தூரிகை 2❤️
காஞ்சிபுரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து இந்த சென்னை மாநகரத்தில் எப்படி சொல்வது என்று தெரியாமல் எப்படியோ?? யார் யாரிடமோ கேட்டு அவள் வர வேண்டிய இடத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரம் அமர்ந்து காற்றில் அசைந்தோடும் தன்னுடைய கலைந்த முடிகளை ஒரு புறம் ஒதுக்கி கொண்டும், “உன் அப்பாவோட உயிரு உன் கையில தான் இருக்கு,” என்று தன் அன்னை சொன்னதை எல்லாம் தன் மன ஓட்டங்களில் ஒருபுறம் ஓட்டிகொண்டும் திருவல்லிக்கேணி பேருந்து நிலையம் வந்தும் இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தவளின் சிந்தனையை
“ஏம்மா!! இறங்க வேண்டிய இடம் வந்தும் இன்னும் இறங்காமல் இருந்தீங்கன்னா! உங்களை எல்லாம் வெத்தலை பாக்கு வச்சு தான் இறக்கணுமா?” என்ற நடத்துனரின் கத்தலில் தெளிந்து தன்னுடைய சிறிய பேக்கை எடுத்துக் கொண்டு நடத்துனரிடம் திரும்பி தான் செல்ல வேண்டிய தெருவிற்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டு கீழே இறங்கினாள். கார்குழலி!!
நடத்துனரிடம் கேட்டும் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் திருத்திருவென முழித்தவளை அங்கிருக்கும் கூட்டம் ஏதோ?? ஜாங்கியிரின் மேல் மொய்க்கும் ஈ போல் பார்த்தனர். அவள் தோற்றமும் அப்படித்தான் இருந்தது. சாதாரண சிவப்பு நிற ஷிபான் சேலையே அவளின் மாநில தேகத்திற்கு பாந்தமாய் பொருந்திருக்க… மையிடாமலேயே மையிட்டது போல் அவளின் கூறிய விழிகளும், இடை வரை உள்ள அவளின் நீண்ட கூந்தலில், ஒற்றை ரோஜா கூட இல்லாமலேயே, பிரம்மன் வடித்த சிற்பம் போல, அழகாக இருந்தாள்.
என்ன அவளின் இந்த வதனம், பதின்மங்களிலேயே, ஒரு குடிக்காரன், திருமணம் என்றப் பெயரில் சூரையாடி விட்டு, பாதியிலேயே விட்டுவிட்டு சென்று விட்டான். அவளுக்கும் சிறிய வயது, குழந்தை வேறு இல்லை… அதனால் மறு திருமணம் செய்து வைக்கலாம் என அக்கம் பக்கத்தினரும், சொந்தக்காரர்களும் எத்தனையோ? முறை கூறியும் அவள் தந்தை, அதை மறுத்து விட்டார். இதோ 15 வருடங்கள் ஓடி விட்டன.
அவளும் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தன் தாய் தந்தையே உலகம் என வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.
இப்போது கூட தனது தந்தைக்கு இதய சிகிச்சை செய்வதற்காக 10 லட்சம் தேவைப்படுகிறது. அவன் சித்தப்பா மகன் ஒரு டிரஸ்ட் மூலம் அதை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி தான் முதலில் தந்தையின் விவரங்களை மட்டும் பார்த்து விட்டு பிறகு, அவரை அழைத்துக் கொண்டு வரலாம் என்று கூறியதால் அவளும் வந்திருக்கிறாள்.
சென்னைக்கு இன்று தான் முதல் முதலாக தனியே வந்திருக்கிறாள். ஏன்?? தான் வேலை செய்யும் தறி வேலையைத் தவிர வேறு எங்கு சென்றாலும், தனது அன்னையை அழைத்துக் கொண்டுதான் செல்வாள். அதற்கு முதல் காரணம்,, இவள் முன்னே சென்றால், அபசுகணம், இரண்டாவது காரணம், பயம் அதனால் தான் இந்த முழிப்பு…
இந்த மாதிரியான முழித்தவளைக் காப்பாற்றவென்றே, அங்கு ஒரு அம்மா வந்து, “பூ வாங்கிக்கோ மா,” என்றுக் கேட்டார்.
