காதல் இதுதானா ? – காதல் 19

காதலாகும் 19:

அன்று இரவு..அவன் படுக்கையறைக்குள் வரவே இல்லை.ஹால் சோபாவிலேயே படுத்து உறங்கி விட்டான். நேரம் கழித்து தூங்கியதால் அவன் எழும் போது தாமதமாகி மாகி விட்டது.கிளம்புவதற்காக அறைக்குள் நுழைந்தவனின் கண்களில் நேற்று இரவு கட்டிய புடவையுடன் தூங்கிக் கொண்டிருந்த மனையாள்தான் வந்து விழுந்தாள்.

நேற்று உணர்ச்சிகளின் பிடியில் அவளும் தடுமாறியது நினைவிற்கு வர சிரித்துக் கொண்டான்.

‘டேய் விஷ்வா..அவளையும் சேர்த்தி படுத்தி எடுத்திட்டோம்..என்னைப் பத்தி என்ன நினைச்சாளோ…’, மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவன் அவளையே பார்த்துக் கொண்டு நிற்க,

அவளுக்கு உள்ளுணர்வு தோன்றியதோ என்னவோ..விழிகளைத் திறந்தாள். திறந்தவளுக்கு கணவன் கை கட்டி நின்றபடி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிய அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.

அவளது கைகள் தன்னிச்சையாய் புடவை மாராப்பை சரி செய்து கொண்டு கணுக்கால் வரை உயர்ந்திருந்த புடவையை இழுத்து விட்டுக் கொண்டது.அவள் என்னவோ அதை அனிச்சை செயலாகத்தான் செய்தாள்.பார்த்துக் கொண்டிருந்தவனுக்குத்தான் சுர்ரென்று ஏறியது.

நேற்று அவளிடம் நடந்து கொண்ட முறைக்குத்தான் இன்று பயப்படுகிறாள் என்று அவனாகவே தவறாகப் புரிந்து கொண்டான்.

அவளை உறுத்து விழித்தவன் டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவளுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. ‘எதுக்கு கோபமா போறாரு…?’,நினைத்தவள் மணியைப் பார்க்க வழக்கமாக எழும் நேரம் கடந்திருந்தது.

குளித்து விட்டு சமைக்க சென்றால் தாமதமாகி விடும் என்று எண்ணியவள்..இன்னொரு அறையிலிருந்த குளியலறைக்குச் சென்று முகம் கழுவி விட்டு சமைக்க விரைந்தாள்.

இவன் கிளம்பி கீழே வரும் போது இவள் புடவை முந்தானையை தூக்கி செருகிக் கொண்டு அடுப்பில் எதையோ கிளறிக் கொண்டிருந்தாள்.

பளிச்சென்று கவனத்தை ஈர்த்த வெண்ணிற இடை அவனுக்கு கடுப்பைத்தான் கிளப்பியது.

‘பார்க்கணும்ன்னு காண்பிப்பா.. பார்த்தால் இழுத்து மூடிக்குவா…’,ஏனென்றே தெரியவில்லை அவனுக்கு எரிச்சலாக இருந்தது.அவனுக்குள் கிளம்பிய மோகம் எழுப்பி விட்ட எரிச்சல் அது.அதிலிருந்து மீண்டவர்கள் எவரும் இல்லை. இவன் மட்டும் விதி விலக்கா என்ன…?

ஆனானப்பட்ட விஸ்வாமித்திரரே மேனகையிடம் மயங்கினார்..இவன் என்ன விஸ்வேஷ்வரன் எந்த மூலை…?

அதிலும் சமையலறையின் வெம்மை காரணமாக இடையிலும் வியர்வைத் துளிகள் துளிர்க்க.. அவனது கற்பனை தறி கெட்டு ஓடியது.

“ம்க்கும்…”,தொண்டையை செருமியபடி நிமிர்ந்தவனுக்கு விருந்தானது என்னவோ பளீரென்ற முதுகுதான்.கூந்தலை வேறு அள்ளி கொண்டை போட்டிருந்தாள்.

