ஏகா காதலன் – 4

அத்தியாயம் 4 

 

திக்கற்ற சிலையாய் நின்றிருந்தது எல்லாம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே.. 

 

என்ன நினைத்தாளோ, மீண்டும் அவன் சென்ற திசைக்கு ஓடினாள்.. 

 

நீண்ட கால்களுடன், வேகமாக நடந்துச் சென்றவனுக்கு சரிசமமாக நடந்தாள் இளங்கிளி.. 

 

தனக்குச் சரிசமமமாக நடப்பவளைக் கண்டு கண்களை சுருக்கினான் வளன்.. 

 

“என்ன ஊருக்கு ஓடிப்போகலை..” என்றான் நக்கலாக, 

 

அவனுக்கு அவளைக் கண்டாலே ஆகவில்லை.. எப்போடா ஊரை விட்டு அடித்து விரட்டுவோம் என ஒற்றைக் காலில் தவம் இருக்க ஆரம்பித்தான்.. 

 

அவளோ எதற்கும் அசர மாட்டேன்.. உன்னால் முடிந்ததை நீ செய் என்பதைப் போல் அஞ்சாது நின்றிருந்தாள்.. 

 

“நான் ஏன் ஓடிப்போகணும்.. உங்களை மாதிரி எத்தனையோ பேரை என் வாழ்க்கையில பார்த்திருக்கேன்.. உங்களுக்குப் பயந்துநான் ஓடுனா, என் தாத்தாவோட வளர்ப்பு பொய்யா போயிடும்.. பார்க்கலாம்.. நீங்களா?.. நானான்னு?..” என தீர்க்கமாக சொன்னவள், அவனுடனே சேரந்தே நடந்தாள்.. 

 

சற்று நேரத்திற்கு முன்பாக இருந்த பயம் இப்பொழுது இல்லை.. 

 

இதுவரை தன்னை எதிர்த்துப் பேசவே அஞ்சி நடுங்குபவர்களை தான் பார்த்திருக்கின்றான்.. 

 

இன்று அவனை எதிர்த்துப் பேசுபவளைக் கண்டு முகம் சுருங்கியது அவனுக்கு.. 

 

இதயா கூட அவன் ஒரு வார்த்தை சொன்னால், சரி என தலையாட்டுவாள்.. 

 

இவள் என்னடா என்றால், தலைமேல ஏறி நின்று ஆடி விடுவாள் போல என உள்ளுக்குள், அவளை கரித்துக் கொட்டிக் கொண்டு தான் வந்தான்.. 

 

அவளைப் பார்க்க, பார்க்க.. அவனின் ஆணவமும், திமிரும், தலைக்கணமும் உச்சாணிக் கொம்பில் ஏறியமர்ந்தது..  

 

“நீயே இந்த வேலை, ஊர் ரெண்டையும் விட்டு உன் ஊருக்கு ஓடிப்போகிற மாதிரி பண்றேன் டி..” என அவளின் காதோரம் குனிந்து எச்சரிக்கும் குரலில் சொன்னவன், வேகமாக லிப்ஃட்டினுள் நுழைந்தான்.. 

 

அவனின் பின்னாடியே ஓடிச்சென்று இளங்கிளியும் நுழைந்துக் கொண்டாள்.. 

 

இருவருமே எதுவுமே பேசவில்லை.. 

 

ஐந்தாம் தளத்தில் லிப்ஃட் நின்றது.. 

 

கதவு திறந்ததும், வளன் இறங்கி.. அவனின் பின்னால் இளங்கிளியும் இறங்கினாள்.. 

 

வளன் யாரையோ கண்களால் தேடினான்.. கிடைக்கவில்லை என்றதும், வேகமாக தன் போனில் டயல் செய்தான்.. 

 

“வித்யா எங்கே இருக்க?..” 

