வெந்து தணிந்த இதயம்-17

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-17

 

சஷ்டிவேல் பாண்டியன் தான் அங்கே ரூத்ரமூர்த்தியாக நின்றிருந்தான்.

 

அவனைக் கண்டதும் ஜெயந்தி வழிசலாக சிரித்தவர், “அவ்ளோ தான் எல்லா அலங்காரமும் முடிஞ்சது. நானே தெய்வானைய இ..ப்ப அனுப்பி வைக்கிறேன்.” என்றதும், முறைத்தபடியே சென்றான்.

 

ஜெயந்தியும் தெய்வானையும் அரண்டுபோய் நின்றனர்.

 

ஜெயந்தி கதவை தாழிட்டு வந்தவர், “எவ்ளோ திமிர் பாரு இந்த செகண்ட் கிளாஸ் டிக்கெட்டுக்கு? ச்சே! இந்த வீட்டை நீயும் நானும் தான் ஆள்வோம்னு நினைச்சோமே தெய்வானை. இப்படி நம்ம ஆசையில மண்ணள்ளி போட்டுட்டாளே அந்த சண்டாளி யாழினி. இனி அவ இந்த வீட்டுல எப்படி நிம்மதியா‌ வாழ்ந்திடறான்னு நானும் பார்த்திடறேன். இங்கப்பாரு தெய்வானை, நடந்தது நடந்துப்போச்சி. இனி யார் கை மேலோங்கி இருக்குதுனு தான் பார்க்கனும். என்னைக்கும் நீதான் முதலாவதா இருக்கனும். புரியலையா? இந்த வீட்டுக்கு முதல் வாரிசை பெத்துக் கொடுத்து எல்லார்கிட்டயும் நீ தான் நல்ல பேர் வாங்கனும். என்ன புரிஞ்சதா?” என்றதும், நல்லப்பிள்ளையாய் சரியென்று தலையாட்டினாள் தெய்வானை.

 

அவளின் முகத்தை வழித்து திருஷ்டி கழித்தவர் அவளை சஷ்டியின் அறைக்கு அனுப்பி வைக்க, சகல விதமான அலங்காரங்களுடனும் தன்னறைக்கு வந்தவளை பார்த்து எழுந்து நின்றான் சஷ்டி. இருவருக்கும் அந்த இரவு தனிமை புதிதோ புதிது.

 

அவன் அவளை மெதுவாக நெருங்க, வெட்கத்தில் தலை குனிந்தாள் தெய்வானை. 

 

முகத்திற்கு முன்னால் சொடுக்கிட்டவன் அவள் நிமிர்ந்ததும், “என்ன இப்படியெல்லாம் அலங்காரம் பண்ணிட்டு வந்தா என்னை ஈசியா மடக்கிரலாம்னு நினைப்பா?” என்று ஏளனம் செய்தான்.

 

‘என்ன சினிமா டயலாக் எல்லாம் பேசுறான்?’ என்றவள் திகைத்து நிற்க, அவன் மனமோ, ‘நீ தானேடா கொஞ்சநேரம் முன்னாடி அவளை வாயைப் பிளந்து பார்த்த?’ என்று காரித் துப்பியது.

 

இருப்பினும் கோபத்தை இழுத்து பிடித்து தக்கவைத்தான்.

 

“என்ன ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிற? உன்னைப் பொறுத்தவரை நானும் யாழினியும் வில்லன் வில்லி. உன் சுகபோக வாழ்க்கையை பறிச்சவங்க. ஸோ, இப்ப நீ என் வாழ்க்கையை நாசம் பண்ண தான் எந்த மறுப்பும் சொல்லாம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட ரைட்? இனி‌ நான் ஒவ்வொரு நாளும் ஏன்டா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு ஃபீல் பண்ணனும்? ஏன்னா நீ ரத்னவேல் பாண்டியனோட பே..த்தி!” என்று அவள் கூற வந்ததாக தானே ஏதோ‌ கற்பனை‌ செய்து கொண்டு கூறினான் சஷ்டி.

