அத்தியாயம் 4
“பிரதிக்ஷாவை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன்! அது வர பொறுமையாயிருன்னு மனிஷா கிட்ட சொல்லு!” என்று சரஸ்வதி சொல்ல அதிர்ந்தான் விதுரன்.
“அம்மா என்ன சொல்றீங்க?” என்று விதுரன் அதிர்ச்சியாக கேட்க, சரஸ்வதி சிரித்துக்கொண்டே விதுரனை பார்த்தார்.
விதுரன் சரஸ்வதியை பார்க்க சரஸ்வதி, “இந்த கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு உனக்கு தெரியும்! ஒருவேளை அந்த பொண்ணு ஏதாவது திட்டம் போட்டு உன்னைய கல்யாணம் பண்ணி இருந்தா? அந்தப் பொண்ணோட நீ எப்படி வாழ முடியும்! உன் மனசுல மனிஷா தான் இருக்கிறானா? எப்படி பிரதிக்ஷாவுடன் சேர்ந்து வாழ முடியும்! அதனால அதான் சொன்னேன்” என்று கூறினார் சரஸ்வதி.
சரஸ்வதி கூறியதை கேட்டதும் விதுரன் ஒன்றும் புரியாமல் சரஸ்வதியை பார்க்க,
“எங்களுக்கு உன்னோட சந்தோசம் தான் முக்கியம். உனக்கு அந்த பொண்ண புடிச்சிருந்தா அந்த பொண்ணோட சேர்ந்து வாழு! ஒருவேளை அந்த பொண்ணோட உன்னால வாழ முடியாதுன்னு உனக்கு தோணுச்சுன்னா டைவர்ஸ் கொடுத்துவிடு, எதையும் அதிகமா போட்டு யோசிச்சு உன்னைய குழப்பிக்கிறாத! இந்தக் கல்யாணம் உன்னோட பேர பாதிக்க கூடாதுன்னு தான் நான் உன்னய வற்புறுத்தி இந்த கல்யாணத்தை பண்ணி வச்சேன். உன்னோட பேரே பாதிக்க கூடாதுன்னு நினைக்கிற நான் எப்படி உன்னோட வாழ்க்கை பாதிக்கனும்னு நினைப்பேன்! நீ சந்தோசமா வாழ்றது தான் எனக்கு சந்தோசம்! டைவர்ஸ் பண்ணுனா நீ சந்தோஷமா வாழுவேன்னு நினைச்சா நீ பண்ணலாம்! உன்னைய எந்த விதத்திலும் நான் தடுக்க மாட்டேன் ” என்று கூறினார் சரஸ்வதி.
சரஸ்வதி சொல்லியதை கேட்டதும், ” சரஸ்வதியை இறுக்கி கட்டிப்பிடித்தான்! நான் கூட நீங்களும் என்னைய புரிஞ்சுக்கலைன்னு வருத்தப்பட்டேன். நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் தாலியை கட்டினேன். நீங்க கூட நம்பலைன்னு உடைஞ்சு போயிட்டேன், நீங்க இப்ப சொன்னதுக்கு அப்புறம் தான் எதுக்காக எனக்கு இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சீங்கன்னு புரிஞ்சுகிட்டேன். ஐ லவ் யூ அம்மா!” என்று கண் கலங்கி சரஸ்வதியை அணைத்துக் கொள்ள விதுரனின் தலையை ஆதுரமாக தடவினார் சரஸ்வதி.