அவரிடம், “நான் பூ வைக்கக் கூடாது மா, ” என்றுக் கூறி விட்டு தான் செல்ல வேண்டிய இடத்தின் கோவில் தெருவிற்கு எப்படி செல்ல வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டு அந்தப் பேருந்து நிறுத்தத்தின் எதிர் புறத்திற்கு வந்து நின்றாள்.
எப்படியோ?? அந்த ஆளுங்க பார்வையிலிருந்து தப்பிச்சோம் டா சாமி, என்று தான் கையில் வைத்திருக்கும் பையைத் திறந்து அதிலிருந்து முகவரியைத் தேடும் போது தான், அது தன் வீட்டின், தொலைக்காட்சி, பெட்டியின் மேலே வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வர,, “உனக்கு ரொம்ப ஞாபகம் மறதி அதிகமாயிடுச்சு கார்குழலி,” என்று தன் தலையிலேயே தட்டிக்கொண்டு தன் அன்னையிடம் கேட்கலாம் என போனை எடுத்துப் பார்த்தாள்.
ஆனால், அது எப்போதோ செத்துப் போயிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், யோசிக்கும் போது தான் தன் அன்னையும் அவளும் பேசியது நினைவுக்கு வந்து கோவில் தெரு தானே!! இந்த ஏரியால எப்படியும் ஒன்னு ரெண்டு கோவில்தான் இருக்கும் அந்த கோவில் இருக்கிற பக்கம் போய்க்கலாம் என்று தன்னை தானே சமன்படுத்திக் கொண்டு அடுத்த எட்டை எடுத்து வைத்துக் கொண்டும் தன் தந்தையின் நிலையைக் குறித்து தன் சித்தப்பா மகனிடம் என்னென்ன பேச வேண்டும் என யோசித்துக் கொண்டும் ஓட்டமும் நடையுமாக சென்றாள்.
அவள் முகவரியைத் தொலைத்ததால் தான் செல்ல வேண்டிய சிவன் கோவிலுக்கு பதிலாக பெருமாள் கோவில் பக்கம் இருள் சூழ்ந்ததால் இன்னும் தன்னடை வேகமாக நடந்து சென்றாள். தன் வாழ்வும் இதுபோல வழி மாறி போவது தெரியாமல் வந்தாள்.
அவள் வந்த நேரம் அந்த தெருவின் எல்லா வீடுகளும் பூட்டியிருந்தது அவளும் யாரு என்று தெரியாமல் யார் வீட்டுக் கதவையாவது தட்டி விடுவோமோ? என யோசித்துக் கொண்டே வர ஒரு வீடு மட்டும் திறந்திருக்கவும் இவளோ?? இந்த பரப்பபான ஊருல யாரு கதவை இப்ப திறந்து போட்டு இருப்பாங்க எல்லாம் என் அண்ணா தான் எனக்காக காத்துட்டு இருக்கும் என்று மங்குனியாய் யோசித்து
திறந்த வீட்டினுள் நுழையவும் அங்கு அவள் கண்களில் பட்டது கழுத்தின் உள்ளே கத்தி சொருகி இருந்தவனும் இவள் உள்ளே வரும் போது அமுதன் திரும்பிய வேகத்தில் தான் அணிந்திருக்கும் சிவப்பு நிற சேலையின் வண்ணத்திலேயே ரத்தம் தெருத்திருந்த கோர முகமும் தெரிய அதை பார்த்து,, “ஆஆஆஆ ஆ,” என்றுக் கத்தி விட்டு அப்படியே கண்கள் சிமிட்டாமல் அப்படியே உறைந்து நின்று விட்டாள். முதல் முறையாக ஒரு கொலையை நேரில் பார்த்த அதிர்ச்சியில் தன் தந்தைக்கு பதிலாக தனக்கு இது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்று கூட ஒரு நிமிடம் தோன்றி கை கால்கள் எல்லாம் உதரல் எடுத்துவிட்டு அப்படியே நின்றாள்.
