1 கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சு
கண்ணால் காண்பதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்..
யாரோ சொன்னார்கள்..
சொன்னதெல்லாம் உண்மைதான்.. ஆனால் யாரிடம் என்று இதை விசாரிப்பது ..
தன் மனமே அவனை குத்திக் காட்டுகிறது.. ” ஏன் நீ உன் மனைவியை தானே சந்தேகப்படுகிறாய் ..அவளிடமே போய் தீர விசாரித்து பாரேன்.. உண்மை வெளிப்பட்டு விடப் போகிறது .. “
அரவிந்தன் அவன் மனதை அடக்குகிறான்..”உனக்கு ஒன்றும் தெரியாது.. நீ சும்மா கிட ..அவளை எப்படி விசாரிப்பது.. அவளை சந்தேகப்படுவது என்றால் என் உயிரையே நான் கேட்பதை போல தான்.. என் கண்ணின் மணியைப் போல தானே இப்பொழுது வரையும் அவளை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ..அவளுமே அதே போல தான் இருக்கிறாள்.. “
” பிறகு என்ன மானாவுக்குடா உன் மனைவியை சந்தேகப்படற .. “
மனசாட்சியும் விடுவதாய் இல்லை..
“ஹூம் ஆனாலுமே என்ன செய்வது.. அவளை சந்தேகப்படுவதை போலத்தான் சூழ்நிலைகளும் உருவாகி இருக்கிறது.. “
“சரிடா சூழ்நிலை உருவாகிறது தானே.. உன் மனைவி இதோ வருகிறாள் பாரு.. அவளிடமே நேருக்கு நேர் கேட்டு விடு..எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதோடு முடிந்து விடும் .. சும்மா இல்லாமல் என்னிடம் பேசிப் பேசி என் உயிரை தான் எடுக்கிறாய்.. “
” இந்த பாரு நான் உன்னை கூப்பிடவே இல்லை.. நீயாக முந்திக் கொண்டு வந்து மனசாட்சி, மண்ணாங்கட்டி என்று என் உயிரை எடுத்துக் கொண்டிருக்கிற .. பேசாமல் வாயை மூடிக் கொண்டு போ.. ” என்று தன் மனதை திட்டுகிறான்..
அதோடு அவன் மனசாட்சியும் கோபித்துக் கொண்டு சென்று விடுகிறது..
அரவிந்த் தன் மனைவியின் மீது சந்தேகம் கொண்டு பேசியது எல்லாம் அவளைப் பார்ப்பது வரையுமே ..அவளைக் கண்டதுமே அவன் உள்ளம் உருகுகிறது..அவன் கண்களுக்கு அவள் அப்பாவிப் பெண்ணாகத்தான் தெரிகிறாள் ..
‘ச்சே பத்தரை மாற்று தங்கமான என் மித்ராவைப் போயா நான் சந்தேகப்படுகிறேன்..அவளிடம் கேட்டு விட்டால் அதோடு அவள் தன் உயிரை மாய்த்துக் கொள்வாள் ..இப்பொழுது நான் என்ன செய்வேன்.. கடவுளே ஏன்டா என்னை இப்படி சோதிக்கிறாய் ..என் மனைவியும் உன் மீது அத்தனை பக்தியாக இருக்கிறாள்.. நானும் அப்படித்தான் இருக்கிறேன்.. எங்களை சோதிப்பதற்கென்று இப்படி ஒரு சிக்கலை உண்டு பண்ணி இருக்கிறாயா.. உன்னை இனிமேல் நான் கும்பிடவே மாட்டேன்..உன் கோயில் வாசலில் படியெடுத்து காலை வைக்க மாட்டேன்.., மனதிற்குள் ஆக்ரோசமாய் கடவுளை திட்டிக் கொண்டு இருக்கும் போது மித்ராவின் குரல் கேட்கிறது..
” ஏங்க கோயிலுக்கு கிளம்பி விட்டீர்களா இல்லையா.. நானும் உங்கள் பைய அமிர்தனும் கிளம்பி தயாராக இருக்கிறோமே..”
மகனின் பெயரில் கூட இருவர் பெயரின் முதலெழுத்து சேர்ந்து வருவதைப் போலத்தான் பெயரை தேடி கண்டுபிடித்தார்கள்.. அவன் பெயர் அமிர்தவர்ஷன் .நிறைய பேர் வர்ஷா என்று கூப்பிட்டாலும் இவர்கள் இருவர் மட்டும் அமிர்தன் என்று தான் அழைக்கிறார்கள்..
