இதழ் – 6
“சரஸ்வதி…”
“என்னங்க?”
“நேத்து தான் நம்ம பையனுக்கு கல்யாணம் முடிஞ்சுச்சு. அவன் என்ன இன்னைக்கு ஆபீஸ் போறேன்னு சொல்றான். நீயும் அருவி கிட்ட ‘அவனுக்கு ஹெல்ப் பண்ணு’ன்னு சொல்ற.”
“ராகவன் தான் தெளிவா சொல்லிட்டானே!”
“என்னனு?”
“’உங்க விருப்பத்துக்காக நான் கல்யாணம் பண்றேன். ஆனா மறுநாளே நான் ஆபீஸ் கிளம்பிடுவேன். எனக்கு முக்கியமான வேலை எல்லாம் இருக்கு. உட்கார்ந்து நான் வீட்ல இருக்க மாட்டேன்’னு சொல்லி தானே கல்யாணம் பண்ணுனான்.”
“அவன் சொன்னதுக்காக?” என சேது ராமன் கேட்க.
“அமைதியா இருங்க. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி ஆபிஸ் போகவே புடிக்கலைன்னு அவனே அடம் பிடிக்கிற அளவுக்கு நம்ம மருமக மாத்திடுவா.”
“எப்படி சொல்ற?”
“அது அப்டி தான்.”
“நமக்கு கல்யாணம் ஆனதும் நான் அடம் புடிச்சேனே! அந்த மாதிரியா?” என சேது ராமன் மெதுவாக கேட்க.
“ஆமா! அப்டித்தான்” என்ற சரஸ்வதி, “இல்லை, இல்லை…” என கூறி அழகாக வெட்கப்பட, அதை பார்த்து ரசித்தார் சேது ராமன்.
“அருவி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ பாசத்துல அவன் கண்டிப்பா மாறுவான் பாருங்க.”
“மாறினால் நல்ல விஷயம் தான். சந்தோஷம் தான்” என்றவர், “சரி நான் என்னோட ஆபீஸ் கிளம்புறேன்.”
“சரிங்க” என அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் தன் அறையிலிருந்து வெளியே வந்தான் ராகவன்.
தாயும் தந்தையும் அவனை பார்க்க…
“என்ன அப்படி பாக்கறீங்க?”
“ஒன்னும் இல்ல. நீ ஸ்கூல் போகும்போதே நான் திருநீறு பூசி விட்டா என் கூட சண்டை போடுவ. காலேஜ் போகும்போது நான் ஆசையா தலை சீவி விட்டா கூட உனக்கு புடிக்காது. ஆனா இப்ப என்னடான்னா? நெத்தில சந்தனம் வச்சிருக்கயே! எங்க பையனா இது!!” என ஆச்சரியமா இருக்கு என என்றார் சரஸ்வதி.
“அது வந்து அவ எனக்கு முதன் முதலா பூசி விட்டா. சரி அவ மனச கஷ்டப்படுத்த வேண்டான்னு தான் நான் இதை அழிக்காம வந்துட்டேன். அதுக்காக நீங்க உங்க மனசுல என்னென்னமோ நினைச்சுக்காதீங்க” என்றவன் வேக வேகமாக சப்பாத்தி சாப்பிட.
“நாங்க ஒன்னும் நினைக்கலப்பா” என்றார் சேது ராமன்.
“அப்பா நீங்க இன்னும் ஆபீஸ்க்கு கிளம்பலையா?”
“இதோ கிளம்பிட்டேன் டா” என்றவர் சரஸ்வதியிடம் கூறிவிட்டு செல்ல, சரஸ்வதி தோட்டத்திற்கு சென்றார்.
அறையிலிருந்து அருவி அவன் சொன்ன பொருட்களை எல்லாம் எடுத்து வந்தாள்.
“என்னங்க! நீங்க சொன்னதை எல்லாம் நான் எடுத்துட்டு வந்துட்டேன். எங்க வைக்க?”
“என் தலையில வை” என்றான்.
அவள் வேகமா அவன் தலையில் வைக்க வர.
