வெந்து தணிந்த இதயம்-18

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-18

 

ஆத்திரத்துடன் வெளியே வந்த பத்ரவேல் பாண்டியன் என்றும் இல்லாத திருநாளாய் இன்று தன் அடியாட்களிடம் சிகரெட் வாங்கி‌ புகைத்தான். 

 

அவனின் அடியாள் கூட்டத்தில் ஒருவன், “அண்ணே மணி பன்னண்டாச்சிண்ணே. ரூமுக்கு போங்கண்ணே. அண்ணி வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.” என்றதும்,

 

மற்றொருவன், “ஆமாண்ணே உங்களுக்கு வேற இன்னைக்கு பர்ஸ்ட் நைட்டு. உங்க இத்தனை வருச பிரம்மச்சரியத்தையும் இன்னைக்காவது போய் கலைங்கண்ணே. என்னண்ணே பார்க்கறீங்க? நாங்க உங்களை முழுசா நம்பறோம்ணே. ‌ஆனா கோபத்துல ரூமுக்கு போகாம மட்டும் இருந்துடாதீங்கண்ணே. நீங்க ஒரே ஒரு தடவை மட்டும் இந்த தாம்பத்திய சுகத்தை கண்டுக்கிட்டீங்கன்னா அப்பறம் விடவே மாட்டீங்க. அது ஒரு புதைகுழின்னு தெரிஞ்சும் விழுந்துக்கிட்டே இருப்பீங்க.” என்றதும், 

 

மற்றவர்கள், “டேய் வெள்ளச்சாமி” என்று அவனின் தோளில் தட்டி சிரித்தனர்.

 

மேலும் இன்னொருவன், “அண்ணே மட்டும் இந்நேரம் அந்த சுகம் தெரிஞ்சவரா இருந்திருந்தா இங்கயாடா நின்னுட்டு இருப்பாரு?” என்றதும், மீண்டும் கோரசாக நகைத்தது கூட்டம்.

 

பத்ரி அப்படியும் அசையாமல் நிற்பது‌ கண்டு, “அண்ணே உங்களுக்கு பயமா எதுவும் இருந்துச்சினா இதோ இதை ரெண்டு பெக் உள்ள இறக்குங்கண்ணே. தைரியம் தானா வரும்.” என்று ரத்னவேல் பாண்டியன் தங்களுக்கு கொடுத்த விஸ்கி பாட்டிலை நீட்டியதும், அதை தூக்கிப்போட்டு உடைத்தான் பத்ரி. 

 

அவன் உடைத்த‌ வேகத்தில் தன்‌ அறையை நோக்கி‌ நடக்க, ‘வட போச்சே’ என்ற ஏக்கத்தில் இருந்தனர் அடியாட்கள்.

 

பத்ரியின் மனதிற்குள் ஓடியதென்னவோ, ‘வாழ்க்கை முழுக்க அவளை அடக்கி ஆள்றதுக்கான வெறி என் ரத்தத்துலயே இருக்கும் போது நான் எதுக்கு போதையோட உதவிய நாடணும்?’ என்பது தான். 

 

அவன் அந்த எண்ணத்துடனே தனதறைக்கு சென்று பார்க்க, அங்கு யாழினி இல்லை. உடனே ஸ்டோர்ரூம் சென்று பார்த்தான். அவனை ஏமாற்றாமல் கீழே தனது முந்தானையை விரித்து கைகால்களை குறுக்கிப் படுத்திருந்தாள் யாழினி.

 

அவன் நேராக அவளருகில் சென்று படுத்தவன் மலைப்பாம்பாக அவளை இறுக்கினான். 

 

தூக்கத்திலிருந்து விழித்தவளுக்கு ‘மறுபடியும் முதல்ல இருந்தா?’ என்றிருக்க, “ப்ளீஸ் வேண்டாம்” என்றாள் கேட்காத குரலில்.

 

அவன் அதற்கு மதிப்பளித்தால் தானே? 

 

ஆனால், அவனால் பட்டுமெத்தையில் சொகுசாக கூடிய‌ அளவுக்கு தரை சரிபட்டு வரவில்லை. ஆனாலும் அவளை காயப்படுத்துவது ஒன்றே நோக்கமாக இருந்ததால் அவளை தூக்கிக்கொண்டு தனது அறைக்கு நடந்து சென்றான்.