‘இவ்வளவு இறக்கம் வைச்சா ஜாக்கெட் தைப்பாங்க…’,அவனது மனம் நேரங்கெட்ட நேரத்தில் ஆராய்ச்சியில் இறங்க,அவள் திரும்பிப் பார்த்தாள்.

“கிளம்பியாச்சா…? இதோ டென் மினிட்ஸ்ல சமையல் முடிஞ்சிடும்…”,அவனிடம் கூறியவள் திரும்பி இட்லி பானையில் வெந்த இட்லியை எடுத்து ஹாட் பேக்கில் போட்டாள்.

அவனது ஆராய்ச்சி முடிந்த பாடாக இல்லை.முத்து முத்தாக முகிழ்த்திருந்த வியர்வைத்துளிகள் வேறு அவளது முதுகிலும் படர்ந்திருக்க, மீண்டும் மீண்டும் அவளது ஜாக்கெட்டின் இறக்கம் தான் அவன் கண்களில் பட்டது.

நினைத்ததை கேட்காமல் விட்டால் அவன் விஸ்வேஷ்வரன் இல்லையே…?

“இவ்வளவு இறக்கம் வைச்சா ஜாக்கெட் தைப்ப…?”, பட்டென்று கேட்டே விட்டான்.

அடுப்பில் கிளறிக் கொண்டிருந்த அவளது கைகள் அப்படியே நின்றன.அவள் அதிர்ச்சியுடன் திரும்பி அவனைப் பார்த்தாள்.

கரு வண்டு விழிகளை இன்னும் அகலமாகத் திறந்து அவள் விழித்த விழியில்தான் அவனுக்கு தான் என்ன கேட்டோம் என்பதே நினைவிற்கு வந்தது.அவனும் ஏதோ நினைவில்தான் அதை கேட்டிருந்தான்.

‘அய்யயோ..அபத்தமா கேள்வி கேட்டுட்டோம் போலவே…’அவன் மனதிற்குள் அசடு வழிந்தாலும் வெளியே சமையலறை நிலவில் சாய்ந்தபடி கைக்கட்டிக் கொண்டு அப்படியே நின்றிருந்தான்.

“எ..என்ன…?”,அவள்தான் திகைப்பு விலகாமல் தடுமாறினாள்.

அவனது பார்வை அவளது முதுகில் படர்ந்து அவளது விழிகளில் நிலைக்க..அவள் சட்டென்று கொண்டை போட்டிருந்த தனது முடியை அவிழ்த்து விட்டாள்.தலையை ஆட்டி தனக்குள் சிரித்தபடியே அவளை நெருங்கியவன்..கரண்டி பிடித்திருந்த அவளது கையைப் பற்ற..அவள் சட்டென்று கரண்டியை கீழே விட்டாள்.

“எ..என்ன…?”,அவனது அருகாமை அவளுக்குள் கிளர்ச்சியை மூட்ட..விலகிச் செல்லவும் இடமில்லை.அந்தளவிற்கு நெருக்கமாக நின்றிருந்தான்.

இதயம் தட தடக்க இமைகள் அதற்கு இணையாக பட படத்தது.குட்டி குட்டியாய் வியர்வைத்துளிகள் வேறு நெற்றியில் அரும்ப..லேசாக மூச்சு வாங்கியது அவளுக்கு.அவளது நிலையை அவனும் உணர்ந்துதான் இருந்தான்.

“இதை கிளறணும்..அவ்வளவுதானே… நான் கிளறறேன்…!நீ போய் கிளம்பு…!”,அவள் நழுவ விட்ட கரண்டியை டியை எடுத்து அவன் அடுப்பில் கிளற ஆரம்பிக்க..அவளுக்கு அப்பொழுதுதான் மூச்சே வந்தது.

‘இதுக்குத்தான் வந்தானா…?’,ஆசுவாச பெருமூச்சு விட்டவள், “இல்ல..நானே பார்த்துக்கிறேன்.. நீங்க போங்க…!”,அவன் கையிலிருந்த கரண்டியை பிடுங்க முயல,

ஒரு பொறுமையற்ற பெரு மூச்சுடன் அவள் புறம் திரும்பியவன், “முதல்ல போய் இந்தப் புடவையை மாத்து டி.. இட்ஸ் டெம்ப்ட்டிங் மீ…!”,பல்லைக் கடித்துக் கொண்டு சீறியவனின் குரல் கரகரத்தது.

