அத்தியாயம் -4
அந்த அழகான காலை விடியலில் எழுந்து ப்ரஷ் செய்துவிட்டு குளித்து தயாராகி என்ன செய்வது தெரியாமல் கதாநாயகி ரோஜா தன் அத்தை கோப்பெருந்தேவி வீட்டிற்கு சென்றாள். அங்கு பின் வாசலில் இருந்த கிணற்றில் நீந்திக் கொண்டிருக்கும் மதியழகனை கண்டவள்..
“மதி உங்களுக்கு ஸ்லிம் பண்ண வருமா”
“என்னது ஸ்லிம் பண்ண வருமா வா?”
“இல்லை எனக்கு வராது அதான் கேட்டேன்”
“ஹாஹா அதுக்கென்ன கத்து தரவா?”
“எனக்கு பயம்”
“நீ முதல்ல தைரியமாக குதி ரோஜா “என்றதும் என்ன தோன்றியதோ சட்டென்று யோசிக்காமல் குடித்துவிட்டு தத்தளித்தவளை லாவகமாக பிடித்து கை கால்களை உதைத்து முன்னேறி செல்ல பயிற்சி அளித்தான் மதி”
இவளும் அவன் கூறியது போலவே அழகாக கை கால்களை உதறி உதைத்து முன்னேறி செல்ல இவனோ அவளுக்கு பாதுகாப்பாக அருகிலேயே இருக்க இவளுக்கு தண்ணீர் மீது இருக்கும் பயம் தெளிந்து சுதாரிக்க முடிந்தது.
“இம்புட்டு தான் நீச்சல் இதுக்கா இவ்வளவு நாள் பயந்தீங்க “என்றான் மதியழகன்.
“ஆமாம் மதி ஸ்விம்மிங் முன்னாடி எல்லாம் எனக்கு வராது இப்பதான் நான் கத்துக்க முயற்சி பண்றேன் உங்க கிட்ட “- ரோஜா.
“ம்ம் பெரிய பெரிய சிட்டி ல நீச்சல் குளத்துல ஆயிரம் கணக்குல ஃபீஸ் வாங்கி கத்து தராங்க ஆனால் இங்க சுலபமா ஏழு நாள்ல நீச்சல் அடிக்க சின்ன வயசுலயே கத்துக்குறாங்க”என்றான் மதி.
“யெஸ் மதி. பாருங்க முதல் நாளே எனக்கு பயம் போயிடுச்சு”
“ம்ம் நீச்சல் குளத்துல கீழ் கால் எட்டும் தரைக்கு அதனால பெருசா பயம் இருக்காது . ஆனால் நீச்சல் குளத்துல பழகிறது ரொம்ப நாள் எடுக்கும். ஆனால் கிணறு அப்படி இல்லை கால் எட்டாது அதனால் கையை காலை உடனே உதைக்க பழகி அப்படியே கத்துக்குவாங்க”என்று மதி கூறி அவளை படி வழியாக ஏறச்சொன்னான் ஏறி மேல வந்ததும் இருவருக்கும் பசி வயிற்றைக் கிழித்துக் கொண்டு இருந்தது.
ரோஜா வேறு முழுமையாக நினைத்திருக்க அவளுடைய ஈரமான ஆடை உடம்போடு ஒட்டி அவள் அழகை பறைச்சாற்றிக்கொண்டிருந்தது. இவனோ அவளைக் கண்ட நொடி முதலில் துவட்ட டவல் எடுத்து கொடுத்தான் அந்த டவலை உடம்பில் போர்த்தி உள்ளே வர கோப்பெருந்தேவி “வா ரோஜா வா ஓஹோ நீயும் கிணத்துல இறங்குனியா சரி சரி மாத்திக்க உடை இல்லை தானே ஆங் இரு என் புடவை தரேன்”என்று அவளுடைய புடவையை எடுத்து கொடுத்து மாற்றிக்கொண்டு வரும்படி கூறினார் இவளும் அதை மாற்றி வெளியே வர பார்க்க அவ்வளவு அழகாக இருந்தாள்.
