தற்கொலை தான் முடிவு என்று நினைக்கிறாயா?..
அவங்க சொன்னது உண்மையாக்கிடாத; நீயும் நானும் எந்த தப்பும் பண்ணல, அது எனக்கும் உனக்கும் தெரிஞ்சா போதும். அடுத்தவர்களுக்காக நீ எதுக்கு வாழற?… உனக்கான வாழ்க்கையை நீயே முடிவு பண்ணு…ன்னு விக்ரம் சொல்ல,
எப்படி முடிவு பண்றது?..
சின்ன வயசுல இருந்தே ஒரு விதமான செண்டிமெண்ட் ட்ராமா குள்ள தான் என்னை என்னோட அப்பா இருக்கி பிடித்து வைத்திருந்தார்.
ஒரு பொண்ணு இப்படித்தான் இருக்கணும்னு ரூல்ஸ் போட்டு கொடுத்தவரே அவர் தான். 30, 40 வரன்… இன்னும் எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியல; ஒருத்தனுக்கு கூட என்னை பிடிக்காமல் போயிடுச்சு?..
எல்லாரும் என்ன பட்டிக்காடு என்று சொல்கிறான். இப்போ எங்க வீட்ல சொல்றாங்க, உன்னோட டிரெஸ்ஸிங் சென்ஸ் மாத்துன்னு சொல்லி,
இதோ… இப்ப போட்டு இருக்கேனே… இது என்னோட அம்மா போட சொல்லி கட்டாயப்படுத்தியது. இத நான் இப்ப போட்டுட்டு வரும்போது என்னை எப்படி அவமானப்படுத்தினாங்கன்னு நீங்கள் பாத்தீங்களே…
இதுக்கு முன்னாடி நான் உங்களை நிமிர்ந்து பார்த்திருப்பேனா?..
என்னுடைய எதிர் வீட்ல தான் இவ்வளவு நாளா இருந்திருக்கீங்க; ஆனா உங்களையும் என்னையும் வச்சு அசிங்கப்படுத்தி பேசுறாங்க.
என் உயிரை காப்பாத்தி இவ்வளவு தூரம் கொண்டு வந்தது நீங்க தான்னு… அத சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு கூட இதுவரைக்கும் கொடுக்கல அவங்க. அடுத்தவன் என்ன சொல்றானோ, அது எல்லாத்தையும் காதுல வாங்குறாங்க; ஆனா என்னுடைய உணர்வுக்கு ஒரு சதவீதமாக மதிப்பு கொடுக்கிறார்களா?..
அவமானம்னா என்னன்னு தெரியுமா?..
பாக்க வர ஒவ்வொரு மாப்பிள்ளையும், அவனோட குடும்பத்தில் இருக்கிற எல்லாரும், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் ஸ்கேன் பண்ணிப் பார்ப்பானுங்க; கடைசில வேணாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போயிடுவாங்க. அந்த இடத்துல நின்னு பாத்து இருக்கீங்களா?..
படத்துல வர்ற மாதிரி, என்கிட்டயும் யாராவது வந்து, “எனக்கு உன்ன பிடிச்சிருக்கு; நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று சொல்லி ஒருத்தனாவது வாய தொறந்தா, அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பரவாயில்லை. “சீக்கிரம் கல்யாணம் பண்ணு”ன்னு சொல்லி, நானே கால்ல விழுந்துருவேன் போல… அந்த அளவுக்கு என்னுடைய உணர்வுகளை இங்கே கொன்னு புதச்சிட்டு இருக்காங்க.
கல்யாணமாக ஒரு பொண்ணு இத்தனை வருஷத்தை கடக்கிறது விட கேவலம், இங்கே எதுவுமே இல்லைன்ற மைண்ட் செட்டுக்கு நம்மள கொண்டு வந்துடுவாங்க.