“அம்மா எனக்கு அவளைப் பார்த்தாலே புடிக்கல! இத்தனை பேர் முன்னாடி என்னை அசிங்கப்படுத்தி இருக்கா! அதை நினைக்க நினைக்க கோபம் வருது. அதனால அவளோட நான் வாழுவேன்னு நீங்க கனவுல கூட நினைச்சு பாக்காதீங்க?” என்று விதுரன் சொல்ல, விதுரா உன்னோட மனநிலை புரியுது ஆனால் வேற வழி இல்ல! உன்னோட பேர் கெட்டுட கூடாதுன்னு தான் இந்த கல்யாணம் பண்ணி இருக்கோம். நீ தாலியை கட்டிட்டு அந்த பொண்ண இங்கேயே விட்டுட்டு போனால் அது பெரிய கான்ரவசிய கிரியேட் பண்ணும். அதுக்கு நீ தாலி கட்டாமையே இருந்திருக்கலாம், அதனால கொஞ்ச நாள் பொறுமையா இரு. எடுத்தோம் முடிச்சோம்னு செய்ற விஷயம் கிடையாது இது! அந்தப் பொண்ணு மேல தான் எல்லா தப்பும்னு நம்ம நிரூபிச்சு அந்த பொண்ண லீகலா வீட்டுக்கு அனுப்புவோம் அதுவரை கொஞ்சம் அமைதியா இரு என்று சரஸ்வதி கூறினார்.
“சரிமா நீங்க சொல்றதுனால நான் அமைதியா இருக்கேன்” என்று கூறினான் விதுரன். சரஸ்வதி புன்னகைத்துக் கொண்டே விதுரனை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தம் வைத்தார்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க காரின் அருகே வந்தான் ரஞ்சித்.
தன்னுடைய தாய் விதுரனை அணைத்து முத்தம் கொடுப்பதை சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் கோபத்தாலும் வருத்தத்தாலும் சிவந்து அவனின் உள் மனம் ரணமானது.
ரஞ்சித்தை பார்த்த விதுரன் காரை விட்டு இறங்கி , ” சாரி ரஞ்சித் என்னை மன்னிச்சிரு! நான் எந்த தப்பும் பண்ணல! என்று கண்கலங்கி ரஞ்சித்தை கட்டிப்பிடித்தான் விதுரன்.
சில வினாடிகள் அப்படியே எதையோ யோசித்துக் கொண்டு நின்றான் ரஞ்சித், “விடு மச்சான்! உன்னை பத்தி எனக்கு தெரியும்! திடீர்னு நம்ம எதிர்பார்க்காதது நடந்ததனால கொஞ்சம் வருத்தம் எனக்கு அவ்வளவுதான்! போகப் போக நானும் சரியாயிடுவேன். ஆனால் எனக்கென்னமோ அந்த பொண்ணு ஏதோ திட்டத்தோட தான் உன்னைய கல்யாணம் பண்ணி இருக்குன்னு தோணுது, அதனால கொஞ்சம் கவனமா இரு!” என்று ரஞ்சித் விதுரனை எச்சரிக்க பக்கத்தில் நின்ற சரஸ்வதி ரஞ்சித்தை பார்த்தார்.
தாயின் முக பாவத்தை அறிந்தவன், தாய்க்கு மட்டும் தெரியும் வண்ணம் வன்மமான புன்னகையை உதிர்த்தான்.
இன்னும் கொஞ்ச நேரம் ரஞ்சித் விதுரனிடம் பேசினால் விதுரனின் மனதில் தேவையில்லாத எண்ணத்தை புகுத்தி விடுவான் என்று சரஸ்வதிக்கு தோன்ற அவர்கள் இருவரையும் இடைநிறுத்தி,
“நல்ல நேரம் முடிகிறதுகுள்ள நம்ம சென்னை போய் ஆகணும்! அதுக்கு இப்போவே இங்க இருந்து கிளம்பனும். நான் அந்த பொண்ண வர சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் இந்த கார்ல வாங்க! நாங்க எல்லாரும் உங்களுக்கு பின்னாடி வேற கார்கள்ல வாரோம் என்று சரஸ்வதி சொல்ல சரி என்பதை போல் தலையசைத்தான் விதுரன்.
