அத்தியாயம் 5
ரேணு, தம்பதியர் இருவருக்கும் ஆரத்தி எடுக்க ஆரத்தி தட்டு காற்றில் பறந்து ‘டொம்’ என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது.
அனைவரும் ‘டொம்’ என்ற சத்தத்துடன் காற்றில் பறந்து விழுந்த ஆரத்தி தட்டை பார்த்தனர்!
அங்கு என்ன நடந்தது என்பதை நிதானிப்பதற்குள் தட்டு பறந்து சென்று கீழே ‘டொம்’ என்ற சத்தத்துடன் விழுந்தது!!
என்ன நடந்தது! ஆரத்தி தட்டு எப்படி காற்றில் பறந்தது என்று அதிர்ச்சியாக அனைவரும் ஒருவரையொருவர் பார்க்க அங்கு பத்ரகாளியாய் மனிஷா நின்று கொண்டிருந்தாள்.
மனிஷாவை பார்க்கவும் விதுரனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. சரஸ்வதி, அம்பிகா ரேணு மூவரும் அதிர்ச்சியாக மனிஷாவை பார்த்தனர். ஆனால் ரஞ்சித்தோ மெதுவாக புன்னகைத்தான்.
காரணம்! மனிஷாவிற்கு விதுரன் திருமணம் செய்து விட்டான் என்ற தகவலை கொடுத்து அவளை வர வைத்தது அவன் தானே. அதனால் கள்வன் குறுநகை புரிந்தான்!!
பிரதிக்ஷாவின் வீட்டை சேர்ந்த அனைவரும் ‘யார் இந்த பெண்’ என்று அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டே நின்றனர்.
மனிஷாவை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க மனிஷா கோபத்தில் விதுரனின் சட்டையை பிடித்து கொண்டு கோபத்தில் கத்த தொடங்கினாள்!.
‘இந்த வந்துட்டால்ல மூக்கு வேர்த்து! எப்படியோ அண்ணன் இந்த ராட்சசிகிட்ட இருந்து தப்பிச்சுட்டான்னு சந்தோசப் பட்டு கொஞ்ச நேரம் கூட ஆகல! அதுக்குள்ள வந்து நிற்கிறா!’ என்று ரேணு முணுமுணுக்க “விதுரன் காதுல விழுந்துற போது கொஞ்சம் அமைதியா பேசு” என்று அம்பிகா ரேணுவை கடிந்து கொண்டார்.
“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஒரு காரியத்தை பண்ணுவ விதுரா ! எனக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு, உனக்காக நான் காத்துகிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியாதா?”என்று கோபத்தோடு கேட்டாள் மனிஷா.
சரஸ்வதி மனிஷாவை நோக்கி, “மனிஷா முதல்ல பொறுமையா இரு! விதுரன் அவன் பொண்டாட்டியோட வீட்டுக்குள்ள போகட்டும்! அப்புறம் என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெளிவா நாங்க சொல்றோம் அதுக்கப்புறம் பேசு! அவசரப்படாத?” என்று சொல்ல,
“நீங்க சும்மா இருங்க! இது எனக்கும் விதுரனுக்கும் இடையில நடக்குற பிரச்சனை! விதுரன் எனக்கு துரோகம் பண்ணி இருக்கான், அதுக்கு நான் நியாயம் கேட்கிறேன்! எங்க ரெண்டு பேருக்கும் இடையில நீங்க தேவையில்லாம குறுக்க வராதீங்க?” என்று கோபத்தில் கொந்தளித்தாள் மனிஷா.
தன்னை கேள்வி கேட்டபோது கூட கோபப்படாத விதுரன், சரஸ்வதியை எதிர்த்து பேசவும் கோபப்பட்டு, இங்க பாரு மனீஷா என்ன நடந்துச்சுன்னு தெரியாம வார்த்தையை விடாத! அம்மா கிட்ட என்ன பேசுற?” என்று கோபப்பட்டான்.
விதுரனை பற்றி தெரிந்ததால் உடனே சுதாரித்துக் கொண்ட மனிஷா, “அத்தை கிட்ட நான் கோபப்படல! உன் கிட்ட தான் கேட்டுகிட்டு இருக்கேன்! எதுக்கு இப்படி ஒரு காரியத்தை பண்ணுன, இதுக்குத்தான் முக்கியமான ப்ராஜெக்ட விட்டுட்டு ரஞ்சித்தோட கல்யாணத்துக்கு போகணும்னு பிடிவாதமா இருந்தியா? இப்படி மாலையும் கழுத்துமா வந்திருக்கிறியே? அப்போ எனக்கு பதில் என்ன?” என்று கேட்டாள் மனிஷா.
“மனிஷா லூசு மாதிரி பேசாத! அங்க என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியாது. கொஞ்ச நேரம் பொறுமையா இரு வீட்டுக்குள்ள போயி எல்லாத்தையும் பேசலாம். வெளியில் நின்னு இப்படி கத்திக்கிட்டு இருக்காத!” என்று எச்சரித்தான் விதுரன்.
