திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -16
Hiiii வாசகர்களே ✨
இது நான் அவன் கல்லூரிக்கு வரும் மூன்றாம் முறை..!! ஆம்! சரியாக தான் படித்தீர்கள்… இது மூன்றாம் முறை!!
ஒரு முறை வீட்டுக்கு செல்ல பிடிக்காமல், எங்கு செல்வது என்றும் தெரியாமல் நான் இங்கு தான் வந்தேன்! ஆனால், உள்ளே செல்ல தைரியம் இன்றி, வெளியில் ஒரு ATM 🏧 வாசலிலேயே அமர்ந்து விட்டேன்!
எனக்கு ஃபீவர் ஆக இருந்தது என்று தான், அறை நாள் விடுப்பு கேட்டு என் கல்லூரியில் இருந்து கிளம்பி இருந்தேன்! ஆனால், வீட்டில் அம்மா இல்லை… பாட்டி மட்டுமே இருப்பார், அவரோடு சென்று மல்லுக்கு நிற்பதை விட தெருவில் நிற்பது சிறப்பான ஒரு சாய்ஸ் ஆக தோன்றியது!!
ஆனாலும், நிற்க முடியாத ஒரு நிலை, அதற்கு மேல் நின்றால் வீட்டுக்கு வண்டி ஓட்டி செல்ல கூட திராணி இருக்காது என்ற நிலையில் நான் கிளம்பி விட்டேன் முக்கால் மணி நேரம் கழித்து!!
அடுத்து கிறிஸ்துமஸ் டெக்கரேஷன் அந்த கல்லூரியில் வெகு விமரிசையாக ஊரே மெச்சி பேசும் அளவு இருக்கும், என்று கேள்வி பட்டு அன்று தான் முதன் முதலில் உள்ளே சென்றேன்!!
அதுவும் அவனும் நானும் ஒரு மூன்று நாளைக்கு முன் சந்தித்து, சண்டையிட்டு பிளாக் செய்த பின்!! அது அவன் படிக்கும் கல்லூரி தானே, அவன் கல்லூரி இல்லையே!! 🤷
மாலை 5 மணி இருக்கும், போகவா என்று கேட்டால், வீட்டில் விட மாட்டார்கள்… ஆகவே நான் கிளம்பி வந்து விட்டேன்!! ரம்மியமாக இருந்தது!! அந்த கல்லூரிக்குள்ளேயே இருக்கும் தேவாலயம், அவ்வளவு மன அமைதியை நல்கியது…
ஆகையால் நான் அங்கு எவ்வளவு நேரம் உள்ளே அமர்ந்து இருந்தேன் என்றே எனக்கு தெரியவில்லை! வெளியேறும் போது மணி பார்த்தால் 6 ஆகும் நிலையில் வெளியே மெல்ல மெல்ல ஒவ்வொரு விளக்காக ஒளிர தொடங்கியது…
அந்த இருளில் அது ஒரு தேவ லோகம் போல் தோன்றியது… ஒவ்வொரு மரம் புஷ் போன்று வித விதமான வடிவில் வெட்ட பட்டு செடியிலும் வண்ண தொடர் சீரியல் விளக்குகள் கொண்டு அலங்கரித்து இருந்தனர்…
அப்போது தான் எனக்கு புரிந்தது, ஏன் மாணவர்கள் விழுந்து அடித்து கொண்டு அமெரிக்கன் காலேஜ் தான் வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று கொக்கு போல் தவம் இருந்து, இங்கு அட்மிஷன் செய்து சேர்கிறார்கள் என…
அது பார்க்கிங் அருகில் இருந்ததால், நான் அப்படியே பார்த்து விட்டு போதும் என கிளம்பி வீட்டுக்குன்சென்று விட்டேன்!! போக அது இருட்டி இருந்தது, ஆனால் இது பட்ட பகலில் எந்த பாதையில் நடந்தாலும் அந்த ஃபவுண்டைன் ⛲ அருகிலேயே தான் வந்து வந்து நின்றேன்!!
அது போக அவனும் சொல்லி இருந்தான், அதை கடந்து தான் அவன் டிபார்ட்மெண்ட் அந்த கலர் பிரிட்ஜ் தாண்டி கண்ணாடி ஜன்னல் இருக்கும் பில்டிங்கில் இருக்கிறது என் வகுப்பு என்று…
இப்படி ஒருவனை தெரிந்தும் கூட, எனக்கு அவன் இறுதியாக செய்த காரியத்தால் அழைத்து உதவி கேட்க மனம் ஒப்ப வில்லை… புதிதாய் யார் இடம் பேசவும் எனக்கு வார்த்தை வர மறுத்தது, ஒரு கட்டத்தில் நடந்து நடந்து கிரிக்கெட் மைதானத்திற்கே சென்று விட்டேன்…
அங்கிருந்து பொறுமையாக நடந்து, மீண்டும் வந்தேன் அதே ஃபவுண்டைன் அருகில்… இம்முறை போகாத வழியில் போக, அப்போது தான் எங்கு எங்கோ சுற்றி ஒரு வழியாக ஏதோ தெரிந்த இடம் போல் ஒரு ஹால் கடந்து வரும் போது உணர்ந்து, சுற்றிலும் பார்க்க, என் மூளை பல்ப் ஒளிர விட்டது!!