இதோ வர்றேன் சொல்லி விட்டு வெளியே வருகிறான் ..மாசு மருவற்ற குழந்தைத் தனமான மித்ராவின் முகத்தை பார்த்ததுமே நான் ஏன் இவளை இவ்வளவு நேரம் சந்தேகப்பட்டேன் என்று அரவிந்த் தன்னையே நொந்து கொள்கிறான் ..
“இதோ ஒரு நிமிஷத்துல கிளம்பிட்டேன்.. சிரித்த முகமாய் சொல்லவும்,இவ்வளவு நேரம் அவனை அவன் மனசாட்சி திட்டியது போதாது என்று இப்பொழுது அந்த ஈசனும் திட்டத் தொடங்குகிறார் …
‘என்னடா இவ்வளவு நேரம் என்னமோ என்கிட்ட சீன் போட்டுக்கிட்டு இருந்த .. உன்னை கும்பிட மாட்டேன்.. உன் கோவிலுக்கு வரமாட்டேன் வாசல் படியில காலை வைக்க மாட்டேன்னு.. அப்படி என்றால் உன் மனைவியையும் அதே போல தான்டா நீ தேவையில்லாம சந்தேகப் படுற.. “
அவனுக்கு இவ்வளவு நேரம் கோவிலுக்கு வரமாட்டேன் என்று மனதளவில் சொல்லி விட்டு இப்பொழுது வெளிப் பார்வைக்கு புன்னகையுடன் புறப்படுவதை எண்ணியதுமே உண்மையாகவே கடவுள் இந்த வார்த்தைகளை சொல்வதைப் போலத்தான் தோன்றுகிறது.. கடைசியாக ஒரு முடிவு எடுக்கிறான்..
, சரி ஆண்டவனே நான் அவளை சந்தேகப்படவில்லை.. ஆனால் என் மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துதான் ஆக வேண்டும் .. இனி அவளுக்கு தெரியாமல் விசாரிக்க போகிறேன் ..உண்மை என்றால் அவளை நிற்க வைத்து நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேள்வி கேட்பேன் .. பொய் என்றால் அதை அவளுக்கு தெரியாமல் மறைத்து விடுவேன்.. என்னுடைய மனம் உறுத்தும் உறுத்தலுக்காக நான் செய்யும் ஏற்பாடு இது ..கடவுளே இதற்கு நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும்..,
அரவிந்தன் எதைப் பற்றி விசாரிக்க போகிறான் எதுவுமே புரியவில்லையே.. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..
ஈசனை திட்டினானே தவிர அவரது சன்னிதானத்திற்கு சென்றதுமே மனம் அமைதியாகி விடுகிறது.. என் மனதில் சந்தேகம் இருந்தாலும் சரி இனிமேல் அதைப்பற்றி எதுவும் யோசிக்க போவதில்லை என்று முடிவு செய்கிறான்..அவனது குழப்ப நிலை கண்டு அவனுக்கே பயமாகிறது..
அது அவனுக்கே தெரியும் தினம் தினம் புற்றுநோய் போல் வளர்ந்து கொண்டு இருக்கும் அந்த சந்தேகத்தை எப்படியாவது தீர்த்தால் தான் மனைவியோடும் தன் மகனோடும் நிம்மதியாய் குடும்பம் நடத்த முடியும் என்று..
இரவு வழக்கம் போல குழந்தையை தூங்க வைத்து விட்டு அருகில் வந்த மித்ரா அவனிடம் எப்பொழுதும் போல பிரியமாய் மனம் விட்டு தான் பேசுகிறாள் ..அவன் மனமோ மதில் மேல் பூனை போல அலை பாய்கிறது ..
அவனால் மித்ராவின் மீது சந்தேகம் கொள்ள முடியவில்லை..இல்லாமலும் இருக்க முடியவில்லை..’ பிறகு ஏன் எனக்கு அவள் மீது சந்தேகம் ஆரம்பித்தது ..என்ன காரணம் ..,என்று அவளை காதலித்த நாளிலிருந்து நடந்தவைகளை எண்ணி பார்க்கிறான்..
ஆறு வருடங்களுக்கு முன்
“எங்கடி இவ்வளவு வேகமா ஓடுற.. என்கிட்ட இருந்து எப்படி தப்பிச்சு போகிற என்று பார்க்கிறேன். ” வேகமாக இழுத்த இழுப்பில் மித்ராவின் புடவை பின் கழண்டு அவள் தோளில் குத்தவும் ஆ என கத்துகிறாள்..
