திரையிட்டு விலகாதே! -13

திரையிட்டு விலகாதே! 
அத்தியாயம் -13

Hiiii வாசகர்களே ✨

அன்று தான்

இப்படி ஆக பட்ட ஒரு கல்லூரியில் என் நாட்கள் அதன் போக்கில் ஓட, ஆற்றில் விழுந்த ஓர் அய்யா நானும் அதில் பயணித்தேன்!!

ஜெஷ்வந்த் எங்கே? 
என்று கேட்டால், அடுத்த சம்பவம் ஆகி அவனே தானாக பிரச்னை உருவாக்கி, மீண்டும் என்னை பிளாக் செய்து விட்டு போய் விட்டான்!!

ஆம்! செப்டெம்பர் மாதம் மீண்டும் அவனாக ஒரு சண்டை இழுத்து, எனக்கு பேசி புரிய வைக்க கூட வாய்ப்பு அழைக்காமல் அவனாகவே ஒரு முடிவு எடுத்து தொடர்பை துண்டித்து கொண்டான்..!!

அப்படி என்ன செய்தான் ஷ்ரேயா?
என்று நீங்கள் கேட்கலாம்…

பொழுது போகாமல் வெட்டியாக இருந்து இருந்து போர் அடுத்து விட்டதோ என்னவோ நான் அறியேன், ஒரு ஞாயிற்று கிழமையாக பார்த்து எனக்கு அழைப்பு விடுத்தான்… அதான் என் நம்பரை கேட்டு வாங்கி வைத்து இருந்தேனே, அதற்கு தான்…

ஒரு 12 நிமிடம் பேசி விட்டு, துண்டித்தவன் என்ன நினைத்தானோ திடீர் என நான் அவனை பற்றி பதிவுகள் செய்து இருந்த தனி பட்ட கணக்கில் ஃபாலோ ரெக்வெஸ்ட் கொடுத்து என்னை ஏற்க சொல்லி கொண்டே இருந்தான்…

நான் அதற்கு பத சொல்லவில்லை என்பதால் தான் எனக்கு கால் செய்து இருக்கிறான் என்பதே, எனக்கு அதன் பின்னர் தான் தெரிய வந்தது!!

கிட்ட தட்ட மீண்டும் மீண்டும் வலியுறுத்த, வேறு வழியின்றி வல்வி நான் காதல் கை கூடும் என்ற குருட்டு நம்பிக்கையில், அதை ஏற்றேன்…

சிலவற்றை மட்டுமே பார்ப்பதாக சொல்லிய அவன், முழுவதையும் பார்த்து விட்டான் வெட்டியாக அமர்ந்து இருந்த காரணத்தால்… ஆனால் நானோ எரிமலை வெடித்து சிதற போகிறதை கூட அறியாமல், ஞாயிற்று கிழமை என்று இன்னும் அதிக வேலையில் மூழ்கி போய் இருந்தேன்!!

மதிய உணவு உண்டு முடித்து நான் வந்து பார்க்கும் போது, அவன் பிளாக் செய்த கணக்கின் வெற்றி பக்கம் மட்டுமே என்னை வரவேற்றது!!

அதிலும் இறுதியாக அவன் அனுப்பி இருந்த மூன்று குறுஞ் செய்திகள்…
“இது எல்லாமே நிஜமாவே நீ பண்ண எடிட்டிங் ஆ!!!!! எல்லாமே செம்மையா இருக்கு…”

என்று ஆரம்பித்தவன், ஒரு 20 நிமிடங்களில் அப்படியே அந்நியன் ஆக மாறி அவதாரம் எடுத்து விட்டான்…
“யாரை கேட்டு என்னைய போஸ்ட் போட்டு இருக்க??”
“இது எல்லாத்தையும் அந்த ஆகாஷும் பார்த்தானா!!!?”

