பாகம் – 3.கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சு
ஹலோ எதுக்குடா நீ இப்ப போன் செய்கிற.. நாங்க இருககோமா செத்துப் போயிட்டோமா என்று பார்ப்பதற்காகவா.. இவ்வளவு நாள் இல்லாத கரிசனம் இப்பொழுது மட்டும் எங்கிருந்து
வந்தது.. “
அவர் பேசுவதை கேட்கவும் மித்ராவுக்கு சிரிப்பு வருகிறது ..சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் போனைத் தரச் சொல்லி ஜாடை காட்டவும் அவனிடம் போனை கொடுக்கிறாள்..
“கிழவி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி சொல்லுவ: நான் எத்தனை முறை உனக்கு போன் செய்து பார்த்தேன் தெரியுமா.. ஃபோனை ப்ளாக்கில் போட்டு விட்டு நான் கரிசனமா இல்லை என்றா சொல்கிறாய்.. எங்கே உன் புருஷன் ..அவரையும் கூப்பிடு.. “
அரவிந்த் அம்மாவின் குரல் கேட்டதுமே ஏகக் குஷியுடன் பேசுகிறான்.. இவ்வளவு நாளாய் மனதில் இருந்த பாரமே நீங்கி போனதை போல இருக்கிறது அவனுக்கு..
கயலுக்கோ மகன் குரல் கேட்டதுமே அழுகை வருகிறது ..அழுகையை அடக்கிக் கொண்டு, “டேய் யாருடா கிழவி.. யாரைப் பார்த்து சொல்ற.. என்னை பார்த்தால் உன்னுடைய அக்கா என்று தான் எல்லாரும் சொல்லுவாங்க.. இன்னும் ஒன்று எனக்கு மகனும் மருமகளும் தான் இருக்காங்க.. பேரக் குழந்தை வந்த பிறகு தான் நான் கிழவி.. உன் அப்பா தாத்தா .. “
“அதற்காகத்தான் கிழவி உனக்கு போனே செய்கிறேன் .. “
“போடா லூசு முதல்ல போனை வைடா.. சும்மா கிழவி கிழவி என்று சொல்லிக் கொண்டு.. “சொன்ன பிறகுதான் கயலுக்கு மகன் என்ன சொல்கிறான் என்றே புரிகிறது ..
“என்னடா சொல்கிறாய்..அடேய் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல மாட்டாயா.. முதலில் என்னமோ சொன்னாயே.. என்ன அது..
” ஆமாம் கிழவி அதற்காகத்தான் போனே செய்கிறேன் கிழவி.. எப்பொழுது வந்து உன் பேரப்பிள்ளையை பார்க்க
போகிற .. “
மகன் சொன்னதுமே கயலுக்கு ஆனந்தத்தில் கண்ணீர் வழிகிறது.. அதற்குள் அரவிந்த் அப்பா மாறன் போனைப் பிடுங்கி பேசுகிறார்..
இவ்வளவு நேரம் மனைவி அருகில் நின்று மகன் என்ன பேசுகிறான் என்று ஒட்டு கேட்டவர் தான் எதுவும் தெரியாததை போல விசாரிக்கிறார்..
” என்னடா சொன்ன என் பொண்டாட்டி கிட்ட.. அழுதுகிட்டு இருக்கா .. “
“ஆமாம் அம்மா பாட்டியாகி விட்டதை சொன்னேன் ..அதற்காகத்தான் அழுகிறது ..
“அப்படியா ரொம்ப நல்ல செய்தி தான். இதோ நாங்கள் புறப்பட்டு கொண்டே இருக்கிறோம் .. “
“நீங்க இங்க வாங்க உங்க இரண்டு பேருகிட்டயும் நான் சண்டை தான் போடணும்..”
” அதெல்லாம் நேர்ல வந்து பார்த்துக் கொள்ளலாம் ..முதல்ல போனை கட் பண்ணு.. இல்லா விட்டால் திரும்பவும் பிளாக் செய்து விடுவேன் .. ” மிரட்டி போனை வைக்கிறார்..