” அச்சச்சோ ரொம்ப வலிக்குதா.. நான் சும்மா விளையாட்டுக்கு செய்தேன்டி..” என்று மனைவியிடம் மன்னிப்பு கேட்கிறான் ..
“உங்களுக்கு எப்பொழுது பார்த்தாலும் சேட்டைதான்.. கல்யாணம் நடந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டது .. இன்னமும் தாலி கட்டிய அன்று என்னை பார்த்தது மாதிரியே தான் நோட்டம் விடுகிறீர்கள்.. “
” ஆறு மாதம் என்னடி.. அறுபது வருடங்களானாலும் , அறுநூறு வருடங்கள் ஆனாலும் எனக்கு உன் மீது இருந்த காதல் போகாது..அது தீரவும் தீராது..” சொன்னவன் அவளை ஆசையுடன் கட்டி அணைத்துக் கொள்கிறான்..
” ஆமாம் பின்னே இல்லையா..நம்ம காதல் தெய்வீக காதல்..நம்ம கல்யாணமே எவ்வளவு போராட்டத்தில் நடந்தது.. இன்னமும் உங்கள் வீட்டிலும் என் வீட்டிலும் பெரியவங்க யாரும் நம்மை சேர்த்துக் கொள்ளவில்லை.. அது ஒன்றுதாங்க எனக்கு கவலை.. மற்றபடி வேற எந்த வருத்தமும் எனக்கு கிடையாது..”
“சரி சரி உன் மனதில் இந்த வருத்தமும் இருக்கக்கூடாது.. எப்படியும் குட்டி மித்ரா இல்லன்னா குட்டி அரவிந்த வந்த பிறகு நம்ம வீட்டு வயசானவங்க தானா வந்து நம்மளோட சேர்ந்து கொள்வார்கள் கவலைப்படாதடி..”
“ஆமாங்க நானும் அதைத்தான் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்..”
” இப்ப வேணாம்டி ஒரு வருஷம் வரைக்கும் ஜாலியா இருந்து விட்டு அதன் பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.. “
” எனக்கு ஓகே தான். ஆனால் எப்போது என்றாலும் எனக்கு குட்டி அரவிந்த் தான் வேணும்..”
” ஏன்டி பாப்பா வந்தால் வேணாம்னு சொல்வ போலயே..”அவள் முகம் உடனே மாறுகிறது..
“அதெல்லாம் பெண் குழந்தை என்றாலே எனக்கு வெறுப்பா இருக்கு . குட்டி அரவிந்த் தான் எனக்கு வேணும்..”
“ஏன்டி இப்படி சொல்ற.. “
” நான் உங்களிடம் எத்தனை முறை சொல்லி இருக்கேன் .. “புதிதாக கேட்கறீங்க.. “செல்லமாய் சிணுங்குகிறாள்..
” சாரிடி மறந்து போச்சு..இந்த ஒருமுறை மட்டும் சொல்லு.. நான் நினைவில் வைத்துக் கொள்கிறேன்..”
“எனக்கு மூன்று தங்கைகள் .. நான் தான் மூத்தவள் ..அப்பா கிடையாது.. அம்மாவுக்கு எங்கள் நான்கு பேரையும் வளர்ப்பதற்குள்ளேயே போதும் போதும் என்றாகி விட்டது ..இப்பொழுதுதான் எனக்கே கல்யாணம் ஆகி இருக்கிறது.. இன்னும் மூன்று பெண்கள் கல்யாணத்திற்காக வரிசையாக இருக்கிறார்கள்.. இதில் எனக்கு பிறக்கப் போவதும் பெண் குழந்தை என்றால் எனக்கு கொஞ்சம் எரிச்சலாக தான் இருக்கிறது.. வேண்டுமென்றால் முதலில் மகனை பெற்று விட்டு அவனுக்கு துணையாய் மகளைப் பெற்றுக் கொள்ளலாம்.. “
“ஓகேடி இன்னும் நம்ம எதுவுமே தொடங்கல ..அதற்குள்ள ஏன் இவ்வளவு தர்க்கம் .. குழந்தை பிறக்கும் போது பார்த்துக் கொள்ளலாம்.. “
” ஆனா எப்பொழுது பிறந்தாலும் எனக்கு குட்டி அரவிந்த தான் வேணும்..”சிறு குழந்தைகளை போல அடம் செய்யும் மனைவியை பார்த்து சிரிக்கிறான்
ஏன்டி பாப்பா வந்தால் வேணாம்னு சொல்வ போலயே..”அவள் முகம் உடனே மாறுகிறது..