அமுதன் கண்ணுக்கு அவள் உறைந்து நிற்பது போல் அல்லாமல் சாட்சிக்காக வந்திருக்கும் அவனின் இரண்டாவது என்று நினைத்து அந்த கோர முகத்தை துடைக்காமலே ரத்தம் படிந்த கத்தியை தனது கருப்பு நிற சட்டையின் மேல் துடைத்துக்கொண்டு தன் முன்னே எதுவும் செய்யாமல் உறைந்து நிற்பவளின் அருகில் மெல்ல அடிகளை எடுத்து வைக்க அவளோ?? அவனின் ஒவ்வொரு அடிக்கும் இரண்டு அடிகளாக பின்னே அடி எடுத்து வைத்தாள்.
“ஓஓ… மேடம் இப்போ ஸ்டெப்ஸ் கவுண்ட் பண்ணி பின்னாடி போறீங்களா!” என்றுக் கேட்டான்.
அவள் அதற்கு எதற்கும் பதில் சொல்லாமல் பின்னே நகர்ந்து கொண்டு போக ஒரு பக்கம் திறந்திருந்த கதவில் இடித்துக் கொண்டு தன்னிடம் உள்ள தன் கைப்பையையும் அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தாள்.
இவனும் அவள் பின்னே தன் ஜீப் வரும் வரை மட்டும் ஓடினான். தனது ஜிப்பை அடைந்ததும் அங்கு வைத்திருக்கும் தண்ணீர் பாட்டில் எடுத்து ஆற அமர தன் முகத்தை கழுவிக்கொண்டு இவளை எல்லாம் ஒரு ஆளு, இவள பிடிக்க நான் ஓடணுமா?? என்று யோசித்துக்கொண்டு நடந்து போனாலே பிடித்து விடுவேன். அதுக்கு முன்னாடி இந்த பாடியை டிஸ்போஸ் பண்ணனும் என்று யோசித்து தன்னுடைய போனை எடுத்து, தனக்கு பரிட்சையமான காவல்துறை அதிகாரிக்கு அழைத்தான்.
அது இரண்டு முறை அழைத்தும் எடுக்கப்படாமல் போகவும் அதை வைத்துவிட்டு அவள் ஓடியதற்கு இவன் நடையையே வேக எட்டுகளாக எடுத்து வைத்து நடக்கும் போது அந்த காவல் துறை அதிகாரியிடமிருந்து அவனுக்கு மீண்டும் அழைப்பு வந்தது. அதை ஏற்றுக் காதல் வைத்து, ” ஏன்? ஒரு தடவை போன் பண்ண எடுக்க மாட்டியா, ” என்று கேட்டான்…
“அது இல்ல சார்… ஒரு முக்கியமான கேஸ் அது தான் எடுக்க முடியல சொல்லுங்க சார்..” என்று கேட்டார்.
“நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் ல க்கோட் பண்ண அமௌன்ட் ஆப்போசிட் டீமுக்கு சொன்ன பிளாக் ஷிப்பை நான் கண்டு பிடிச்சு போட்டு தள்ளிட்டேன்.” என்றான்.
“என்ன சார் சொல்றீங்க இன்னைக்கு காலையில தானே சார் டீலே உங்களை விட்டு போச்சு அதுக்குள்ள கண்டுபிடிச்சு போட்டு தள்ளிட்டீங்களா!” என்று அவர் அதிர்ச்சியாக கேட்டார்..
