இதழ் – 2

தன்னருகில் நெருங்கி வந்த ராகவனைப் பார்த்து, அருவியின் இதயம் வேகமாகத் துடித்தது. மெல்ல அவளை நெருங்கி வந்தான். அவள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

 

அவளை நெருங்கி வந்தவன், “அருவி” என அவள் காதில் மென்மையாக அழைக்க, அவன் குரலில் அவள் தேகம் சிலிர்த்தது. இது அவளுக்கு புது உணர்வாக இருந்தது. இப்படி ஒரு உணர்வை அவள் இதுவரை உணர்ந்தது இல்லை.

 

அவளை இன்னும் நெருங்கி வந்தான். தன் சேலையை இறுகப் பற்றிக்கொண்டாள்.

 

“அருவி” என அழைத்தான்.

 

“ம்” என்றாள்.

 

“கண்ணைத் திற.”

 

“ம்ஹும்.”

 

“ஏன்?”

 

“மாட்டேன்.”

 

“கண்ணைத் திறந்து, என்னை ஒரு நிமிஷம் பாரு.”

 

மெல்ல தன் படபடக்கும் பட்டாம்பூச்சி விழிகளுக்கு விடுதலை கொடுத்து, தன் விழிகளைத் திறந்து பார்த்தாள். மிக நெருக்கத்தில் அவன் முகத்தைப் பார்த்தவள் பயந்து விலகியவள் கீழே விழப்போக, அவன் அவளை இடையோடு சேர்த்துத் தாங்கிப் பிடித்துக்கொண்டான் ராகவன். அவன் மீது மோதி நின்றாள் பெண்ணவள்.

 

“அருவி” என்றான்.

 

அவள் பேரைச் சொல்லி அவன் அழைத்தது அவளுக்கு காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது.

 

“ம்” என்றாள்.

 

“இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க.”

 

“பொய் சொல்லாதீங்க.”

 

“நான் நெஜமாதான் சொல்றேன்.”

 

“எல்லாரும் இன்னிக்கி, இந்தப் பொய்தான் என்கிட்ட நிறைய தடவை சொல்றீங்க” என்றாள் சிணுங்கலுடன்.

 

“அப்படி யாரு சொன்னது?”

 

“என் பிரெண்ட்ஸ் எல்லாம் அப்படித்தான் சொன்னாங்க.”

 

“அப்படியா!”

 

“ஆமா!” என்றாள்.

 

“அவங்க சொன்னதுக்கும் நான் சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.”

 

“என்ன வித்தியாசம்?”

 

“அவங்க உன் மேல இருக்கப் பொறாமையில சொல்றாங்க.”

 

“சரி, அப்போ நீங்க?”

 

“என்ன உன் மேல இருக்க ஆசையில சொல்றேன்.”

 

அவன் கூறியதைக் கேட்டவள் அழகாகச் சிரிக்க, அந்தச் சிரிப்பில் ஒரு நிமிடம் சொக்கித் தன்னை மறந்து நின்றான் ராகவன்.

 

“எதுக்கு என்ன அப்படிப் பார்க்குறீங்க?”

 

“உன் அழகில் நான் என்னையே மறந்துட்டேன் தெரியுமா!”

 

“திரும்பத் திரும்ப பொய் சொல்லாதீங்க.”

 

“எனக்கு பொய் சொல்லத் தெரியாது அருவி.”

 

“அப்படியா! சரி” என்றவள், “ஸ், ஆ” என்றாள்.

 

“என்னாச்சு அருவி?”

 

“இந்த நகை, அலங்காரம் எல்லாம் எனக்கு ரொம்பத் தொந்தரவா இருக்குங்க.”

 

“அப்படியா! உனக்குத் தொந்தரவு பண்ற விஷயத்தை எடுத்துக்கலாமா?”

 

“சரி” என அருவி தலையாட்டியவள், “மாமா” என்றாள்.

 

“என்ன?”

 

“எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.”

 

“உனக்கு ஹெல்ப் பண்ணதானே நான் இருக்கேன்” என்றான் குஷியாக.

 

“மாமா.”

 

“ம்” என்றான்.

 

“என் மேல கோவமா?” என்ன கேட்டாள் அப்பாவியாக.

 

“எதுக்கு அப்டிக் கேட்குற?”

 

“நான் உங்களை வேலை செய்யச் சொன்னதுக்கு.”

 

அவள் கன்னத்தைக் கைகளில் தாங்கியவன், “உனக்காக எதையும் செய்வேன்” என்றான்.

