அத்தியாயம் 01

 

 அத்தியாயம் 01

 “சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்  டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக், 

கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார் “

 

என்று தனது இனிய குரலில் அழகன் முருகனை பாடிக் கொண்டிருந்தாள் ரேவதி சந்திரிக்கா, சந்தனத்தை குழைத்து  தேய்தாற் போல   அழகிய மாநிறம் அடர் கபில நிற கண்கள், செதுக்கி வைத்தாற் போல் செப்பு இதழ்கள் அலையலையாய் நீண்டு வளர்ந்த கருங்கூந்தல் கூர்நாசியில் ஒற்றைக்கல் மூக்குத்தி சற்றே பூசினாற்போல உடல்வாகு, முகத்தில் குறைவில்லாத லட்சுமி கடாட்சத்துடன் திருமண கலையும் இணைய தங்கமாக ஜொலித்தாள் பெண்ணவள், 

இன்னும் இரண்டு  மாதத்தில்  பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட   மணமகன் அஷோக்குடன் அவளுக்கு திருமணம் நடக்கவிருக்க வீடே திருமண கலையில் ஜொலித்துக் கொண்டிருக்க,

 

அதற்கு எதிர்மாறாக  அவளது ஆளுயர ஓவியத்தையும் அதை சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்த அவளது புகைப்படங்களையும் கண்களில் ஒருவித காழ்ப்புணர்ச்சி மின்ன பார்த்தபடி தங்க நிற திரவத்தை வாயில் சரித்து கொண்டிருந்தான் அவன்,

அவனது வீட்டில் கலைநயப் பொருட்களுக்கும் விலைமதிப்பற்ற பொருட்களுக்கும் குறைவில்லை வீட்டில் மூலை முடுக்கெங்கிலும் செல்வத்தின் செழிப்பு ஆனால் அதற்குண்டான கலையோ தேஜஸோ எதுவுமில்லாது வீடே ஒரு வித அமங்கலமான இருளுடன் கூடிய திகில் தோரணையில் பாழடைந்து போயிருக்க 

அவனது அறைக்கதவு ‘க்ரீச்’ என்று ஒலியெழுப்பியபடி திறந்து கொள்ள அவ்வளவு நேரம் சாதுவாக அவனுக்கு எதிர் திசையில் மஞ்சள் நிற கண்களுடன் கபிலமும் ஒரு வித சாம்பல் கலந்த வெள்ளை நிறமுடைய ஆந்தையோ

“ஹூ ஹூஹூ  ஹூ ” என்று ஒலியெழுப்பியபடி தனது எஜமானுக்கு அவனுடைய ஆருயிர் தோழனும் அவனுடைய பிரத்யேக உதவியாளனுமாகிய சாணக்கியனின் வரவை உணர்த்த 

கையிலிருந்த மதுக் குவளையை ஓரமாக வைத்தவன் தான் வழமையாக புகைக்கும் உயர்ரக சிகரை புகைத்தபடி எழுந்துக் கொள்ள அவனோ ஆறடிக்கு குறையாது பரந்த விரிந்த தோளுடன் கடோதகஜனாக நிமிர்ந்து நிற்க அவன் வளர்க்கும் ஆந்தையோ  அவனது மேல்ச்சட்டையற்ற தோளில் ஒய்யாரமாக  அமர்ந்தபடி  எஜமானுக்கு குறையாத திமிருடன் சாணக்கியனை  எள்ளலுடன்  கலந்த கேள்விப் பார்வை பார்க்க 

சாணக்கியனுக்கோ, ‘ஏன் இங்கே வந்தோம் ?’ என்பது போல் உள்ளுக்குள் ஒருவித நடுக்கம் பரவ 

“ஆதி  நான் கொஞ்சம் லைட்ட போட்டுக்கிட்டு பேசட்டுமா ?” என்று ஒருவித நடுக்கம் கலந்த குரலில் வினவ ஆதியோ 

“எபிக்கு லைட் புடிக்காது அதான் கேண்டில் வெளிச்சம் இருக்கே நீ சொல்ல வந்த விஷயத்தை சொல்லு “