 

“சார்.. நான் ஸ்டாக் லிஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்..” என்றாள் பவ்வியமாக,  

 

“ஓஹ்.. ஓகே.. நான் லிப்ஃட்க்கிட்ட நிக்கிறேன்.. லிப்ஃட் பக்கத்துல வாங்க..” என போனை அணைத்து விட்டான்.. 

 

இளங்கிளியோ அந்த தளத்தையே சுற்றிப் பார்த்தாள்.. 

 

அது ஸ்டேஷனரி ஐட்டங்கள் நிறைந்த பகுதி.. 

 

குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என அனைத்துப் பொருட்களும், கண்ணாடியிலும், பளிங்கு ராக்கிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.. 

 

அதை வேடிக்கைப் பார்க்கும் நேரம் ஒரு பெண் எங்கிருந்தோ ஓடாத குறையாக வந்து நின்றாள்.. 

 

“குட்மார்னிங் சார்..” என்றாள் பணிவாக.. 

 

“குட்மார்னிங்க.. இவ..” என இழுத்தவனுக்கு, சத்தியமாக இளங்கிளியின் பேர் மறந்து விட்டது.. 

 

“இளங்கிளி..” என்றாள் அவளே, 

 

இவன் பேர் சொல்வான் என அவள் காத்திருந்தால், நாளை வரக் காத்திருக்க வேண்டியதிருக்குமே.. 

 

“ஹான் இளங்கிளி.. வித்யா, இவளை இங்கே பில்லிங் செக்ஷன்ல வேலைக்கு சேர்த்துக்கோங்க.. மூணு நாள் ட்ரைனிங் கொடுங்க.. அதுக்கப்புறம் அவளே வேலையைக் கத்துக்கிட்டு செய்யட்டும்..” என்றவன், மறுபடியும் லிப்ட்டினுள் ஏறிக் கொண்டான்.. 

 

‘போய்த் தொலைஞ்சான் டா, சாத்தான்..’ என மனதுக்குள், அவனை மானாவாரியாக திட்டிக் கொண்டிருந்தாள்.. 

 

இவளோ போகும் அவனின் முதுகையே வெறித்துப் பார்த்தாள்..

 

“வாங்க இளங்கிளி..” என்றாள் வித்யா சிநேகமாக, 

 

“நீங்க என்ன, இளா ன்னே கூப்பிடுங்க..” 

 

“ஓகே இளா.. நான் தான் இங்கே சூப்பர்வைசர்.. நீங்க இன்னைக்கு இந்த ப்ளோரை அப்சர்வேஷன் பண்ணுங்க.. நாளையில இருந்து வேலை ஸ்டார்ட் பண்ணலாம்..” என்றபடி வித்யா தனியாக சென்று விட்டாள்.. 

 

இளங்கிளியோ அந்த தளத்தையே ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. 

 

ஒவ்வொன்றும் அவ்வளவு நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.. 

 

அதைப் பார்க்கும் பொழுதே, ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டுமென்பதை போல் இருந்தது.. 

 

காலை 9 மணி என்பதால் சற்று கூட்டம் குறைவாகத் தான் இருந்தது.. 

 

அந்த தளத்தையே சிறிது நேரம் சுற்றிப் பார்த்தவளுக்கு, கால்கள் வலி எடுக்க.. அங்கே இருந்த ஓரிடத்தில் சென்று தரையிலேயே அமர்ந்து விட்டாள்.. 

 

கிராமத்தில் தரை என்பது அவர்களுக்கு அசுத்தமானது அல்ல.. அதனாலேயே என்னவோ, பளபளவென துடைத்து வைக்கப்பட்டிருந்த பளிங்குத் தரையில் ஜம்மென்று அமர்ந்து விட்டாள்.. 

 

கன்னத்தில் கை வைத்து, கஸ்டமர்கள் அங்குமிங்கும் செல்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. 

 

சிசிடிவியில் அவள் என்ன செய்கிறாள் என பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு விறுவிறுவென ஏறியது.. 