 

“நிஜமாவா!!”

 

“ஆமா! பொண்டாட்டி, இப்ப முதலில் எல்லாத்தையும் கழட்டிடலாம்” என்றவன் அவள் நகைகள் ஒவ்வொன்றாகக் கழட்டினான்.

 

அவள் கூச்சத்தில் நெளிய, “அசையாம இரு அருவி, இல்லேன்னா உனக்குக் காயம் ஆகும்” என்றவன், தலையில் இருந்த ஹேர் பின்களைக் கழட்டி மல்லிகைப் பூவை மட்டும் அவள் தலையில் வைக்க.

 

“மாமா.”

 

“என்னமா?” எனக் கேட்டான் அவளைப் போல்.

 

“பூ மட்டும் எதுக்கு வச்சீங்க?”

 

“ஏன்? பொண்ணுங்க பூ வச்சா ரொம்ப அழகா இருக்கும், அதுவும் நீ வச்ச பிறகுதான் இந்த மல்லிகைப் பூ ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.”

 

அவள் அவனையே பார்க்க.

 

“என்ன அருவி அமைதியாகிட்ட?”

 

“எனக்கும் பூவுனா பிடிக்கும், ஆனா இன்னிக்கி வேணாம்.”

 

“இன்னிக்கிதான் நீ கண்டிப்பா பூ வச்சிக்கணும், ஆமா! இன்னிக்கி ஏன் வேண்டாம்னு சொல்ற?”

 

“டயர்டா இருக்கு அதான் மாமா.”

 

“இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள டயர்டா.”

 

“நீங்க என்ன சொல்றீங்க மாமா.”

 

“ஒண்ணுமில்ல” என்றவன், அவள் சேலையில் கை வைக்க.

 

“என்ன பண்றீங்க மாமா?”

 

மந்தகாசமாகச் சிரித்தவன், “சேலையை மாத்தணும்ல” எனக் கேட்க.

 

“ஆமா!” எனத் தலையாட்டினாள்.

 

“அப்போ சேலையைக் கழட்டணும்ல” எனக் கூற.

 

“கழட்டணும் தான், ஆனா இது வேணாம்” என்றாள்.

 

“அதெல்லாம் முடியாது இது போங்காட்டம்.”

 

“எது போங்காட்டம்?” என அருவி கேட்க.

 

“நகை பூவெல்லாம் நான் தானே கழட்டிவிட்டேன்.”

 

“ஆமா!”

 

“அப்போ சேலையும் நான் தான் மாத்திவிடுவேன்” என அடம் பிடித்தான்.

 

“அச்சோ! வேணாம்.”

 

“என்ன வேணாம்?”

 

“நீங்க இதெல்லாம் செய்யவே கூடாது.”

 

“ஏன் நான் செய்யக்கூடாது?”

 

“சொன்னா கேளுங்க.”

 

அவள் வெட்கத்தை ரசித்த ராகவன், “அப்போ காரணத்தைச் சொல்லு” எனக் கேட்டு அடம் பிடிக்க.

 

அவள் காரணம் சொல்லத் தெரியாமல் தவித்து அமைதியாகத் தலை குனிந்தபடி இருக்க, மெல்ல அவள் நாடியில் ஒற்றை விரலால் நிமிர்த்தினான்.

 

அவள் மலங்க மலங்க அவனைப் பார்க்க.

 

“என்ன அமைதியாகிட்ட?” என ராகவன் புருவம் உயர்த்திக் கேட்க.

 

“அது வந்து, நீங்க என் கிட்ட வந்தாலே” என அவள் நிறுத்த.

 

“வந்தாலே!!” என அவன் இழுக்க.

 

“எனக்கு மனசெல்லாம் படபடன்னு அடிக்குது.”

 

“அப்புறம்!”

 

“எனக்கு மனசுக்குள்ள ஏதோ பண்ணுது.”

 

“அப்புறம்!”

 

“உங்கள என்னால பாக்கவே முடியல, உங்களுக்கு என்னைப் பார்த்தா அப்படி இல்லையா?” எனக் கேட்க.

 

“யார் சொன்ன இல்லன்னு?”

 

“எனக்கு உன்னைப் பார்த்தா நீ சொன்னா எல்லாமே தோணும்” என்றவன் இப்போது வெட்கப்பட்டுச் சிரிக்க.

 

அவளும் இப்பொழுது தன்னை மறந்துச் சிரித்தாள்.

