உன்னில் சிறையாகிறேன் – 11

உன் நினைவு சூழ்ந்த இதயமே எனக்கு பேரின்ப சிறையானது… 

அதிலிருந்து மீண்டு வர ஆசையில்லை…

ஆதலால் காலம் முழுதும்

உன் நினைவில் சிறையாகிறேன்…!

உன்னில் சிறையாகிறேன்  –  11

“​அவன் கொஞ்சம் முரடன், மனசு தங்கம்னு நான் பொய் சொல்ல மாட்டே, அவன் மனசு ஒரு நெருப்புப் பிழம்பு மாதிரி அதை அணைக்கிறதும், அதுல குதிச்சு உன்னைப் புதுப்பிச்சுக்கிறதும் இப்போ உன் கையில தான் இருக்கு அருவி,” என்றார் திருவாசகம் ஒரு  புன்னகையுடன்,

​அருவிக்கு இப்போதுதான் புரிந்தது. தான் வந்திருப்பது வெறும் மாளிகைக்குள் அல்ல,

ஒரு எரிமலைக்கு அருகில்தான் அவள் குடியிருக்கப் போகிறாள் என்று, 

அக்னியன் என்ற அந்தத் தகிப்பில் அவள் சிறையாகப் போகிறாளா அல்லது சிதையப் போகிறாளா? தன்னைச் சுற்றியிருந்த ஆண்களின் மௌனமும் அலட்சியமும் அருவியை ஒருவிதமான தனிமைக்குள் தள்ளியது. 

கழுத்தில் ஏறிய அந்தப் புதிய பாரம் (தாலி), உண்மையில் அவளது மனதை அழுத்தியது. திருவாசகம் முன்னே நடக்க, மெல்ல அடிமேல் அடி வைத்து மாடியில் இருந்த ஒரு அறையின் முன் நின்றாள்.

​”இதுதான் உன்னோட ரூம் அருவிமா, இனி நீயும் பாப்பாவும் இங்க தான் இருக்கணும்” என்று கூறிவிட்டு திருவாசகம் நகர்ந்தார்,

​கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அருவிக்கு மூச்சு நின்றது போலிருந்தது, அந்த அறையெங்கும் அக்னியனின் ஆதிக்கம் நிறைந்திருந்தது, 

அறையின் நிறம், அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள், ஏன் அந்த அறையின் காற்றில் கூட அக்னியனின் அந்தத் தகிக்கும் வாசனை நிறைந்திருந்தது,

​அது அக்னியனின் அறை,

​அவன் ஒரு முரடன் என்று அவளுக்குத் தெரியும், ஆனால் அவனோடு அதே அறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிதர்சனம் அவளை நிலைகுலையச் செய்தது,

ஒரு கோடி ரூபாய்க்குத் தன்னை விற்றுவிட்டதாக அவள் உணர்ந்த தருணமே இதுவாகத் தான் இருக்க முடியும்.

​யாழினியை மெல்ல அந்தப் பிரமாண்டமான படுக்கையறை மெத்தையில் படுக்க வைத்தாள், அந்தப் பிஞ்சு குழந்தை தன் தாயின் மனப்போராட்டம் புரியாமல், மெத்தையின் மென்மையில் மீண்டும் ஒரு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றது,

​அருவி ஜன்னல் ஓரம் போய் நின்றாள்,  

“திருமணத்தன்று அவன் என் முகம் கூட பாராமல் கடமைக்கே என மூன்று முடிச்சு போட்டு, நெற்றி வகுட்டில் குங்குமத்தை வைத்த விட்டு சட்டென மறைந்து மாயமானான். 

இன்று நேரில் வந்து எதிரில் நிற்கும் போதும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் எரித்து விடுவது போல் பார்த்து விட்டு எளிதில் கடந்து சென்று விட்டான். இதுவா என் வாழ்க்கை? இவனோடு தான் நான் வாழ வேண்டுமா கடவுளே? என்ன சோதனை இது?” என்று அவளது உள்மனம் கதறியது.

ஒரு பெண்ணாக அவளது தன்மானம் சீண்டப்பட்டது, ஆனால், மெத்தையில் உறங்கும் யாழினியைப் பார்த்தபோது, 

“அவள் உயிரோடு இருக்கிறாளே, அது போதாதா?” என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். நேரம் கடந்தது, யாழினி நல்ல உறக்கத்தில் இருந்தாள், அருவியோ சிலையென சமைந்து வானத்தை வெறித்தபடி நின்றிருந்தாள். 