 

‘அட மெண்டல் புருஷா!’ என்று மனதிற்குள் கத்தியவள், “நீ…ச்சே! நீங்க உண்மையாத் தான் என்னை லவ் பண்ணீங்களா?” என்றாள்.

 

அவன் கடுப்பாக, “ஏன் கேட்கற?” என்றதும், 

 

“இல்ல என் மேல கட்டுக் கடங்காத காதலை வச்சிட்டு எப்படி உங்களால இன்னைக்கு நைட்டு புல்லா சண்டை போட்டுட்டே இருக்க முடியும்? அதான் கேட்டேன்” என்று கிண்டலாகச் சொன்னாள்.

 

அவனோ, “என்னை பத்தி உனக்கு தெரியாது” என்று பாவமாக மிரட்டினான்.

 

“அதெல்லாம் நல்லா தெரியும்.” என்று கட்டிலில் சென்று உட்கார்ந்தவள், அவனது கையையும் இழுத்து கட்டிலில் உட்கார வைத்தாள். 

 

அவன் அளவிலாக் காதலில் தன்னை மனைவியாக்கிக் கொண்டதை நினைத்து ஆசையுடன் அவன் முகத்தை நெருங்கினாள்.

 

பின்னால் முகத்தை நகர்த்தியவனோ, “ஏய்! எதுக்கு இப்ப என்னை நெருங்கி‌ வர்ற? அப்பறம் நான் ஏடாகூடமா ஏதாவது செஞ்சுருவேன்” என்று பயத்துடன் மிரட்டினான்.

 

தன் இதழ்களை நாவால் எச்சில்படுத்தியவள், “நீங்க என்ன செய்யுறீங்கன்னு தான் பார்ப்போமே?” என்று சொல்லிக்கொண்டு அவன் இதழோடு இதழ் கலக்க, கண்களை இறுக மூடிக்கொண்டான் சஷ்டி. 

 

ஆனால், அவர்களை இணைத்த காமனின் இதழ்கள் மட்டும் புன்னகையில் மலர்ந்திருந்தது.

 

அன்று தேனுக்காக ஆசைப்பட்டவளுக்கு இன்று தேன் குடுவையே கிடைத்தது போல் இருந்தது.

 

முத்தம் கொடுக்கும் ஆர்வத்தில் த‌ன் மடியில் உட்கார்ந்திருந்தவளின் இடையை அவன் கைகள் எப்போது பற்றியதோ தெரியாது இதமாக வருடிக்கொண்டிருந்தது.

 

மீண்டும் மீண்டும் அவன் இதழுக்குள் தூண்டிலிட்டவள் ஒரு கட்டத்தில் அவன் முகம் முழுமைக்கும் முத்தமிட, அவளை தன் மீது சரித்துக்கொண்டு அவளின் தேக வெப்பத்தில் குளிர்காய ஆரம்பித்தான் சஷ்டி.

 

ஆட்டத்தை துவக்கி வைத்தவள் அவள். ஆனால், ஆட்டம் முழுமைக்கும் அவனின் கை தான் ஓங்கியிருந்தது. அவனின் இத்தனை வருட காதலுக்கும் தன்னை விருந்தாய் மாற்றி படையலிட்டாள் தெய்வானை.

 

காதலிக்கும் போது அவளை தொடவே தயங்கியவன் அவள் மனைவியாகியதும், தனது உரிமை முழுவதையும் நிலைநாட்டினான்.

 

காலை பகலவனும் பள்ளிகொண்ட சுகத்தில் இருந்தானோ? மெதுவாக சோம்பல் முறித்தான்.

 

சஷ்டி எழுந்ததும் தன்னருகில் கிடப்பவளின் அழகை ஆராதித்துக் கொண்டிருக்க, அவளோ விழித்ததும் அவனின் கழுத்தைச் சுற்றி கைப்போட்டு அவன் இதழ் முத்தத்தை களவாடினாள்.

