வெந்து தணிந்த இதயம்-8(1)

நான் உங்கள்_84

வெந்து தணிந்த இதயம் 8(1)

 

உடனே அதனை சமாளிக்கும் விதமாய் தெய்வானையின் மடியில் ஒரு புடவையை தூக்கிப்போட்டான் பத்ரவேல் பாண்டியன்.

 

தனது சகோதரிகளின் சந்தேகப் பார்வைகளைக் கண்டு அவர்களின் மடியிலும் ஒவ்வொரு புடவையை எடுத்துப்போட்டான்.

 

சஷ்டிவேல் பாண்டியனின் அன்னை பார்வதி தொண்டையைச் செரும, அவரின் மடியிலும் ஒரு புடவை.

 

பற்றாக்குறைக்கு பொன்னியின் மகள்கள் காதம்பரியும் கவிதாம்பரியும் முறைத்துப் பார்க்க, அவர்களின் மடியிலும் புடவைகள்.

 

இறுதியில் ‘நான் மட்டும் தக்காளித் தொக்கா?’ என்று சாவித்ரி முறைக்க, ‘நீங்களுமா?’ என்று நான்கு புடவைகளை அடுக்காக மடியில் தூக்கி வைத்தான்.

 

அவன், “இப்ப எல்லாருக்கும் திருப்தியா?” என்றதும்,

 

கோரசாக, “ஓ!” போட்டவர்கள் இரண்டாவது ரவுண்டிற்குச் சென்றார்கள்.

 

“அட புடவை சைக்கோக்களா!” என்று தலையில் கை வைத்தவன் அதன் பின் அமைதியாக வேடிக்கைப் பார்க்கலானான்.

 

தெய்வானை கல்யாணப் புடவையை கட்டிப் பார்க்க தனதறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது சஷ்டியின் தாய் பார்வதி, யாழினியை புடவையில் பார்க்க ஆசைப்பட்டு, “இதுக்கு ஏதாவது மேட்சிங் ப்ளவுஸ் போட்டு கட்டிட்டு வாம்மா. எப்படியிருக்குனு பார்க்கலாம்” என்றார்.

 

அவரின் அன்பு கட்டளையை மறுக்க முடியாமல் தனது மடியில் கிடந்த புடவையை எடுத்துக்கொண்டு மாடிப்படியேறினாள் யாழினி. தெய்வானையோ கதவை தாழ் போட்டுக்கொண்டு திறக்கமாட்டேன் என்று அடம்பிடித்தாள். இறுதியில் ஒரு ரவிக்கையை மட்டும் சாளரம் வழியே கெஞ்சி வாங்கிக்கொண்டு சஷ்டியின் அறைக்குச் சென்றாள் யாழினி.

 

வைரஊசிப் புடவையின் கிளிக்காஞ்சி முந்தானையை அப்படியே விரித்துவிட்டு அழகுற கட்டி முடித்தவள் கதவை திறந்தபோது எதிரில் அவளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தான் பத்ரி.

 

அவனைப் பார்த்ததும் அவள் அக்கம் பக்கம் ஆட்களைத் தேட, அடாவடியாய் உள்ளே நுழைந்து கதவை தாழ்போட்டான்.

 

தனது அலைபேசியை வேறு கீழேயே போட்டுவிட்டு வந்த மடத்தனத்தை நினைத்து தலையிலடித்தவள், “நான் போகனும். வழிய விடுங்க” என்றாள்.

 

கை நீட்டி தடுத்தவன், “முடியாது. நான் கேட்கறதை கொடுத்தா மட்டும் தான் உன்னால இங்கயிருந்து போக முடியும்.” என்றான்.

 

அவள் பயந்து பின்னால் நகர, “நீ திருடின தாலிங்களை எல்லாம்‌ எங்க வச்சிருக்க? அதையெல்லாம் நீ திருப்பி தராத வரை இப்படித் தான் உன் அங்கம் ஒவ்வொன்னும் எனக்கு சொந்தமாகும்” என்று அவளின் கையைப் பற்றி தனதருகே இழுத்தான்.

 

“நான் எதையும் திருடல. என்னை விடுங்க. நீங்க என்னை தப்பா…”

 

“உஷ்! நான் நீ திருடினதை என் ரெண்டு கண்ணாலப் பார்த்தேன். ஸோ உன் பொய்யை இதோட நிறுத்திக்கோ” என்று அவளி‌ன் காதோரம் கிசுகிசுத்தான்.