அப்போது ​திடீரென்று கதவு பலமாகத் திறக்கப்படும் சத்தம் கேட்டது, அருவி திடுக்கிட்டுத் திரும்பினாள், வாசலில் அக்னியன் நின்றிருந்தான், 

அவன் கண்கள் சிவந்து போனது, அவனது அறையில் ஒரு பெண்ணும், குழந்தையும் இருப்பதை அவன் எதிர்பார்க்க வில்லையா அல்லது அதை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லையா, என்று புரியவில்லை,

​அவன் விறுவிறுவென அருவியை நோக்கி வந்தான், அவனது ஒவ்வொரு அடியும் நிலநடுக்கத்தைப் போல அருவியின் இதயத்தை அதிரச் செய்தது, அவளுக்கு மிக அருகில் வந்து நின்றவன், 

அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்தான்; அந்தப் பார்வையில் எரிமலைக் குழம்புகள் தெறித்தன.

​”இந்த வீட்டுக்குள்ள வரத்தான் தாத்தா கிட்ட டீல் பேசினேன்னு நினைச்சேன்… ஆனா என் பெட்ரூம் வரைக்கும் வர துணிச்சல் உனக்கு எங்கிருந்து வந்துச்சு” என்று அவன் கேட்ட குரலில் இருந்த வேகம், 

அருவியை நிலைகுலையச் செய்தது அக்னியனின் கண்கள் சிவந்து தகித்தன. அவனது அறையின் புனிதமும் தனிமையும் ஒரு பெண்ணால் கலைக்கப்பட்டதை அவனது ஆண் திமிரால் ஜீரணிக்க முடியவில்லை. 

அருவிக்கு மிக அருகில் வந்தவன், அவளது தோளுக்குப் பின்னால் இருந்த சுவரில் ஓங்கி ஒரு கையால் அடித்தான். அந்தச் சத்தத்தில் அருவி நிலைகுலைய, அவனது கைக்கும் அவனது உடல்வாகுக்கும் இடையே ஒரு கூண்டுக்குள் சிக்கிய பறவையைப் போலத் தவித்தாள்.

​”கேட்டேனே… பதில் வரல, என் பெட்ரூம் வரைக்கும் வர உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும், விலைக்கு வாங்கின தெல்லாம் படுக்கைக்கு வர முடியுமா, எது எது எங்க எங்க இருக்ோ, 

“அது அங்க  தான் இருக்கணும். உன்னோட தகுதிக்கு என் வீட்டு வாசலுக்கு வெளிய தான் நிக்கணும்னு உனக்குத் தெரியாதா?” என்று அவன் அனலைக் கக்கினான்.

அருவியின் இதயம் தொண்டைக் குழி வரை வந்து துடித்தது. அவனது அனல் மூச்சு அவளது முகத்தில் பட, பயத்தில் அவளது கண்கள் கலங்கின. அவனது ‘விலைக்கு வாங்கின தெல்லாம் படுக்கைக்கு வர முடியுமா’ என்ற வார்த்தை அவளது இதயத்தை ஈட்டியால் குத்தியது.

​”அது… ஐயா தான்… இந்த ரூமை…” என்று அவள் திக்கித் திணறி வார்த்தைகளைத் தேடினாள்,

​”ஐயா சொன்னாரா, எந்த ஐயா சொன்னாரு, அவர் சொன்னா  உனக்கு அறிவு எங்க போச்சு, ஒரு ஆம்பள தனியா இருக்கிற ரூமுக்குள்ள, அதுவும் என்னோட ரூமுக்குள்ள நுழையுறதுக்கு முன்னாடி என்ன நடக்கும்னு யோசிச்சியா,

பணத்துக்காக தாலி கட்டிக்கிட்டு வந்தா இந்த ரூம்ல இருக்கிற எல்லாத்துக்கும் நீ சொந்தக்காரி ஆயிடுவியா?” என்று அவன் இகழ்ச்சியாகச் சிரித்தான்.