மகாலுக்குள் சென்ற சரஸ்வதி அங்கு லட்சுமியுடனும் ரம்யாவிடம் பேசிக் கொண்டிருந்த பிரதிக்ஷாவை நோக்கி,
“எல்லாம் பேசிட்டீங்களா? இப்போதைக்கு நேரம் இல்ல! பொண்ணு மாப்பிள்ளைய நல்ல நேரம் முடியறதுக்கு முன்னாடி அவங்க வீட்டுல கொண்டு போய் விடனும்! அதனால சீக்கிரம் கிளம்பனும்! எல்லாரும் வந்து கார்ல ஏறுங்க!” என்று சொல்ல,
பிரதிக்ஷாவின் சித்தப்பா, சித்தி, லட்சுமி, ரம்யா என அனைவரும் பிரதிக்ஷாவை அழைத்துக் கொண்டு மஹாலின் வெளியே வந்தனர்.
ஆனால், ரஞ்சித்தின் தந்தை மட்டும் அங்கு வரவில்லை என்று பிடிவாதமாக கூறி விட்டார்.
அவரிடம் மட்டும் சரஸ்வதி எதையோ சொல்ல இருவருக்கும் இடையே ஏதோ காரசாரமான விவாதம் நடந்தது போல் அங்கு நின்ற அனைவருக்கும் தெரிந்தது!
சில வினாடிகளில் ரஞ்சித்தின் அப்பாவும் அவர்களுடன் வர சம்மதித்து விட்டார்.
சரஸ்வதி பிரதிக்ஷாவின் அருகில் வந்து “கார்ல ஏறி உட்காருமா?” என்று சொல்ல, பிரதிக்ஷா தயங்கி நிற்க விதுரன் அவளை முறைத்தான்.
பிரதிக்ஷாவின் தயக்கத்தை கண்ட சரஸ்வதி ” கார்ல ஏறி உட்காருமா? இதுக்குத்தானே ஆசைப்பட்டு தாலி கட்ட வச்ச! இப்ப இதுக்கே
தடுமாறுனா எப்படி? ” என்று சரஸ்வதி கேட்க, சரஸ்வதியை அதிர்ச்சியாக பார்த்தாள் பிரதிக்ஷா.
பிரதிக்ஷாவின் உணர்வுகளை புரிந்து கொண்ட சரஸ்வதி, பிரதிக்ஷாவை பார்த்து மெல்லமாய் புன்னகைத்தார்.
பிரதிக்ஷாவின் மனதில் சரஸ்வதியின் புன்னகை ஆயிரம் கேள்விகளை விதைத்தது!
விதைக்கப்பட்ட கேள்விகளுக்கு விடை அறியும் முற்படும் நேரம் தற்போது இல்லை என்பதை புரிந்து கொண்டு மெல்லமாய் கதவை திறந்து விதுரனின் அருகில் அமர்ந்தாள்.
விதுரனின் அருகில் அவன் கட்டிய தாலியோடு பிரதிக்ஷா அமரும் போது அவளுடைய மனம் துள்ளி குதித்தது. எதையோ சாதித்து விட்ட எண்ணம் தோன்ற அதை நினைத்து சந்தோஷப்படுவதற்குள் விதுரனின் பக்கத்தில் பிரதிக்ஷா அமரும்போது அவளின் சேலை விதுரனின் மேல் லேசாக பட அருவருப்பில் சற்று நகர்ந்து போனான்.
ஆடவனின் விலகல் அவளுக்குள் ஆயிரம் வலிகளை தோற்றுவித்தது!!
ஆனாலும், விதுரன் இப்படி நடந்து கொள்வது தன்னால்தான் என்று தோன்றவே,
‘இன்னைக்கு என்கிட்ட இருந்து நீங்க விலகலாம்! ஆனால் சீக்கிரத்துல நீங்களே என் பக்கத்துல உக்காந்து என்னைய கட்டி அணைச்சு காதலா பாப்பிங்க! அந்த நாள் சீக்கிரம் வரும் ” என்று அவளின் உள் மனத்தில் நினைத்தாள்.
