மௌன ராகம் 10

அத்தியாயம் 10:

​லண்டனின்பனிக்காலம் இப்போது அதன் உச்சத்தில் இருந்தது. தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து,காணப்பட்டது. எங்கும் வெண்மை நிறம் போர்த்தப்பட்டிருந்தது. கவிவர்ஷன் தனது சிறிய அறையில், ஒரு பழைய ஹீட்டரின் உதவியுடன் குளிரைச் சமாளித்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன. கடந்த மூன்று நாட்களாக அவன் சரியாக உறங்கவில்லை. அவனது லேப்டாப் திரையில் ஓடிக்கொண்டிருந்த அந்த ‘கோடிங்’ வரிகள் தான் அவனது எதிர்காலத்தைத்தீர்மானிக்கப் போகும் ஆயுதங்கள்.

​அவன்உருவாக்கியிருந்த அந்தப் புதிய பாதுகாப்பு மென்பொருள் சர்வதேச அளவில் ஒரு பெரிய தொழில்நுட்பப்புரட்சியை ஏற்படுத்தும் என்று அவனது பேராசிரியர்கள் கணித்திருந்தனர். ஆனால் கவிக்கு அந்தப் புகழிலோ, பணத்திலோ பெரிய ஆசை இருக்கவில்லை. அவனதுஒவ்வொரு செயல்பாட்டிற்கும் பின்னால் பிரக்யுவின் முகம் மட்டுமே நிழலாடியது.

 ​அதிகாலைஐந்து மணி. கவிவர்ஷன் தனதுஅறையிலிருந்து கிளம்பி, ஒரு சிறிய ஹோட்டலுக்குவேலைக்குச் சென்றான். அங்கு அவன் செய்யும் வேலை, மேசைகளைத் துடைப்பதும் பாத்திரங்களை அடுக்குவதும். ஒரு காலத்தில் கோயம்புத்தூர்கல்லூரியில் கவிதைகளால் மேடையை அதிரவைத்த ஒரு கவிஞன், இன்றுலண்டனின் ஒரு மூலைத் தெருவில்பிழைப்புக்காகப் போராடிக் கொண்டிருந்தான்.

​அங்குவரும் ஆங்கிலேயர்கள் அவனை ஒரு சாதாரணத்தொழிலாளியாகப் பார்த்தனர். ஆனால், அவனது கைகளில் இருந்த அந்தச் சிறிய நோட்டுப் புத்தகத்தில், உலகமே வியக்கப் போகும் தொழில்நுட்ப ரகசியங்கள் இருந்தன.

​”கவி… நீஏன் இவ்வளவு கஷ்டப்படுற? உன் ஸ்காலர்ஷிப் பணமேஉனக்குப் போதுமே?” என்று அவனது நண்பன் ஆண்ட்ரூ ஒரு முறை கேட்டான்.

​கவிவர்ஷன்சிரித்துக் கொண்டே சொன்னான், “ஆண்ட்ரூ… இந்தப் பணம் என் படிப்புக்காகஇல்லை. நான் இந்தியாவுக்குத் திரும்பும்போது, ஒரு பலவீனமான கவிஞனாத் திரும்பக் கூடாது. அந்த அதிகாரத்தின் கோட்டையைஉடைக்க எனக்கு ஒரு பலமான அஸ்திவாரம்தேவை. அதுக்கு இந்த உழைப்பு தான்எனக்கு வழி.”

​அங்கேகோயம்புத்தூரில், பிரக்யுவின் வாழ்க்கை ஒரு நரகமாக மாறியிருந்தது. ரூபன் அவளுக்குத் திருமணத் தேதியை அறிவித்துவிட்டார். இன்னும் பத்து நாட்களில் திருமணம். மும்பையைச் சேர்ந்த அந்தத் தொழிலதிபர் குடும்பம், திருமண ஏற்பாடுகளுக்காகக் கோயம்புத்தூருக்கு வரவிருந்தது.

​பிரக்யுதனது அறையிலிருந்து வெளியே வருவதையே நிறுத்திக்கொண்டாள். அவள் அணிந்திருந்த அந்தவிலை உயர்ந்த பட்டுப்புடவைகளும், வைர நகைகளும் அவளுக்குவிலங்குகளாகத் தெரிந்தன. அவள் தனது டைரியில்மெல்ல எழுதினாள்:

​”என் கழுத்தில்விழப்போகும் அந்தத் தாலி – ஒரு

சுருக்காகத்தான் எனக்குத் தெரிகிறது!

கவி… நீ எங்கே இருக்கிறாய்?

உன்கவிதைகள் என்னைச் சுற்றி ஒரு கவசம் போலஇருந்தன…

இன்றுஅந்தச் சிறைக்கதவுகள் எனக்குள் இறங்குகின்றன!”