“சரி உட்காருங்க ரெண்டு பேரும் சூடா இட்லி எடுத்து வைக்கிறேன்”என்று இட்லி எடுத்து வந்து பரிமாறி தானும் சாப்பிட பிறகு கோவிலுக்கு கிளம்பி போக நேரம் ஆகிவிட்டது என்று கிளம்பி கோப்பெருந்தேவி சென்றுவிட்டார். இப்போது தனியே மதியும் ரோஜாவும் தான்.
ரோஜாவுக்கு வீட்டை முழுவதுமாக சுற்றி காட்டினான். பாரம்பரிய மிக்க பொருட்கள் எல்லாம் பார்ப்பதற்கு அவளுக்கு பிடித்திருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த போது சட்டென்று பல்லி ஒன்று அவள் மீது விழ “ஆவ்வ்….ட்ட் பல்லி “என்று கத்தியபடி தன் சேலையை உதறினாள்.
“ஹே என்ன ஆச்சு “என்று மதி பதற
“பல்லி பல்லி. “என்றாள்
“பல்லி தானே அதுக்கெல்லாம் பயமா “
“ஐயோ எனக்கு அதை பார்க்கவே பிடிக்காது “என்றாள் ரோஜா.
“ஹாஹா…சரி விடு ம்ம் முதல்ல விலகி இருக்கிற புடவையை சரி பண்ணு “என்றதும் மீண்டும் பதறி சேலையை சரி செய்தாள்.
‘அவன் எதுவும் பாத்துருக்க மாட்டான்ல ?அச்சோ பல்லியை பார்த்த பயத்துல நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் புடவையை உதறினேன் இவன் பக்கத்துலயே இருந்தான் வேற அச்சோ என்ன செய்றது ஆண்டவா?’ என்று யோசிக்க.
“ஹலோ என்ன யோசனை “
“இல்லை ஒன்னுமில்லை “
“பரவால்ல சொல்லு “என்றான் மதியழகன்.
“மதி நீங்க எதையும் பாக்கலை தானே”என்று நேரடியாக கேட்டுவிட்டாள்.
“ச்சீ நான் எப்படி உன்னை அப்படி எல்லாம். நீ கல்யாணம் ஆன பொண்ணு உன்னை போய் அதுமட்டுமல்லாமல் நான் அப்படி பட்டவன் கிடையாது “என்றான்.
அவன் என்னதான் அப்படி சொன்னாலும் அவளுக்கு சமாதானமாகவில்லை மீண்டும் யோசித்தபடி நின்றாள். என்ன மறுபடியும் யோசிக்கிறீங்க இன்னுமா உங்களுக்கு சந்தேகம். என்றான். அவள் மண்டையை அப்படியும் இப்படியும் ஆட்டிவிட்டு “சரி சரி விடுங்க ஆமா உங்க அம்மா எந்த கோவில் போய் இருக்காங்க”என்ற பேச்சை மாற்றினால் அவனும் இது பக்கத்து தெருவில் இருக்கும் சிவன் கோவிலுக்கு தானே போயிருக்கிறார் என்று கூறினான் அதைக் கேட்டதும் தனக்கும் அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று ஆசையாக இருக்க இவள் அவனை அங்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டாள்.
அதற்கென்ன வாங்க போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்து சென்றான் பக்கத்து தெருவில் இருக்கும் அந்த சிவன் கோவிலில் அடைந்ததும். அங்கே பூ வைக்கும் அப்பாவிடம் பூ வாங்கிக்கொண்டு ரோஜா உள்ளே சென்றாள். மதியழகன் கூட சென்றான். தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கோப்பெருந்தேவி”ஆஹா என்ன அற்புதமான ஜோடி”என்று வியக்க ஒரு நொடி அவள் திருமணமான பெண் என்பது நியாபகம் வர “அச்சோ நான் ஒருத்தி “என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு சாமிகள் செய்து முடித்துவிட்டு ரோஜா அருகே சென்றாள்.
