வெந்து தணிந்த இதயம்-8(2)

நான் உங்கள் AY_84

வெந்து தணிந்த இதயம்-8(2)

 

பத்ரியின் திமிரு கொஞ்சமும் அடங்கவில்லை.

 

“ப்ரோ! நீ இப்படி கோபப்படுற அளவுக்கு உனக்கு ஒன்னும் இவ பொண்டாட்டியில்ல. தெய்வானையையும் உன் வலையில நீ விழ வைக்க முடியாது. உன் ஒரு தலை ராகத்தை இதோட ஸ்டாப் பண்ணிக்கோ. ஒழுங்கா அப்பா மனசுபடி நடந்துக்கோ. இல்ல நடந்துக்க வைப்பேன்!” என்றதும், ஆக்ரோசமாய் அவனை தள்ளிவிட்டான் சஷ்டி.

 

சமாளித்து நின்ற பத்ரியோ அசராமல் அவனை முறைத்துப் பார்த்தான்.

 

ஏதும் பெரிய அடிதடி சண்டையாகிவிடுமோ என்று பயந்த‌ யாழினி, “சஷ்டி ப்ளீஸ் வேண்டாம். சண்டை ஏதும் போடாதீங்க. தப்பு என் மேல தான். ப்ளீஸ் பிரச்சனைய பெருசு பண்ணாதீங்க.” என்று கெஞ்சிக் கூத்தாடினாள்.

 

சஷ்டி விடுவதாய் இல்லை.

 

“எப்படி யாழினி? எப்படி இந்த பொறுக்கியை விட முடியும்? நீ என்னை நம்பி வந்தப் பொண்ணு. உனக்கு பாதுகாப்பு கொடுக்கறது என் கடமை. அப்ப தான் நான் ஆம்பளையும் கூட. ஆனா இவன்.. ச்சே! எனக்கு அண்ணன்னு பெருமையா‌ சொல்லிக்கற காரியத்தையா பண்ணியிருக்கான்?” என்று அவமானமாய் உணர்ந்தான்.

 

பத்ரிக்கு சஷ்டியின் கொந்தளிப்பு அதிகமாய் பட்டது. அவனை எச்சரித்தான்.

 

“சஷ்டி இப்பவும் சொல்றேன். எங்க ரெண்டுபேருக்குள்ள ஓடிக்கிட்டிருக்க டீலிங் உனக்கு தெரியாது. அதனால இப்படி நன்னெறி வகுப்பெடுக்கறதை நிப்பாட்டு. ஏன்னா அவளும் உத்தமி இல்ல. நானும் உத்தமன் இல்ல” என்றான்.

 

சஷ்டி அப்படியும் மல்லுக்கு நிற்க, அவனின் தோளைப் பற்றி தள்ளி நிறுத்திய பத்ரி தன் ஆட்காட்டி விரலைக் காட்டி அவனை எச்சரித்துவிட்டுப் போனான்.

 

யாழினிக்கோ எப்படி சஷ்டியின் கோபத்தை தணிப்பதென்றே தெரியவில்லை. கைகளைப் பிசைந்தாள்.

 

சஷ்டி அதனைக் கண்டவன், “சாரி யாழினி. உன்னை பெரிய சிக்கல்ல கொண்டு வந்து மாட்டி விட்டிருக்கேன். இவன் இப்படி உன்கிட்ட கேவலமா நடந்துப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. இதுக்கு மேலயும் நீ இங்க இருக்கது சரியா இருக்காது. நாளைக்கே நீ ஊருக்குப் போக ஏற்பாடு பண்றேன். அதுக்கு முன்னாடி இந்த பத்ரியை ஒரு வழி பண்றேன்.” என்று ஆவேசப்பட்டதும்,

 

“என்ன பண்ணுவீங்க சஷ்டி? இவரை உங்களால என்ன பண்ண முடியும்? ஆஃப்டரால் இந்த ரூமுக்குள்ள நடந்த விசயத்தைக்கூட உங்களால ப்ரூவ் பண்ண முடியாது” என்று உணர்ச்சியற்ற குரலில் கூறினாள் யாழினி.

 

சஷ்டி இறுகிய முகத்துடன், “முடியும்” என்று சொன்னான்.

 

அவன் கூறியதன் பொருள் புரியாமல் விழித்தாள் யாழினி.

 

“நீ என்ன சொல்ற சஷ்டி? உன்னால எப்படி ப்ரூவ் பண்ண முடியும்?” என்று வினவியதும், அவளிடம் மன்னிப்பு கேட்டான் அவன்.

 

“சாரி யாழு. இந்த ரூம்ல சிசிடிவி கேமரா ஃபிக்ஸ் பண்ணியிருக்கு. அதான் நான் உன்னை வெளிய வர சொல்றதுக்காக ஓடி வந்தேன்.” என்று தலை குனிந்தான்.

 

அவள் அவனை தவறாக நினைக்கவில்லை.

