இதழ் – 5
அப்பொழுது வீட்டிற்குள் வந்த ராகவன் அருவி கிச்சனில் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு அதிர்ந்து நின்றான்.
“நான் இதோ வரேன்” என கூறிவிட்டு மௌனமாக சிரித்துக் கொண்டே சரஸ்வதி செல்ல.
அகிலா அருவி சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தாள்.
“இப்ப எதுக்கு நீ இப்படி சிரிக்கிற?” என கேட்டாள் அருவி.
“என்னை மன்னிச்சுடுங்க. நீங்க சொன்னதை கேட்டு என்னை அறியாமல் சிரிப்பு வந்துடுச்சி.”
“ஏய்! எனக்கும் உன் வயசு தான். என்னை சும்மா ‘வா போ’னு கூப்பிடு.”
“சரி.”
“ஆமா! உன் பேரு அகிலாவா!!”
“ஆமா.”
“உங்க பேரு?” எனக் கேட்டாள்.
“என் பேரு அருவி. ஆமா! நீ எதுக்கு அப்டி சிரிச்சேன்னு சொல்லு” என கேட்டாள் அருவி.
“இதெல்லாம் இப்படி சொல்ல கூடாது” என்றாள் அகிலா.
“எதை எப்படி சொல்ல கூடாது?”
“அதாவது! உனக்கு எப்படி சொல்றது… நிஜமாவே உனக்கு தெரியாதா?” என கேட்க.
“தெரியாம தானே கேட்கிறேன். சொல்லு” என்றாள் அருவி.
அப்போது “ராகவன்… ம்ஹும்” என்றான்.
அவன் இருமல் சத்தம் கேட்க அகிலா சிரிப்பதை நிறுத்திவிட்டு வாயை மூடிக் கொண்டாள்.
“அருவி டீ கொண்டு வா” என கூறியவன் செல்ல போக,
“அண்ணா! ஒரு நிமிஷம்” என்றாள் அகிலா.
“என்ன?”
“நீங்க எப்பவும் காபி தானே குடுப்பீங்க? இப்போ டீ கேக்குறீங்க.”
அமைதியாக சென்று விட்டான்.
“அருவி சொல்றத பார்த்தா!! அண்ணாவுக்கு ஏதோ ஆயிடுச்சு போல. அதனாலதான் எப்பவும் காபி குடிக்கிறவர் இப்போ டீ கேட்கிறார்” என நினைத்துக் கொண்டாள்.
“அவருக்கு நான் காபி போடறேன்” என்றாள் அருவி.
“சரி போடுங்க. அண்ணாவுக்கு நிறைய சுகர் இருந்தா பிடிக்காது.”
“சரி” என்பவள் காபி போட்டுக் கொண்டிருக்க அகிலா சிரித்துக் கொண்டிருந்தாள்.
“எதுக்காக அப்டி சொன்ன அகிலா?”
“நான் என்ன சொன்னேன்?”
“அப்டி சொல்ல கூடாதுனு சொன்னேல. அதுக்கான காரணத்தை…”
“அதை அண்ணன் சொல்லுவாரு. அவர் கிட்ட கேளுங்க.”
“சரி. நான் அவர் கிட்டயே போய் கேட்டுக்கறேன்” என காபியை எடுத்து சென்றாள் அருவி.
“அச்சச்சோ… நாம சொன்ன மாதிரி அண்ணா கிட்ட போய் கேட்க போறாங்க” என நினைத்தவள் பயந்தாள்.
கோபத்துடன் அவளுக்காக காத்திருந்தான் ராகவன்.
வந்தவள் “என்னங்க காபி… இந்தாங்க” என அவன் கையில் கொடுக்க.
வாங்கி டேபிளில் வைத்தவன் கதவை தாழ்போட்டுவிட்டு அவளை முறைத்து பார்த்தான்.
“இப்ப எதுக்கு நீங்க என்னை இப்படி பாக்குறீங்க?”
“கிச்சன்ல என்ன பேசிக்கிட்டு இருந்த? அவங்ககிட்ட என்ன சொன்ன?”
“நான் என்ன சொன்னேன்?”
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?”
“நான் அவங்க கேட்டதுக்கு தான் பதில் சொன்னேன். அறிவு இருக்கானு கேட்கிறீங்க? எனக்கு அறிவு நிறையவே இருக்குன்னு எங்க அப்பா சொல்லியிருக்கிறார்.”
“நல்லா சொன்னார் உங்க அப்பா!”