என்று ஒரு வித மென்மையான மிரட்டல் கலந்த குரலில் ‘சொல்ல வந்ததை சொல்’ என்பதை  சொல்லாமல் சொல்ல 

“ஆதி நான் சொல்லபோற  விஷயம் கொஞ்சம் பெருசு கொஞ்சம் பொறுமையா கேட்கணும் நீ கோபப்படக்கூடாது “

என்று தட்டுத்தடுமாறி  கூற வந்ததை கூறி முடிக்க    அவனை பார்த்து 

மீண்டும் சிகாரை  வட்டவட்டமாக  ஊதி தள்ளியவன் கபில நிற கண்களோ அது நீ சொல்லப்போகும் விடயத்தை பொறுத்தது என்பது போல் பார்த்து வைக்க 

சாணக்கியனோ அவன் கைகளில் ஒரு திருமண அழைப்பிதழை வைத்தபடி 

“ஆதி அந்த பொண்ணுக்கு கல்யாணம் முடிவு பண்ணிருக்காங்க இன்னும் ரெண்டு ரெ..ண்டு மாசத்துல கல்யாணமாம்”

என்றது தான் தாமதம் அவனை பார்த்து, “ஹா ஹாஹா ம்கூம் ஹாஹா “

என்று  பித்து பிடித்தவன் போல் சிரிக்க சாணக்கியனுக்கோ வயிற்றில் புளியை கரைத்தது.

“ஆதி நான் உண்மைய தான் சொல்றேன்  உங்க அம்மா இத உன்கிட்ட கொடுத்துட்டு இனி அந்த பொண்ணு வாழ்க்கையில தலையிட வேணாம்னு சொன்னாங்க “

என்று முடிக்குமுன் அவனது குரல்வளையை அழுத்தி பிடித்திருந்தான் விஷ்வ ஆதித்யா கருங் கபிலநிற கண்களில் அனலை காக்கும் பார்வை தினசரி மேற்கொள்ளும் உடற்பயிற்சியால்  முறுக்கேறியிருக்கும்  உடற்கட்டுடன் மேலும் அவனது கோபமும் ஒரு சேர நரம்பெல்லாம் புடைக்க ஒரு வித அரக்க தோரணையுடன் நிற்க அவனுடைய பலத்திற்கு சமனான பலத்துடன் இருக்கும் சாணக்கியனுக்கே அவனது பிடியிலிருந்து வெளிவர சற்று நேரம் பிடித்தது 

ஆதித்யாவை போலவே அவன் வளர்க்கும் ஆந்தை எபியும் சாணக்கியனை வெட்டவா குத்தவா என்று முறைத்துப் பார்க்க சாணக்கியனோ இருவரது பார்வையிலும் மிரண்டு 

“இங்கபாரு நான் ஒன்னும் இதெல்லாம் தானா சொல்லல உங்க அம்மா சொல்ல சொன்னாங்க அதத்தான் சொன்னேனே தவிர இதெல்லாம் என்னோட ஓப்பினியன் கிடையாது “

 

என்று தட்டு தடுமாறி கூறி முடிக்க,  அவன் கையில் வைத்திருந்த திருமண அழைப்பிதழை வெறித்து பார்த்திருந்தவன் ரேவதி சந்திரிக்கா என்று அச்சிடப்பட்டிருந்த பெயரை தவிர்த்து முழு அழைப்பிதழையும் நெருப்பிலிட்டு பொசுக்கியிருக்க 

அதை பார்த்த சாணக்கியனுக்கு ஒருவித குளிர் பரவ “இங்கபாரு ஆதி நீ பண்றதெல்லாம் பார்க்கும் போது பயமாயிருக்குடா நீ ஒரு தடவ அந்த “

என்று ஏதோ சொல்ல வர ஆதியோ, “நிறுத்து நீயும் எங்க அம்மா சொல்றமாதிரி அந்த பொண்ணு வாழ்க்கைய கெடுத்துட்டனா ?”