இங்கு அனைவரும் காரில் ஏற தம்பதியரின் காருக்கு முன்னால் இரு கார்களில் விதுரனின் குடும்பமும் பிரதிக்ஷாவின் குடும்பமும்
விதுரனின் காருக்கு பின்னால் முக்கியமான உறவினர்களும் அடங்கிய இரு கார்களும் சென்னையை நோக்கி விரைந்தது.
காரில் ஏறியதில் இருந்து ஒருமுறை கூட பிரதிக்ஷாவை தப்பி தவறி கூட விதுரனின் கண்கள் பார்க்கவில்லை!
ஆனால் பிரதிக்ஷா விதுரனை தவிர வேறு எதையும் யாரையும் பார்க்கவில்லை.
பயணம் செய்யும்போது காரின் ஜன்னலை திறந்து அங்கு உள்ள காற்றையும் பசுமைகளின் அழகையும் ரசித்துக்கொண்டு வருவதை அலாதி இன்பம் என நினைக்கும் பிரதிக்ஷா, இன்று அதையெல்லாம் விட்டுவிட்டு தன் மணவாளனையை பார்ப்பதையே கடமை என நினைத்து வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரதிக்ஷாவின் பார்வை தன்னை ஆக்ரமித்து கொண்டிருப்பது விதுரனின் மனதில் எரிச்சலை விதைத்தது!! ஏற்கனவே கோபத்தில் இருந்தவனை இன்னும் கோபமடைய செய்து கொண்டிருந்தது. இது எதையும் அறியாத பிரதிக்ஷா
விதுரனிடம் ஏதாவது பேசுவோமா? என்று நினைத்து ஏதோ சொல்ல வர,
பிரதிக்ஷா எண்ணத்தை புரிந்து கொண்ட விதுரன் “டிரைவர் கார நிறுத்துங்க?” என்று சொல்ல டிரைவரும் காரை நிறுத்தினார்.
‘ஏன் இவரு கார நிறுத்த சொல்றாரு’ என்று பிரதிக்ஷா நினைத்துக் கொண்டு விதுரனை பார்க்க, விதுரன் காரின் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.
எங்கு செல்கிறான் என்று பிரதிக்ஷா பார்த்துக் கொண்டிருக்க, டிரைவர் அமர்ந்திருந்த காரின் கண்ணாடியை லேசாக தட்ட, டிரைவர் காரின் கண்ணாடியை இறக்கி விட்டு விதுரனை பார்த்தார்.
“நீங்க பக்கத்து சீட்டில் உட்காருங்க நான் ட்ரைவ் பண்றேன்” என்று கூறினான் விதுரன்.
“சார் நீங்க…..” என்று டிரைவர் தடுமாற, “பரவாயில்ல, அங்க உட்கார்ந்திருக்கிறது அருவருப்பா இருக்கு! அதனால இங்க உக்காந்து நானே டிரைவ் பண்றேன்” என்று பிரதிக்ஷாவிற்கு கேட்க வேண்டும் என்று விதுரன் டிரைவரிடம் சத்தமாக சொல்ல உடைந்து போனாள் பிரதிக்ஷா.
சில வினாடிகளில் ‘சீக்கிரத்துல இது மாறும் ‘ என்று தன்னைத்தானே தேற்றி விட்டாள்.
‘பொய் சொல்லி திருமணம் செய்யும்போது இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க வேண்டியது வரும் என்பதை அறிந்த பின்தானே இப்படி ஒரு முடிவு எடுத்திருந்தாள்! அதனால் தன்னை தேற்றுவது அவளுக்கு சுலபமாகி போனது.
சில மணி நேரங்கள் பயணத்திற்கு பிறகு அனைவரும் சென்னையில் உள்ள விதுரனின் வீட்டை வந்து அடைந்தனர்!!
பல கோடி சொத்துக்கு அதிபதி விதுரன் அவன் வீடு எப்படி இருக்கும் என்று வர்ணிக்க வேண்டுமா என்ன?