 

அவள் அதிர்ச்சியில் வாயைப் பிளக்க, அவளின் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி இதழ்கள் அவனின்‌ சாக்கோ பட்டர் இதழுள் சிறைபட்டன. அவள் எவ்வளவு எதிர்த்தும் பனிக்கூழை ருசி பார்த்த பிறகே விட்டான் பத்ரி.

 

அவளின் முகத்தோடு இழைந்தவன், கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட்டான். யாழினியால் ஆஜானுபாகுவான அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை திரும்பி நிற்பதை தவிர.

 

அப்படியும் ரவிக்கையின் முடிச்சை அவிழ்த்து அவள் அகன்ற‌ முதுகில் முகத்தை தேய்த்தான். மீசையின் குறுகுறுப்பில் நெளிந்து விலகினாள்.

 

அவளின் முந்தானையைப் பிடித்திழுத்ததன் பலனாய் அவள் தன் மேல் வந்து விழுந்ததும் சிற்றிடையில் விரல்களால் கோலமிட்டுக்கொண்டே கூந்தலில் முகம் புதைத்தான். அவள் அவன் கையை தட்டிவிட்டு இரண்டு எட்டு முன்னால் எடுத்து வைக்க, அவன் காலின் அடியில் சிக்கியிருந்த முந்தானை‌‌ துரோகம் செய்தது. அவள் உடலைவிட்டு நழுவி கீழே விழுந்தது.

 

உடனே தன் இரு கைகளையும் கொண்டு ஒரு மலர்களின் மாநாட்டை மறைத்தவள் வேண்டாம் எனும் விதமாய் தலையசைத்தாள்.  அவன் கேட்கவில்லை. முட்டிப்போட்டு அவளின் ஆலிழை வயிற்றில் முகம் புதைத்தான். அவளின் உடல் நடுக்கத்தில் இறுகியது. அவனின் ஒவ்வொரு முத்தமும் அவளின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய் வாங்கிக் கொண்டிருந்தது.

 

அப்போது அவளின் நல்ல நேரம் அவளை காப்பாற்றும் விதமாய் கதவை தட்டினான் சஷ்டி அதுவும் பதட்டமாக.

 

“யாழு என்ன பண்ற? கதவை திற? உனக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்ண வேற ரூமே கிடைக்கலையா?”

 

“டப் டப் டப்”

 

“கதவை திறன்னு சொல்றேன்ல? யாழு! யாழு!” என்று சஷ்டி காட்டுக்கத்து கத்தியதும்,

 

அவளின் ரவிக்கை முடிச்சைப் போட்டவன், “கதவைத் திற” என்றான்.

 

வேகமாய் சென்று கதவைத் திறந்தவள் சஷ்டியின் நெஞ்சில் விழுந்து அழ, “என்னாச்சி யாழு?” என்று பதட்டமாய் கேட்டான் சஷ்டி.

 

அவ்வறைக்குள்ளிருந்தோ சாவகாசமாக வெளியே வந்தான் பத்ரி.

 

“டேய் முட்டாள்! நீ எதுக்குடா உள்ளப்போன? இது என் ரூம். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா ஒரு பொண்ணு தனியா இருக்கும் போது உள்ளப் போயிருப்ப. த்தூ! உனக்கு இதெல்லாம் கேவலமா தெரியல.” என்று கீழே துப்பினான் சஷ்டி.

 

“இவ விசயத்துல கேவலமா தெரியல” என்று திமிராக சொன்னவன்,

 

“அப்பாவுக்கு இவ நம்ம வீட்டுல தங்குறது பிடிக்கல. சீக்கிரமே இவளை திருப்பி அனுப்புற வழியைப் பாரு. இல்ல நம்ம தோட்டத்து வீட்டுல தங்க வச்சாலும் ஓகே தான். அந்த வீட்டுல தங்குற பொம்பளைக்கு பேரென்னனு உனக்கே தெரியும்.” என்றதும் அவனின் சட்டைக்காலரை கொத்தாகப் பற்றினான் சஷ்டி.

 

தொடரும்…

லைக்‌, கமெண்ட் கரோ தங்கம்ஸ்:)

கமெண்ட் பண்ணினா உங்களுக்கும் 500 ருபிஸ் பரிசு:)

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,885 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page