“அவங்க கேட்ட கேள்விக்கு தான் நான் பதில் சொன்னேன். தேவை இல்லாம என்னை திட்டாதீங்க!”
“அவங்க என்ன கேட்டிருந்தாலும் அதுக்காக இப்படியா பதில் சொல்லுவ? உனக்கு கொஞ்சம் கூட…” என்றவனை இடைமறித்தவள்,
“சும்மா இருங்க… ‘காச்சு பூச்சுன்னு’ கத்திட்டு இருக்காதீங்க!! அத்தை கேட்டாங்க காலையில சீக்கிரமா எழுந்து விளக்கு போடணும்னு… சாமிக்கு பூஜை பண்ணனும்னு சொன்னாங்க. அதுக்காக தான் நானும் ‘நைட் நீங்க தூங்கவிடல’னு சொன்னேன். இதில் என்ன இருக்கு? நான் உண்மையதான் சொன்னேன்” என்றாள்.
“சரி… இனிமே இப்படி எல்லாம் சொல்லக்கூடாது” என்றான் பொறுமையாக.
“ஏன் சொல்லக்கூடாது? எப்பவுமே உண்மைதான் பேசணும்னு எங்க அம்மா, அப்பா சொல்லிக் கொடுத்திருக்காங்க.”
“எங்க அப்பா, அம்மா பொய் மட்டும் தான் பேசணும்னா சொல்லிக் குடுத்தாங்க? பாரு, உங்க வீட்ல மட்டும் இல்ல… எல்லார் அம்மா, அப்பாவும் அப்டி தான் சொல்லிக் குடுப்பாங்க. ஆனா!” என்றவன், “உண்மையா பேசணும் தான். ஆனா இனிமே நம்ம ரூம்ல நடக்கிறத, நம்ம ரெண்டு பேரும் பேசிக்கிறத, யார்கிட்டயும் சொல்லக்கூடாது சரியா?” என்றான் பொறுமையாக.
“சரி… சொல்ல மாட்டேன். ஆனால் ஏன்?”
“இப்பதான் சொன்னேன்… கேள்வி கேட்கக்கூடாதுனு. சொல்றத சரினு மட்டும் கேளு.”
“சரி.”
“இப்ப நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு.”
“கேளுங்க?”
“நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?” என அவன் சாதாரணமாக தான் கேட்டான்.
“அச்சச்சோ… கடவுளே! யாரைப் பார்த்து என்ன வார்த்தை கேட்டீங்க? என்னை பாத்து யாரையாவது லவ் பண்ணி இருக்கியான்னு கேட்டுட்டீங்களே…”
“ஏய்! நான் சும்மா சாதாரணமா தான் கேட்டேன். நீ இப்ப எதுக்கு இப்படி சத்தம் போடற? மெதுவா பேசு” என்றான்.
“என்னை பாத்து எப்படி நீங்க அப்டி கேட்கலாம்?”
“நான் தப்பான அர்த்தத்தில் எல்லாம் கேட்கல.”
“அம்மா, அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு நம்மள வளர்த்து படிக்க வைக்கிறாங்க? அவங்களுக்கு தெரியாதா!! நல்ல பையனா பார்த்து கட்டி வைக்கணும்னு? தெரியாத ஒருத்தவங்கள பாத்து லவ் பண்றது… அதெல்லாம் ரொம்ப கெட்ட பழக்கம் தெரியுமா!! எனக்கு சுட்டு போட்டாலும் அந்த பழக்கம் வராது. நான் யாரையும் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை. உங்களுக்கு ஒன்னு தெரியுமா?”
“என்ன?”
“நான் ஆம்பள பசங்க கிட்ட இதுவரைக்கும் பேசுனது கூட கிடையாது” என்றாள்.
“இவளை எந்த லிஸ்டில் சேர்க்கிறது?” என நினைத்தவன், “ஆமா… நீ படிச்ச ஸ்கூல்ல பசங்க இருந்திருப்பாங்கள்ல?” என கேட்டான்.
“இல்லையே!! நான் படிக்கும்போது பொம்பள பிள்ளைங்க ஸ்கூல்ல தான் படிச்சேன். காலேஜ் படிக்கும் போது ஆம்பள பசங்க இல்லாத காலேஜ் தான் படிச்சேன்.”
“சுத்தம்” என்றான்.
“ஆமா! எனக்கு எப்பவும் எதிலுமே சுத்தமா இருக்கணும். அப்போ தான் புடிக்கும்” என அவள் கூற.
