூர்ணிமா, ஆட்டோமேட்டிக்காக தன் அருகில் இருந்த கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தாள். எப்போதும் விளக்கி வைத்த குத்துவிளக்கு போல் இருக்கும் அவள் முகம், காய்ச்சலின் காரணமாக கொஞ்சம் கறுத்து போயிருந்தது. கடல் அலை போல, சுறுள் சுறுளாய் காற்றிலாடும் அவள் கூந்தல், நேற்று மழையில் நனைந்ததன் பலனாய் லேசாய் பிசுபிசுப்போடு இருந்தது. இதற்கு மேல் பார்க்க வேண்டாம், என அவளே தன்னை கண்ணாடியை விட்டு தள்ளி நிறுத்திக் கொண்டாள்.
அங்கே அப்சரா, “நேத்து சிஎம் பார்ட்டி முடிஞ்சதும், நேரா என்னை தேடி வருவன்னு நினைச்சேன். எங்க போன நீ?” என்று சிணுங்கினாள்.
அவள் இடையை இறுக்கி அணைத்துக் கொண்ட சூர்யா, “ஏன்? என்னை மிஸ் பண்ணியா?” என்று கேட்க,
“ரொம்ப ரொம்ப…” என சொல்லி முடிக்கும் முன்பாக, அவள் இதழை கொய்திருந்தான்.
பூர்ணிக்கு இதெல்லாம் பார்த்து நெருப்பில் நிற்பது போல் இருந்தது. எப்படியெல்லாம் உயிரோடு வதைக்க முடியும் என்று கோர்ஸ் ஏதாவது படித்துவிட்டு வந்திருக்கிறானா? என்று கூட ஓர் நொடி நினைக்கத் தோன்றியது.
“வாடா, ஏன் இவ்வளவு லேட்டு?” என்று கேட்டபடி ஒரு அறையில் இருந்து வெளியில் வந்தான் சுஜித். அவன் தான் இப்போதைய இந்திய அணியின் கிரிக்கெட் டீம் கேப்டன். சூர்யாவின் உயிர் நண்பனும் கூட! இரண்டு பேரும் ஜோடி போட்டுவிட்டால், அதன் பிறகு எதிர் அணிக்கு வெற்றி என்பது சிம்ம சொப்பனம் ஆகிவிடும்.
முயன்று அவன் பிடியிலிருந்து தன் இதழை பிரித்துக் கொண்ட அப்சரா, “அண்ணா, இன்னிக்கி ஒரு நாள் நான் சூர்யாவோட டைம் ஸ்பெண்ட் பண்ண போறேன். உனக்கு எதும் வேலை இருந்தா கிளம்பிக்க…” என்றிட, இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவளை முறைத்தான் சுஜித்.
“என்ன விளையாடுறியா? அப்பாவுக்கு என்னால பதில் சொல்ல முடியாது. அவரப் பத்தி தெரியும்தான?” என்றதும், அப்சராவின் இதழ்கள் இறுக்கமாக மூடிக்கொண்டன.
“அவருட்ட நான் சொல்லிக்கிறேன். நீ கிளம்புடா!” என்று சூர்யா சொல்லவும், அவன் காதலிக்கு கால்கள் தரையிலேயே இல்லை.
“என்னவோ போங்க…”
‘நான் ஒருத்தி இருப்பது, இங்கு இருப்பவர்கள் யார் கண்ணுக்கும் தெரியவே இல்லையா?’ என்று யோசித்த பூர்ணிமா, “சூர்யா… அபி…” என்றபடி முன்னால் வந்தாள்.
அடுத்த நொடி அவள் மேல் ஒரு அனல் பார்வையை வீசினான். அடுத்தொரு வார்த்தை பேசினால் நிச்சயம் அறை விழும் என்று புரிந்து கொண்டவள், தன்னிச்சையாக மீண்டும் பின்னால் போனாள்.
அப்சரா, “பேபி, யார் இது?”
அவனோ சட்டை பட்டனை கழற்றிக் கொண்டே, “அவசியம் தெரியணுமா?” என்றான்.
இதழை நாவால் வருடிய அப்சரா, “லீவ் இட்… வா, நாம ஆரம்பிக்கலாம்!” என அவனை இழுத்துக் கொண்டு, தனது அறைக்குள் சென்று அடைந்தாள்.
சுஜித் அது எதையும் கண்டும் காணாமல் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான்.
அபி எங்கே என்ன செய்கிறாளோ?! என்று நினைக்க நினைக்க பூர்ணிக்கு அழுகையாக வந்தது.
நின்ற இடத்திலேயே அமர்ந்து வாய்மூடி அழுதிருந்தவளை, சுஜித் விழிகள் தேன் பூவினைக் கண்ட வண்டாய் மொய்த்தது.
🪷🪷🪷🪷🪷
ஏற்கனவே அந்த ஜீவன், பாதி உசுரா இருக்கு.
அவகிட்ட இந்த சுஜித் பய என்ன வம்பிழுக்க போறானோ?!
சூர்யா வேற வில்லன் வேலைய மட்டுமே பார்த்துட்டு இருக்கான்…
அடுத்து என்ன நடக்குமோ!!!