“ஏய்!! என்ன பண்ற?”
“நீங்கதானே இந்த பேக், ஃபைல் எல்லாத்தையும் உங்க தலையில் வைக்க சொன்னிங்க. அதான்…”
“உன்னை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ண போறேன்னு எனக்கு தெரியல. தயவுசெய்து போய் சோபால வை. நான் கிளம்பும்போது எடுத்துக்கிறேன்.”
“சரி” என்றவள் சோபாவில் வைக்க.
“நீ சாப்டியா?” என கேட்டான்.
“இல்லங்க. நீங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் நான் சாப்பிடணும்னு ராதா அக்கா சொல்லி இருக்காங்க.”
“எனக்காக நீ வெயிட் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை!” என அவன் கோவமாக கூற,
அவன் தன் மேல் இருக்கும் பாசத்தால் தான் அவன் அவ்வாறு கூறுகிறான் என நினைத்த அருவி, “என் மேல உங்களுக்கு எவ்வளவு பாசம்” எனக்கு கூறிக்கொண்டே அவன் அருகில் இருந்த சேரில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிட ஆரம்பித்தாள் அருவி.
“கடவுளே நான் என்ன அர்த்தத்துல சொல்றேன்னு கூட இவளாள புரிஞ்சிக்க முடியல” என சாப்பிட்டு எழுந்தான்.
“என்னங்க உங்களுக்கு போதுமா!” என கேட்டாள் அருவி சாப்பிட்டுக் கொண்டே.
“எனக்கு போதும். எல்லாத்தையும் நீயே சாப்பிடு” என கோபமாக கூறிவிட்டு பேக், பைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
அவன் எதிரில் சரஸ்வதி வந்தார்.
“ராகவா.”
“என்னங்கம்மா?”
“சீக்கிரம் வந்துரு. எப்பவும் போல லேட்டா வராத. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அதை ஞாபகம் வச்சுக்கோ” என்றார்.
அவன் அவளை திரும்பிப் பார்க்க, அருவி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“அதை எப்படி மறக்க முடியும்?” என்றவன் செல்ல போக,
“டேய்!! உன் பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டு போ.”
“அவளுக்கு சாப்பாடு தான் முக்கியம். அவளை விடுங்க, சாப்பிடட்டும். நான் ஏற்கனவே அவகிட்ட சொல்லிட்டேன் மா” என்றவன் சென்றதும்.
அவளருகில் வந்தார்.
“அருவி.”
“சொல்லுங்க அத்தை.”
“நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு சரியா!!”
“எதுக்காக அத்தை?” என அவள் கேட்டுக் கொண்டிருக்க, மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் வந்தாள் அகிலா.
“அம்மா!! நீங்க போங்க. நான் அவங்க கிட்ட சொல்லிக்கிறேன்” என்றாள்.
“சரி” என அவர் சென்றதும்.
“அகிலா, எதுக்கு அத்தை என்ன போய் ரெஸ்ட் எடுக்க சொல்றாங்க?”
“நிஜமாவே உனக்கு ஒன்னும் தெரியாதா? இல்ல தெரியாத மாதிரியே இப்படி கேள்வி கேக்குறியா?”
“நீ என்ன எப்ப பார்த்தாலும் இப்படியேதான் என்னை கேட்கிற. எனக்கு தெரிஞ்சா நான் ஏன் உன்கிட்ட கேட்க போறேன்? சொல்லு அத்தை என்ன எதுக்கு ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க?”
“அது வந்து! இனிமே நீ நைட் டூட்டி பார்க்க வேண்டியது இருக்கும். அதனால தான் உன்னை ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க” என்றாள் அகிலா வெட்கத்துடன்.
“அப்படியா! என்ன வேலை? ஆமா! நீ எதுக்கு இப்ப வெட்கப்படுற?”
“கல்யாணம் ஆன பொண்ணுங்க டயர்டா இருப்பாங்க. அதுக்காக தான்” என்றாள்.
அருவி அருகில் வந்து மெதுவாக, “எதுக்கு டயர்ட் ஆகணும் நைட்? நல்லா தூங்க வேண்டியது தான” என்றாள் அருவி.