“அதெல்லாம் பெண் குழந்தை என்றாலே எனக்கு வெறுப்பா இருக்கு . குட்டி அரவிந்த் தான் எனக்கு வேணும்..”
“ஏன்டி இப்படி சொல்ற.. “
” நான் உங்களிடம் எத்தனை முறை சொல்லி இருக்கேன் .. “புதிதாக கேட்கறீங்க.. “செல்லமாய் சிணுங்குகிறாள்..
” சாரிடி மறந்து போச்சு..இந்த ஒருமுறை மட்டும் சொல்லு.. நான் நினைவில் வைத்துக் கொள்கிறேன்..”
“எனக்கு மூன்று தங்கைகள் .. நான் தான் மூத்தவள் ..அப்பா கிடையாது.. அம்மாவுக்கு எங்கள் நான்கு பேரையும் வளர்ப்பதற்குள்ளேயே போதும் போதும் என்றாகி விட்டது ..இப்பொழுதுதான் எனக்கே கல்யாணம் ஆகி இருக்கிறது.. இன்னும் மூன்று பெண்கள் கல்யாணத்திற்காக வரிசையாக இருக்கிறார்கள்.. இதில் எனக்கு பிறக்கப் போவதும் பெண் குழந்தை என்றால் எனக்கு கொஞ்சம் எரிச்சலாக தான் இருக்கிறது.. வேண்டுமென்றால் முதலில் மகனை பெற்று விட்டு அவனுக்கு துணையாய் மகளைப் பெற்றுக் கொள்ளலாம்.. “
“ஓகேடி இன்னும் நம்ம எதுவுமே தொடங்கல ..அதற்குள்ள ஏன் இவ்வளவு தர்க்கம் .. குழந்தை பிறக்கும் போது பார்த்துக் கொள்ளலாம்.. “
” ஆனா எப்பொழுது பிறந்தாலும் எனக்கு குட்டி அரவிந்த தான் வேணும்..”சிறு குழந்தைகளை போல அடம் செய்யும் மனைவியை பார்த்து சிரிக்கிறான்..
” சரிடி அது என்ன, அடிக்கடி நம்ம காதல் தெய்வீக காதல் என்று சொல்கிற..காதலிக்கும் எல்லா காதலர்களுக்குமே அவங்க காதல் தெய்வீக காதல் தானே.. “
“நம்ம இரண்டு பேரும் முதல் முதலா எங்கே சந்தித்தோம் .. ” அரவிந்த் யோசிக்கிறான் ..
“அடக்கடவுளே நம்ம முதல் முதலா பார்த்ததை கூடவா நீங்க மறந்து போய் விட்டீங்க..”
” நான் சும்மா நடித்தேன்டி.. எனக்கு எப்படிடி மறக்கும் ..முதல் முதலா என் தேவதையை சந்தித்த நாளை போய் நான் மறப்பேனா.. கோவிலில் நீ விளக்கு போட்டுக் கொண்டிருந்த போதுதான் நான் உன்னை பார்த்தேன்..”
” மகனே உண்மையை சொன்னதால நீங்க தப்பிச்சுட்டீங்க.. இல்லன்னா அடிதான் விழுந்திருக்கும்.. ஆமாம் அதோட நீங்க என்கிட்ட வந்து ஏதோ பேசினீங்க.. எனக்கு உங்களை பார்க்கவே பயமா இருந்தது ..அப்படியே ஓடி விட்டேன்.. கடைசியில் பார்த்தால் நான் எந்த வீடு என்று பார்ப்பதற்காகவே என் பின்னே அலைந்து என் வீட்டையும் கண்டுபிடித்து விட்டீங்க..”
” இதற்கு மேல் நான் சொல்கிறேன்.. நல்ல வேளையாய் கோவிலுக்கு கொஞ்சம் அருகிலேயே உன் வீடு இருந்தது ..அதனால எனக்கு ரொம்ப வேலை இல்லை.. சுலபமா கண்டு பிடித்து விட்டேன்.. பிறகு தினமும் இந்த அழகு தேவதையை தரிசனம் பார்ப்பதற்காகவே உன் வீட்டு வாசலில், தெருமுனையில் என்று தவமாய் தவம் இருந்தேன்..
அதெல்லாம் ஒரு அழகிய கனாக்காலம் இல்லையா..”
தொடரும்