​அருவியால் பேச முடியவில்லை, அவளது நாக்கு வறண்டு போனது, தன்மானமும் தாய்மையும் அவளுக்குள் யுத்தம் நடத்தின, அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவளது பெண்மையைச் சிறுமைப்படுத்தியது,

அவன் அவளது முகத்தை நெருங்கி, அவளது கழுத்தில் இருந்த அந்தப் புதுத்தாலியைத் தன் விரலால் தட்டிப் பார்த்தான்.

​”இந்த ஒரு தாலி உனக்குத் தைரியத்தைக் கொடுத்துடுச்சா, இது வெறும் ஒரு டீல் ஒரு பிசினஸ், அந்த பிசினஸ்ல நீ ஒரு அடிமை உன்னோட இடம் அவ்வளவுதான் அதுக்கு மேல எதுக்கும் ஆசைப்படக்கூடாது” என்று

​அக்னியனின் ஆக்ரோஷம் உச்சத்தை எட்டியபோது, 

அந்த அறையின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு மெல்லிய அழுகுரல் கேட்டது, யாழினி.

​அக்னியன் கத்திய சத்தத்திலும், அந்த அறையில் நிலவிய இறுக்கமான சூழலிலும் பயந்து போன அந்தப் பிஞ்சு குழந்தை, மெத்தையிலிருந்து எழுந்து அலறத் தொடங்கியது,

அந்த அழுகுரல் அக்னியனின் ஆக்ரோஷமான வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

​அக்னியன் சட்டெனத் திரும்பி மெத்தையைப் பார்த்தான், ஒரு சின்னஞ்சிறு உயிர் அங்கே பயத்தில் நடுங்குவதைக் கண்டதும், 

அவனது கண்களில் இருந்த அந்தச் சிவப்பு மெல்ல மறைந்தது, அவன் கைகளைச் சுவரிலிருந்து எடுத்துவிட்டு பின்வாங்கினான்,

​அருவி பதறியடித்துக்கொண்டு ஓடிப் போய் யாழினியைத் தூக்கிக் கொண்டாள்,

, பய”பயப்படாதடா. ப்படாதடாஇருக. இருக்கேன். இருக்கேன்.மா இங்க இருக்கேன்,” என்று அவளை அணைத்துக்கொண்டு விம்மி அழுதாள். 

அவளது அழுகை யாழினிக்காகவா அல்லது அக்னியன் வீசிய வார்த்தை அம்புகளுக்காகவா என்பது அவளுக்கே தெரியவில்லை.

​யாழினி அருவியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அக்னியனைப் பார்த்து ஒருவிதமான பயத்தோடு தேம்பினாள், அக்னியன் தலையில் பெரிய கட்டோடு அந்தச் சிறிய குழந்தையையும், 

தன் குழந்தையின் உயிரைக் காக்க கொடுத்த வாக்கிற்காகத் தன்னையே அடகு வைத்துவிட்டு நிற்கும் அந்தத் தாயையும் ஒரு நிமிடம் மௌனமாகப் பார்த்தான்.

​அவன் முகத்தில் இப்போது இன்னும்  கட்டுக்கடங்காத கோபம் பொங்கியது, அவன் மேலும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தன் அறையிலிருந்து விறுவிறுவென வெளியேறினான், சட்டென கதவு பலமாகச் சாத்தப்படும் சத்தம் கேட்டது,

​அருவி அப்படியே தரையில் அமர்ந்து யாழினியைத் தாலாட்டினாள், அக்னியன் சொன்ன ‘விலைக்கு வாங்கின தெல்லாம் படுக்கைக்கு வர முடியுமா’ என்ற வார்த்தை அவளது காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது,

​அக்னியன் வெளியேறிய பிறகும் அந்த அறை அவளுக்கு நடுக்கத்தைத் தான் கொடுத்தது, யாழினி அழுது அழுது ஓய்ந்து, அருவியின் மார்பிலேயே மீண்டும் உறங்கிப் போனாள், 

ஆனால் அருவியின் கண்களில் உறக்கம் ஏது? அக்னியன் வீசிய வார்த்தைகள் அறையின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலித்து அவளைத் துளைத்தன.

​அந்த இரவு அவளுக்கு ஒரு யுகமாகத் தெரிந்தது, அக்னியன் மீண்டும் அறைக்கு வருவானோ என்ற பயத்திலேயே கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், 

ஆனால் அவன் வரவில்லை.