“இவளுக்கு A டூ Z எதும் தெரியாது போல” என்றான் மெதுவாக.
“இல்லையே!! எனக்கு ஏபிசிடி எல்லாம் நல்லா தெரியும். உங்களுக்கு ஒன்னு தெரியுமா!! நான் தான் எப்பவுமே கிளாஸ் பஸ்ட். காலேஜ்ல நான் தான் டாப்பர்” என்றாள்.
“கடவுளே… நம்ம ஒன்னு நினைச்சு கல்யாணம் பண்ணா, நமக்கு வாச்சது ஒரு விதமா இருக்கே. சரி… பாத்துக்கலாம்” என நினைத்தவன், “நீ போ” என்றான்.
அவள் மீண்டும் அவன் முகத்தை பார்த்துக் கொண்டு நிற்க.
“என்ன?”
“எந்த வேலை செஞ்சாலும் ஒழுங்கா செய்யணும்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க.”
“நல்லா சொன்னாங்க உன் அம்மா. நானே காபி குடிச்சிட்டு கப்பை கொண்டு வரேன். போ.”
“சரி” என்றவள் கிச்சனுக்கு வர, டைனிங் டேபிளில் சேதுராமன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, சரஸ்வதி பரிமாறிக் கொண்டிருந்தார். இவள் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்க,
“அருவி… ராகவுக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு. நீ அவனுக்கு ஹெல்ப் பண்ணு” என்றார் சரஸ்வதி.
“என்ன அத்தை ஹெல்ப் பண்ணனும்?” என அவள் கேக்க.
சேதுராமனும் சரஸ்வதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்பொழுது ராகவன் “அருவி” என அழைக்கும் சத்தம் கேட்க.
“இதோ வரேங்க” என்றவள் அறைக்கு வந்ததும் மீண்டும் அவளை முறைத்தபடி நின்று இருந்தான்.
“என்னங்க?”
“ரூமுக்கு போனு சொன்னா பேசாம வந்துடனும். அதை விட்டுவிட்டு என்ன உதவி செய்யணும்னு அவங்க கிட்ட கேக்குற.”
“இல்ல! எங்க அம்மா, வேலை சொன்னா, என்ன வேலைன்னு கேட்கணும்னு சொல்லி இருக்காங்க.”
“ஷப்பா…”
“அச்சச்சோ!!” என்றாள்.
“என்ன?”
“உங்களுக்கு என்ன உதவி செய்யணும்னு அத்தைகிட்ட கேக்காம வந்துட்டேன்.”
“அதுக்கு?”
“இப்ப போய் கேட்டுட்டு வரேன்” என செல்ல போனவள் கையை பிடித்து தடுத்தான்.
“ஏய்! நில்லு.”
“என்ன?”
“எங்க அம்மா என்ன வேலை சொன்னாங்கனு நான் சொல்லவா!!”
“சரி… சொல்லுங்க.”
“நான் குளிச்சிட்டு வந்ததும் எனக்கு தலை சீவி, சாப்பாடு ஊட்டி, ஆபீஸ் கிளப்பி விட சொல்லி இருப்பாங்க. அதுதான் உன் வேலை” என்றான்.
“ஓகே!! அப்போ இனிமே இது தான் டெய்லி காலைல நான் பார்க்க வேண்டிய வேலையா? அப்ப சரி… வாங்க…” என்றாள்.
அவன் ஏற்கனவே டிரஸ் மாற்றி இருந்தான். நேற்று இரவு சாப்பிடாததால் அவனுக்கு பசித்தது.
“சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் கிளம்பலாம்” என நினைத்து அவன் மாடியிலிருந்து இறங்கி வந்த போது தான் சரஸ்வதி, அருவி பேசிக்கொண்டிருந்ததை கேட்டு மீண்டும் அறைக்கு வந்து அவளை அழைத்தான் ராகவன்.
“உட்காருங்க” என அவனை பெட்டில் அமர வைத்தாள்.
“என்ன பண்ண போற?” என கேட்டான்.
“நீங்க சொன்ன மாதிரி தான்” என்றவள் சீப்பை எடுத்து அவனுக்கு சின்ன பையனுக்கு தலை சீவுவது போல அழகாக வகிடு எடுத்தாள்.
“இவ என்ன தான் பண்றானு பார்ப்போம்” என பொறுமையாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீங்க இப்படி எல்லாம் என்ன பாக்காதீங்க. எனக்கு வெக்கமா இருக்கு.”