 

“வேலை பாருன்னு சொல்லிட்டு வந்தா, பராக்கு பார்த்துட்டு.. தரையில உட்கார்ந்திருக்கா?.. இடியட்..” என சீறியவன் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினான்.. 

 

அவனுக்கு இளங்கிளியைக் கொத்தி குதற வேண்டும் போல் தான் இருந்தது.. 

 

 

வேகமாக அந்த இடத்திற்கு வந்தவன், தரையில் அமர்ந்திருந்தவளின் கொடுங்கையைப் பிடித்து கொத்தாக தூக்கி நிறுத்தினான்.. 

 

அவனின் திடீர் செய்கையில் அதிர்ந்து விழித்தாள் இளங்கிளி.. 

 

“என்ன பண்றீங்க?..” என தடுமாறிக் கேட்டவளை சட்டென்று அங்கிருந்த ட்ரையல் ரூமிற்குள் தள்ளினான்.. 

 

“என்..ன பண்..றீங்க?..” என தடுமாறிக் கேட்டவளை சுவரோடு சாய்த்தவன், 

 

“இது உன் புருஷன் கட்டுன கடையா?.. நீ பாட்டுக்கு வந்து சாவகாசமா சோவாரிட்டு உட்கார்ந்திருக்க?..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தாள்.. 

 

“என்..ன பேசு..றீங்க?..” என அவள் கேட்ட பின்பு தான்.. அவன் சொன்ன வார்த்தையின் தாக்கம் புரிந்தது.. 

 

“ச்சீய்ய்.. புருஷன் கடையான்னு கேட்கிறேன் பாரு.. உன்னைப் பார்த்தாலே, நான் என்ன பேசணும்ங்கிறது மறந்து போயிடுது டி” என அவளை விட்டு இரண்டெட்டு பின் வைத்தவன், 

 

“ஓஹ்.. காட் உன்னையா  தொட்டேன்.. அய்யோஓஓ.. நீ குளிப்பீயா, என்னன்னே தெரியலை.. ச்சீய்ய்ய.. உவ்வாக்க்க.. காட் டேமிட்ட்..” என வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வர.. அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் ராம்.. 

 

அவனின் பால்ய கால நண்பன்.. அவனின் உதையெல்லாம் வாங்கிக் கொண்டு நிற்கும் மேனேஜர்.. அப்பப்போ அவனின் பிஏ.. எப்பொழுதாவது அட்வைஸர்..

 

பல அவதாரங்களைப் போன்று, இந்த ராமும் பல அவதாரங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறான்..

 

“என்னடாஹ்?..” என அவனிடம் பாய, 

 

“இல்லை.. நீ ட்ரையல் ரூம்ல என்ன பண்ற?.” என கேட்டு முடிப்பதற்குள், ட்ரையல் ரூமில் இருந்து வெளியே வந்த இளங்கிளியைப் பார்த்து அதிர்ந்து நின்றான் ராம்.. 

 

“டேய்ய்ய்.. யாருடா இந்தப் பொண்ணு?.. இந்தப் பொண்ணை என்னடா பண்ணுன?..” என்ற ராம்மின் கன்னத்தில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.. 

 

“வாயை மூடிக்கிட்டு போய் வேலையைப் பாரு..” என்றவன், வேகமாக லிப்ட்டினுள் ஏறி அவனின் தளமான ஒன்பதாவது மாடிக்குச் சென்று விட்டான்.. 

 

அது T.V.. ஸ்டோர்ஸ்..

 

 

ஒன்பது தளங்கள் கொண்ட ஸ்டோர் அது.. 

 

முதல் தளத்தில் தங்கமும், இரண்டாம் தளத்தில் வெள்ளியும்.. மூன்றாம் தளத்தில் பெண்களுக்கான ஆடை உலகமும், நான்காம் தளத்தில் குழந்தைகளுக்கான ஆடை உலகமும், ஐந்தாம் தளத்தில் மளிகைப்பொருட்களும், காய்கறி பொருட்களும் இருந்தது.. 