அழகு அழகு செடிகளும் அங்கங்கே காட்சியளிக்க ரோஜா பூக்களும் பாரிஜாதங்களும், மல்லிகை பூக்களும் என பலவிதமான வண்ண பூக்களும் வீட்டின் முன்னால் அழகு சேர்க்க, ஆடம்பரமா இருந்தது அந்த பங்களா!
பிரதிக்ஷாவின் குடும்பத்தினர் வீட்டை வியந்து பார்க்க, பிரதிக்ஷாவிற்கு வீட்டைப் பற்றிய சிந்தனை எதுவும் இல்லை! அவளின் மனம் குடிசையில் இருந்தால் கூட விதுரனின் அருகில் அவனுடைய முழு காதலையும் ரசித்து வாழ வேண்டும் என்பதே அவளின் எண்ணமாய் இருந்து!!
ஒன்றன்பின்னால் ஒன்றாக கார்கள் நிற்க அந்தக் கார்களில் அனைவரும் இறங்கினர்.
விதுரனும் காரில் இருந்து இறங்க பிரதிக்ஷாவும் காரில் இருந்து இறங்கினாள். விதுரன் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கி வருவதை பார்த்த சரஸ்வதிக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து போனது!!
இருவருக்கும் இடையில் இந்த இடைவெளி இருக்கக் கூடாது என்று சரஸ்வதி நினைத்துக் கொண்டு “விதுரா, பிரதிக்ஷா பக்கத்துல போய் நில்லு!” என்று கொஞ்சம் கோபமாக சொல்ல,
விதுரனோ சரஸ்வதியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வேறு வழியில்லாமல் லேசாக நெருங்கி நின்றான்.
இருவரும் உள்ளே நுழைய போக சரஸ்வதியை போன்றே அழகும் கம்பீரமும் பொறுமையும் நிறைந்த பெண்ணொருத்தி உள்ளே இருந்து ஆரத்தி தட்டோடு வெளியே வந்தார்.
அவரின் பக்கத்திலேயே இருவது வயதை நெருங்கிய இளம் பெண்ணொருத்தி புன்னகையோடு வந்து நின்றாள்.
பிரதிக்ஷாவை பார்க்கவும், அந்தப் பெண்ணின் முகத்தில் தோன்றிய புன்னகைக்கு அளவே இல்லை!
ஓடிச் சென்று அண்ணி என்று பிரதிக்ஷாவை கட்டி பிடிக்க, பிரதிக்ஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை!!
அவர்களின் திருமணம் எப்படி நடந்தது என்பதை எல்லோரும் அறிவார்கள். தன்மகனின் மேல் குற்றச்சாட்டை வைத்து பிரதிக்ஷா திருமணம் செய்ததால் கோபத்தில் கொந்தளிப்பார்கள் கடுமையாக திட்டுவார்கள், என்று பிரதிக்ஷா நினைத்து கொண்டிருக்க அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் வித்தியாசமாய் தோன்றியது பிரதிக்ஷாவிற்கு!!
“ரேணு விடு, அண்ணி வீட்டுக்குள்ள வந்ததுக்கப்புறம் உன்னோட கொஞ்சல் மிஞ்சல் எல்லாத்தையும் வச்சுக்க! இப்போதைக்கு ஆரத்தி எடு” என்று சொல்லி ரேணுவின் கையில் ஆரத்தி தட்டை கொடுத்தார் அம்பிகா!
“ஆரத்தி எல்லாம் ஒன்னும் வேண்டாம்!” என்று விதுரன் கோபமாக சொல்ல, சரஸ்வதி ” விதுரா அமைதியா இரு” என்று சொல்ல வேறு வழி இல்லாமல் பொறுமையாக அப்படியே நின்றான் விதுரன்.
இருவருக்கும் ரேணு ஆரத்தி எடுக்க திடீரென்று ரேணுவின் கையில் வைத்திருந்த ஆரத்தி தட்டு காற்றில் பறந்து ‘ ட்டொம்’ என்ற சத்தத்துடன் கீழே விழுந்ததது!!.