இதில் அவன் பெருமை கொள்கிறானா?
கோபத்தில் கொந்தளிக்கிறானா?
இல்லை, பொறாமை படுகிறானா??
என்று எனக்கு விளங்கவில்லை…

ஏற்கனவே ஒரு முறை பிளாக் செய்த போது அழுது ஓய்ந்தவள், இம்முறை எந்த மன்னிப்போ விளக்கமோ தர நினைக்காமல், நான் பாட்டிற்கு நான் உண்டு என் வேலை உண்டு!! என்று கவனத்தை திசை திருப்பி கொண்டேன்…

ஆயினும் உள்ளூர, வெளியில் சொல்ல முடியா வலியும் வேதனையும் என்னை கரையான் போல் அணு அணுவாய் அரித்து கொண்டு தான் இருந்தது!!

அப்படி இருக்கையில், எனக்கு முதல் தேர்வு நடந்து முடிந்தது… பெரும்பாலும் எனக்கு பிடித்து படித்ததால் நல்ல மதிப் பெண்கள் தான் வந்து இருந்தது!! ஆவரேஜ் மாணவையாக ஃபைல் ஆகாமல் இருந்தாலே அது நல்லது தானே…

ஆயினும் “ஹேன்ட் ரைட்டிங் சரி இல்லை!” என்று பல இடங்களில் படிக்காமலேயே வெறும் 3 மார்க் போட்டு விட்டு இருந்தனர்…

அதற்கு மேல் இங்கு பள்ளி போல் பொய் கெஞ்ச எல்லாம் முடியாது, போட்டது போட்டது தான்!!

மேலும் பிறர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து வந்து இருந்ததால், பக்கம் பக்கமாக எழுதி மார்க் அள்ளி இருந்தார்கள்!! CBSE வழக்க படி நானோ, பாயிண்ட் டூ பாயிண்ட் ஆக எழுதி வெறும் பாஸ் மார்க் வாங்கி இருந்தேன்!🙂

மேலும் தமிழ் பேப்பர் இருக்கவே, அதில் எனக்கு எழுதி முடிக்க நேரம் கூட பற்றவில்லை!! நான் தமிழ் படித்தே, 2 ஆண்டுகள் ஆகி விட்டதே… ஆகையால் நேரடியாக ஒரு புதினத்தை, புராண கதைகளை எல்லாம் எனக்கு சுருக்கி, ஒரு கட்டுரை ஆக எழுத தெரியாமல் தத்தளித்தேன்!!

நான் ஏழாம் வகுப்பில் இருந்து CBSE பள்ளியில் தான் பயில்கிறேன், ஆகையால் இது போல் கட்டுரை எல்லாம் பக்கம் பக்கமாக கேட்க மாட்டார்கள்… பத்தி படித்து விடை எழுத, வெற்று கொடுத்த இடம் நிரப்புக, சரியான விடையை தேர்வு செய்க என்று தா வினாத்தாள் கை வலிக்காமல் எழுத கூடிய வண்ணம் அமைந்து இருக்கும்…

“இந்த லட்சணத்தில் நான் எவ்வாறு டிசம்பர் மாதம் வரவிருக்கும் செம்மஸ்டர் தேர்வு எழுதி பாஸ் ஆக போகிறேன்!!!???”
என்று பயந்து தள்ளி ஓடினாலும், அதையும் ஒரு நாள் எதிர் கொண்டு எழுதி முடித்து கல்லூரி விடுமுறையில் இருந்தேன்!!

அப்போது தான் மீண்டும் ஜெஷ்வந்த் தோன்றினான்…

ஆம்! ஐயாவுக்கும் கல்லூரி விடுமுறையில் வீட்டில் தனியாக இருக்க போர் அடிக்கும் அல்லவா!!? அதனால் தான்…

அது தெரியாத பேதை அறிவிலி நானோ, “நான் தான் அவன் அனுமதி இன்றி அவன் புகைப் படங்களை பயன் படுத்தி குற்றவாளியாகிய என்னை அவன் பெருந் தன்மையோடு பெரிய மனசு பண்ணி மன்னித்து இருக்கிறான்!” என்று எண்ணி மகிழ்வோடு, அவன் பேசியதற்கு எல்லாம் பதில் அளித்தேன்…

இம்முறை அவன் 
“நீ ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் போடுவியா!?”
என்று வியப்பாக கேட்டான்..