 

ஆறாம் தளத்தில் ஆண்களுக்கான பிரத்யேகமாக தளமாக செயல்பட்டது.. ஏழாம் தளத்தில் பர்னிச்சர்கள் இருந்தது.. எட்டாம் தளத்தில் புட்கோர்ட் இருந்தது.. 

 

ஒன்பதாம் தளம் முழுவதும் வளனுக்கானது.. 

 

அங்கு ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளே நுழைய அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.. 

 

அதைத்தவிர அங்கு யாரும் நுழையக்கூடாது.. நுழையவும் விடமாட்டான் வளன்.. 

 

டாபர்மைன் நாயைப் போல கடித்துக் குதறி விடுவான்.. கிராதகன்.. 

 

அவனுக்கு பயந்தே யாரும் அங்கே வருவதில்லை.. 

 

“என்ன இவன் ஒரு தினுசா போறான்?..” என அடி வாங்கிய கன்னத்தை தடவிக் கொண்டே நின்றான் ராம்.. 

 

“அண்ணா, வழியை விடுங்க..” என்றதும், ஒதுங்கி நின்றான் ராம்.. 

 

அவனைத் தாண்டிச் சென்றாள் இளங்கிளி.. 

 

“யம்மாடி.. இந்தா பொண்ணே..” என்றதும், இளங்கிளி ஒரு கணம் நின்று, அவனைப் பார்க்க. 

 

“யார் நீ?.. அவன் கூட ரூம்ல என்ன பண்ணின?..” என்றவனை தன் கண்களாலேயே சுட்டுப் பொசுக்கியவள், 

 

“நீ அந்தப் பொறுக்கிக்கு யாரு?..” என்றாள் எரிச்சலும், ஆத்திரமும் கலந்த கோபக்குரலில். 

 

“அவன் நண்பன் மா..” என்றதும் தான் தாமதம், வளனை திட்ட முடியாத திட்டுக்கள் எல்லாம் ராம்மின் தலையில் தான் வந்து விடிந்தது.. 

 

அவனை திட்டி தீர்த்து விட்டு, வித்யாவின் அருகில் சென்று விட்டாள் இளங்கிளி.. 

 

“யாரு இந்தப் பொண்ணு, அவனையும் திட்டுது. என்னையும் திட்டுது.. இரண்டு பேரும் ஒரே ரூம்ல இருந்து வர்றாங்க.. ஒரு வேளை கசமூசா ஏதாவது நடந்திருக்குமோ?..” என முணுமுணுத்தபடி லிப்ஃட்டினுள் ஏறி ஒன்பதாம் தளத்திற்கு சென்றான்.. 

 

அங்கு சேரில் சாய்ந்து அமர்ந்து சிகரெட் குடித்துக் கொண்டிருந்தான் வளன்.. 

 

“டேய்ய்ய.. யாருடா அந்தப் பொண்ணு?..” என்ற ராம்மின் புறம் கோபமாக திரும்பினான்.. 

 

“யாரைப் பத்தி கேட்குற?..” 

 

“அதான் ட்ரையல் ரூம்ல ஒன்னா இருந்தீயே?.. அந்தப் பொண்ணைப் பத்தி தான்..” என்றவனை அனல் தெறிக்க பார்த்தவன்,

 

“இங்கே பாரு, நான் அவளை வார்ன் பண்ணத்தான் ட்ரையல் ரூம் அழைச்சிட்டுப் போனேன்.. மத்தபடி அவளுக்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.. இன்னொரு தடவை ட்ரையல் ரூம், அது இதுன்னு சொல்லிட்டு திரிஞ்ச, ப்ரண்ட்னு கூட பார்க்க மாட்டேன்.. கன்னம் பழுத்துடும்.. ஜாக்கிரதை..” என சீறியவன், மேலும் புகையை வேகமாக இழுத்து விட்டான்.. 

 

“வார்ன் பண்ண அழைச்சிட்டுப் போனீயா?. அப்படி என்ன தப்பு பண்ணினா?..” 