இருட்டுல மாட்டி தவிச்சிட்டு இருந்த என்னை வெளியில் கொண்டு வந்து பாதுகாத்து, இப்போ என் உயிரை காப்பாற்றி, கடைசியில் என்னால உங்க மானமும் போய்,
யாருன்னு தெரியாத ஒருத்தர் என் கூட இவ்வளவு தூரம் நிக்கிறீங்க… உலகமே அவங்க தானே நினைச்சிட்டு இருந்தவங்க, என்னை இவ்வளவு கீழ்த்தரமா பேசி அனுப்பி வச்சிட்டாங்க. இதுக்கு அப்புறம் நான் உயிரோடு இருந்து என்ன செய்ய?..ன்னு சொல்லி கதறி அழுது, அவள் சொல்ல முடியாத துயரத்தில் உறைந்து போயிருந்தாள்.
வார்த்தைகள் அவளைக் கைவிட்ட நிலையில், அவன் மெல்ல அவளது நடுங்கும் இரு கைகளையும் தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டான். அந்தப் பிடிமானத்தில் ஒரு அந்நியனின் தவிப்பு இல்லை; மாறாக, ‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்கிற இரும்புக் கோட்டையின் உறுதி இருந்தது. அந்த ஒரு நொடி, அவள் அதுவரை சுமந்து கொண்டிருந்த பாரமெல்லாம் உடைந்து சிதறியது. தஞ்சம் தேடும் பறவையாய் அவள் அவன் மார்பில் சாய்ந்து கதறினாள்.
அவன் தயங்கவில்லை; ஒரு குழந்தையைத் தேற்றுவது போல அவள் தலையை வருடிக்கொடுத்தபடி,
“அழுகாத நிலா… இது உன் தப்பு இல்ல… என்கூட வா… நான் இருக்கேன்,”
என்று அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு, இனி என்றும் விடாதவன் போல இறுக்கிப் பிடித்தபடி, அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
அங்கே ஆட்டோ வெய்ட் பண்ணிட்டு இருந்துச்சு.
ஆட்டோக்காரர்,
“ஏம்மா… இப்படி எல்லாம் பண்றீங்க?… எந்த பிரச்சினையா இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.
ஏம்பா… அந்த புள்ளைய நல்லா பாத்துக்கறதை விட உனக்கு என்னப்பா வேலை?…
வண்டியில ஏறுங்க.”
இப்படி அவர் சொன்னதுமே, ஒருவரை ஒருவர் பார்த்துக்கிட்டாங்க.
“எங்கயாச்சும் எனக்கு ஒரு வீடு கிடைக்குமா?… ஹாஸ்டல்லா இருந்தாலும் பரவாயில்ல. என்கிட்ட ப்ரூப் இருக்கு. போன்ல தான் இருக்கு. சார்ஜ் போட்டா, நான் என்னோட ஆதார் கார்டு… இந்த மாதிரி எந்த ப்ரூப் கேட்டாலும் தருவேன்.
ஏதாவது ஒரு நல்ல இடமாக இருந்தால் பார்த்து சொல்றீங்களா?…”
இப்படி விக்ரம் கிட்ட கேட்கும் போது,
“அப்பா, அம்மா… யாராவது ஒரு ஆள் வரணும் உங்களுக்கு ஹாஸ்டல்ல ரூம் கொடுப்பதற்கு.
யாரா இருந்தாலுமே, யாராவது கார்டியன் இருந்தா தான் அலோ பண்ணுவாங்க.
அதுவும் என்னை மாதிரி ஆட்கள் போனா, உன்னையும் சேர்த்து துரத்தி விட்டுருவாங்க.”
“அப்ப வீடு பார்த்து தருகிறீர்களா?… உடனே கிடைக்குமா?…”
இப்படி கேட்க, அதற்கு ஆட்டோக்காரரே சிரிக்க ஆரம்பிச்சாரு.
“ஏம்மா… குடும்பம், குட்டியோட இருக்கிற எனக்கே இந்த ஊர்ல வீடு கிடைக்காமல் மூன்று மாசம் பயங்கரமா அலைஞ்சேன். இத்தனைக்கும் நான் ஒரு ஆட்டோக்காரன். அத்தனை பேர் கூட பழக்கம் இருக்கு. நீ என்னமா சாதாரணமா வீடு பார்க்க சொல்ற?… வாய்ப்பே இல்லம்மா.