“ஆமா இது கண்டுபிடிக்கிறதுக்கு சயின்டிஸ்ட் வருவாங்க… அது எல்லாம் கண்டு பிடிச்சி போட்டே தள்ளிட்டேன் அவன் செட் அப் வீட்ல தான் அவன் பாடி இருக்கு,” என்றான்.
“இப்ப வந்தா அவன் ஒரு பாடி மட்டும் தான் உனக்கு கிடைக்கும் இன்னொரு பத்து நிமிஷம் விட்டு வந்தா தான் ஒன்னு வாங்கினா இன்னும் ஆப்பர் மாதிரி, இன்னொரு பாடி கிடைக்கும். எப்படி இப்ப வந்து ஒரு பாடியோட போறியா? இல்ல பத்து நிமிஷம் கழிச்சு வந்து இரண்டு பாடி ஓட போறியா? சாய்ஸ் இஸ் யூர்ஸ் ” என்று கேட்டான்..
“சார் நீங்க… எப்படி சொல்றீங்களோ!! அப்படியே!! செய்றேன். ஆனால், என்னை கொஞ்சம் கவனியுங்கள்,” என்று போனில் அந்த பக்கம் அவன் இளிப்பது இந்த பக்கம் வரை அவனுக்கு கேட்டது…
அதைக் கேட்டு அவனும், அந்த தெருவே அதிரும்படி சிரித்து விட்டு “மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்,” என்றுக் கூறினான்…
“நீ பத்து நிமிஷம் விட்டு பொறுமையாக வா!! அவனோட சாவுக்கு சாட்சி வச்சுட்டு போறதா சொன்னான். அந்த சாட்சியோட மூஞ்சிய ஒரு தடவை நானும் பார்த்துட்டு அந்த சாட்சி செத்ததுக்கு சாட்சியா, நான் இருக்க வேண்டாமா? அதனால, இறுதியாக பார்ப்போம்,” என்று வைத்து விட்டான்..
அவள் பின்னே அவன் வருகிறானா? என்று பார்த்து, பார்த்து இவள் ஓடினாள்.
அவன் வராமல் போகவும்,, அட அவரு நான் பொண்ணுன்னு பார்த்து விட்டுட்டாரு போல என்று அங்கிருக்கும் இடத்தில் அமர்ந்து தன்னை சற்று நேரம் ஆசுவாசப்படுத்தி கொண்டு நிமிரும் நேரம், அவன் தூரத்தில் நடந்து வருவது தெரியவும்… மீண்டும் தனது ஓட்டத்தை ஆரம்பித்து, திரும்பிப் பார்க்க… அவன் அங்கு இல்லை,, இப்போ பார்த்தபோது தெரிஞ்சது அப்போது இருட்டாக இருந்து இருக்கும் இது எப்படியோ?? இப்போ அந்த உருவம் இல்ல அதனால நம்ம வேக வேகமா இந்த இடத்தை காலி பண்ணி நம்ம ஊருக்கே போயிடுவோம் என்று நினைத்துக் கொண்டே வர அப்போது சேலை தடுக்கி விட்டது.
அதை சரி செய்துவதற்காக அவள் சேலையை இழுத்தப் போது அவளால் சேலையை எடுக்க முடியவில்லை… ஏன்?? நிமிர்ந்து என்று பார்க்க.. அந்த சேலையின் நுனி, அவன் காலடியில் இருந்தது…
என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தவளின் முன்னே!! பளபளக்கும் கத்தி தெரிய அவள் மீண்டும் கத்தும் முன்னே! அவளின் வாயை பொத்தி,அவளைக் குத்த கத்தியை பின்னோக்கி இழுத்தான்.
தொடரும்.…
கதையின் போக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க… அப்படியே உங்களின் விமர்சனத்தையும், மதிப்பீட்டையும் தந்து விட்டுச் செல்லுங்கள்.…
