அத்தியாயம் -3
ரோஜா பின் சீட்டில் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்த நிகழ்வை கண்டதும் பிரபஞ்சனுக்கு சிரிப்பு மட்டுமே வந்தது. சரி தூக்கத்தில் இருப்பவளை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டு காரை காரைக்குடி நோக்கி செலுத்தினார்.
காரைக்குடி நெருங்கியதும் அந்த பெரிய பெரிய அரண்மனை போன்ற வீடுகளும் ட்ராஃபிக் இல்லாத அந்த நிசப்தமான சாலைகளும் அவரை வரவேற்றது. அதற்குள் ரோஜா எழுந்து விட்டாள்.
வாவ் நம்ம ஊருக்கு வந்துட்டோம் என்று உற்சாகத்துடன் கூறினாள். அந்த நீண்ட பிரதான வீதியில் அமைந்துள்ள தன்னுடைய உடன்பிறந்த தங்கை கோப்பெருந்தேவி வீட்டை கடந்தபோது கார் நின்றது. “ரோஜா வா ஒரு எட்டு உன் அத்தையை பார்த்துட்டு போவோம்”என்றார் பிரபஞ்சன்.தங்கையை காணவேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம் இன்னொரு பக்கம் தங்கையை நீண்ட வருடம் கழித்து அவள் வீட்டில் அவளை எப்படி எதிர்கொள்வது என்ற யோசனை. எப்படியோ ஒரு வழியாக ரோஜாவுடன் உள்ளே நுழைந்தார் பிரபஞ்சன்.
வரவேற்பு அறையில் நீண்ட ஊஞ்சல் . அதில் பச்சை நிற பட்டு புடவையில் தங்கை அம்மன் போல் அமர்ந்திருப்பதை கண்டு பூரித்து “அம்மாடி கோப்பெருந்தேவி”என்றழைக்க திரும்பி பார்த்தவர்…
“அண்ணே வா உள்ளே”என்றழைத்தார்.
“இதேன் உன் மகளா”
“ஆமா கோப்பு இல் தான் மக ரோஜா”
“தேவதை மாதிரி இருக்கா “என்று நெட்டி முறித்து அவர்களை அமர வைத்தார் . பிறகு வரவேற்பு அறையை தாண்டி அடுத்த கட்டில் அமைந்திருக்கும் சமையலறையில் இருந்த தண்ணீர் குவளையில் இருந்து அந்த செம்பு சொம்பில் நீர் மொண்டு எடுத்து வந்து தந்தார்.
அந்த செம்பு பாத்திரத்தில் நீர் அவ்வளவு குளிர்ச்சியாக தாகம் தனித்தது. ம்ம் ரொம்ப வருஷம் கழுச்சி இப்பதான் கோப்பெருந்தேவி உன்னை பாக்க வந்துருக்கேன்.ரொம்ப சந்தோஷம் உன்னை பார்த்ததும். சரி உனக்கு ஒரு மகன் இருக்கானே எங்கே என்றதும் மேல் இருக்கும் ஒரு அறையில் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் மதியழகனை அழைத்தார் கோப்பெருந்தேவி.
“மதி…..மதியழகா கீழ வா”என்றதும் அவன் இறங்கி வந்தான்.
வணக்கம் வைத்ததும் அவனுடைய பார்வை ரோஜா மீதே சென்றது.
“வணக்கம் நீங்க….”என்று அவனே கேட்க.
“டேய் மதி இது உன் தாய்மாமன் மகள் டா பேரு ரோஜா “ என்றதும் புன்னகை விரிந்தது.
“சரி கோப்பெருந்தேவி அப்ப நாங்க கிளம்புறோம் தமிழரசியை அழைச்சிட்டு போகவே வந்தோம் சரி அதுக்கு முன்னாடி உன்னை பார்த்துவிட்டு போலாமேன்னு வந்தோம் “என்று சொல்லிவிட்டு நடையை கட்ட மதியழகன் முதன் பார்வையில் தன் மாமன் மகளை பிரிய மனமில்லாமல்”ஓகே போய்ட்டு வாங்க இன்னொரு நாள் சந்திப்போம் “என்று கூறினான்.
தமிழரசியை பார்த்ததும் முதலில் ஓடிச்சென்று கட்டிக்கொண்டு அழுதாள் ரோஜா “எப்படி உனக்கு என்னை விட்டு இருக்க மனசு வந்துச்சு ரொம்ப ஓவரா பண்ற மா நீ”என்றாள் ரோஜா.
“யார் நான் ஓவரா பண்றேனா ஏன் டி உன் புருஷன் கூட சேர்ந்து வாழுன்னு சொல்றது கூட குத்தமா “என்றதும்..