இந்த ஊரை பாரேன்… எவ்வளவு கூட்டம் என்று…”
இப்படி அவர் சொன்னதும்,
விக்ரம் அவனுடைய வாலட் குள்ள இருந்து ஒரு சாவியை எடுத்து அவள் கையில் வைத்தான்.
அதை பார்த்ததும்,
“அங்க வேண்டாம்.
எங்க அப்பா பயங்கர கோபக்காரர். இப்போ உங்க வீட்டுக்கு போனா, என்ன இன்னும் என்ன எல்லாம் பண்ணுவார் என்று தெரியாது.”
இப்படி சொல்ல,
“எங்க வீடு தான். ஆனா அப்பார்ட்மெண்ட் வீடு கிடையாது. இது என் சொந்த வீடு. இது என்னோட ஆன்ட்டி வீடு. அவங்க இல்ல… அவங்க ஞாபகமா நான் தான் வச்சிருக்கேன். அங்கு தான் போறோம்.”
என்று சொன்னான்.
அவன் சொன்ன ரூட்ல இப்போ ஆட்டோ போய் நிற்க, காம்பவுண்ட் வால் எல்லாம் வைத்து நடுவுல அழகான ஒரு வீடு.
அதை பார்த்ததுமே அவள் ஆச்சரியமா, அதிர்ச்சியாக,
“இவ்வளவு பெரிய சிட்டியில் இப்படி ஒரு வீடா?…”
“அதையெல்லாம் விட்டுட்டு நீங்க ஏன் அந்த குருவி கூண்டுக்குள்ள இருந்தீங்க, விக்ரம்?..
இங்கே தங்கி இருக்கலாமே. நிறைய மரம், செடி, கொடி… என்று பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கே.”
ன்னு அவன்கிட்ட சொல்லும் போது,
“இது என்னோட எமோஷனலான ஒரு இடம். இங்கு அளவுக்கு அதிகமாக எமோஷன்ஸ், ஃபீலிங்ஸ்… இப்படி எக்கச்சக்கமாக கொட்டி கிடக்கு, இந்த வீட்ல.
இப்போ இங்க யாருமே இல்ல.
நான் எப்போ ரொம்ப தனிமையாக இல்ல டிப்ரஷனா உணர்கிறேனோ, அப்போ எல்லாம் இந்த இடம் எனக்கு ஒரு தாய்மடியாக இருந்திருக்கு.
ஆனா இப்போ இந்த வீடு, என்னை விட உனக்கு ரொம்ப தேவைன்னு தோணுச்சு. நான் எப்போ எல்லாம் ரொம்ப உடைஞ்சு போயிருக்கணும், அப்போ என்னை அரவணைச்சு, இந்த வீடு உன்னையும் அரவணைக்கும்னு நினைக்கிறேன். அதான் நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் உன்னை நான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்.”
இப்படி சொல்லிக்கிட்டு அவளை உள்ளே கூட்டிட்டு போனான்.
அந்த வீட்டின் கதவை திறக்க,
பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தது. வீடு ஓரளவுக்கு பெருசாகவே இருந்தாலும், கீழ எக்கச்சக்கமான பொருட்கள்.
அங்கே இரண்டு ரூம் இருந்துச்சு. அது பூட்டியே இருந்துச்சு.
“மாடிக்கு போங்க; அந்த பக்கம் பாதை இருக்கு.”
ன்னு சொல்லி அவன் கை காட்ட,
இப்ப அவ, அந்த பொருட்களை எல்லாம் கடந்து, மாடிப்படிகளில் நடக்க ஆரம்பித்தாள். மெல்ல மெல்ல எட்டு வைத்து அவள் நடந்த சத்தம், அந்த வீடு முழுவதும் கேட்டது.
ஏன்னா, அது மரத்தால செய்யப்பட்ட படிகட்டு.
ரொம்ப நாள் கழிச்சு, அந்த படிக்கட்டில் ஒரு கொலுசு சத்தம்… அதுவும் இவளால்… அந்த வீடு முழுவதும் நிறைந்தது போல, அவனுக்கு கண்ணெல்லாம் கலங்க ஆரம்பித்தது.
அதை மறைத்துக் கொண்டு, அவளோடு மாடிக்கு போக, ஒரே ஒரு பெரிய ரூம்.