(ஆம் மக்களே!! இன்றளவும் மதுரையில் பெண்கள் சுடிதார் மட்டுமே அணிவார்கள், அதுவும் இரு பக்கமும் துப்பட்டாவை பின் குத்தி – குடும்ப கவுரவம் கருதி…

ஊருக்கு சென்ற புதிதில் இது தெரியாமல் நான் பல பேரின் பேச்சுக்கு ஆளாகினேன், வெறும் குர்த்தா அணிந்து சென்று…

அது போக சிலரின் குடும்பத்தில் லெக்கிங்ஸ் போட கூட அனுமதிக்க மாட்டார்கள்!!! அதில் கால்களின் வடிவம் அப்பட்டமாக தெரிவதால்…)

நானோ அப்படி எதுவும் கண் மூடி தனமாக அப்படியே பின் பற்றாமல், நாளுக்கு படம் பார்க்க போகும் வேளையில் ஜீன்ஸ் பேண்ட் சட்டை அணிந்து சென்று இருந்தேன்!! அதற்கே பலரும் என்னை அயலான் ஜந்து போல் நின்று வேடிக்கை பார்த்து விட்டு சென்றனர்…

அதில், படுத்தின் டைட்டீல் கார்டு ஓடு சேர்த்து என் குடும்ப படத்தையும் பகிர்ந்து இருக்க, அதை பார்த்து விட்டு தான் வியப்பு அடைந்து, அந்த கேள்வியை கேட்டான் ஜெஷ்வந்த்…

“ஆம்!” என்றேன் இயல்பாக…

“இருபத்தி மூன்றாம் நாள் தேதி அன்று நீ ஃப்ரீயா??”

“ஏன்!??”

“இல்ல… சும்மா அப்படியே வெளிய போய் விட்டு வருவோம்!! வரியா??”

“ஓகே”

அவனே நான் இப்படி படக்கென ஒப்புக் கொள்வேன் என்று எதிர் பார்க்க வில்லை…
அது போக நான் சென்னையில் இருந்து வந்த பெண் என்பதால், இது எனக்கு சர்வ சாதாரண விஷயம் என்று அவனே அவனுக்கு மனதை தேற்றி கொண்டான்…

எங்கு? எதற்கு? ஏன்? செல்கிறோம் 
என்று அத்தனை சுலுவாக ஒப்புக் கொண்ட எனக்குமே தெரியாத விஷயம் தான்…

இதன்று மேலும் நான் ஏன் முதலில் அவன் கேட்ட மாத்திரம் இதை எதுவுமே அறியாமல் ஒப்புக் கொண்டு, வாக்கு கொடுத்தேன்!!!?

இப்போது வீட்டு நான் என்ன சொல்லி சமாளிப்பது??
எனக்கு வேறு பொய் சொல்ல வராதே!!
அப்படி இருக்கும் போது, எப்படி ஏதோ வாய்க்கு வந்த போல் பொய் காரணம் கொண்டு யாரோ ஒருவனோடு வெளியில் செல்வது!!!???
என்று பயத்திலேயே நாட்கள் கழிந்து அந்த நாளும் வந்தது!!

“வருகிறேன்” என்று சொல்லி விட்டு வராமல் கழுத்து அறுக்கும் ரகம் நான் அல்ல…

அதற்கு இடை பட்ட, நான்கு நாளும் அவன் தினம் அழைத்து பேசுவான்… ஆம்! இப்போது கல்லூரி செல்ல ஆரம்பித்ததால், சிம் கார்டு கொடுத்து இருந்தார்கள், ஆனாலும் டேட்டா பேக் மட்டும் தான்!!