 

அதைப் பார்த்த ஜெயந்தி, “இந்த குடும்பத்து ஆம்பளைகளுக்கெல்லாம் இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.” என்று தலையிலடித்துக் கொண்டார்.

 

தனதறைக்குச் சென்றதும், “இந்தாங்க தண்ணி” என்று கூஜாவை தனது கணவரிடம் கொடுத்தவர், யாழினியை அவர் ஸ்டோர் ரூமிற்குள் தள்ளியதையும், பத்ரி அவளை தற்போது தனதறைக்கு தூக்கிச் செல்வதையும் கூற, சாமிநாதன் வெகுண்டார்.

 

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா ஜெயந்தி? அது அவன் பொண்டாட்டி. புதுசா கல்யாணம் ஆனவங்களை பிரிச்சி வைக்க நெனைக்கிறது ரொம்பப் பெரிய பாவம். ஆமா அந்தப் பொண்ணை அந்த ரூம்ல தங்க சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு? அதுக்கு நம்ம தெய்வானை‌ வயசு தான் இருக்கும். ரொம்பத் தப்பு பண்றடி? எல்லாரையும் ஒரு உயிரா மதி. அகம்பாவத்துல ஆடாத. ச்சே! சொந்த நாட்டுக்கு வந்து நிம்மதியா ஒரு மாசம் தங்கலாம்னா உன் அடாவடித்தனம் எரிச்சலா இருக்குடி. நான் நாளைக்கு விடிஞ்சதுமே என் சொந்த ஊருக்குப் போறேன். லீவ் முடியுறவரை என் அப்பா அம்மாக்கூட இருந்துட்டு அப்படியே வெளிநாட்டுக்கு போயிடுறேன். தெய்வானை விருப்பப்பட்டா என்னை அங்க வந்து பார்க்கட்டும். ஆனா நீ உன் ஆணவமும், வீம்பும் என்னைக்கு குறையுதோ அன்னைக்கு என்னை அங்க வந்து பாரு. அதுவரை நான் உன்னைத் தேடிக்கூட வரமாட்டேன்” என்று திரும்பிப் படுத்துக்கொண்டார்.

 

அது மனதளவில் தன்னை நலிவுறச் செய்தாலும், தான் செய்தது சரியே எனும் முடிவில் உறுதியாய் இருந்தார் ஜெயந்தி. விதி யாரை விட்டது!

 

அன்றிரவு யாழினியுள் மீண்டும் தன் தடத்தை பதித்த நிம்மதியில் அப்படியே உறங்கிவிட்ட பத்ரி, காலையில் தினகரன் க்ரீன்டீ குடிக்கும் வேளையில் தான் கண் விழித்தான்.

 

தன் அறையின் கதவு தாழ் போடாமல் இருப்பது கண்டு, ‘அந்த அளவுக்கா இவ மேல நமக்கு ஆசை கரைபுரண்டு ஓடுச்சி ராத்திரி?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டவன் விடை ஆமென்று கிடைக்கவும், “த்தூ” என்று துப்பிக்கொண்டான்.

 

யாழினி எழுந்ததும் வீட்டு வேலைக்காரர்கள் உபயோகிக்கும் குளியலறையை உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தியவள் தலையை துவட்டிக்கொண்டே வீட்டிற்குள் நுழைய, ரத்னவேல் பாண்டியன் எதேச்சையாக‌ எதிர்பட்டவர், “காலங்காத்தாலயே நான் இவ மூஞ்சில தான் முழிக்கனுமா? சாவித்ரி! ஏய் பார்வதி! எங்க போனீங்க ரெண்டுபேரும்?” என்றதும், அவரின் குரலில் விழாதக்குறையாக ஓடிவந்தார் சாவித்ரி.

 

அவரைக் கண்டதும், “இனி இவ என் முன்னாடி இப்படி நிக்கக்கூடாது சொல்லிட்டேன்” என்று உறுமிவிட்டு யோகா செய்ய வெளியே சென்றார். 

 

யாழினி தன் முகத்தை நொடித்தவள் நேரே சமையலறையில் தனக்கு காபி தயாரித்து குடித்துக்கொண்டே ஸ்டோர் ரூம் சென்றாள்.  

 

வழியில் ஒரு கரம் அவளைப் பிடித்து உள்ளே இழுத்ததில் கையிலிருந்த காபி கோப்பை கீழே விழுந்து‌ சிதற, அவள் அதிர்ந்து நின்றாள்.

