திரையிட்டு விலகாதே! -14

திரையிட்டு விலகாதே!

 

அத்தியாயம் -14
 

 

Hiiii வாசகர்களே ✨ 
 

 

டிசம்பர் 23 என காட்டும் வாட்சை எடுத்து மணிக் கட்டில் கட்டி கொண்டே என்னை நான் ஒரு முறை சரி பார்த்து கொண்டேன்!
 

 

செர்ரி பழ சிவப்பில் லாகோஸ்டே டி ஷர்ட், அடர் நீல நிற ஜீன்ஸ், சைட் வே போனி டெயில் கூந்தல் என்று பார்க்க லட்டு குட்டி என கொஞ்சும் அளவு அழகாக தான் தெரிந்தேன்!!
 

 

காதல் கொண்ட பெண்கள், காதலனை காண போகும் அந்த தருணத்திற்காக, சிறப்பாக அலங்காரம் செய்து தயார் ஆவது ஓர் தனி சுகம் தானே!!
 

 

அதை நம் கதா நாயகி அம்மணி வாழ்வில் முதல் முறையாக அனுபவிக்கிறாள், தனது வாழ்வின் 15 ஆவது அகவையில்…
 

 

“சிலருக்கு இது வெகு சீக்கிரம்!!” என தோன்றலாம்.. ஆனால் இப்போதைய நிலவரமான மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே காதலர்கள் ஆகி வருகிற நிலையில், இது வெகு தாமதம்!!
 

 

செருப்பு அணிந்த பின், டைமர் வைத்து ஒரு செல்ஃபி எடுத்து பார்த்தேன், அதில் ஒரே குறை செருப்பு தான்!! 
 

 

ஆகையால் வெகு நாட்கள் கழித்து, ஸ்கெச்சர்ஸ் பிளாக் ஷூ வித் ஒயிட் பேஸ் தூங்கி கொண்டு இருப்பதை எடுத்து அணிந்தேன்… என் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு, அவன் சொன்னார் போல் என் அண்ணன் கல்லூரி வாசலுக்கு எதிரில் செல்லும் சாலை பிரிவில், ஒரு வங்கி வாசலில் காத்து இருந்தேன்!!
 

 

என் அம்மா, கீழ் வீட்டு குட்டி பையனுக்கு பாப்டிஸம் செய்வதற்கு அழைப்பு வந்ததால் அங்கே சென்று இருக்கிறார்… அன்று தான் அவனுக்கு காதணி விழாவும் வைத்து இருந்ததால் மாலை தான் வீடு திரும்புவார்…
 

 

கொஞ்சம் வெயிலாக இருந்தது!

 

அதை விட எனக்கு பட படப்பாக இருந்தது, அவன் காலை கால் செய்து சொன்ன விஷயம் தான்… 
 

 

“ஹலோ.. சொல்லுங்க”
 

 

“ஹான் R15 பைக் ஃப்ரெண்ட் கிட்ட இருந்து வாங்கி இருக்கேன்!! உனக்கு உட்கார ஹைட் பத்துமா?? 
 

 

அதுக்கு ஏத்த மாதிரி டிரஸ் போட்டு வா!

 

அந்த பேங்க் பக்கத்துல வந்துரு 11:30 மணிக்கா.. நான் வந்து உன்னய பிக் அப் பண்ணுகிறேன்!” 
 

 

என்று அவன் பாட்டுக்கு சொல்லி விட்டு, அழைப்பை துண்டித்து விட்டான்…

 

அதன் விளைவு, நான் வங்கி அருகில் காத்து நின்றவாறு யூடியூப்பில், “ஸ்போர்ட்ஸ் பைக்கில் பின்னால் எவ்வாறு அமர்வது?” என்ற வீடியோ பதிவை பார்த்து கொண்டு இருந்தேன்!!
 

 

ஏதோ ஒரு உணர்வு வந்து, நான் நிமிர்ந்து பார்க்க அவன் சாலையின் அந்த பக்கம் என்னை சரியாக பார்த்து பிரேக் அடித்து நின்று இருந்தான்!!
 