ஆகையால், நான் யாருக்கும் கால் செய்ய முடியாது… ஆனால் எனக்கு யார் வேண்டும் ஆனாலும் கால் செய்யலாம்…
BSNL சிம் அதுவும்!!😶‍🌫️
ஸ்பீட் சும்மா சிறுத்தை போல் சீறி பாயும்!!

அப்போது தான் அவன் அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து உள்ளதாக கூறினான்..!!
அது போக இருவர் வந்து பொண்ணு பார்த்து விட்டு, செட் ஆகாமல் நின்று போனதையும் வருத்தத்தோடு தெரிவித்தான்…

அவன் அக்காவோ அமேசான் நிறுவனத்திற்காக வேலை செய்து கொண்டு இருப்பவர், காலை எழுந்து அம்மாவுக்கு உதவி செய்து அவரோடு இவளும் வேலைக்கு புறப்பட்டு செல்ல, அதன் முன்னர் எழுப்பி விட்ட இளவரசர் பொறுமையாக எழுந்து செல்வோமா? வேண்டாமா? என முடிவு எடுத்து, மனசு வந்தால் குளித்து கிளம்புவார்…

இல்லையெனில், மட்டை போட்டு விட்டு இழுத்து மூடி மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்திடுவார்… அதிலும் அவருக்கு பெரிய மன குறை பாடு இப்போது, அவன் கேட்கும் பைக் வாங்கி தராதது தான்!!

அவனுக்கு இருக்கும் ஒரே ஆசை, பிற மாணவர்கை போல் அவனும் அவனுக்கு பிடித்த அவனின் சொந்த பைக்கில் ஒரு நாளேனும் கல்லூரி செல்வது தான்!!

அதற்கு அவனின் அம்மா, “டைனோசர் கேட்டால் கூட வாங்கி தருவேன்! ஆனால் நீ கேட்கும் பைக் மட்டும் வாங்கி கொடுத்து பணத்தை விரையம் செய்ய மாட்டேன்!!!” என்று திட்ட வட்டமாக சொல்லி மறுத்து விட்டாராம்…

சாதாரண பைக் எல்லாம் இல்லை, இப்போது உள்ள இளம் தாரி பசங்க விரும்பி ஒட்டும் யமஹா நிறுவனம் வெளியிட்டு இருந்த MT பைக் தான் வேண்டுமாம்…

அது ஒன்றும் விலை இல்லையாம், வெறும் ஒண்ணே கால் லட்ச ரூபாய் தானாம்..!!

ஆனால் பொண்ணுக்கு கல்யாணத்துக்கு காசு சேர்க்க வேண்டி அதை வாங்கி தராமல் மறுத்து நிந்திக்கிறார்களாம் அவனை அவன் வீட்டில், அவன் பேசும் சில மணி துளியில், பெரும் பாலும் பைக் வணங்க வேண்டும்!! வாங்க வேண்டும்!! என்றே தான் சொல்லிக் கொண்டே இருந்தான்…

அதைக் கேட்ட எனக்கு, கோபம் பொற்றுக் கொண்டு வந்தது… “குடும்ப சூழ் நிலை தெரிந்தும், புரியாதது போல் அடம் பிடித்து சாதிக்க பார்க்கிறான்!!” என்று எண்ணி… ஆனால், சம்மந்தமே இல்லாமல், அவர்கள் குடும்ப விவகாரத் நாம் ஏன் வீணாக தலை இட வேண்டும்?!!” என வரும் ஆத்திரத்தை ஒதுக்கி விட்டு, அவன் பேசுவதற்கு ம்ம் கொட்டி கதை கேட்டு கொள்வேன்!!

இப்போது 23 தேதி டிசம்பர் எங்கே செல்ல போகிறார்கள்!!!?
ஏன் ஜெஷெனத் இடம் இருந்து, இந்த திடீர் அழைப்பு வந்தது?!!!
ஷ்ரேயா முதலில் அன்று அவனை சந்திக்க செல்வாளா????

Thanks for reading மக்களே 🩷 
 

 

❤️ Loading reactions...
6 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page