தாபத்தைக் கூட அவன் சீறலாகத்தான் காண்பித்தான். முதலில் அவன் கூறியது புரியவில்லை.பிறகு உரைக்க..அவள் மீண்டும் விழியகல அவனையே நோக்கினாள்.

“இப்போ மட்டும் நீ போகல..அப்புறம் நடக்கற எதுக்கும் நான் பொறுப்பாக மாட்டேன்…!”,அவன் மீண்டும் வார்த்தைகளை கடித்துத் துப்ப அவள் அவ்விடத்தை விட்டு ஓடியே விட்டாள்.

“ஜாக்கெட் போட்டிருக்கிறாள் பார்.. ஏழு முழத்துக்கு இறக்கம் வைச்சு..”,அவன் முணுமுணுத்தது அவள் காதில் தெளிவாகவே விழுந்தது.

எப்படியோ தயாராகி அவன் முகத்தைக் கூட பார்க்காமல் கிளம்பி அலுவலகத்திற்கு வந்து விட்டாள்.

சுவாரசியமான செய்தி.ஒரு பெண்..சிறு அன்று அவளுக்கு கிடைத்தது ஒரு சுவ வயதிலேயே தனது குடும்பத்தினரால் மும்பையில் சிகப்பு விளக்கு பகுதிக்கு விற்கப்பட்டு..பல கயவர்களின் கைகளால் சித்ரவதைகளை அனுபவித்து..பிறகு எப்படியோ தெய்வாதீனமாக தப்பித்து..இப்பொழுது சமூகத்தில் நல்ல நிலைமையில் இருக்கிறார்.

அவர் கடந்து வந்த பாதைகளில் இனி எந்தப் பெண்ணும் பயணிக்க கூடாது என்பதற்காக தன்னால் முடிந்தளவிற்கு அவ்வாறு சிரமப்படும் பெண்களுக்கு இடமளித்து ஆதரித்து வருபவர்.சமூகத்திற்கு அவர் செய்யும் நல்ல காரியங்கள் ஏராளம்.இவர் காப்பாற்றிய பெண்களும் ஏராளம்.அவரைச் சென்று பேட்டி எடுத்து வருமாறு யாழ்வியின் மேலாளர் அவளை அனுப்பியிருந்தார்.

சிகப்பு விளக்கு பகுதியை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும்..அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் கண்டு பேட்டி எடுப்பது இதுதான் முதல் முறை.நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அவளும் விருப்பத்துடனேயே கிளம்பி விட்டாள்.

ஆனால்,பேட்டி எடுத்து வந்த பிறகுதான் தெரிந்தது இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ளாமலே இருந்திருக்கலாம் என்று அந்தளவிற்கு நரக வேதனையை அந்தப் பெண் அனுபவித்திருந்தார்.அவரது கதையை கேட்டவளுக்கு மனதில் பாரமேறிப் போன உணர்வு.

‘சமூகம் இப்படியும் இருக்கிறதா…?’,மனதில் கோபம் எழ..எப்படியோ வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டாள்.

பேட்டி எடுத்த நினைவுகளே மீண்டும் மீண்டும் மனதை போட்டு பிசைய..சமையலிலாவது கவனத்தைத் திருப்பலாம் என்று எண்ணியவள் சமையலறைக்குள் புகுந்தாள்.

கார்லிக் ஃப்ரைட் ரைஸ்..பன்னீர் மஞ்சூரியன்.. கஸ்டர்டு ஃப்ரூட் சாலட் என்று இரவு உணவை அமர்க்களமாக சமைத்தவள் அந்த விஷயத்தை ஓரளவிற்கு மறந்தும் போயிருந்தாள்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் விஷ்வா வீட்டிற்கு வந்து விட்டான்.தான் சமைத்ததை துரையின் குழந்தைகளுக்கும் சிறிது கட்டிக் கொடுத்தாள்.