“அம்மாடி ரோஜா உன்னையும் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு போலாம்னு தான் முதல்ல நினைச்சேன் அப்புறம் சரி நீ ரெஸ்ட் எடுக்கட்டும் என்று சொல்லி விட்டுட்டேன்”என்க அதற்கு ரோஜா “ஐயோ அத்தை எனக்கு கோவிலுக்கு போறது ரொம்ப பிடிக்கும். அம்மா இங்க வந்ததுல இருந்து சென்னைல கோவிலுக்கு போகவே முடியலை “என்றாள்.
“சரி உன் வீட்டுக்காரர் எல்லாம் எப்படி இருக்காரு அவரு டாக்டராமே ஆங் கேள்விப்பட்டேன்”என்றதும்.
“ம்ம் நல்லாருக்காரு “என்று சொல்லி முடித்துக்கொண்டு சரிங்க அத்தை வாங்க கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கலாம் “என்று அமர்ந்தனர்.
மதியழகன் அவள் கண்களை பார்த்தான் அதில் ஒரு தோய்வு இருப்பதை உணர்ந்தான். திருமணம் முடிந்த பெண்ணுக்கு உரிய எந்த ஆர்ப்பாட்டமும் அவள் பேச்சிலோ அல்லது செயலிலோ தென்படவில்லை எனவே அவளிடம் இதை பற்றி கேட்க வேண்டும் ஆனால் அம்மா முன்பு வேண்டாம் என்று தோன்றியது.
ஆனால் அவளே அதைப்பற்றி இப்போதே ஆரம்பிப்பாள் என்று அவன் நினைக்கவில்லை…
“அத்தை நீங்க நினைக்கிற மாதிரி என் மேரேஜ் லைஃப் ஒன்னும் ஹேப்பியல்லாம் இல்லை. ஆக்சுவலா நான் டிவோர்ஸ் பண்ற ஐடியால இருக்கேன். சீக்கிரம் அந்த வாழ்க்கையை விட்டு வெளியே வரப்போறேன் “என்றாள் ரோஜா.
இதை கேட்டதும் கோப்பெருந்தேவி திடுக்கிட்டு “என்ன ரோஜா இப்படி சொல்ற”என்று கேட்க.
“அத்தை வேற எதுவும் என்கிட்ட கேட்காதிங்க ப்ளீஸ் “என்றாள் அதற்கு மேல் எதுவும் கேட்க வேண்டாம் என்று ஜாடைமாடையில் தாயிடம் மதியழகன் கூறினான். அதன்பின் அதைப்பற்றி யாரும் எதுவும் பேசவில்லை.
மூன்று பேரும் எழுந்து வீட்டை நோக்கி நடக்க அதற்குள் பிரபஞ்சன் ரோஜாவை அழைத்துச் செல்ல வந்தார். தன் மகள் தன் தங்கையின் சேலையை அணிந்திருப்பதை பார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தது அவருக்கு கண் கொட்டாமல் கதையையே பார்த்தார் பிறகு ரோஜாவை அழைத்துச் சென்றார்.
கோப்பெருந்தேவி மனதில் ஏதேதோ கணக்கு போட துவங்கினார். மதியழகன் ஜாதகத்தில் தோஷம் வேறு இருக்கிறது திருமணம் தள்ளிப் போய்க்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் ரோஜா விவாகரத்து வாங்கினால் அவளை இவனுக்கு கட்டி வைத்து விடலாம். அவளுக்கும் வாழ்க்கை கிடைத்த மாதிரி இருக்கும் இவனுக்கும் வாழ்க்கை ஆரம்பமான மாதிரி இருக்கும். ஆனால் இதற்கெல்லாம் ரோஜா ஒப்புக்கொள்வாளா? முதலில் டிவோர்ஸ் கிடைக்குமா? எதுவும் தெரியாது.
ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கிவிட்டு தமிழரசி குடும்பம் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. இங்கு ரோஜாவுக்கு மட்டும் எதையோ விட்டு சென்று வருவது போல் தோன்றுகிறது. கோப்பெருந்தேவி அத்தை மற்றும் அத்தை மகன் மதியழகனை சந்திக்காமல் இருந்திருந்தால் இது ஒரு நார்மல் பயணம் தான் ஆனால் புதிய உறவுகளை பாதியில் சந்தித்து பாதியில் விட்டு விட்டு வருவது போல் ஒரு உணர்வு. பயணத்தின் போது இவள் அதிகமாக இவர்களை பற்றி பேசிக்கொண்டு வந்தாள்.