 

“இப்டியே சிரிச்சிட்டு இருந்தா எப்படி? டைம் ஆச்சு! நாம எப்போ ஆரம்பிக்கிறது?” என அவளை ஆழமாகப் பார்த்தபடி கேட்டான்.

 

“ஆமாங்க டைம் ஆகுது, ஆமா! நீங்க எதை ஆரம்பிக்கிறதுனு கேட்டீங்க?”

 

“அதுவா! அது என்னனு இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சிடும் டி, என் அல்வா பொண்டாட்டி” என்றான் அவள் கன்னத்தைக் கிள்ளியபடி.

 

“மாமா, உங்களுக்கு ஒழுங்கா கொஞ்ச கூடத் தெரியல.”

 

“ஏன் அப்டிச் சொல்ற?” என ராகவன் கேட்க.

 

“சினிமாவில் நான் பார்த்திருக்கேன், அதில் புருஷன் பொண்டாட்டியை ‘என் ஆசை பொண்டாட்டி’ன்னு தான் கொஞ்சுவாங்க, ஆனா நீங்க அல்வா பொண்டாட்டின்னு கொஞ்சுறீங்க” என வெகுளியாகக் கேட்டாள் அருவி.

 

“என் பொண்டாட்டி எனக்கு அல்வா தான்” என்றவன், “இப்ப டிரஸ் மாத்தலாமா?” எனக் கேட்க…

 

“மாத்தலாம், ஆனா!” என அவள் கூறும் முன்.

 

“சரி, நீ ரொம்பத் தயங்குற அதுக்காக ஒரு ஐடியா பண்ணலாமா?”

 

“என்ன?”

 

“நம்ம ரெண்டு பேரும் கண்ணை முடிக்கலாம்.”

 

“கண்ணு மூடிட்டு எப்படிச் சேலையைக் கழட்டுவீங்க?” என அருவி கேட்க.

 

“அதாவது நான் கண்ண மூடிகிட்டு உனக்கு டிரஸ் மாத்தி விடுறேன், நீ உன் சேலையில எங்கெங்க பின் குத்தியிருக்கன்னு எனக்குச் சொல்லு.”

 

“சரிங்க” என்றாள்.

 

“நான் தப்புத் தப்பா எங்கயாவது கை வெச்சிட்டா நீ சொல்லணும்.”

 

“தப்பானா?” என அவள் கேட்க.

 

“அது உனக்கே புரியும்” என ராகவன் கூற.

 

“மாமா நான் சேலையில நிறைய இடத்துல பின் குத்தி வச்சிருக்கேனே.”

 

“அதான் நீ ஒவ்வொரு இடமா சொல்லு” என்றவன் அவள் தோள் பட்டையில் கை வைக்க.

 

அவள் நகர.

 

“ஆசையாம இரு அருவி, இல்லேன்னா பின் குத்திடும்” என்றான்.

 

“மாமா.”

 

“உங்க கை ஜில்லுனு இருக்கு.”

 

“இன்னும் கொஞ்ச நேரத்தில் சூடாகிடும்.”

 

“எப்படி?”

 

“அது அப்டிதான், சரி அடுத்து எங்க?” எனக் கேட்டான்.

 

“இடுப்பில்” என்றாள்.

 

அவள் கையைப் பிடித்துக் கீழே இறங்கி வந்தவன் அவள் இடுப்பில் கை வைக்க.

 

அவள் தன்னை மறந்து அவன் தோளில் கை வைக்க.

 

தனக்குள் சிரித்துக்கொண்டான் அவளது கள்வன். அவள் இடுப்பில் இருந்த பின் ஊசியை மெதுவாகக் கழட்ட.

 

அவளுக்குள் ஏதோ செய்ய, தன் உதட்டைக் கடித்துக்கொண்டாள் அருவி.

 

அவளது இடுப்பில் அவன் கை பட்டதும் அவனுக்குள்ளும் மின்சாரம் பாய்ந்ததை உணர்ந்தான் ராகவன். அவன் அவள் இடுப்பை மெல்ல வருட.

 

“ஸ் ஆ” என்றாள்.

 

“என்னாச்சு அருவி?”

 

“ஒண்ணுமில்ல.”

 

தனக்குள் தோன்றிய உணர்வில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் பாடும் பெரும்பாடாக இருந்தது. அவனால் கையை அவள் இடுப்பில் இருந்து எடுக்க முடியவில்லை.

 

“அருவி” என அழைத்தான்.

 

அவள் பேசவில்லை.

 

“அருவி.”

 

“ம்.”

 

“பின் குத்திடுச்சா?”