காலையில் அங்கு தான் என் ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு போன, வாகன நிறுத்தும் இடத்திற்கு தான் வந்து இருந்தேன்… ஆனால், பல வரிசைகளில் இப்போது என் வாகனம் எங்கு நிறுத்தினேன் என கண்டு பிடிக்க முடியாது திணறினேன்…
ஒரு வழியாக பார்த்து, ஏறி வெளியில் வந்து என் கல்லூரிக்கும் சென்று விட்டேன்… அங்கு 5 பரிசுகள் கொடுத்து இருந்தனர், பிற துறை மாணவர்களின் 3 பரிசும்… என்னுடைய ஒரு சிறிய கோப்பையும், மேலும் என் இரு தோழர்களில் ஒருவனுக்கு meme creation competition பரிசு வென்று இருந்தான், அதையும் காண்பித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினேன்!!
என் தாய் நான் வீட்டுக்கு வந்தால் போதும் என்று விட்டு விடுவார், பிற அம்மாக்கள் போல் கால் செய்து ஏன் இன்னும் வரல?
அப்படி எங்க இருக்க?
எப்போ தான் வருவ? என்றெல்லாம் கேள்வி கேட்கவே மாட்டார்…
ஆகவே நான் சென்றபின், நடந்தவற்றை முழுதும் நானாகவே சொன்னேன்… கோப்பை என்னவோ உள்ளங்கை அளவு தான் இருந்தது, ஆனால் வெகு நாட்கள் கழித்து வந்ததில் மன மகிழ்ச்சி..!!
இப்படியே நாட்கள் ஓட, மீண்டும் வந்து எல்லாம் அவன் என்னை அன்பலாக் செய்து பேச வில்லை… நானும் எதிர் பார்க்க வில்லை…
Sunday sunday ஆனால் அவன் அம்மா மூன்று மணிக்கு தான் நான்வேஜ் உணவு செய்து முடித்து சாப்பாடு போடுவார்களாம், ஆகவே தான் போர் அடிக்கும் வேளையில் என்னிடம் பேசி வந்தான் என்று எனக்கும் புரிந்து போனது!!
மெய் காதல் ஆயினும், தன் மானம் விடுத்து அதை வென்று என்ன சாதிக்க போகிறோம்? ஆகவே நான் ஒரு முறை அவன் ரெக்வெஸ்ட் கொடுத்து பேச முயன்றும் அதை ஏற்காமல் மறுத்து விட்டேன்!!
பூமா தேவி போல் பொறுமை எல்லாம் எனக்கு இல்லை!! நிச்சயம் அவனை நேரில் பார்த்தால் அறைந்து பல்லை கழட்டி விடுவேன்… கொலை காண்டு ஆகி போய் இருந்த நிலையில், பேசாமல் இருப்பது தான் இருவருக்கும் நல்லது என்று தோன்றியது!!
கோபம் கொள்ளவும் உரிமை வேண்டுமே!!
லேசாக வெறுப்பு தோன்ற ஆரம்பித்த நிலை அது, அப்போது மீண்டும் ரெக்வெஸ்ட் கொடுத்தான் ஜெஷ்வந்த்…
இப்போது நான் இரண்டாம் ஆண்டு முடிக்கும் தருவாயில் இருந்தேன்!!
என் அண்ணன் படிக்கும் கிறிஸ்டியன் மிஷன் மருத்துவமனையில் நான் ரத்த பரிசோதனை லேப் இலேயே இன்டர்ன்ஷிப் செய்தேன் ஒரு மாதம், எனது செம்மஸ்டர் தேர்வு விடுமுறையில்!!
மீண்டும் மெசேஜ் அனுப்பி பேச முயலும் போது, இம்முறை நான் கட்டி காப்பாற்றி வந்த பொறுமை காற்றோடு பறந்தது!!
ஒவ்வொரு முறையும் எதுவுமே நடக்காது போல்.எப்படி ஒருவனால், hii எங்க இருக்க? என்ன பண்ற? சாப்பிட்டியா? என்று இயல்பாக பேச முடிகிறது!!!!?
நான் எல்லாம் ரேண்டம் ஆக என்னோடு பேசுபவர்களை கூட இவ்வாறு பேசி துண்டித்து, பேசி துண்டித்து விளையாட்டு காட்டி ஏமாற்ற மாட்டேன்…
பிடித்தால் தான் மரியாதைக்கு பதில் பேசுவேன்! இல்லையெனில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அவர்கள் இடமே, “எனக்கு உங்கள் இடம் பேசவோ விளக்கவோ விருப்பம் இல்லை!” என்று நேரடியாக சொல்லி சென்று விடுவேன்…
வைஷூ சொல்லியது போல் பார்த்தால், இவன் இவ்வாறு மிக்சட் சிக்னல் கொடுத்து கொடுத்து என்னை சோதித்து ஆழம் பார்க்கலாம்…
பிரகதி சொல்வதை வைத்து பார்த்தால், அவனுக்கே என்ன ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் ஸ்ட்ரிங் அலாங் செய்ய பார்க்கிறான்.!! அதாவது, அவன் ஏற்க மாட்டான் என்ற உண்மையை நான் உணர்ந்து, வேறு யார் மீதும் காதலில் விழுந்து விடாமல் பார்த்து கொள்கிறான்!!