 

அவள் இதழின் சுவையை அவளுக்கு வலிக்க வலிக்க அறிந்தான் பத்ரி. அவள் தன் கணவன் தான் என்ற பிரக்ஞை‌ அடைந்தபோது தன் பங்குக்கு அவனுக்கு வலிகளை கொடுத்தாள்.

 

அவன் அதிர்ச்சியாக விலக, “பழிக்குப்பழி” என்று கண்ணடித்தாள்.

 

பின்‌, சளைக்காமல் ஸ்டோர்ரூம் செல்ல எட்டு வைத்தாள்.

 

மீண்டும் அவளின் கரம் பற்றி இழுத்தவன், “உனக்கு நரகத்தை காமிக்க தினம் நீ என் பக்கத்துலயே இருக்கனும்டி. அதனால நீ ஸ்டோர்ரூம் போக அவசியமில்ல” என்றான் அழுத்தமாக. 

 

நேற்று இரவில் இருவரும்‌ தரையில் கூடிய சமயத்தில் அவன் பட்ட சிரமத்தையெல்லாம் கவனித்துக்கொண்டு தானே இருந்தாள் யாழினி. இன்று ஏன் அவன் தன்னை அவனது அறையில் தங்க சொல்கிறான் என்பது புரிந்ததும் நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். அது தெரியாதவனோ ரொம்ப வீராப்பாகவே நின்றான். 

 

அப்போது அவ்வழியே வந்த ஜெயந்தி, “ஆமா இந்த காபி கப் ஏன் இங்க விழுந்து கிடக்குது? இந்த வேலைக்கார சோம்பேறிங்க எல்லாம் எங்கப் போச்சிங்க?” என்று கேட்க, உள்ளிருந்து வெளிப்பட்டார்கள் பத்ரியும், யாழினியும்.

 

யாழினியைக் கண்டதும், “ஏய்! நீ எதுக்குடி என் தம்பி ரூமுக்குள்ள இருக்க? வெளிய போடி” என்றார் ஜெயந்தி. 

 

யாழினியோ மிக தோரணையாக, “அட இதென்ன சித்தி கேள்வி? புருஷன் இருக்கற இடத்துல தான பொண்டாட்டி இருப்பா? ஓ! நீங்க சித்தப்பா கூடப்போய் வாழ்ந்திருந்தா தானே இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்? பாவம் அவர் தான் விடிஞ்சதுமே சொந்த ஊர் கிளம்பிட்டாரே” என்று அவரின் மூக்கை உடைத்தாள். 

 

அவர் கோபத்தில் பெருமூச்சு வாங்கவும், “உங்க தம்பி சொல்லி தான் நான் இங்க இருக்கேன். போதுமா?” என்று இறுமாப்புடன் பார்த்தாள்.

 

உடனே ஜெயந்தி தனது கண்களைக் கசக்கினார். 

 

“டேய் தம்பி, என் பொண்ணு வாழ்க்கைய பறிச்சவக்கிட்ட நீ இப்படியெல்லாம் வழியுறது சரியில்லடா” என்றார்.

 

அவனோ பாய்ந்துக்கொண்டு மறுத்தான்.

 

“இவளை என் பக்கத்துல வச்சி பழி வாங்க தான் அக்கா என் ரூம்லயே தங்க சொன்னேன்.” என்று சத்தியம் செய்தான்.

 

நேற்றிரவு அவன் அவளை பழி வாங்கிய கதை தான் அவருக்கு தெரியுமே! 

 

“எதுவும் சரியில்லடா” என்று மூக்கை சிந்தியபடியே நகர்ந்தார்.

 

யாழினியோ தன் தலையை துவட்டியபடியே அவனறைக்குள் சென்றாள்.

 

பத்ரி உடற்பயிற்சி செய்து முடித்தவன் குளிப்பதற்காக செல்ல, தனது அலைபேசியை எடுத்து சுலேகாவிற்கு அழைப்புவிடுத்தாள் யாழினி.

 

அவரிடம், “அம்மா எப்படியிருக்காங்க கிழவி? நீ போய் அவங்களை காப்பகத்துல பார்த்தியா? ஒழுங்கா சாப்பிடுறாங்களா? டாக்டர் என்ன சொல்றாரு?” என்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.

 

அப்போது தன் உள்ளுணர்வு உந்தி அவள் திரும்பிப் பார்க்க, காதம்பரியும் கவிதாம்பரியும் நின்றிருந்தார்கள்.