“நான் உன்னை முறைச்சு பார்க்கிறது உனக்கு வெட்கமா இருக்கா!!” என்றான் தன் வாய்க்குள்.
பவுடர் எடுத்தவள், “என்னங்க? இங்க ஸ்பாஞ்சு இல்லையா?” என கேட்க.
“என்னது?” என்றான் புரியாமல்.
“சரி விடுங்க” என்றவள் தன் சேலை முந்தானையில் பவுடர் தொட்டு அவனுக்கு முகத்தில் அழகாக பவுடர் அடித்துவிட,
முதன் முதலில் ஒரு பெண்ணின் சேலை வாசத்தை உணர்ந்த ராகவன் இதயம் தடுமாறியது.
அவன் அசந்த நேரம், “உங்க வீட்ல சந்தனம் இருக்கா?” என கேட்க,
“சாமி ரூம்ல” என்றான் தன்னை மறந்து.
“சரி இருங்க. நான் எடுத்துட்டு வரேன்” என அவள் செல்ல,
“நான் என்ன இவளுக்கு பதில் சொல்லிட்டு இருக்கேன்? ராகவ்!! இது சரியில்லடா. நீ அவளை மாத்த நினைச்சா… அவ உன்னை மாத்திட்டு இருக்கா!!” என தனக்குள் கூறிக் கொண்டவன் எழுந்து ரெடியாகிக் கொண்டிருந்தான்.
வேகமாக பூஜை அறைக்கு சென்றவள் சந்தனத்தை எடுத்து வர,
“அருவி.”
“என்னங்க அத்தை?”
“என்ன எடுத்துட்டு போற?”
“அவருக்கு சந்தன பூசணும். அதுக்காக எடுத்துட்டு போறேன்” என்றாள்.
“என்னங்க?”
“என்ன சரஸ்வதி?”
“ஒரே நாள்ல நம்ம பையன் இவ்வளவு மாறிட்டான்? நல்லவனா மாறிட்டானா!”
“எனக்கும் புரியல” என்றார் சேதுராமன்.
ராகவன் கிளம்பிக் கொண்டிருக்க, “என்னங்க? திரும்புங்க” என்றாள் அருவி.
“எதுக்கு?”
“சந்தனம் வைக்க.”
“எனக்கு வேணாம்” என்றான் ராகவன்.
“நான் அழகா சந்தனம் வைப்பேன்னு ராதா அக்கா பையன் சொல்லி சொல்லிருக்கான்.”
“எனக்கு ஒன்னும் வேணாம்!! தயவு செய்து என்கிட்ட வராத.”
“ஏன்? அடம் பிடிக்கிறீங்க? உங்களுக்கு ஏற்கனவே டைம் ஆயிடுச்சு. நீங்க இன்னும் சாப்பிடல. ஒழுங்கா சந்தனம் வச்சிக்கோங்க… நான் போய் உங்களுக்கு சப்பாத்தியும் குருமாவும் வச்சு கொண்டு வரேன் சரியா?” என்றாள் அன்பாக.
“வேணாம்” என நகர்ந்தான்.
“நில்லுங்க” என விரட்டினாள்.
அவன் ஓட, இவளும் துரத்த… கால் தடுக்கி விழ போனவளை தாங்கி பிடித்த படியே பெட்டில் விழுந்தான்.
அப்பொழுது ராகவனிடம் ஏதோ கூற வந்த சரஸ்வதி அறை வாசலில் நின்று இவர்களின் பேச்சு வார்த்தையை கேட்டு விட்டு சிரித்தபடி கீழே சென்று விட்டார்.
தன் மேல் விழுந்த பூக்குவியலின் அந்த திடீர் தாக்கத்தால் மூச்சு விட கூட முடியாமல் மெய்மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன்.
அவன் அசந்த நேரம் அவன் நெற்றியில் அழகாக சந்தனம் பூசி விட்டவள், அந்த சந்தனம் அவன் கண்களில் விழாமல் இருக்க மெதுவாக அவன் நெற்றியில் அழகாக ஊதி விட்டாள்.
அவளின் அந்த நெருக்கம் அவனுக்குள் என்னென்னவோ செய்ய தன்னை மறந்து அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன்.
கதையை தொடர்ந்து படிங்க பிரண்ட்ஸ்… கதை எப்படி இருக்குன்னு மறக்காம கமெண்ட் பண்ணுங்க ♥️