ஒரு பாத்ரூம்.
அவ்வளவுதான் அங்கு இருக்கு.
ஆனா அந்த இடம் மட்டும் நல்ல சுத்தமா இருக்கு.
“கீழ என்ன அவ்வளவு பொருட்கள் இருக்கு?…”
ன்னு அவள் கேட்கும் போது,
“அது என்னோட ஆன்ட்டி உடைய பொருள்கள். அவங்க இப்ப இல்ல… I mean… உயிரோடு இல்லை.
இது எல்லாமே அவங்க கல்யாணம் ஆகி போகும்போது கொடுத்த சீதனம். அது அப்படியே இருக்கு. இப்போதைக்கு நான் அது எதுவுமே பண்ணல. ஆன்ட்டி இறந்ததுக்கு அப்புறம், அவங்களோட நினைவாக இது இப்படி இருக்கட்டும் என்று நான் விட்டுட்டேன்.”
“யார் அந்த ஆன்ட்டி?…
அவங்களும் உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?…”
இப்படி கேட்கும் போது,
“கூப்பிடுறது தான் ஆன்ட்டி. என்னோட சொந்த சித்தி தான். என் அம்மாவுடைய கூட பொறந்த தங்கச்சி.
அவங்க தான் என்னை வளர்த்தாங்க.
சரி… அதெல்லாம் இருக்கட்டும். இப்ப அவங்கள பத்தி ஞாபகப்படுத்த வேண்டாம். உங்களுக்கு இந்த ரூம் எல்லாம் ஓகே தானே?…”
“வீட்டு பொருட்கள் என்னென்ன வேணுமோ, அது எல்லாத்தையும் நான் வாங்கிட்டு வரேன்.”
ன்னு சொல்லும்போது,
“பரவாயில்லை. அதை நான் வாங்கிக்கிறேன். என்கிட்ட பணம் இருக்கு.
என்னோட அக்கவுண்ட்ல இந்த மாசம் சேலரி அப்படியே இருக்கு. இன்னும் நான் அதை வீட்டில் கொடுக்கவில்லை. இப்பொழுது அதை வைத்து தான் இந்த மாசத்தை நான் கடத்தனும்.
நான் பாத்துக்குறேன்.”
இப்படி அவள் சொல்ல,
“நான் வேணும்னா கூட வரட்டுமா?…”
ஒரு சின்ன தயக்கத்தோடு,
“ம்… ம்… கண்டிப்பா.”
“பக்கத்துல எதாவது டிரஸ் ஷாப்பிங் பண்ற மாதிரி கடை இருக்கா?… முதலில் என்னோட ஆஃபீஸ்க்கு நான் ஒரு மெயில் பண்ணனும். இன்னைக்கு நான் லீவு என்று சொல்லி… போன் சார்ஜர் வேணும். முக்கியமா இன்னும் கொஞ்சம் பொருட்கள் தேவைப்படுது.
முதல்ல குளிக்கணும்.
இப்ப நடந்தது எதுவுமே நடக்கலன்னு நான் நினைக்கணும். என் உடம்பெல்லாம் ஏதோ அருவருப்பா இருக்கிற மாதிரி தோணுது.”
ன்னு அவள் சொல்ல,
“ஃபர்ஸ்ட் வாஸ் யூஸ் பண்ணிட்டு வா; நான் வெயிட் பண்றேன்.
அடுத்து நம்ம போகலாம். டென்ஷன் ஆக வேணாம். இந்த டிரஸ் இப்படி இருக்கேன்னு, உனக்கு நீயே கட்டுப்பாடுகளை விதிச்சிக்காதே. இங்கு இருக்கிற 90% பெண்கள், இதைவிட சுதந்திரமா உடை உடுத்தி இருக்காங்க.
ஆனா நீதான் சின்ன சின்ன விஷயங்களை யோசிச்சு குழப்பிக்கிற. இப்ப ப்ளாக் மெயில் பண்ணுங்க. உங்க அப்பாவும் இல்ல; உன்னை கேலி பண்ற சொசைட்டியும் இங்க இல்ல. கொஞ்சம் வெளியில வா; பாத்துக்கலாம்.”