 

மாற்றி மாற்றி தங்கள் இதழ் பூக்களுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டவர்கள் ஆசையில் மூச்சு வாங்க, தெய்வானை ஞாபகம் வந்தவள் போல்‌ அவன் நேற்று தன்னை அடைவதற்கு காரணமாயிருந்த காணொளியைப் பற்றி வினவினாள்.

 

அவளின் கெட்டநேரம், “அந்த வீடியோ ரெகார்ட் ஆனது உங்க ரூம்ல தானே?” என்று தவறாக ஆரம்பிக்க, அவள் கன்னம் எரியும் அளவுக்கு அறைந்திருந்தான் சஷ்டி.

 

“புரியுதுடி. அடுத்து நீ என்ன கேட்கப்போறன்னு புரியுது. அந்தளவுக்கு ஒன்னும் நான் கேவலமானவன் இல்ல. வீடியோவாம் வீடியோ.‌ இங்க எந்த சிசிடிவியும் இல்ல.” என்று கத்தவும், தன் கன்னத்தை பிடித்தபடியே கோபமாக அங்கிருந்து சென்ற தெய்வானை தன்னறையில் சென்று இருந்து‌கொண்டாள். 

 

நேற்றிரவு அவனுடன் தான் வெட்கம் விட்டு அவ்வளவு கூடியும், தன் காதலை அவன் புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்தினாள். மேலும், தான் என்ன சொல்ல வருகிறோம் என்பதே புரியாமல், தன் மனதில் அவன் தான் இருக்கிறான் என்ற உண்மையையும் அறியாமல் ஆவேசப்பட்டவனை திட்டித் தீர்த்தாள். 

 

சஷ்டியோ, “உனக்கு ஏன்டி எப்பவும் அந்த‌ பத்ரியை மட்டுமே பிடிக்குது? என்னை எப்போடி நீ லவ் பண்ணுவ?” என்று தலையணையில் குத்திக் கொண்டிருந்தான்.

 

அவனின் பொறாமைக்கு ஆளான பத்ரவேல் பாண்டியன் முன்தினம் மாலை யாழினியை பெண்டாண்ட பிறகு நேரே சென்றது தனது தந்தையின் மதுபானவிடுதிக்கு. 

 

அது வெளியே எங்கேயோ இல்லை. அந்த வீட்டின் ஒரு பகுதியில் தான் இருந்தது. அங்கு ஷோகேஸ் முழுவதையும் விலையுயர்ந்த மதுபாட்டீல்களால் அலங்கரித்திருந்தார் ரத்னவேல் பாண்டியன். அவரின் நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று யாராவது முக்கியமானவர்கள் வந்தால் அங்கு தான்‌ கும்மாளமே. 

 

மேலும், வீட்டில் ஏதேனும் விஷேசம் என்றால் அங்கிருந்து தான் தன் மனம்போக்கில் மதுபாட்டீல்களை அள்ளி தனது அடியாட்களுக்கு வழங்குவார். இன்றும் அதுபோலவே எதிர்பார்த்து நின்றவர்களை ஏமாற்றாமல் அவர் மதுபாட்டீல்களை வாரி வழங்கிய போது தான் பத்ரி அவர் முன்பு வந்து நின்றான்.

 

அவனைக் கண்டதும் அடியாட்களை வெளியேறச் சொன்னவர் எடுத்த எடுப்பிலேயே, “இதைத்தான் பத்ரி சாமியார் என்கிட்ட முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை செஞ்சிருக்காரு. நான் தான் புரியாம அவளை உள்ள விட்டு பெரிய தப்பு பண்ணிட்டேன்.” என்று ஆவேசமாகக் கூறினார்.

 

அவனுக்கும் தங்கள் மானம் பறிபோன அந்த காலைத் தருணம் நினைவுக்கு வந்தது.