 

“இல்லை” என்றாள்.

 

சிரமப்பட்டுத் தன் கையை எடுத்தவன், “அடுத்து என?” கேட்க.

 

அவள் மீண்டும் அமைதியாக இருக்க.

 

“அடுத்து எங்கன்னு சொல்லு அருவி.”

 

“உங்க காதைக் காட்டுங்க” என்றாள்.

 

“எதுக்கு?”

 

“உங்க காதைக் காட்டுங்க அப்போதான் நான் சொல்லுவேன்.”

 

“சரி” என்றவன் அவளருகில் சென்று காதைக் காட்ட.

 

அவள் கூறியதைக் கேட்டு தனக்குள் மந்தகாசமாகச் சிரித்தவன், மெதுவாக ஒவ்வொரு பின் ஊசியையும் கழட்டியவன் சிரிக்க.

 

“இப்ப எதுக்கு சிரிக்கறீங்க?”

 

“ஏன்டி? சேலையில பின் குத்துவாங்க கேள்விப்பட்டிருக்கேன், நீ என்னடானா பின் ல சேலையைக் குத்தி வச்சிருக்க?”

 

“அதுவா! எனக்குச் சேலை கட்டத் தெரியாது, காட்டினாலும் நிக்காது அதான்” என்றாள் அருவி.

 

“அப்போ நான் பார்க்கும் போதெல்லாம் சேலை கட்டி இருந்த…”

 

“அது பக்கத்து வீட்டு ராதா அக்கா கட்டி விட்டாங்க.”

 

“அப்போ உனக்குச் சேலை கட்டத் தெரியாதா?”

 

“ஆமா, எனக்குத் தாவணி கட்ட, என் அப்பா சட்டை போட்டு பாவாடை கட்டதான் பிடிக்கும், இனி நான் உங்க சட்டையைப் போட்டுக்கறேன்.”

 

“வேணாம்” என்றான்.

 

“ஏன்? நான் உங்க சட்டையைப் போடக் கூடாது?”

 

“என்னையே நீ ஆடையா உடுத்திக்கோடி.”

 

“எப்படி?”

 

“இப்படித்தான்” என அவளைக் கட்டிக்கொண்டவன் அவளை விட்டு விலகி,

 

“கவலையே படாத நான் உனக்குச் சேலை கட்டக் கத்துத் தரேன்.”

 

“ம்” என்றாள் குஷியாக.

 

பேசிக்கொண்டே அவள் ஆடைகளைக் கலைந்தான்.

 

அவனைத் தடுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல், அவன் செய்கையில் பாகாய் உருகிக்கொண்டிருந்தாள் பெண்ணவள். அவனை இறுக்கமாகக் கட்டிக்கொள்ள.

 

“அருவி” என்றான்.

 

அவளிடம் எந்தச் சத்தமும் வரவில்லை.

 

“அருவி.”

 

அவன் செய்கையில் அவள் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை அவனிடம் இழந்துகொண்டிருந்தாள் அருவி.

 

மெத்தையில் அவளைச் சாய்த்தான். அவனுக்கும் ஏதேதோ உணர்வு தோன்றத் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினான் ஆணவன்.

 

“அருவி.”

 

“என்ன மாமா” என்றாள் மெதுவாக.

 

“உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?”

 

“ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு மாமா.”

 

“எனக்கும் தான் உன்னை ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ டி” என்றான்.

 

“ஐ லவ் யூ மாமா.”

 

“இன்னைக்கு நம்ம வாழ்க்கையில மறக்க முடியாத நாள்.”

 

“ஆமா மாமா.”

 

“அதை இன்னும் மறக்க முடியாத நாளா ஆக்கணும்னு நான் நினைக்கிறேன். உனக்கு ஓகேவா?”

 

“ச்சீ போங்க மாமா” என வெட்கப்பட்டாள்.

 

“மாமா.”

 

“என்ன?”

 

“என் மேல எப்பவும் இதே பாசத்தோடு இருப்பீங்களா!!”

 

“கண்டிப்பா” என்றவன் தன் ஆடைகளைக் கலைந்து அவளை இறுகக் கட்டிக்கொண்டான்.

 

இப்பொழுது கதவு வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, படக்கென கண்களைத் திறந்து பார்த்த அருவி பலமாக அதிர்ந்து நின்றாள்.

 ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

😁 எதுக்காகனு தெரியலையே, தெரிஞ்சுக்க நாளைக்கு எபி மிஸ் பண்ணாம படிங்க.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,352 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page