“பிடிக்காத வாழ்க்கை எப்படி மா…”
“ஐயோ மறுபடியும் இதே டாபிக்கா? “என்றான் தம்பி ரவிவர்மன் .
“இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி உள்ள வாங்க என்று தமிழரசி தாயார் கூற இவர்களும் உள்ளே நுழைந்தனர். இவர்கள் போன அன்று பிள்ளையார் நோன்பு. காரைக்குடி ஊர் வழக்கம். அரிசி மாவு விளக்கு ஏற்றி வழிப்பட்டு பின்பு குடும்பத்தில் உள்ள மூத்தவர் முண்டாசு கட்டிக்கொண்டு பூஜை செய்ய இனிதே பிள்ளையார் நோன்பு முடிந்தது.
நல்ல வாழை இலை சோறு. அனைவருக்கும் அன்று விருந்து தான்.
சாப்பிட்டு முடித்ததும் தன் கணவன் பிரபஞ்சனிடம் சிறிது நேரம் பேச அறைக்குள் வந்தார் தமிழரசி.
“என்னங்க நான் இல்லாமல் ரொம்ப கஷ்டபட்டிங்களா ?”
“இல்லையா பின்ன?”என்றபடி பிரபஞ்சன் அவரை அணைத்துக்கொண்டார்.
“சரி உங்க பொண்ணு ராஜா விஷயத்துல என்ன முடிவு எடுக்க போறா?”
“டிவோர்ஸ்”என்றார் பிரபஞ்சன்.
“ப்ச்ச் உங்க பொண்ணு கிட்ட பேசி புரிய வைக்கலையா நீங்க”
“பிடிக்காத வாழ்க்கை எப்படி வாழ சொல்ல முடியும்? “என்று தமிழரசியை பார்த்து கேட்டார்.
“அப்படி என்ன குறை ராஜா கிட்ட படிப்பு இல்லையா சொத்து இல்லையா? எல்லாம் இருக்கே அப்பறம் என்ன என்று தமிழரசி கேட்டதற்கு…
“ஹாஹா அதெல்லாம் இருக்கு ஆனா காதல் இல்லை”
“என்ன?”
“ம்ம்…..” புரியாமல் பார்த்த மனைவியிடையே “இவ்வளவு நாள் என்னை பார்க்கலை நீ கோபமா இருந்த ஆனால் என்னை பார்த்ததும் அப்படியே உருகுரியே ஏன்? அதுவும் இந்த வயசுலயும் ?”
“அது அது வந்து அதுக்கு பேரு தானே காதல் “என்றார் தமிழரசி.
“யெஸ் அதுக்கு பேரு காதல் ஆனால் அந்த காதல் தான் ராஜாவுக்கு ரோஜா மேல இல்லை “
“எப்படி சொல்றீங்க”
“ஹாஹா அன்னைக்கு குடிச்சிட்டு வந்து குத்திட்டு போறான்”என்று நிறுத்தும் போதே “வாட் குடிக்கிற பழக்கம் இருக்கா மாப்பிள்ளைக்கு”
“ஆமாம் தமிழு இருக்கு”
“அப்படினா அந்த பையனை நம்ப பொண்ணு டிவோர்ஸ் பண்றது தப்பே இல்லைங்க எனக்கு இந்த கெட்ட பழக்கம் உள்ள ஆண்களை பார்த்தாலே பிடிக்காது “என்றார் தமிழரசி.
இதென்ன நம்ப பொண்டாட்டி அந்தர்பல்டி அடிக்கிறாளே என்று வியப்பாக பார்த்தார் பிரபஞ்சன். அதன்பின் இதைப்பற்றி ரோஜா விடம் சொன்னபோது.
“அப்பாடா டைவர்ஸ் பண்றதுக்கு நீ ஓகே சொல்ட அது போதும் எனக்கு”என்று மீண்டும் தாயை அணைத்தாள்.
‘யெஸ் எல்லாம் போதும் இத்தோட ராஜாக்கு பை பை சொல்லிட வேண்டியது தான். இனி அவன் யாரோ நாம் யாரோ…ம்ம் அம்மாவே க்ரின் சிக்னல் காட்டிட்டாங்க ஸோ இனி எந்த தயக்கமும் இல்லை என்று மகிழ்ச்சி அடைந்தாள் ரோஜா.
ரவிவர்மன் ரோஜாவிடம் டிவோர்ஸ் ஓகே அதுக்கப்புறம் உன்லைப் பற்றி என்ன ப்ளான் வச்சிருக்க என்றதற்கு அவளிடம் பதில் எதுவும் இல்லை.
தொடரும்