மனிஷாவும் விதுரனும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கவும் பிரதிக்ஷாவின் குடும்பத்தினருக்கு தெரிந்து போனது. இது விதுரனின் காதலி என்று!!
பிரதிக்ஷாவின் குடும்பத்தினர் எதுவும் சொல்லாமல் அப்படியே அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.
பிரதிக்ஷாவின் சித்தப்பா மட்டும் முன்னே வந்து, ” நடந்தது நடந்துட்டு! யாரும் இப்படி ஒரு சம்பவம் நடக்கும்னு எதிர்பார்க்கல, நல்ல நேரம் முடிய இன்னும் சில வினாடி தான் இருக்கு அதுக்குள்ள வீட்டுக்குள்ள போயிருவோம்! அதுக்கப்புறம் பொறுமையா பேசலாம்!” என்று சொல்ல விதுரன் அவரை முறைத்தான்.
விதுரனின் சித்தப்பாவோ அதற்கு அப்புறம் எதுவும் பேசவில்லை! பிரதிக்ஷாவின் திருமணத்தில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போதே தனக்கு தெரிந்தவர் மூலம் விதுரன் யார் என்று அறிந்து கொண்டது தான் அதற்கு காரணம்!
பல கோடி சொத்துக்களுக்கு ஒரே வாரிசு! பிரதிக்ஷாவை விதுரனுக்கு திருமணம் செய்து வைத்தால் பின் நாட்களில் தன்னுடைய பிசினஸுக்கு உதவியாக இருக்கும் என்பதனால் அந்த திருமணத்தை நடத்துவதற்கு அவரும் ஒத்துழைப்பு கொடுத்தார்.
இப்போது விதுரனிடம் விதண்டாவாதமாய் பேசினால் அது பின்னாளில் தனக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்பதால் அப்படியே அமைதியாகிவிட்டார்.
சரஸ்வதிக்கும் பிரதிக்ஷாவின் சித்தப்பா சொன்னது சரி என்று பட, “மனிஷா நீ அமைதியாய் இரு! விதுரா நீ உள்ள போ!” என்று சரஸ்வதி சொல்ல விதுரன் வீட்டுக்குள் நுழைந்தான்! அவனைத் தொடர்ந்து பிரதிக்ஷாவும் அவனோடு வீட்டுக்குள் நுழைந்தாள். அவர்களைத் தொடர்ந்து அனைத்து உறவினர்களும் வீட்டுக்குள் நுழைந்தனர்!!
உள்ளே சென்ற விதுரன் தன் கழுத்தில் அணிந்த மாலையை கழட்டி வீசி எறிந்தான். விதுரன் இப்படித்தான் நடந்திடுவான் என்று எல்லோருக்கும் தெரிந்ததால் யாரும் எதுவும் பேசவில்லை. திருமணம் முடிந்து சிறிது நேரத்திலேயே விதுரன் மாலையை கழட்டி வீசியது அனைவருக்கும் அபசகுணமாக தெரிந்தது.
லட்சுமியோ விதுரனின் கோபத்தைக் கண்டு பயந்து போனார்! மகள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அங்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரிந்த பின்பும் அமைதியாக பிரதிக்ஷா விதுரனை திருமணம் செய்வதற்கு தீட்டிய திட்டத்தை அறிந்தும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
விதுரனின் நடவடிக்கைகளை எல்லாம் பார்க்கும் பொழுது தவறு செய்து விட்டோமோ என்று லட்சுமிக்கும் ரம்யாவிற்கும் தோன்றியது!!
ஆனால் பிரதிக்ஷாவோ என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என்ற உறுதியோடு நின்று கொண்டிருந்தாள்.
“மணக்கோலத்தில் நின்று கொண்டிருந்த பிரதிக்ஷாவை பார்த்து எல்லாம் இவளால வந்தது! சொல்லுடி இப்ப வந்து கேக்குறாளே இவளுக்கு நான் என்ன பதில் சொல்றது?” என்று பிரதிக்ஷாவை நெருங்கினான் விதுரன்.
விதுரனை பிரதிக்ஷாவின் பக்கத்தில் நெருங்க விடாமல் இடையில் வந்து நின்றாள் மனிஷா.
“வீட்டுக்குள்ள வந்தாச்சுல்ல, இப்ப எனக்கு என்ன பதில் சொல்ற? எதுக்கு இப்படி ஒரு காரியத்தை பண்ணுன?” என்று மனிஷா கேட்க,
“நான் எந்த தப்பும் பண்ணல, முதல்ல அதை புரிஞ்சுக்க! பக்கத்தில் நின்ற பிரதிஷாவை பார்த்து இதோ இங்க நிக்கிறாளே இவ எல்லாருக்கும் முன்னாடி நான் இவகிட்ட குடிபோதையில் தப்பா நடந்துக்கிட்டதா சொல்லி ரஞ்சித்தோட நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி, என்னைய தாலி கட்ட வச்சிட்டா! அங்க என்ன நடந்துச்சுன்னு தெரியாம இப்படி கத்திக்கிட்டு இருக்க, மூணு வருஷமா நீயும் நானும் காதலிக்கிறேன் என்னைக்காவது ஒரு நாளு உன்னைய தப்பா பார்த்து இருப்பேனா இல்ல? தப்பா தான் நடந்திருப்பேனா? கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கிற பொண்ணா இருந்தாலும் தப்பா கூட பார்க்க கூடாதுன்னு வாழ்றவன் நான், ஆனால் நீ என்னைய பத்தி தெரிஞ்சும் உன்னைய ஏமாத்திட்டன்னு என்னைய நிக்க வச்சு கேள்வி கேட்கிற?” என்று மனிஷாவை பார்த்து கோபமாக கேட்டான் விதுரன்.