“என்ன இவ்வளவு ஐட்டம் சமைச்சிருக்க…எனி ஸ்பெஷல்…?”,டைனிங் டேபிளில் அமர்ந்தபடி அவன் வினவ,

“சும்மாதான்…!”,அவனுக்குத் தட்டை எடுத்து வைத்தாள்.

“நான் போலீஸ்காரன்…என்கிட்ட மறைக்க நினைக்காதே…!என்ன விஷயம்…?”,அவள் முகம் ஒருமாதிரி வாடியிருப்பதை கண்டு கொண்டு வினவினான்.

‘எப்படி கண்டுபிடிச்சான்…?’, மனதிற்குள் வியந்தாலும் தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த விஷயத்தை அவனிடம் பகிர தவறவில்லை அவள்.

“அவங்களை பேட்டி எடுத்துட்டு வந்ததுல இருந்து ரொம்ப கஷ்டமா இருக்குது…!இன்னும் எத்தனை பெண்கள் கண்ணுக்குத் தெரியாமல் இப்படி சீரழிஞ்சிட்டு இருக்கிறார்களோ… அங்கே இருந்து தப்பிச்சு வந்த பிறகும் இந்த சமூகம் அவங்களை ஈஸியா வாழ விடல…!எத்தனை சந்தேகம்.. எத்தனை அவமானம்..எல்லாத்தையும் கடந்து இன்னைக்கு நாம எல்லாம் அண்ணாந்து பார்க்கிற ஒரு நிலைமையில இருக்காங்க…!அவங்களுடைய மன உறுதி எல்லா பெண்களுக்குமே வேணும்…!”,நீண்ட பெரு மூச்சுடன் அவள் கூறி முடிக்க,

“உண்மைதான்…!”,சுருக்கமாக முடித்துக் கொண்டான் அவன்.

அவள் முகம் இன்னும் வாடி இருப்பதைக் கண்டவன், “சரி..அதையெல்லாம் ஒதுக்கி வைச்சிட்டு கொஞ்சம் எனக்கு பரிமாறலாமே..பசிக்குது…!”,அவன் கூற அவளும் தன் வருத்தத்தை ஒதுக்கி வைத்து விட்டு அவனுக்கு பரிமாற ஆரம்பித்தாள்.

அவளையும் அமர வைத்தவன் அவளுக்கும் தட்டு வைத்து பரிமாற..இருவரும் ஒன்றாகவே சாப்பிட்டு முடித்தனர்.

அவள் அடுப்பு மேடையை சுத்தம் செய்ய..அவன் பாத்திரங்களைத் துலக்க ஆரம்பித்தான்.

”இட்ஸ் ஓகே ஏ.சி.பி சார்…!நான் பார்த்துக்கிறேன்…!”அவள் தடுக்க,

“இந்த ஏ.சி.பி சாரை விடுன்னு நான் உன்கிட்ட சொன்னதா ஞாபகம்…!”,பாத்திரங்களை துலக்கியபடியே அமைதியான குரலில் கூறினான் அவன்.

“அப்புறம் எப்படி கூப்பிடறதாம்…! பழகுன பழக்கத்தை அவ்வளவு சீக்கிரம் மாத்திக்க முடியாது…!”,அவள் கூறி விட்டு அடுப்பை துடைப்பதில் மும்முரமாகி விட..அவளை அமைதியாய் ஏறிட்டவன் ஒன்றும் பேசவில்லை.தன் வேலையில் கவனமானான்.

இருவரும் சமையலறையை ஒதுக்கி விட்டு..ஆளுக்கொரு கிண்ணத்தில் சில்லென்ற ஃப்ரூட் சாலடை போட்டுக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தனர்.

“டின்னர் ஹெவி…! கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு படுக்க போகலாம்…!”,கூறியபடியே தொலைக்காட்சியை உயிர்பித்தான் அவன்.

சரியாக அந்நேரம் அவளது மொபைல் அலறியது.அவளது அன்னைதான் அழைத்திருந்தார்.