இப்படி அவன் நம்பிக்கை கொடுக்கற மாதிரி பேச,
“தேங்க்யூ…
ஆனா… ஐ அம் சாரி…”
“எதுக்கு சாரி கேக்குற?…
சாரி கேக்குற அளவுக்கு என்ன ஆச்சு?…”
“போய் நான் சொன்ன வேலையெல்லாம் முடிச்சிட்டு வா; அப்புறம் பேசிக்கலாம்.”
என்று சொன்னான்.
அந்த நேரத்தில், அவனுக்கு போன் வர,
அதை அட்டென்ட் பண்ணிக்கிட்டு, அவன் பால்கனி பக்கமாக போய் நின்று பேசிகிட்டு இருந்தான்.
இதை கேட்டுகிட்டே, அவள் உள்ளே தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்க,
விக்ரம் பயங்கரமாக சத்தம் போட்டுட்டு இருந்தான்; யார்கிட்டயோ…
“நான் உங்களை சும்மா விட மாட்டேன். கோர்ட்டுக்கு இழுப்பேன். என்ன நினைச்சு பேசிட்டு இருக்கீங்க?… அது ஒன்னும் உங்க அப்பா வீடு கிடையாது. அது என்னோடது. நான் விலை கொடுத்து வாங்கி இருக்கேன். என்ன பத்தி பேசுறதுக்கு நீங்க யாரு?…”
இந்த மாதிரி எல்லாம் பயங்கரமா அவன் சத்தம் போட்டுட்டு இருக்க,
அவள் முகத்தை எல்லாம் கழுவிட்டு, அவசர அவசரமாக வெளியில் வந்தா.
அவன் போனை கட் பண்ணி, டென்ஷன் ஆக, அந்த பால்கனியில் இருக்கிற கம்பியை இறுக்கி பிடிக்கும்போது,
“என்ன ஆச்சு?…
ஏதாவது பிரச்சனையான சொல்லிக்கிட்டு…”
அவள் பதட்டமாக கேட்கும் போது,
“ஹெட் தான் போன் பண்ணாரு. அவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவு பண்ணி இருக்காங்களாம். என்ன காலி பண்ண சொல்றாங்க.
என்ன காலி பண்ண சொல்றதுக்கு அவங்க யாரு?…
நான் அதை அஞ்சு வருஷத்துக்கு காண்ட்ராக்ட் போட்டு வாங்கி இருக்கேன். அவன் என்ன பண்றான்னு பார்க்கலாம்னு…”
அவன் பயங்கரமா கோபத்தோடு பேசும்போது,
அவள் வேகமாக வந்து, அந்த கம்பியை இறுக்கமா பிடிச்சிருக்குற கைகளை பிடித்தாள்.
“நானே சொல்லணும்னு இருந்தேன். நீங்க அந்த வீட்டுக்கு போக வேணாம். அப்படியே போனாலும், எங்க அப்பா உங்களை நிம்மதியா அங்கு இருக்க விட மாட்டாரு.
ப்ளீஸ்…
உங்களுக்கு இங்க ஒரு வீடு இருக்கு.
கொஞ்ச நாள் கழிச்சு போங்க. நானும் அதுக்குள்ளயே வேற எங்கேயாவது மாறிக்கிறேன். அப்படி இல்லன்னா, யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு போயிடுறேன். அதுவரைக்கும் நீங்க இங்கே இருங்களேன்.”
இப்படி அவள் சொல்லும்போது,
அவன் ஒரு மாதிரி, கண்களில் கண்ணீரோடு… அதை வெளிக்காட்ட முடியாத தருணத்தோடு, அவளையே பார்த்தபடி, டக்குனு அவனுடைய பார்வையை வேறு பக்கமாக மாற்றி,
“சரி…”
இப்படி சொல்லிட்டு திரும்பினான்.
அவள் கிட்ட என்னென்னமோ சொல்லணும்னு அவனுக்கு தோணுது. ஆனா இது சரியான நேரம் இல்லை என, அவன் அமைதியாக இருக்கான். அப்படி என்னதான் சொல்லணும் அவனுக்கு?..
இனி என்ன நடக்குதுன்னு… அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