மித்ராவுக்கு அவர்கள் மூவரும் பேசுவதை கேட்க ஆசையாக இருக்கிறது.. ஏற்கனவே அரவிந்த் கதை கதையாய் சொல்லி இருக்கிறான் ..அவனும் அம்மாவும் சண்டை போட்டால் கூட அது காமெடி சண்டையாகத்தான் இருக்கும் என்று ..இரண்டு நிமிடம் பேச்சிலேயே அது உண்மை என்று புரிகிறது.. அத்தையையும் மாமாவையும் நேரில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்துக் கிடக்கிறாள்..
மித்ராவின் குடும்பம் சரியான மானா குடும்பம் ..எல்லாருக்குமே மா என முதல் எழுத்தில் பெயரை வைத்தார் சக்திவேல்.. தன் மனைவி மீனாட்சி மீது வைத்திருந்த அன்பின் காரணமாக.. பெரியவள் மித்ரா, அடுத்தவள்கள் மலர்,மயூரி, மோனிஷா..
அரவிந்த் அவன் பெற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தங்கைகள் மித்ராவிடம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்..
” அக்கா நீ நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போதே நாங்கள் வந்து விட்டோம்.. மாமா தான் அவள் தானாக எழுந்து வரட்டும் ..யாரும் எழுப்பாதீங்க ப்ளீஸ் என்று சொன்னாங்க.. அதனாலதான் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தோம் ..”
மித்ரா, ” எங்கேங்கடி நீங்க அமைதியா இருந்தீங்க ..ஒரே சத்தம் உங்கள் குரல்கள் எல்லாம் கனவில் கேட்டது மாதிரி இருந்தது ..அம்மா அப்பா, உங்களின் குரல் என்று ..எனக்கு கனவில் இருந்து மீண்டு வரவே பிடிக்கவில்லை.கனவு கலையாமல் இப்படியே இருக்கட்டும் .. கனவிலாவது எல்லாரும் வரட்டும் என்று.. போங்கடி எல்லோரும் என்னை மறந்து விட்டீர்கள் தானே.. “என்று கண்கலங்குகிறாள்..
“அப்படி இல்லக்கா எங்களுக்கெல்லாம் உன்னை பார்க்க ஆசைதான்.. அப்பாவுக்குதான் கொஞ்சம் கிறுக்கு..அவள் முகத்திலேயே விழிக்க கூடாது ..எனக்கு மூன்று பெண்கள் தான் பிறந்திருக்கிறார்கள் என்று நான் நினைத்துக் கொள்கிறேன் என்று தினமும் ஒரு டயலாக் சொல்லிக் கொண்டே இருப்பார்.. “
“ஆனால் என்ன ஒரு காமெடி என்றால் மாமா வீட்டு வாசலை மிதித்ததுமே அப்பா தான் ஓடி வந்து அவங்க கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தார்.. “
மித்ரா சந்தேகமாக கேள்வி கேட்கிறாள்.. “அப்படி என்றால் அப்பா நடித்து தானே இருக்கிறார் .. “
சக்திவேல் உள்ளே வந்தவர்அவர்கள் பேசுவதைக் கேட்டு பதில் கூறுகிறார்.. “வேற என்னங்கடி பண்றது ..வரிசையா பெண் குழந்தைகளை வைத்திருக்கிறேன்.. நான் இப்படித்தான் இருக்க வேண்டும் .. நான் இப்படி கண்டிப்பாக இருக்கும் போதே மித்ரா லவ் மேரேஜ் செய்து கொண்டாள்.. “
“அடுத்தவள் மலர், ” ஏம்பா அக்காவுக்கு என்ன ..நன்றாக தானே இருக்கிறாள்.. மாமாவை பாருங்க எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க..”
ஆமாம் அது என்னமோ உண்மைதான் : இதெல்லாம் கடவுளின் கருணைதான்.. எத்தனை செய்திகளில் படங்களில் பார்க்கிறோம்.. பெண்ணை ஏமாற்றி கொண்டு போய் எங்காவது விட்டு விட்டு வருவதாய்.. அது மாதிரி எல்லாம் இருந்தால் என்ன செய்வது.. இவங்க தங்கமான மாப்பிள்ளையாக இருக்கிறார்கள்.. “ஒரே அரவிந்த் புகழ் மழையாகத் தான் இருக்கிறது..