இப்போது மீண்டும் மீண்டும் பேச முயற்சிப்பை பார்த்ததும், பொறுமை இழந்த நான் “நான் மதுரையிலேயே இல்ல! சென்னை வீட்டுல இருக்கேன்!
Stop trying ME!!!” என்று அனுப்பி விட்டு 10:30 மணி என்பதால் படுத்து தூங்கி விட்டேன்…
வெகு நாட்கள் கழித்து வந்து இருந்ததால், வீடு முழுக்க சுத்தம் செய்து அப்படி அப்படியே கிடந்த பொருட்கள் எல்லாம் தூசி தட்டி மீண்டும் அதன் இடத்தில் வைத்து அடுக்கி விட்டு, தூங்க இடம் செய்து ஹாலில் தான் நான் படுத்து கொண்டேன்… ஆகையால் இருந்த அவதிக்கு அப்படி உறங்கி போனேன்!!
ஆம்! முன்பு வீட்டில் என் அண்ணன் பேச்சு வாக்கில், நான் யாரையோ ஒருவனை காதலிக்கிறேன் என்று தெரிந்த உடனேயே என்னை சென்னை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்…
என் அப்பா செய்த வேலை தான் அது!!
எப்போது பார்த்தாலும் நானும் என் அம்மாவும் அடித்து அழுது கொண்டு வீடே களேபரமாக இருக்கையில், என்னை வீட்டில் இருந்து அனுப்பி விட்டால் பிரச்னை ஓய்ந்து விடும் என்று எண்ணம் கொண்டு, வைகை எக்ஸ்பிரஸ் ட்ரைனில் அதிகாலை ஏற்றி விட்டு, திரும்பி பாராமல் சென்று விட்டார்…
சந்திரமுகி அரை போல் இருந்த வீட்டை மொத்தமாக பெருக்கி அள்ளி மாப் போட்டு துடைத்து விட்டு தான் கிடைத்த பாய் ஒன்றை விரித்து, காலியாக இருந்த சாமி பூஜை அறை முன்பாக தங்கி கொண்டேன்!!
கையில் 2000 ரூபாய், எத்தனை நாள் அங்கேயே தங்க வேண்டும்? என்று கூட என்னிடம் என் பெற்றோர்கள் சொல்ல வில்லா… கையில் இருந்த அந்த சைனீஸ் மாடல் மொபைலோ, உயிரை விடும் நிலையில் இருந்தது!! அதில் டேட்டா போட்டாலும், எதுவுமே செய்ய முடியாது எந்த செயலையும் இயக்க முடியா நிலையில் இருந்தது…
வாட்ஸ்அப் மட்டும் மெசேஜ் அனுப்ப முடியும்… அதை வைத்து கொண்டு என்னை அனுப்பி விட, அப்போது தான் என் வீட்டிலும் இந்த சாதி வெறி பிடித்து தான் இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை நான் அறிந்தேன்!!
இரண்டு நாள் தனியாகவே இருந்தேன், உண்ண பிடிக்காமல் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல்… மூன்றாவது நாள், “எனக்கு ஃபீவர் அதான் பேசவில்லை!! அன்று நாள் முழுக்க தலை தூக்க கூட முடியாமல், ஹோட்டலுக்கும் செல்லவில்லை… ஆகையால் உண்ணவும் இல்லை!!” என்று சும்மா பொய் சொல்லி விட்டேன்…
அதுவும் வேலை செய்தது..!!
அடுத்த நாள் காலை வீட்டு வாசலில் பெல் அடிக்க திறந்து பார்த்தால், என் அண்ணன் உணவு பொட்டலத்தோடு வந்து நின்றான்…
“
மாலை அப்பா ட்ரெயின் டிக்கெட் போட்டு இருக்கார்..!! இரவு அங்கே போய் சேர்ந்து விடுவோம்… நீ குளித்து உண்டு கிளம்பும் வழியை பார்!!” என்றான் வீட்டுக்குள் வந்தது வராததுமாக…
அவன் டாக்டர் படிப்பவன் தானே, “ஃபீவர் இல்ல!!” என்றான் நெற்றியில் கை வைத்து பார்த்து… நான் டக்கென பொய் சொல்ல வராமல், திரு திருவென முழித்து கொண்டு இருக்க… அவனே “சரியா போயிருச்சு.. சோ இன்னிக்கு குளிக்கலாம்!!” என்று சொல்லி அவன் என்னை உண்ண வைத்து, மதுரைக்கு அழைத்து சென்றான்…
ஜெஷ்வந்த் ஷ்ரேயாவின் காட்டமான பதிலுக்கு என்ன பதில் சொல்லி இருப்பான்? என்பதை கதையை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨
Thanks for reading மக்களே 🩷