விதுரன் நடந்ததை எல்லாம் சொல்லவும் அதிர்ச்சியானாள் மனிஷா. அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டோமே என்று எண்ணி விதுரனை சமாளிக்க ஆரம்பித்தாள் பெண்ணவள்.
“சாரி விதுரா! நீ கல்யாணம் பண்ணுன்னு கேள்விப்பட்ட உடனேயே கோபத்துல வாய்க்கு வந்தபடி பேசிட்டேன், உனக்கு இப்படி ஒரு சூழ்நிலையில தான் உனக்கு கல்யாணம் நடந்திருக்குன்னு எனக்கு தெரியாது?” என்று கூறினாள் மனிஷா.
மனிஷா கேட்ட கேள்வியில் கோபமடைந்தவனோ மனிஷாவின் கையை தட்டி விட்டு இரு அடி நடந்தான்.
“ப்ளீஸ் விதுரா என்னை புரிஞ்சுக்க! நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்னு நான் நெனச்சுக்கிட்டு இருக்கும்போது நீ வேற ஒருத்திக்கு தாலி கட்டிட்டேன்னு சொன்னதும் என்னால தாங்கிக்க முடியல! அந்தக் கோபத்துல தான் வாய்க்கு வந்தபடி பேசிட்டேன், என்னைய மன்னிச்சிரு ” என்று கண் கலங்கி கூறினாள் மனிஷா.
மனிஷாவின் கலங்கிய கண்களை பார்க்கவும் விதுரனின் மனம் கோபத்தை குறைத்தது.
‘இந்த நாடகக்காரி நடிக்க ஆரம்பிச்சுட்டா! இதோட அண்ணங்காரன் அப்படியே உருகிடுவான்’, என்று முனுமுனுத்தாள் ரேணு.
“அழுகாத மனிஷா, உன் பீலிங்ஸ் எனக்கு புரியுது! அவ்வளவுதான் கோபத்துல உன்னோட சூழ்நிலையை யோசிக்காம பேசிட்டேன்! நீயும் என்னை மன்னிச்சிரு” என்று கூறினான் விதுரன்.
இங்கு நடக்கும் காட்சிகளை எல்லாம் அனைவரும் பார்வையாளராக பார்த்துக் கொண்டு நின்றனர்.
அம்பிகா, ‘சரஸ்வதியை பார்த்து ஏதாவது செய் என்று பார்வையாலே சொல்ல சரஸ்வதி கொஞ்சம் பொறுமையா இரு’ என்று கண்ணசைத்தார்.
“சரி விடு நீ இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க! உன்னைய ஏமாத்தி தாலி கட்ட வச்சவள அங்கேயே விட்டுட்டு வராம எதுக்கு இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்த, இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க?” என்று மனிஷா கேட்டாள்.
“என்ன பண்ண? இதோ நிக்கிறாளே இவளை டைவர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்! என்று விதுரன் சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகினர்கள்.
இது தான் நடக்கும் என்று பிரதிஷா முன் கூட்டியே யூகித்திருந்ததால் முகத்தில் எந்த மாற்றத்தையும் காட்டாமல்அப்படியே அமைதியாக விதுரனை பார்த்தாள்.
“எதுக்கு டைவர்ஸ் பண்ண போற? டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணுனால் ஆறு மாசம் சேர்ந்து வாழ சொல்லுவாங்க! அவ்வளவு நாள் நம்ம எதுக்கு வெயிட் பண்ணனும். உன்னைய ஏமாத்தி தானே இவ கல்யாணம் பண்ணுனா? பேசாம இவ பொய் சொல்லி உன் கேரக்டர் அசிங்கப்படுத்தி உன்னைய கட்டாயமா அவ கழுத்துல தாலி கட்ட வச்சிருக்கான்னு 420 கேஸ் அவ மேல போடுவோம்! இவள் பொய் சொல்லி உன்னையே கல்யாணம் பண்ணி இருக்கிறதுனால சட்டப்படி இந்த கல்யாணம் செல்லாது!” என்று மனிஷா சொல்ல அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
420 கேஸ் என மனிஷா சொல்லவும் பிரதிக்ஷாவோ பயத்தில் எச்சில் விழுங்கிக் கொண்டே தன்னுடைய தாய் லட்சுமியையும்,தோழி ரம்யாவையும் பார்க்க அவர்கள் இருவரும் பிரதிக்ஷாவை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