“போதும் போதும் விட்டால் மாப்பிள்ளையை புகழ்ந்து கவிதையே எழுதிடுவீங்க போலயே.. அப்பா எனக்கு காதே புளித்து விட்டது .. ” என்று போலியாய் சலித்துக் கொள்கிறாள்..
“மீனு மகளுக்கு என்னடி சமைச்சு போடப் போகிறாய்..மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நல்ல விருந்து சாப்பாடு ஏற்பாடு செய்..சக்திவேல் மனைவிக்கு அடுக்களையில் உதவி செய்த படியே அரட்டை அடிக்கிறார்..
“ஆமாங்க நம்ம சம்மந்திகளும் வராங்க போல ..நல்ல விருந்து சாப்பாடு தயார் செய்து எல்லாரையும் அசத்தணும்..” சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் ஒரே ஆரவாரமாய் சத்தம் கேட்கிறது.. ஓடி வந்து வேடிக்கை பார்க்கிறார்கள்..
கயல் தான் வாசலில் நின்றபடி வேகமாக பேசுகிறார்..அடேய் அரவிந்தன் வெட்கம் கெட்டவனே ..எங்களை கூப்பிட்டு விட்டு எங்கடா ஓடி ஒளிஞ்ச ..தைரியம் இருந்தா நேருக்கு நேர் வந்து என் முகத்தை பாரு.உன் வீட்டு வாசலில் தான்டா நிற்கிறேன் .. “
” கிழவி ரொம்ப பேசாத.. இதோ உன் எதிரே தான் இருக்கிறேன் .. ” என்றவன் அவன் காரில் இருந்து இறங்குகிறான்.. அவனைப் பார்த்ததுமே ஓடி வந்து கட்டிக் கொண்டு அழுத படியே அவன் முதுகில் அடியை போடுகிறார்.. அவனும் அம்மா என அழுதவன் அணைத்துக் கொள்கிறான்..
“ஏன்டா நீ செய்தது உனக்கே நியாயமா இருக்கா.. வயசானவங்களை தவிக்க விட்டு விட்டு இப்படி தனியே வந்து விட்டாயேடா.. நாங்க அப்படித்தான் கோபமா பேசுவோம் ..போனை பிளாக் பண்ணுவோம் ..எப்படியாவது நீ எங்களை சமாதானம் செய்திருக்க வேண்டாமா .. “
“அது சரி போனை ஆஃப் பண்ணி வைத்து விடுவீர்களாம்..பிறகு எப்படி பேசுறது.. “
” ஏன்டா போன்ல தான் பேசணுமா.. நேர்ல வந்து புருஷனும் பொண்டாட்டியும் எங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினா நாங்க ஏற்றுக் கொள்ள மாட்டோமா.. நான் தான்டா அரவிந்த் பெரிய தப்பு செய்து விட்டேன்..போன்ல பேசா விட்டால் நீ மனசு கேட்காம நேர்ல வருவன்னு நினைச்சுக்கிட்டேன்டா ..ஆனா நீ பெரிய கல்நெஞ்சக் காரணாதான் இருந்திருக்க..”
அரவிந்த் அம்மா பேசவும் வருத்தமாகிறான் … ” நானும் அறிவு கெட்டத்தனமா ,போனையே எடுக்கல.. நேர்ல போனா செருப்பால் அடிப்பீங்களே என்று பயந்து கொண்டுதான் வராமல் போய் விட்டேன் ..அம்மா என்னை மன்னித்து விடு .. “கால்களில் விழுந்து அழுகிறான் ..
“அவ என்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தாம்மா.. அவங்க அடித்தால் என்ன.. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதா.. ஒரு முறையாவது நம்ம நேர்ல போய் பார்த்து விட்டு வருவோம் என்று.. நான் தானே அலட்சியம் செய்து விட்டேன்..”
“சரிடா அழாத அதுதான் என் பேரப்பிள்ளை வந்து நம்மை எல்லாம் ஒன்றாக சேர்த்து விட்டானே..”