பயணம் சென்னை வரை வந்து கார் வீட்டு வாசலை வந்தடைந்தது அனைவரும் காரை விட்டு இறங்கினர் இறங்கியதும் சாவியை திறந்த உள்ளே நுழைந்தனர். நம் கதாநாயகி ரோஜா மட்டும் மிதமான நடந்து உள்ளே நுழைந்தால் அவளுக்கு ஊரின் மாசம் என்னும் விட்டுப் போகவில்லை என்பது நன்றாகவே புரிந்தது ஏன்டா சென்னை வந்தோம் என்பது போல் தான் இருந்தது அவளுக்கு.
வீட்டிற்குள் வந்து குளித்து முடித்துவிட்டு தன் அறையில் இருக்கும் செல்போனை எடுத்து அப்போதுதான் ஆன் செய்து பார்த்தால் பார்க்கும் போது தான் தெரிந்தது அதில் நிறைய மிஸ்டு கால் இருந்தது என்று ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க அதில் ராஜா கால் செய்தது தான் அதிகமாக இருந்தது. வாட்ஸ் அப்பை எடுத்துப் பார்த்தால் அதில் தன்னுடைய தோல்வி கவி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கு சாரி சொல்லி அனுப்பிய மெசேஜ் இருந்தது.
ஆனால் ராஜாவின் மிஸ்டுகால் தான் இவளுக்கு மிகவும் எரிச்சல் ஊட்டியது சரி அந்த கால்களுக்கு பதில் சொல்லலாம் என்று எடுத்து ராஜாவுக்கு டயல் செய்தால் ராஜா உடனே போனை எடுத்தான்.
“ஹலோ எங்க போயிருந்த இவ்வளவு நாளு நான் எவ்வளவு கால் பண்ண நீ ஒரு கால் கூட அட்டென்ட் பண்ணவே இல்லையே என்ற ராஜா கேட்டான்”
“நான் இவ்ளோ நாள் போன் யூஸ் பண்ணவே இல்ல வெளியூர் போயிட்டேன் என்ற பதில் அளித்தாள்”
“இங்க பாரு நீ அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் எனக்கு வந்து சேர்ந்திடுச்சு. முதல்ல டிவோர்ஸ் வேண்டாம் என்று தான் நான் யோசிச்சேன் ஆனா எப்படி தைரியமா வக்கீல் நோட்டீசை அனுப்பிட்டியே அப்ப தான் எனக்கு புரிந்தது நீ என்னை எந்த அளவு வெறுக்கிறேன் இனி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை நம்ப மியூச்சுவல் டிவோர்ஸ் பண்ணிக்கலாம்”என்றான் ராஜா.
இதை அவன் வாயாலேயே கேட்கும் போது இவளுக்கு கண்கள் கலங்கியது நியாயப்படி பார்த்தாலே இவள் மகிழ்ச்சி அல்லவா படனும் ஆனால் ஏன் இப்போது அழுகிறாள் என்று அவளுக்கே புரியவில்லை இவ்வளவு நாள் அவனை விட்டு பிரிய வேண்டும் என்று அவள் மட்டும் தான் என்னை கொண்டு இருந்தால் ஆனால் எதிர்தரப்பிலும் அதே போல் அவன் நினைக்கிறான் என்று நினைக்கும் போது ஒரு கணம் கஷ்டமாக இருந்தது.
“மியூச்சுவல் டிவோர்ஸ் உங்களுக்கு ஓகேவா என்று மறுபடியும் கேட்டாள்”
“எஸ் எனக்கு ஓகே அதை உன்கிட்ட சொல்லத்தான் நான் மறுபடியும் மறுபடியும் கால் பண்ணிட்டு இருந்தேன். இனி என்கிட்ட இருந்து உனக்கு எந்த காலம் வராது என்று சொல்லி போனை வைத்து விட்டான்.
