இதயத்தின் மொழி -4

க்ரிஷ் (அர்ஜூன் ப்ரண்டு): “மச்சா இன்னும் எத்தனை நாளைக்கு டா. வீட்டுக்கு தெரிஞ்சா ஃபீல் பண்ணுவாங்க டா”.

அர்ஜூன் : “அதுக்காக தான் மச்சா அவங்ககிட்ட சொல்லலாமா !! என் மனசுலயே வைச்சு நொந்துட்டு இருக்கேன்”.

க்ரிஷ்: “இன்னய்க்கே அதுலா மறந்துட்டு வீட்டுல இப்போ பார்த்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ மச்சா. நீ வேணும்னா பொண்ணு ஃபோட்டோ பாரு டா”.

அர்ஜூன் :” ஃபோட்டோ பாத்தாலும் என் மனசு மறாது டா”.

க்ரிஷ் : “ஏன் டா இப்படி உன்னை நீயே கஷ்டப் படுத்திட்டு இருக்க”.

அர்ஜூன்: மச்சா..நீ என்ன சொன்னாலும் சரி டா..”சண்டே அந்த பொண்ணை பாத்து இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லத்தான் போறேன்”.

க்ரிஷ்:” இதுக்கு மேல நான் என்ன சொல்றது. உன் தலை எழுத்து. உன் தலையில நீயே மண்ணு போட்டுக்குற..எனக்கு என்னமோ உனக்காக பொறந்தவ இவ தான்னு தோணுது”.

அர்ஜூன் ஒரு மாதிரி விராக்தியா சிரிக்குறான்.

க்ரிஷ்: போகும் போது கொஞ்சம் சேவ் பண்ணி நீட்டா போடா.

அர்ஜூன்: “பாக்கலாம். பாக்கலாம் இப்பே போய் வேலையை பாரு டா”.

க்ரிஷ்: “நான் போறேன் சாமி”. “நீங்க உங்க வேலையை பாருங்க”.

அர்ஜூன் கொஞ்ச நேரம் ஏதோ நினைச்சு மேல பாத்துட்டு இருந்து அவன் வேலையில பிஸி ஆகுறான்.

அபி கொஞ்ச நேரம் கழிச்சு கீழே வரா.

கௌசல்யா: “எங்க அபி கிளம்பிட்ட”!!

அபி எதுவும் பேசமா வண்டியை எடுத்துக் கிட்டு போறா.

கௌசல்யா: என்னாங்க ??? “எதுவும் சொல்லாம போறாங்க”.

கணபதி: “வந்துருவா.. இன்னும் கோவம் போல போலிருக்கு”.

கௌசல்யா:” உங்க பொண்ணு உங்கள மாதிரி தானே இருப்பா”.

கணபதி:” ப்ரியா அக்கா எங்க போறான்னு சொன்னாளா”??

ப்ரியா: இல்ல பா.. “என்கிட்ட இன்னும் பேசவே இல்ல”.

கணபதி :” சரி போய் வேலையை பாருங்க. வந்துருவான்னு வேலையை பாக்குறாங்க”.

அபி அவ ப்ரண்டு லஷ்மி வீட்டுக்கு :போறா.. (லஷ்மியும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா படிச்சா வங்க)

லஷ்மி: என்ன மேடம் ?? ரொம்ப பிஸியா ?? எத்தனை மெஸேஜ் பண்ண ஒன்னுக்கு கூட ரிப்ளே இல்ல.

அபி:”நான் பாக்கலைன்னு மெல்ல சொல்லிட்டு அமைதியா உட்காருரா”.

லஷ்மி:” என்ன டி சாப்பிடுறா”. என்ன வேணும். “அம்மா வேற ஊருக்கு போய்ட்டாங்க. சோ நான் தான் செய்யணும்”.
 

அபி: எதுவும் வேண்டா… “கொஞ்ச நேரம் அமைதியா இரு”.

லஷ்மி : “ஏன் டி ஒரு மாதிரி இருக்க.என்ன ஆச்சு”.

வீட்டுல ஏதாவது சொன்னாங்களா ?? காலேஜ் போக.

அபி அவ கண்ணுல கலங்குது.

லஷ்மி: ஏய் பேபி மா !!! “என்ன ஆச்சு டி”. ஏன் அழுகுற.. அப்படி என்ன ப்ராப்ளம். “சொல்லு டி ன்னு அவ கன்னத்தை தன் கையில் ஏந்தி கேட்குறா”..

அபி : “அவ கையைப் பிடிச்சு அழுதுக்கிட்டே வீட்டுல நடந்ததை சொல்றா”.