 

“முதுகில் காலேஜ் பேக் மாட்டி கொண்டு பாரின் பள்ளி மாணவி போல் இருக்கிறேன்!” என்று ஒரு மொக்கை காம்பிளிமென்ட் கொடுத்து, ஏறி அமர சொன்னான் எனக்கு எட்டதோ என்ற எண்ணத்தோடு..
 

 

என்னை எத்தனை ஆண்டு கழித்து பார்த்தாலும், எல்லோரும் சொல்லும் விஷயம் இதுவே… “ஹேய் அப்பிடியே இருக்க…” இவனும் அதே போல் சொன்னான்…
 

 

என் இடுப்பு உயரத்திற்கு R15 பைக்கின் pin சீட் இருந்ததால், நான் இயல்பாக படக்கென ஏறி அமர்ந்து விட்டேன்… ஆனால் அவனுக்கு தான் கால் எட்டி எட்டி தரையில் ஊண்டுவது போல் இருந்தது!
 

 

ஒரு முறை யூ டர்ன் எடுக்க தடுமாறினான்..

 

பிறகு சமாளித்து கொண்டு நேராக எங்கள் பள்ளி செல்லும் பாதையிலேயே சென்றான்.. டேட்டிங்காக அழைத்து, பள்ளிக்கு கூட்டி சென்ற முதல் ஆண் மகன் என்ற பெருமை அவனையே சேரும்!!
 

 

ஒரு வேகத்தில், சாலையை கிராஸ் செய்து வந்து ஏறி விட்டேன். ஆனால், அவன் பின்னால் அமர்ந்து இருப்பது சற்று பயத்தையே கொடுத்தது! 
 

 

முதுகில் இருந்த பேக் இருவருக்கும் இடையில் வைத்தால், என்னால் அமரவே முடியவில்லை… பின் இருக்கை அவ்வளவு குட்டியாக இருந்தது!
 

 

பிறகு அவன் பைக் ஸ்டார்ட் செய்ததும் தான், எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது! “சட்டை பின்னால் பறக்குமே…”

 

ஆதலால் கொண்டு வந்த பையை மீண்டும் முதுகிலேயே மாட்டிக் கொண்டேன்!!
 

 

ஒரே நல்ல விஷயம், இருக்கையின் உயர வித்தியாசம் காரணமாக என் நெஞ்சு அவன் முதுகில் உரசாமல் இருக்கும் அளவு இடைவெளி இருந்தது!!
 

 

அவன் ஒரு முறுக்கு முறுக்கியதும், பைக் உறுமி கொண்டு பறக்க, என் உயிர் ஒரு நிமிடம் எம தர்ம ராஜாவிடம் சென்று வந்தது!! கைப்பிடியே இல்லை…
 

 

ஆகவே முன்னால் சாய்ந்து அவன் வயிற்று பகுதி அருகில் இருக்கும் பெட்ரோல் டேங்க் இடத்தை தான் என் உயிர் கவசமாக இறுக பற்றி கொண்டு இருந்தேன்!! மிக வேகமாக எல்லாம் அவனும் ஒட்டாமல், மிதமாக தான் சென்றான்…
 

 

அந்த தருணம் ரசிக்க தக்கதாக தான் தோன்றியது! ஏன் எனில் பிடித்த பைக் அதுவும் எனக்கு பிடித்த நிறத்தில், மனதிற்கு பிடித்த நபரோடு ஒரு சாலையோர பயணம் என்பது உலகில் யாருக்கு ஆயினும் அது இதமாக தானே இருக்கும்!!
 

 

என்ன ஒண்ணு?

 

அவன் பேசிக் கொண்டே வந்தான்…

 

ஆனால் பாவம் அவன் குரலை எல்லாம் எதிர் காற்று அள்ளி சென்று விட்டது, என் காதுக்கு எட்டாமல்… 
 

 

ஆயினும், யாரும் மனமும் கோணாமல் நடக்கும் நான் அவன் பேசுவது கேட்குதோ இல்லையோ, ம்ம் ம்ம் என்று நன்றாக கதை கேட்டு கொண்டேன்!!
 