சாணக்கியனோ மனதுக்குள், ‘சொன்னாலும் சொல்லாட்டியும் அதுதான் நிஜம்’ 

என்று நினைத்தபடி அவனை ஏறிட எபியோ அவன் மனநிலையை கணித்ததோ என்னவோ,

‘எங்க பாசையே குறை சொல்றியா ?’ என்று நினைத்து கொண்டு    அலறியபடி பறந்து வந்து சாணக்கியனின் தலையில் சொட்டென கொத்த

சாணக்கியனோ, “இங்கபாரு ஆதி நான் வாரது பிடிக்கலைன்னா சொல்லு   இப்டி  ஆந்தையை    விட்டெல்லாம்    அட்டாக்  பண்ண  வைக்காத”

என்று கூற  அவனை பார்த்து நக்கலாக     புன்னகைத்தவன்   

“எபிய  ஆந்தைனு  சொல்லாதடா  கோச்சிக்க  போறான்”

என்றபடி தனது வெண்ணிற மேற்சட்டையை மாட்டிக் கொண்டவன்   

“சாணக்கியா நான் கொடுத்த டூ இயர்ஸ் இன்னும் எவ்ளோ நேரமிருக்கு ?”

என்று கேட்டுக்கொண்டே  கார்  சாவியை    எடுக்க  

சாணக்கியனோ “இன்னும் ஒரு வாரமிருக்கு ஆதி ” என்று எச்சில் கூட்டி விழுங்க 

அவனோ, “சூப்பர்” என்று ஒரு வித துள்ளலுடன்  எபியுடன் வெளியே வர,

இங்கு ரேவதியோ தனது நண்பிகளுடன் சிரித்து கதைத்து கலகலத்துக் கொண்டிருக்க 

அவளது பெற்றோரும் சித்தியும் அவளது திருமணத்திற்கு இன்னும் ஒன்றரை மாதமே இருப்பதால் திருமண பத்திரிகைகளை முக்கியமான உறவினர்களுக்கும் குடும்ப நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்க கிளம்பிக் கொண்டிருந்தனர்.

நண்பர்களுடன் லயித்திருந்தவளுக்கு  ஏதோவொரு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு  வர அதை ஏற்றவளோ,

“ஹலோ ஹலோ ” என்று மீண்டும் மீண்டும் அழைக்க  அப்பக்கமிருந்து பெருமூச்சு மட்டுமே பதிலாக வர அவளது இதயமோ பலமாக அடித்துக் கொண்டது 

இருந்தும் தைரியத்தை வரவழைத்தபடி “ஹலோ ” என்று மீண்டும் அழைக்க 

அப்பக்கமோ “பூனக்குட்டி” என்று ஒரு ஆண்குரல் மென்மையாக அழைக்க 

அவளுக்கோ கைகால்களெல்லாம் படபடவென நடுங்க போனை அப்படியே கையிலிருந்து நழுவ விட்டிருந்தாள் 

கண்களிலிருந்து கண்ணீர் வழிய   அப்படியே மடங்கி அமர்ந்தவளுக்கு பயத்தில் நா வறண்டு கண்ணீர் தாரை தாரையாக வழிய வியர்த்து விறுவிறுத்து அமர்ந்திருந்தவளுக்கு 

என்ன செய்வதென்றே புரியவில்லை, ‘நரகம் எப்படி இருக்கும் தெரியுமா ?’

என்று அவளிடம் யாரவது  கேள்வி கேட்டால் அவள் சொல்லும் பதில் ‘ஆம்’ என்பது தான் இப்படியே கையும் ஓடாமல் காலும் ஓடாமல்  அமர்ந்திருந்தவளை 

நோக்கி வந்த அவளது நண்பி அனிதாவோ,

ரேவதியினருகில் அமர்ந்தபடி அவள் தோளை தொட  திடுக்கிட்டு விழித்தவளோ அனிதாவிடம் 

“அனி அவன் வர்றான் என்ன தேடி வர்றான்” என்று பயத்தில் பிதற்ற ஆரம்பிக்க 

அவளை இறுக்கி பிடித்த  அனிதாவோ, “கொஞ்சம் பொறுமையா இரு யாரு என்ன ? கொஞ்சம் தெளிவா சொல்லு”

அவளோ கண்களை துடைத்து விட்டு

“என்னோட  எக்ஸ் ” என்று ஏதோ சொல்ல வர  

அனிதாவோ, “யாரு அந்த பொறுக்கி விஷ்வவா ?”