இப்போது அழுவதா என்ன செய்வது என்று அவளுக்கே புரியவில்லை போனை வைத்துவிட்டு சிறிது நேரம் ஓய்வாக தன் மெத்தையில் சாய்ந்தாள். சாய்ந்தவளுக்கு பழைய நினைவுகள் எல்லாம் எட்டிப் பார்த்தது ராஜாவுடன் நடந்த திருமணம் அவன் வீட்டிற்கு முதன் முதலில் சென்று விளக்கேற்றியது என்று வரிசையாக ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.
ஆனாலும் அந்த ஞாபகத்தில் மகிழ்ச்சி எல்லாம் சிறிது மட்டுமே இருந்தது விரக்தியான அனுபவங்கள் மட்டும்தான் நிறைய இருந்தது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நினைத்து அழுது கொண்டிருந்தால் நம் கதாநாயகி ரோஜா.
‘என்னடா இவன் பொசுக்கென்று மியூச்சுவல் டைவர்ஸ் என்று சொல்லிவிட்டானே அப்படி என்றால் எல்லாம் முடிந்து விட்டது தான் நான் என்று அவளுக்கு அவளை கேட்டுக் கொண்டாள்’
‘ஏய் பைத்தியக்காரி நீ தானடி முதல்ல டைவர்ஸ் கேட்டுட்டு இருந்த இப்போ அவன் தரேன்னு சொல்லும்போது நீ ஏன் இவ்வளவு பீல் பண்ற என்று அவளுடைய மனசாட்சி அவளிடமே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது’
‘என்னதான் இருந்தாலும் ஒரு வாழ்க்கை முடிய போகுது என்று நினைக்கும் போது வருத்தம் இருக்க தானே செய்யும் அதுவும் எதிர்த்தரப்பில் அவன் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த நாட்கள் போய் இப்போது அவனும் டைவர்ஸ் வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லும்போது அவளுக்கு வருத்தம் தானே வரும்’
டைவர்ஸ் வேண்டாம் நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் நான் செய்த தவறுகள் எல்லாம் நான் உணர்ந்துவிட்டேன். இனி உனக்கு பிடித்தது போல் சேர்ந்து வாழலாம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று அவன் கூறுவான் என்று மனதில் ஒரு சின்ன ஓரத்தில் அவளுக்குள் ஆசை இருந்தது ஆனால் இப்போது அது எல்லாம் சுக்கு நூறாய் போய்விட்டது என்று நினைக்கும் போது வருத்தமாக இருந்தது அவளுக்கு.
ஒரு வாழ்க்கை பிடித்திருக்கும் பிடிக்கலையோ ஆனால் நாம் துவங்கிய அந்த வாழ்க்கை முடிவுக்கு வரப் போகிறது என்ற போது மனம் துடிதுடித்துதான் போகும் அதற்கு காரணம் என்ன வேண்டுமானால் இருக்கலாமா ஆனால் அந்த வாழ்க்கை முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது என்று நினைக்கும் போது மனதூரத்தில் ஒரு சின்ன தயக்கம் இயக்கம் இருக்கத்தான் செய்யும்.
இவளுடைய அறைக்குள் ரவிவர்மன் நுழைந்தான்.
“ஹலோ சிஸ்டர் ஊர்ல இருந்து வந்த அப்பறமா நீ ஒரு மாதிரியாவே இருக்க ஆமா பிரஷாப்பாகி வெளியே வருவன்னு பார்த்தா ரூம்லயே இருக்க என்ன ஆச்சு உனக்கு” என்று கேட்டால் ரவிவர்மன்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லடா தம்பி சும்மா தான்” என்றாள்.
“இல்லையே ஏதும் இருக்கே”
“அதான் ஒன்னும் இல்லை சொல்றேன்ல”
“இல்லை என்னமோ இருக்கு கா. “
“ரவி எனக்கும் ராஜாவுக்கும் டிவோர்ஸ் ஆக போகுது”என்றாள். புதியதாக கேள்விப்படும் விஷயம் இது இல்லை என்றாலும் ஆணித்தனமாக அவள் கூறும் போது இவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“அக்கா ராஜா இதுக்கு சம்மதம் சொல்லிட்டாரா”
“ம்ம்”
“ஓஹோ “….…
சற்று நேரம் அமைதி நிலவியது.
தொடரும்