அந்தப் பிரமாண்டமான மாளிகையின் நிசப்தம், அவளது தனிமையை இன்னும் அதிகமாக்கியது, மெத்தையின் ஒரு ஓரத்தில் யாழினியைப் படுக்க வைத்துவிட்டு, நிலவின் ஒளி அறைக்குள் விழும் ஜன்னல் ஓரம் அமர்ந்தாள்,

​”யாருக்காகவும் தலைகுனியாதே என்று வளர்ந்தவள் இன்று  ஒரு அடிமையைப் போல அமர்ந்திருப்பதை எண்ணிக் கலங்கினாள், அவளது கண்ணீர் தடையின்றி கன்னங்களில் வழிந்தது,

ஜன்னலுக்கு வெளியே தெரிந்த அந்த மாளிகையின் தோட்டம் கூட அவளுக்கு ஒரு அழகான சிறைச்சாலையாகவே சாலையாகவே தெரிந்தது. காலையில் ராஜகுமாரி போல வந்தவள் இப்போது கிழிந்த மனதோடு இருட்டில் அமர்ந்திருந்தாள்.

​இரவு மெல்ல நகர்ந்து, விடியலை நோக்கிச் சென்றது,

​அடுத்த நாள் விடியல் பனிமூட்டம் அந்த மாளிகையைச் சூழ்ந்திருந்தது, பறவைகளின் சத்தம் கேட்டது அருவிக்கு அது கூட உற்சாகத்தைத் தரவில்லை, 

விடிந்தும் விடியாத பொழுதில், ஜன்னல் வழியே தெரிந்த அந்தப் மங்கலான வெளிச்சம் அவளுக்கு ஒரு புதிய போராட்டத்தின் ஆரம்பமாகவே தெரிந்தது,

​அவள் எழுந்து யாழினியைப் பார்த்தாள்,

அந்தப் பிஞ்சு முகம் எந்தக் கவலையுமின்றி உறங்கிக் கொண்டிருந்தது, அதுதான் அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல். மெல்ல எழுந்து குளித்துவிட்டு, தன்னிடமிருந்த ஒரு எளிய உடையில் ஒன்றை உடுத்திக் கொண்டாள். 

நெற்றியில் திலகமிடும்போது, நேற்று அக்னியன் எள்ளி நகையாடிய அந்தத் தாலிக் கொடி கண்ணாடியில் தெரிந்தது, அதைத் தொடும்போது அவள் கை நடுங்கியது,

​கதவைத் திறந்து வெளியே வந்தாள், மாளிகை இன்னும் முழுமையாக விழிக்கவில்லை, ஆனால், அக்னியன் அறைக்கு வெளியே இருந்த அந்தப் பெரிய ஹாலில், அவன் ஒரு சோபாவில் அமர்ந்திருந்தான். இரவு முழுவதும் அவன் அங்கேயேதான் தங்கியிருந்தான் என்பது அவனது கலைந்த தலைமுடியும், கசங்கிய டீ-சர்ட்டும் சொல்லின,

​அவன் கையில் ஒரு காபி கோப்பை இருந்தது, அருவியின் காலடிச் சத்தம் கேட்டு அவன் நிமிர்ந்து பார்த்தான், அவனது கண்கள் இன்னும் சிவந்தே இருந்தது இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை என்பதன் சாட்சி,

​அக்னியன் அவளைப் பார்த்த அந்தப் பார்வை, நேற்று இருந்த அதே அனல் கூடவே ஒருவிதமான கசப்பும், இன்னும் விலகாத அலட்சியமும் கலந்திருந்தே இருந்தது,

விடியலின் அந்தப் பனிக் காற்றுக்கு நடுவே, இருவருக்கும் இடையே ஒரு நீண்ட மௌனம் நிலவியது. அந்த விடியல் அவளுக்கு எதைத்தரப் போகிறது என்பது அருவிக்குத் தெரியாது. 

ஆனால் ஒரு யுத்தத்திற்குத் தயாராகும் வீரனைப் போல அவள் அந்த ஹாலில் அடுத்த அடியெடுத்து வைத்தாள்.

​”தாத்தா……………” என்று பூமியே பிளக்கும் படியாக கத்தினான் அக்னி, பயத்தில் விக்கித்துப் போனாள் அருவி,

தொடர்ந்து வாசிப்போம், வாங்க. 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page