 

“ஓ! நீங்க தானா?” என்றவள் தன் நெஞ்சில் கை வைக்க, 

 

“நீங்க ஏன் எங்க பத்ரி மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? ஏன் மனசாட்சியே இல்லாம சஷ்டி மாமாவுக்கு துரோகம் பண்ணீங்க? பத்ரி மாமா உங்கக்கிட்ட‌ நடந்துக்கிட்டது ரொம்பத்தப்பு. நாங்க அவரை இப்ப அடியோட வெறுக்குறோம்.” என்று காதம்பரி வெறுப்பை உமிழ, அவள் வாயில் கை வைத்து வேண்டாம் என்றாள் யாழினி.

 

அவளால் பத்ரியை அவர்கள் வெறுப்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவன் அவளைத் தவிர்த்து வேறு யாரிடமும் அப்படி தரம் தாழ்ந்து நடந்து கொண்டவன் அல்ல என்று சஷ்டி கூற அவளே கேட்டிருக்கிறாளே! அதனால் அவர்களின் எண்ணங்களை மாற்ற முயன்றாள். 

 

“நீங்க நினைக்கிற‌ மாதிரி உங்க மாமா ஒன்னும் கெட்டவர் கிடையாது. நான் அவரை மனப்பூர்வமா விரும்பினதால தான்‌ பொய்யான‌ ஒரு வீடியோவை காமிச்சு உங்க மாமாவை கல்யாணம் பண்ணேன்.” என்று அடித்துவிட்டாள்.

 

“அப்போ நீங்க சஷ்டி மாமாவை லவ்‌ பண்ணலையா?” 

 

“இல்லை” என்று தலையாட்டிய யாழினி, “நான் ஒரு உண்மை சொல்வேன்‌. நீங்க வேற யார்கிட்டயும் அதை சொல்லக்கூடாது” என்றாள்.

 

அவர்கள் என்னவென்று ஆர்வமாக அருகில் வரவும், “உங்க சஷ்டி மாமா என்னை விரும்பல. உங்க‌ தெய்வானை அக்காவை‌த் தான் விரும்பறாரு. நான் அவருக்கு ஹெல்ப்‌ பண்ண தான்‌ இங்க வந்தேன்‌” என்றதும் வாயைப் பிளந்தார்கள் இரட்டையர்கள். 

 

அவர்களின் முகபாவனை‌களைக் கண்டு‌ யாழினி சிரித்ததும், “அப்போ நீங்க பத்ரி மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல” என்று‌ கோரசாக சொன்னனர். 

 

அவ்வேளைப் பார்த்து‌ கதவைத் திறந்த பத்ரி, “என்ன‌ ரெண்டுபேரும் இந்த நேரத்துல இங்க இருக்கீங்க? உங்களுக்கு‌ காலேஜுக்கு நேரமாகல?” என்றதும், 

 

“உங்களுக்கு ரொமான்சுக்கு‌ நேரமாச்சினு சொல்லுங்க மாமா” என்று நமட்டுச் சிரிப்பு‌ சிரித்தபடியே வெளியேறினர் இருவரும்.

 

“ரெண்டுக்கும் வாயைப்பாரு‌” என்று‌ நொடித்தவன், “என்ன மேடம் என்ன பிளான் போட்டுட்டு இருக்கீங்க? இந்த தடவை இங்க எதை திருடுறதா உத்தேசம்?” என்றதும், தன் ஆட்காட்டி விரலால் அவனின் இதயத்தைக் காண்பித்தாள் யாழினி.

 

அந்நொடி அவள் பார்வை சொல்லிய செய்தியானது‌ அவனது இதயத்துடிப்பை தடம் புரளச் செய்தது. 

 

“அது சுலபமில்ல” என்று அவளது கையைத் தட்டி விட்டதோடு‌ தான் எடுக்க வந்த‌ துண்டை எடுத்துக்கொண்டு போனான் பத்ரி.

 

அவளோ தன் வலதுகை விரலில் கிடக்கும் வைரமோதிரத்தை திரும்ப சஷ்டியிடம் கொடுக்கச் சென்றாள். 

 

தொடரும்…

 

ஹார்ட்டின் அழுத்தவும், ரேட்டிங்ஸ் தட்டவும், கமெண்ட்ஸ் பண்ணவும் மறந்துடாதீங்க தங்கோம்ஸ்:)
 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,876 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page