“அம்மா…! இப்போத்தான் உங்க பொண்ணு ஞாபகம் வந்துச்சா…?”,ஆரம்பித்தவள் சள சளவென்று தன் தாயிடம் வாயாட ஆரம்பிக்க அவன் தொலைக்காட்சி நியூஸில் மூழ்கினான்.

“என்னது..திருவிழா வருதா…?சரிம்மா…நான் வர பார்க்கிறேன்…!”இவள் கூறுவது அவன் காதிலும் விழுந்தது.

“ம்..இதோ அவர்கிட்ட கொடுக்கிறேன்…”,பேசியவள் விஸ்வேஷ்வரனை சுரண்டி அவன் கையில் போனை திணித்தாள்.

ரகுவரன்தான் பேசினார்.

“மாப்பிள்ளை…!நம்ம ஊர்ல திருவிழா வருது…!கண்டிப்பா நீங்க வரணும்…!”,அவர் அழைப்பு விடுக்க,

”சரி மாமா…!வர ட்ரை பண்றேன்…!”, சிறிது நேரம் பொதுவாக பேசி விட்டு அவர் போனை வைத்து விட்டார்.

“அடுத்த வாரம் திருவிழா வருதாம்… போகலாமா…?”,அவள் வினவ,

“முக்கியமான கேஸ் ஒண்ணு போய்ட்டு இருக்குது…!நான் வர முடியாது…!”,ப்ரூட் சாலடை ஸ்பூனில் எடுத்த  வாயில் போட்டபடியே மறுத்தான் அவன்.

“அப்போ..நான் மட்டும் போயிட்டு வர்றேன்…!ஒரு வாரம் ஆபிஸ்க்கு லீவ் போட்டுட்டு அம்மா வீட்டுல போய் ஜாலியா ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்…!”,அவள் அவசர அவசரமாக அவளுக்கான அட்டவணையை தயாரித்துக் கொள்ள அவனுக்குத்தான் ஏமாற்றமாக இருந்தது.

‘வர முடியாதுன்னு சொல்லிடு…’,வாய் வரை வந்த வார்த்தைகளை அவளது மலர்ந்த முகம் பார்த்து அடக்கி கொண்டான்.

தான் போகவில்லை என்றால் அவளும் போக மாட்டாள் என்று எதிர்பார்த்தானோ என்னவோ..அவன் முகம் சுருங்கி விட்டது.

‘என்னை விட்டுட்டு போறாளா…?’, மனம் செல்லமாய் முரண்ட வேறு செய்தது.

“ஒரு வாரம் ஆபிஸ்ல லீவ் தருவாங்களா…?”,

“அதெல்லாம் தருவாங்க…!நான் இந்த சண்டேவே கிளம்பிக்கிறேன்…!”,தாய் வீடு செல்லப் போகும் உற்சாகம் அவளைத் தொற்றிக் கொண்டது.

அவளுக்கு மட்டும் இல்லை.திருமணமான அனைத்துப் பெண்களுக்குமே இந்த தாய்வீடு ஒரு சொர்க்கம் தான். அதுநாள் வரை பிறந்து வளர்ந்த வீடு தான்..ஆனால்,திருமணத்திற்குப் பிறகு செல்லும் போது அங்கு கிடைக்கும் உபசரிப்புகளும்..சீராடல்களும் சற்று அதிகம்தான்.

சொல்லப் போனால், பெண்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் தாய் வீடு.

அவளைத் தடுக்க மனம் உந்தித் தள்ளினாலும்..அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அவனை அதை செய்ய விடவில்லை. ‘சரி..போய்விட்டு வரட்டும்…’என்று மனதை தேற்றிக் கொண்டான்.

பிரிவுதான் காதலை உணர்த்தும் என்பார்கள். அதைப் போல..அவளைப் பிரிந்து இருந்த அந்த ஒரு வார காலம்தான் அவளது அருமையை அவனுக்கு உணர்த்தியது.அவளை தான் எவ்வளவு தேடுகிறோம் என்பதை அவன் உணர்ந்த தருணமும் அதுதான்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page