மித்ரா வெளியே வந்து நின்றவள் சத்தம் காட்டாமல் வேடிக்கைப் பார்க்கிறாள்..கணவனை ஏற்றுக் கொண்டவர்கள் தன்னையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ற நம்பிக்கை வந்ததும் தான் வாயை திறக்கிறாள்..
” நானும் எத்தனையோ முறை சொல்லி பார்த்தேன்ங்க அத்தை.. இவங்க தான் நீங்க கோபமா இருக்கீங்க.. கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தாங்க.. எங்களை மன்னிச்சிடுங்க..” அவனையும் இழுக்கவும் அப்படியே காலில் சேர்ந்து விழுகிறார்கள்..
கயலுக்கு மருமகள் மீது எந்த கோபமும் இல்லை.. ஆனால் கணவர் ஏதாவது சொல்வாரோ ,அவர் ஒத்துக் கொண்டால் தான் ஒன்று சேர்வது என்ற உறுதியில் இருந்தவர் இருவரும் காலில் விழவும் மித்ராவை தொட்டு தூக்குகிறார் ..
“அம்மாடி வயிற்றுல பிள்ளையை வைத்துக் கொண்டு இப்படி வேகமா கீழே விழாத.. பத்திரமா இரு.. நீங்கள் நல்லா இருக்கணும்.. அது ஒன்னு போதும்.. நல்ல படியா பேரக் குழந்தையை பெற்றுக் கொடுக்கிற வழியை பாரு.. “என்று மருமகளை அணைத்துக் கொள்கிறார்..
ஏற்கனவே அரவிந்த் ஃபோட்டோவில் மித்ராவை காட்டி இருக்கிறான்.அதனால் கயலுக்கு ஓரளவுக்கு அவள் முகம் பரிச்சயமாகி இருந்தது ..கணவர் அருகில் இருக்கிறார் என்று பார்க்காமல் வாயை விடுகிறார்..
“என் மருமகள் போட்டோவில் பார்த்ததை விட நேரில் இன்னும் அத்தனை அழகாக இருக்கிறாடா.. நீ பேசாமல் ஒரு முறையாவது நேரில் அழைத்து வந்திருக்கலாம்.. முறைப்படி பெரியவர்கள் சம்மதத்துடன் ஊரைக் கூட்டி கல்யாணம் செய்து வைத்திருப்பேன் .. எல்லாவற்றையும் நீதான்டா கெடுத்து விட்டாய்.. “
” இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை அம்மா ..எனக்கு கல்யாணத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்று வைத்து இருந்த பணம் எல்லாவற்றையும் என்னிடமே கொடுத்து விடு ..நான் சேமித்து வைத்துக் கொள்கிறேன்.. நாளைப் பின்னே என் பிள்ளைகளுக்கு உதவும் தானே.. “
“போடா அதை நீ என்னடா சொல்வது.. நானே என் பேரக் குழந்தைகள் பெயரில் போட்டு விடுவேன் ..ஒரே ஒரு பிள்ளை வைத்திருக்கிறேன் ..என்னால் உன் கல்யாணத்தை பார்க்க முடியவில்லையே..” கயலுக்கு மகனின் திருமணத்தை கண்ணால் பார்க்காதது மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது..
மனைவியின் கவனத்தை திசை மாற்ற முயற்சிக்கிறார் மாறன் .. “அப்படி என்றால் ஏற்கனவே அவன் காதலித்தது தெரியுமாடி ..எனக்கு மட்டும்தான் தெரியாதா.. என்னிடம் மறைத்து விட்டாயா.. என்று கோபமாக கேட்கிறார்..
அவர் அம்மாவை ஏன் மிரட்டுகிறார் என்று புரியாமல் அரவிந்த் தானாக மாட்டிக் கொள்கிறான்..
“ஏம்பா உனக்கு தான் அம்மாவுக்கு தெரியாம போட்டோவை காட்டினேனே.. அதெல்லாம் மறந்து போய் விட்டதா..”
இப்பொழுது கயல் அவரிடம் சண்டை போடுகிறார் ..
கெட்டது காரியம்.
தொடரும்