 

அவன் டெனிம் ஷர்ட், கருப்பு லைக்ரா பேண்ட், கருப்பு வெள்ளை கிராக்சு காலனி அணிந்து இருந்தான்!! அப்போது தான் குளித்து இருப்பான் போலும், இதமான சோப்பு வாசம் என் நாசியை நிரப்பியது நான் முன்னால் குனிந்து அவன் தோள் பட்டைக்கு மேல் முகம் வரும் படி அமர்ந்து இருக்கையில்…
 

 

நான் சொல்லியது போல், அந்த கிராம பகுதி தாண்டியதும் ஹைவே சாலை தான்… அதில் இது போல் பற்றிக் கொண்டு அமர தேவையில்லை, என வீடியோவில் பார்த்து இருந்தேன்!!
 

 

மெல்ல மெல்ல அந்த பெட்ரோல் டேங்க் மீதில் இருந்து கையை விலக்கி, நிமிர்ந்து அமர்ந்தேன்!! ஏதோ முதல் தளத்தில் அமர்ந்து இருப்பது போல் காற்று ஜில் ஜில் என்று முகத்தில் வீசியது, என் கூந்தல் அலை பாய அப்படியே சினிமாவில் வருவது போல் இரு கையை நீட்டி ஒரு பறவை போல் அந்த தருணத்தை அனுபவித்தேன்!!
 

 

பிறகு மொபைல் எடுத்து வீடியோ பதிவு செய்தேன்… அப்போது தான் எங்கள் இருவரின் நிழல் தரையில் இருப்பதை கண்டு, கஷ்ட பட்டு ஆதி ஒரு புகை படம் பிடித்து கொண்டேன்… அதற்குள் ஜெஷ்வந்த் எங்கள் ஸ்கூல் இருக்கும் வளாகத்திற்குள், தடக்கென வண்டியை ஏற்ற எதிர் பாராமல் நானோ இல்லை மொபைலோ விழுந்து இருக்கும், என்பது போல் ஒரு நிலை…
 

 

ஆனால், விழுந்தது என்ன தெரியுமா?

 

நானும் அவனும் என்று எங்கள் இருவருக்கும் மத்தியில், v ஆங்கிளில் வானத்தோடு ஒரு போட்டோ!!

 

செம்மையான ஒரு காண்டிட் தருணம், என் பயத்தால் கிடைத்தது…
 

வலது பக்கம் என் சிவப்பு நிற டிஷர்ட் என் போனிடையில்… இடது பக்கம் அவனின் ப்ளூ சட்டை அணிந்த முதுகும் கருப்பு ஹெல்மெட் அணிந்த மண்டையும் இருவருக்கும் மேல், நீல வானம் நீளமான லாங் ஆங்கில் ஷார்ட் அது🩵

 

 

7 ஸ்பீட் பிரேக்கர் என் முதுகு தண்டை உடைத்து விட்டது எனலாம்🙃😮‍💨 ஆயினும் வீடியோ எடுத்து கொண்டே தான் இருந்தேன்!!
 

 

பள்ளியின் பிரைவேட் வேன் நிறுத்தும் இடத்தில், பைக்கை நிறுத்தி விட்டு நான் இறங்க அவன் தலையை கோதிய படியே ஒரு 5 நிமிடம் பேசினோம்… ஆனால் சேர்ந்து உள்ளே செல்லவில்லை!
 

 

நான் முதலில் என் பன்னிரண்டாம் வகுப்புக்கு சென்று தான் பார்த்தேன்! அன்று கடைசி நாள் அதுவுமாக, நானும் வைஷூ எங்கள் பெயரை கிடைத்த இடம் பூராக எழுதி வைத்தோம்! அதிலும் நான் குறிப்பாக அவன் பெயர் இருக்கும் இடம் எல்லாம் அதன் பக்கத்தில் என் பெயர் எழுதினேன்😌 #Shre

அதன் பின்னர் TC, conduct certificate, 11th மார்க் ஷீட், முழு ஆண்டு பீஸ் பணம் கட்டியதால் அரசாங்க விதியின் படி கொஞ்சம் மிச்ச பணத்தை வங்கி செக் ஆக போட்டு கொடுத்தனர்!