​திடீரெனகதவு தட்டப்பட்டது. ரூபன் உள்ளே வந்தார். அவரது முகம் மிகக் குரூரமாக இருந்தது. “இதோ பார் பிரக்யு… இன்னும் பத்து நாள்ல உனக்குக் கல்யாணம். உன் அந்த கவிஞன்லண்டன்ல ஒரு பொண்ணோட சுத்திட்டுஇருக்கான்னு எனக்குத் தகவல் வந்திருக்கு. இதோ அந்த போட்டோஸ்!” என்று சில மார்பிங் செய்யப்பட்டபுகைப்படங்களை வீசினார்.

​பிரக்யுஅந்தப் புகைப்படங்களைப் பார்க்கவே இல்லை. “அப்பா… நீங்கள் எவ்வளவு பொய் சொன்னாலும் நான்நம்ப மாட்டேன். கவி என்னை விட்டுப்போக மாட்டார். ஆனா, அவர் உயிருக்குநீங்க ஆபத்து விளைவிப்பீங்கன்னு தெரிஞ்சதால தான் நான் இந்தத்திருமணத்துக்குச் சம்மதிச்சேன். என் உடலை யாருக்கோதானம் செய்யலாம், ஆனா என் ஆன்மாஅவருக்குத்தான்,” என்று மிக உறுதியாகச் சொன்னாள். ரூபன்ஆத்திரமடைந்து அவளை அறையிலேயே பூட்டிவிட்டுச்சென்றார்.

​​லண்டனில், கவிவர்ஷன் தனது புராஜெக்ட்டைச் சமர்ப்பித்துவிட்டுக்காத்திருந்தான். அன்று மாலை அவனது லேப்டாப்பில்ஒரு மெயில் வந்தது. டெக்னோ சாஃப்ட் என்கிற உலகின் மிகப்பெரிய நிறுவனம், அவனது மென்பொருளை பத்து மில்லியன் டாலர்களுக்கு சுமார் 80 கோடி ரூபாய் வாங்கத்தயார் என்று அறிவித்திருந்தது.

​கவிவர்ஷனின்கண்கள் கலங்கின. அந்தத் தொகையைப் பார்த்தபோது அவனுக்கு மகிழ்ச்சி வரவில்லை; மாறாக ஒரு பெரிய விடுதலைஉணர்வு வந்தது. அவன் உடனடியாக ஹர்ஷாந்தைஅழைத்தான்.

​”ஹர்ஷாந்த்! வேலைமுடிஞ்சதுடா. நான் இப்போ ஒருசாதாரண ஆள் இல்லை. ரூபனோடமொத்தச் சொத்தையும் என்னால இப்போ விலைக்கு வாங்க முடியும். இன்னும் மூணு நாள்ல நான்இந்தியாவுக்கு வர்றேன். ஆனா இது யாருக்கும்தெரியக்கூடாது. பிரக்யு கல்யாண அன்னைக்கு நான் மண்டபத்துக்கு வருவேன். அதுவரைக்கும் நீ அண்ணியைப் பத்திரமாபார்த்துக்கோ,” என்றான்.

​”அண்ணா! நீசொல்றது நிஜமா? 80 கோடி ரூபாயா? சூப்பர்அண்ணா! இப்போ அந்த ரூபன் முகத்தைப்பார்க்கணுமே!” என்று ஹர்ஷாந்த் குதித்தான்.

​கிளம்புவதற்குமுந்தைய இரவு, கவிவர்ஷன் தேம்ஸ் நதிக்கரையில் தனியாக நடந்தான். அந்தப் பனிப்பொழிவு அவனது முகத்தைத் தீண்டியது. அவன் தனது கோட்பாக்கெட்டில் இருந்த பிரக்யுவின் கைக்குட்டையை எடுத்து முத்தமிட்டான்.

​”பிரிவு என்பதுஒரு தீ – அது

பச்சையானநினைவுகளைச் சுட்டெரிக்கும்!

ஆனால், நம் காதலோ காய்ந்த சருகல்ல – அது

ஈரமானமண்வாசனை!

பத்துநாட்கள்… வெறும் பத்து நாட்கள் தான்…

மௌனங்களின்மொழி – இனி

மங்கலநாணின் ஒலியாக மாறும்!”

​அவன்தனது டிக்கெட்டை முன்பதிவு செய்தான். லண்டனிலிருந்து சென்னைக்கு வரும் அந்த விமானம், அவனதுமூன்று வருடப் பிரிவின் வலியைச் சுமந்து கொண்டு பறக்கத் தயாரானது. அவன் ஒரு கவிஞனாகப்போனான், ஆனால் ஒரு சாம்ராஜ்யத்தின் அதிபதியாகத்திரும்பிக் கொண்டிருந்தான்.

​அங்கேஇந்தியாவில், திருமண மண்டபம் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ரூபன் தனது வெற்றியை எண்ணிச்சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்தச் சிரிப்பு இன்னும் சில மணி நேரங்களில் அழுகையாகமாறப்போவதை அவர் அறிந்திருக்கவில்லை.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மௌன ராகம்
2,516 124 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page