ரேவதியோ நடுங்கியபடி ஆம் என்பதாக தலையசைக்க அனிதாவோ,

“அவன் ஏன் உனக்கு கால் பண்ணுறான் ? அதுவும் ரெண்டு  வருஷம் கழிச்சு”

அதற்கு எச்சில் கூட்டி விழுங்கிய பெண்ணவளோ,

“தெரியலடி ” என்று கூறிவிட்டு சற்று நேரம் எதையோ யோசித்தபடி நெற்றியை தாங்கியபடி   அமர்ந்திருந்தவள் மனதுக்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள் 

அவளது எண்ணங்களின் தன்மையை பிரதிபலிக்கும் விதமாக வெளியில் கருத்த மேகங்கள் மழையை பொழிய அதை சற்று நேரம் வெறித்து பார்த்தவளுடைய காதுகளை 

“இன்னும் ஒரு வாரத்திற்கு இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது” 

என ஒரு பெண்மணி இலங்கையில் காணப்படும் பிரபல தொலைக்காட்சி அலைவரிசையான ‘எ. டீ .என்’ இல் செய்தி வாசிக்க அவளுக்கோ உதட்டினோரம் நக்கல் சிரிப்பா? அல்லது விரக்தி சிரிப்பா? என்று தெரியாத ஏதோவொன்று தோன்றி மறைய மனதுக்குள்

‘எ.டீ.என்’ என்ற பெயர் மட்டும் அவள் கண்களை விட்டும் கருத்தை விட்டும் அகலவில்லை ஆழ பெருமூச்செறிந்தவள் தற்போது தெளிவாக யோசிக்க ஆரம்பித்திருந்தாள். 

அதே சமயம் அவளை நோக்கி “ம்மா” என்று ஓடி வந்த ஒரு வயது பெண் குழந்தையையும் மூன்று வயது ஆண் குழந்தையையும் கட்டிக்கொள்ள

இருவரையும் பாகுபாடில்லாமல் தூக்கிக் கொண்டவளை நோக்கி அமைதியான புன்னகையுடன் சாந்த சொரூபியாக வந்து நின்றான்  அஷோக், 

அவனை பார்த்ததும் முன்பிருந்த இறுகிய மனநிலை தளர்ந்து புன்னகை  சிந்தியவள்   

“வாங்க அஷோக்” என்று தேஜஸுடன் வரவேற்றவளிடமிருந்து குழந்தை நிவிதாவை வாங்கிக் கொண்டவன் 

“என்ன  ரேவு  ஏதாவது  பிரச்சனையா? ஏன் ஒரு மாதிரி இருக்க?”

அவளோ, “இல்ல அஷோக்   கொஞ்சம் தலைவலி அது தான்”

என்று சமாளித்தவளை அவளது செல்ல மகன் அஷ்வினோ 

“அம்மா உங்களுக்கு தலைவலிக்குதா ? நான் வேணும்னா புடிச்சு விடட்டுமா?”

என்று அன்னையின் தலையை பிஞ்சு விரல்களால் அழுத்திய மகனின்  கைகளில்  முத்தம்  வைத்தவள் தொடர்ந்து திருமண வேலைகளை பார்த்தவள் 

மீண்டும் இளகிய மனம் மீண்டும் பழையதை நினைத்து இறுகிப் போக 

மகளை தூங்க வைத்து தனது படுக்கையில் கிடத்தி விட்டு சுற்றியே தலையணைகளை அடுக்கி பாதுகாப்புக்காக வைத்தபடி நின்றிருக்க 

அவளருகே வந்த அனிதாவோ, “என்னடி ஏதோ யோசிச்சுக்கிட்டே இருக்க என்ன பண்ண போற ?”