 

“ஆனா நீ என்னை இப்படி எல்லார் முன்னாடியும் தலை குனிய வைப்பன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கல பத்ரி. எனக்கு தெரியும் அந்த வீடியோல இருந்தது நீ‌தான். அதை அவளுக்கு கொடுத்து உதவினது சஷ்டி‌ தான். ஆனா அவன் மேல கோபப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்ல. ஏன் தெரியுமா? அவனுக்கு வேண்டியதை அவன் எடுத்துக்கிட்டான். நடுவுல தோத்தது நீயும் நானும் தான். அதுவும் உன் பெண்ணாசையினால.” என்றதும், தலைகுனிந்து நின்றான்.

 

“இந்த வீட்டுக்கு ஒருத்தி மருமகளா வரனும்னா அதுக்கு ஒரு தகுதி வேணும் பத்ரி. தெய்வானையோட தகுதி அவ உடம்புல ஓடுறது நம்ம குடும்ப ரத்தம். ஆனா இவ? எங்கேயோ வயித்துப்பிழைப்புக்கு நாடகம் நடிச்சிட்டு இருந்தவ. இவளைப் பத்தி இந்த சஷ்டிக்குமே ஒன்னும் தெரியல. வெளியூருக்கு ஆள் அனுப்பி இவளோட நாடகக்குழுக்கிட்ட இவளைப் பத்தி விசாரிக்கச் சொல்லியிருக்கேன். இவ யாருனு தெரியட்டும். அப்பறம் இருக்கு கச்சேரி.” என்று குரூரமாய் சொன்னார். 

 

அவர் அவளை தனது எதிரிகள் யாரோ தான் அனுப்பியிருப்பதாகக் கருதினார்.

 

மேலும், “வெளிய இன்ன இடத்துல சம்பந்தம் பண்ணியிருக்கேனு சொல்ற நிலைமைலயா நீ என்னை கொண்டு வந்து தள்ளியிருக்க? ஊர் பெரிய மனுசனுங்க மூஞ்சில முழிக்கவே எனக்கு சங்கடமா இருக்கு பத்ரி. நீ எனக்கு இவ்ளோ பெரிய அவப்பெயரை உண்டாக்கியிருக்க வேண்டாம். உன் மேல நான் வச்ச நம்பிக்கையெல்லாம் பொய்யாகிப்போச்சி.” என்றதும், பதிலெதுவும் பேச முடியாமல் தொண்டை அடைத்து நின்றான் பத்ரி.

 

தன் தந்தையை இப்படி கலங்க வைத்ததற்கு அதுவும் தன் மூலம் கலங்க வைத்ததற்கு அவனுக்கு யாழினியின் மீது பழிவெறி கூடிக்கொண்டேப் போனது.

 

“அத்தனை‌ பேர் முன்னாடியும் நான் இத்தனை நாள் சம்பாரிச்ச பேர் எதுவும் கெட்டுடக்கூடாதுனு தான்‌ அந்த ஊர் பேர் தெரியாத கழிசடைய உனக்கு கல்யாணம் பண்ணி‌வச்சேன். ஆனா இது இத்தோட முடியுறது இல்ல பத்ரி. அவளால இனி என்னென்ன ஆபத்து வரப்போகுதோனு எனக்கு பதட்டமா இருக்கு.” என்றதும்,

 

வன்மத்தின் மொத்த ஸ்வரூபமாக நின்ற பத்ரி, “அவளால இனி உங்களுக்கு நான் எந்த அவப்பேரும் வர விடமாட்டேன்பா. இது சத்தியம்” என்றுவிட்டுப் போனான்.

 

ரத்னவேல் பாண்டியனோ அவனை நன்றாக ஏற்றிவிட்ட திருப்தியில் சரக்கை ஏற்றத் துவங்கினார்.

 

தொடரும்…

 

இந்தக்கதைப் பிடிச்சிருந்தா…

லைக்‌‌ பண்ணுங்க,

கமெண்ட் பண்ணுங்க, 

லிங் ஷேர் பண்ணுங்க தங்கோம்ஸ்:)

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,864 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page