 

“வீடியோவை ஆதாரமா காமிச்சாலும் உங்க வீட்டுல எனக்கு நியாயம் கிடைக்கும்னு நீங்க நம்புறீங்களா சஷ்டி?” என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று தான் அவன்‌ மனசாட்சி பதிலளித்தது.

 

“தெய்வானைக்கிட்ட காமிச்சாலாவது பலன் இருக்குமான்னா எனக்கு அதுல சுத்தமா நம்பிக்கையில்ல. ஏன்னா அவ பத்ரியை கண்மூடித்தனமா நம்புறா. அதனால நான் நீங்க சொன்ன மாதிரியே நாளைக்கு நைட் இங்கயிருந்து கிளம்பிடுறேன் சஷ்டி.” என்று நலிந்த குரலில் சொன்னாள்.

 

பகலில் அல்லாமல் இரவில் ஏன் என்றவன் புரியாமல் பார்க்க, “நாளைக்கு காலையில கடைசி முயற்சியா அந்த டைரி திட்டத்தையும் எக்ஸிக்யூட் பண்ணி பார்த்திருவோம் சஷ்டி” என்றதும், கொடுத்த பணத்திற்கு நேர்மையாய் இருப்பவளை நன்றியுணர்வுடன் பார்த்தான் அவன்.

 

ஆனால், யாழினியின் நோக்கமே வேறு!

 

அங்கிருந்து கீழே சென்றவள் முகத்தை இயல்பாக்கிக் கொண்டு பார்வதியிடம், “எப்படியிருக்கேன் ஆன்ட்டி?” என்று தன்னை சுற்றி சுற்றி காண்பிக்க,

 

அவளின் கன்னத்தில் முத்தமிட்டு, “தேவதை மாதிரி இருக்க” என்றார் அவர்.

 

பக்கத்திலிருந்த பொன்னி யாழினியின் கையைப் பற்றி புகழ, அவளின் புதல்விகளோ யாழினியை கட்டிக்கொண்டு புகழ்ந்தனர். பற்றாக்குறைக்கு சாவித்ரியும் அவளின் முகத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.

 

அனைத்தையும் கண்டு தரையில் காலை ஓங்கி உதைத்தாள் தெய்வானை.

 

“பாட்டி நான் இந்த பாதம் பச்சை கங்கா ஜமுனா பார்டர் புடவையில தேவலோகத்து ரம்பை மாதிரி இருக்கேன்னு சொல்லிட்டு, இப்ப அவளைப்போய் புகழ்றீங்களா?” என்று குறைபட்டதும்,

 

“ரெண்டுபேருமே அழகு தான்டி” என்றார் சாவித்ரி.

 

“அதெப்படி இருக்க முடியும்? எங்க ரெண்டு பேர்ல யார் ரொம்ப அழகுன்னு இப்பவே சொல்லுங்க?” என்று அடம்பிடித்தாள்.

 

அவளின் பொறாமை குணத்தைப் பற்றி குழந்தையிலேயே அறிந்தவரோ, “அம்மா தாயே! நீ‌தான் அழகு. போதுமா?” என்று சமாளித்துவிட்டு,

 

“தம்பி எடுத்தப் புடவைக்கெல்லாம் மொத்தமா பில் போட்டு கொடுங்க. செக் போட்டு அனுப்பி வைக்கிறோம்.” என்றார்.

 

பார்வதி, “இல்ல நான் எடுத்த புடவைக்கு மட்டும் பில் தனியா போடுங்க. நான் தனியா செட்டில் பண்ணிடுறேன்” என்று கழுத்தை நொடித்துவிட்டுப் போனார்.

 

அவரின் குணமறிந்த சாவித்ரியோ அவரை கண்டுகொள்ளவில்லை.

 

ரத்னவேல் பாண்டியன் மதிய சாப்பாட்டை முடித்ததும் தங்களது நெருங்கிய சொந்தங்களுக்கு தன் முதல் மனைவி சாவித்ரியுடன் பத்திரிக்கை வைக்க கிளம்பினார்.

 

மறுபுறம் நடந்ததை நினைத்து மனதிற்குள்ளேயே மறுகிய யாழினி‌ வாஷ்ரூமிற்குள் சென்று தனது கைப்பேசியின் சிம்மை கழற்றிவிட்டு பழைய சிம்மை போட்டு இயக்கினாள்.

 

உடனே அவளது பாட்டியின் பத்து மிஸ்டுகால்கள் வந்த செய்தி கிடக்கவும் அவரது எண்ணிற்கு அழைத்தாள்.

 

எதிர்புறம் பாட்டியின் குரல் கேட்டதும் தான் தாமதம், சகட்டு மேனிக்கு அவரைத் திட்டினாள். அதில் சில நாகரீகமான கெட்ட வார்த்தைகளும் அடக்கம்.

 

தொடரும்…

உங்க கமெண்ட்ஸ்காக வெயிட்டிங் தங்கோம்ஸ்:)

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,886 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page