ரேவதியோ பெருமூச்செறிந்தபடி “ஒரு தடவ பேசி பார்க்கலாம்னு தோணுதுடி”

அனிதாவோ “ஏய்! பைத்தியமா உனக்கு என்னடி பேசிட்டு இருக்க ? உனக்கு அறிவிருக்கா ?” என்று நல்ல நண்பியாக கடிந்துக் கொள்ள 

கசப்பாக புன்னகைத்த ரேவதியோ, “எனக்கு என்ன நடந்தாலும் பிரச்சினை இல்ல ஒரு தடவ பேசி பார்க்குறேன் முடியாது அப்டி இப்படின்னு குதிச்சா என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்”

என்றவள் அத்தோடு நில்லாமல் அவளது அழைப்பேசிக்கு கடைசியாக அழைத்திருந்த எண்ணுக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்த  

 அப்பக்கம் ரேவதியின் எண்ணை பார்த்து  உதட்டை சுளித்து ஒரு மார்க்கமாக சிரித்த விஷ்வ ஆதித்யாவோ, அழைப்பை வேண்டுமென்றே நிராகரிக்க 

இங்கு ரேவதியின் நலன் விரும்பி அனிதாவோ சாணக்கியனின் எண்ணுக்கு கோபத்துடன் குறுஞ்செய்திகளை அனுப்ப அவனது மொபைலுக்கு அடுத்தடுத்து வந்த குறுஞ்செய்திகள் வர 

அதை கவனித்த ஆதித்யாவோ, “என்னடா கேர்ள் ப்ரெண்டா ?”

என்று நமுட்டு சிரிப்புடன் வினவ சாணக்கியனோ மனதுக்குள் ‘ஐயோ நம்ம வாழ்க்கையில விளையாடிருவான் போல’ என்று எண்ணியபடி 

சாணக்கியனோ, வியர்த்து வடிந்தபடி “அதெல்லாம் ஒண்ணுமில்லடா  பிரெண்டு தான் தெரிஞ்சவங்க” என்று முடிக்குமுன்  அவனது போனை எடுத்து  நோண்ட தொடங்க சாணக்கியனுக்கோ மனதுக்குள் ஆயிரம் போராட்டம் 

ஆனாலும் தைரியத்தை வரவழைத்தபடி, 

“ஆதி அது என் போன்டா” என்று இழுக்க அவனோ அசால்ட்டாக 

“இருந்துட்டு போகட்டும்” என்றானே பார்க்கலாம் சாணக்கியனுக்கோ தலைக்குள் கிறுகிறுவென வந்தது 

அப்பக்கம் அனிதாவோ சாணக்கியன் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என நினைத்து 

ஆதித்யாவை வண்ணவண்ணமாக திட்டி அவனுக்கு மெசேஜ் செய்திருக்க 

அதைப்பார்த்த ஆதித்யாவுக்கு சிரிப்பு தான் வந்தது. 

“என்னடா  என் முன்னாடி   பம்முவா உன்கிட்ட புலிக்குட்டி கணக்கா பேசுறா” 

என்றதும் சாணக்கியனோ உண்மையில் இவ்வளவு நிதானமாக பேசுவது தன் நண்பன்தானா? என்று ஆச்சரியமாக இருந்தது அதே ஆச்சரியத்துடன் ஆதித்யாவை திரும்பி பார்த்தவன் 

“ஆதி நீயாடா இவ்வளவு பொறுமையா பேசுற ?” அவனோ கன்னக்குழி தெரிய சிரித்தவன் 

“நான்தான்டா பேசுறேன் வாழ்க்கையில சிலவேளை சமூகமும் குடும்பமும் கத்து தராத பாடங்களை பிடிச்சவங்களோட  ஒதுக்கமும் வெறுப்பும் கத்து தரும் எல்லாத்தயும் கொஞ்சம் நிதானமா பார்த்திருந்தா இந்த நிலைமை எனக்கு வந்திருக்காது “

என்று சாய்ந்தமர்ந்துக் கொண்டவன் தொண்டையை செறுமியபடி 

 

“ஆனா அவ விஷயத்துல எப்போவும் சுயநலவாதி தான் அவ வேணாம்னு சொன்னாலும் தூக்கிட்டு வந்துருவேன் “

என்று வானத்தை   பார்க்க   அதுவோ  அவனது மனம் போலவே  கருத்து சரசரவென பேய் மழையை கொட்ட துவங்கியது.

 

                                                 தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page