லஷ்மி : அழதே அபி…”எல்லாம் ஒரே நாள்ல இப்படி நடந்தா கஷ்டமா தான் இருக்கும். ஆனா இதுலா எல்லார் வீட்டுலாயும் நடக்குறது தானே. பாவம் அப்பா அம்மா கிட்ட நீயும் இப்படி பேசி இருக்க கூடாது”.
 

அபி : ஆமா.. “நான் கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டேன் ஆனா என்ன பண்றது லஷ்மி. அவனை நான் இன்னும் பாக்கலை, பேசலை, அவன் யாரு என்ன, அவன் எப்படிப்பட்டவன்னு தெரியாமா எப்படி டி கல்யாணம் பண்றது”.

லஷ்மி : “அவனை பத்தி தெரியாமலா அப்பா ஓகே சொல்லி இருப்பாரு. தேவை இல்லமா குழப்பிக்காதா. சண்டே நானும் வரேன்”. மாப்பிள்ளையை பாப்போம்.அப்பறம் முடிவு பண்ணிக்கலாம் சரியா.

அபி :” ம்ம் சரின்னு கொஞ்ச நேரம் அங்கேயே தூங்குறா”…

நேரம் போய்ட்டே இருக்கு.

கௌசல்யா: என்னாங்க !!” இன்னும் அவளை காணோம்”.

கணபதி : “இன்னும் வரலையா?? போன் பண்ணி பாரு”.

கௌசல்யா ஃபோன் பண்றாங்க. ஆனா அபி போன் வீட்டுல தான் இருக்கு.

கணபதி : “எங்க போய் இருப்பா.லஷ்மி வீட்டுக்கு தான் போய் இருப்பா. போன் பண்ணு”.

லஷ்மி போன் சைலன்ட்ல இருந்தது. அதனால எடுக்கலை.

கணபதிக்கும் கௌசல்யாக்கும் பயம் வரா ஆரம்பிக்குது.

அப்போ வாசல்ல வண்டி சத்தம் கேட்க ஓடி வந்து பாக்குறாங்க.

அபி தான் வரா..

கௌசல்யா: ஏய்.. இவ்வளவு நேரமா ?? “நாங்க என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பதறிக்கிட்டு இருக்கோம்”.

அபி எதுவும் பேசாமல் உள்ள போறா…

கணபதி அமைதியா பாத்துட்டு இருக்காங்க.

கௌசல்யா:” உன்ன தான் டி”.

அபி :” லஷ்மி வீட்டுக்கு போனேன். சும்மா கத்தாதீங்க. நான் ஒன்னும் ஓடி போ மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க பார்த்தா மாப்பிள்ளையை பார்த்தா அப்பறம் தான் முடிவு பண்ணணும்”.

கணபதி: அபி.. “நல்ல பையன் அபி”..

அபி : இருக்கட்டும் பா. “எனக்கு பிடிக்கணும். இல்லன்னா இல்ல”.

கணபதி :” உன் இஷ்டத்துக்கு எதுவும் பண்ண முடியாது. முடிவு பண்ணது பண்ணது தான்”.

அபி:”” பாக்கலாம் பான்னு உள்ள போய் கதவை சாத்திக்கிட்டா”.

அடுத்த நாள் காலையில

மோகன் கணபதிக்கு கால் பண்ணி பேசிட்டு வைக்குறாங்க.

கணபதி: கௌசல்யா !!” சம்மந்தி கால் பண்ணாரு.. இன்னும் 1 மாசத்துல கல்யாண தேதி வைச்சுக்கலாமான்னு கேட்டாரு. நானும் சரின்னு சொல்லிட்டேன்”.

கௌசல்யா:” எங்க அபி” ??

கணபதி : “அவ என்ன சொல்லப் போற நான் பாத்துக்கிறேன்”.

கௌசல்யா: “இப்படியே சொல்லுங்க. ஆனா பிரச்சினை வந்தா அவ என்னை தான் பிடிச்சு சாமி ஆடுவா”.

அபி :”அவ ரூம்ல அவ கோர்ஸ் காக காலேஜ்ல பாத்துட்டு இருக்கா”.
 

அர்ஜூன் :” டேய் நான் இன்னைக்கு கிளம்புறேன் டா. நான் நாளைக்கு அந்த பொண்ணு கிட்ட பேசிட்டு உடனே வந்துருவேன்”.

க்ரிஷ்: டேய்..”இப்ப கூட டைம் இருக்கு டா. நல்லா யோசி டா”.

அர்ஜூன் : “எல்லாம் யோசிச்சாச்சுனு அபியை பார்க்க பெங்களூர்ல இருந்து கிளம்புறான்”.
 

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page