ஒரு கட்டத்தில் நான் என் கிளாஸ் ஆசிரியை ஓடு பேசி கொண்டு வருகையில், அவனும் அவனின் அபிமான சார் ஓடு பேசி கொண்டு எதிரில் தோன்றினான்… நாங்கள் இருவரும் சேர்ந்து வந்தார் போல், ஒரு ரியாக்ஷன் கூட காட்டிக் கொள்ளாமல் கடந்து சென்றோம்..!!

அதுவும் அவன் “ஓ ஜன்னல் எல்லாம் இருக்கா ஸ்கூல் ல!!?” என்று பார்வையை பக்க வாட்டில் திருப்பி பார்க்க, நான் சுத்தம்… சம்மந்தமே இல்லாமல் மேலே பார்த்து, “ஓ சீலிங் இருக்கா?!!” என ஏதோ கோவில் ஓவியம் பார்த்தார் போல் வியந்தேன்🙂

பிறகு, அவன் இன்னும் வரவே இல்லை… 
பேசிக் கொண்டே இருக்கிறான் போல, என நான் மட்டும் அந்த மேட்ச் நடந்த மைதானத்தில் வந்து நின்றேன்!! செல்ஃபி எடுக்க, 2 மணி உச்சி வெயிலில் பளிங்கு சிலை போல் என் முகம் மின்னியது… ஒரு vlog வீடியோ கூட பதிவு செய்து கொண்டேன்!!

அப்படியே நடந்து வெளியேறி, பைக் அருகில் வந்து மரத்தடியில் காத்து இருக்க அவனும் சற்று நேரத்தில் வந்தான்… 
“நீ கொஞ்சம் முன்னாடி நட… நான் அப்படியே பைக் எடுத்துட்டு வரேன்!” என்றான் அவன் கிளாஸ் டீச்சர் பார்த்து அவன் அம்மாவிட தெரிவித்து பிரச்னை வராமல் தடுப்பதற்காக…

நானும் நர்சிங் காலேஜ் ஹாஸ்டெல் வரை நடந்தேன், அவன் வரவும் ஏறி அமர…
“என்ன இவ்வளோ வேகமாக நடக்குற!!!?” 
என வியந்து கேட்டான், ஆனால் இம்முறை என்ன நினைத்தானோ பைக்கின் கண்ணாடியை முன்னால் எதுவுமே தெரியாதவாறு மடக்கி விட்டான்!!

வரும் போது வாய் ஓயாமல் பேசியது போல், போகும் போது ஒன்றும் பேசவில்லை!! நான் சும்மாவே பேச மாட்டேன், ஆகையால் ஒரு கனத்த மௌனம் நிலவ என்னை அந்த வங்கி வாசலிலேயே இறக்கி விட்டான்…

நான் இயல்பாக முகத்தை வைத்து, மனதின் மகிழ்ச்சியை மறைத்தவாறு இறங்கி பாய் என டாட்டா காண்பித்து விட்டு, என் வீட்டை நோக்கி கிளம்பும் வரை அவன் பார்த்து கொண்டே நின்று விட்டு அவனும் கிளம்பினான்!!

இது நிச்சயமாக டேட்டிங் இல்லை🥴
ஆனால் என்னவென்றே தெரியாமல் இருவரும் ஒன்றாக மீண்டும் ஓர் ஆண்டு கழித்து படித்த பள்ளிக்கு போய் வந்தோம், மீண்டும் ஒரு புயல் வீச போவது தெரியாமல்… 🌝🌚🌝

அப்படி என்ன புயல்?!!
ஏன் மீண்டும்??? 
என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் ✨

Thanks for reading மக்களே 🩷 
 

 

❤️ Loading reactions...
2 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page