 

“ம்ம்.. அவ இந்த சென்னைக்கு வந்ததே முதல் தப்பு தான்..” என்றவன் 

 

“அவ என் பரம எதிரின்னு வச்சிக்கோ.. அவ மேல ஒரு கண் இருக்கட்டும்.. அவளை நான் படுத்துற பாட்டுல, இனி சென்னைப் பக்கமே அவ தலை வச்சுப் படுக்கக்கூடாது..” என்றான் வளன்.. 

 

“ஏன்டா ஒரு சின்னப் பொண்ணு மேல இவ்வளவு வன்மம்?..” 

 

“ஹான் வேண்டுதல்.. நான் சொன்னேன்னு அவளை குடோன்க்கு மாத்து..” 

 

“டேய்ய்ய். அது ஆம்பிளைங்க வேலை பார்க்கிற செக்ஷன் டா.. மூட்டையை தூக்க எதுக்குடா அந்தப் பொண்ணு..” 

 

“ஊர்க்காட்டுல வளர்ந்தவ தான்.. அதுனால அவளுக்கு இதெல்லாம் ஈசி தான் மச்சான்..” என்றவன், மேலும் சிகரெட்டை இழுத்தான்.. 

 

அவனின் பேச்சில் ராமிற்கு தான் ஒரு மாதிரி விட்டது.. 

 

மறுபடியும் ஐந்தாம் தளம் நோக்கிச் சென்றான்.. 

 

இளங்கிளி வித்யாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.. வேலை பற்றிய சந்தேகத்தை தான் கேட்டுக் கொண்டிருந்தாள்.. 

 

வித்யாவும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.. 

 

இருவரையும் பார்த்த ராமிற்கு நீண்ட பெருமூச்சொன்று வந்தது.. 

 

“போயும், போயும்.. இந்த ராட்சஷன் கிட்ட நீ மாட்டணும்?..” என நினைத்தபடி, இளங்கிளியின் அருகில் சென்று நின்றான்.. 

 

தன்னருகில் வந்து நின்றவனை துளியும் மதிக்கவில்லை இளங்கிளி.. ஆனால் வித்யாவால் அப்படி இருக்க முடியுமா?.. 

 

“சார்..” என்றாள் தன்மையாக, 

 

“வித்யா, இவுங்களை குடோன்க்கு அனுப்பிடுங்க.. இன்னைக்கு மதியம் அங்கே வேலைப் பார்க்கட்டும்..” என்றவனை ஏகத்துக்கும் அதிர்ந்து பார்த்தாள் வித்யா.. 

 

“என்ன சார் சொல்லுறீங்க?.. இவளை ஏன் குடோன்க்கு அனுப்பணும். இவ பில்லிங் செக்ஷன்ல தான் வேலை..” 

 

“வித்யா.. நாங்க சொல்லுறதை நீங்க கேளுங்க.. உங்க பேச்சை கேட்க எனககு நேரமில்லை.. வேற ஏதாவது டவுட் னா.. வளன்க்கிட்ட போய் கேட்டுக்கோங்க..” என அத்தோடு தன் பேச்சை முடித்துக் கொண்டான் ராம்.. 

 

போகும் அவனின் முதுகை வெறித்துப் பார்த்த இளங்கிளிக்கு, நிச்சயமாக இது வளனின் வேலை என்று புரிந்தது.. 

 

“குடோன் எங்கே இருக்கு?..” என்றவளை அதிர்ந்துப் பார்த்தாள் வித்யா.. 

 

“என்ன சொல்லுற.. அங்கே எப்படி வேலை..” என்றவளின் கையைப் பிடித்த இளங்கிளி.. 

 

“நான் பார்த்துக்கிறேன் வித்யா.. நீங்க குடோன்க்கு வழியை மட்டும் சொல்லுங்க..” என முடித்துக் கொண்டாள்.. 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
ஏகா காதலன்
276 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page