அவள் கூறியதை கேட்ட அகிலா திரு திருவென விழித்தாள்.
“அருவிக்கு என்ன பதில் சொல்வது? எப்படி புரிய வைப்பது?” என அகிலாவிற்கு தெரியவில்லை.
“நான் அப்புறம் சொல்றேன். இப்ப நம்ம சேர்ந்து சமைப்போமா!!”
“சரி” என சமைக்க ஆரம்பித்தார்கள்.
இப்படியே மூன்று நாள் ஆனது. அவன் கோபமாக சொன்னாலும் அவள் அதை சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள, மேலும் மேலும் ராகவனுக்கு கோபமாக தான் வந்தது.
இருந்தாலும், “இப்பதான் இந்த வீட்டுக்கு வந்து இருக்கா. அதுக்குள்ள நம்ம கோபமான முகத்தை அவகிட்ட காட்டி கஷ்டப்படுத்த வேண்டாம். முடிஞ்ச அளவுக்கு பொறுமையா பேசுவோம். பொறுமையா சொல்லுவோம்” என அமைதியாக இருந்தான் ராகவன்.
மூன்று நாள் கழித்து சரஸ்வதியின் நெருங்கிய தோழி பத்மா வீட்டிற்கு வந்திருந்தார்.
“நீ வருவேன்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா நீ கல்யாணத்துக்கு வரவே இல்லை” என்றார் கோபமாக சரஸ்வதி.
“என்னை கோவிச்சிக்காத. என் மருமக குழந்தை பெத்திருக்கா. அவளை விட்டுட்டு வர முடியாது. இல்லையா!! அவங்க அம்மா இன்னைக்கு தான் வந்தாங்க. அவங்க கிட்ட என் மருமகளை விட்டுட்டு உடனே நான் இங்க ஓடி வந்துட்டேன். ஆமா! எங்க உன் மருமகளை காணோம்?”
“அவ கிச்சன்ல சமைச்சிட்டு இருக்கா.”
“பரவாயில்லையே. உன் மருமக சமைக்கிறா.”
“ஏன் அப்படி சொல்ற பத்மா?”
“என் மருமக வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. ஆனா அவ சமைக்க மாட்டா.”
“ஏன்?”
“நான் தான் சமைப்பேன். எனக்கு நானே சமைச்சு சாப்பிட தான் பிடிக்கும்” என்றாள்.
ஆனால் நிஜமாகவே அவருடைய மருமகளுக்கு சமைக்க தெரியாது என சரஸ்வதியிடம் கூறினால், தன்னை குறைவாக நினைத்து விடுவார் என கெத்தை விட்டுக் கொடுக்காமல் பேசினார் பத்மா.
“உன் மருமகளை நான் பார்க்கலாமா!!” என பத்மா கேட்க.
“அருவி” என சரஸ்வதி அழைக்க.
“சொல்லுங்க அத்தை.”
“ரெண்டு டீ கொண்டு வா.”
“இதோ வரேன் அத்தை” என்றாள்.
அருவி கையில் ரெண்டு டீ, பக்கோடாவையும் சூடாக எடுத்து வந்தாள்.
“பரவாயில்லையே!! உன் மருமக எள்ளுன்னா எண்ணையா நிக்கிறா” என பத்மா கூற, சரஸ்வதிக்கு பெருமையாக இருந்தது.
“அத்தை இந்தாங்க! பக்கோடா சூடா இருக்கு. சாப்பிடுங்க. நல்லா இருக்கும். ஆன்ட்டி நீங்களும் எடுத்துக்கோங்க.”
“அருவி இவ என் சினேகிதி” என பத்மாவை அறிமுகம் செய்து வைக்க.
“வணக்கம் ஆன்டி. நல்லா இருக்கீங்களா?”
“நல்லா இருக்கேன்.”
“வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”
“நல்லா இருக்காங்க.”
“சரிங்க ஆன்ட்டி. நான் போய் சமையலை கவனிக்கறேன்” என கூறி அருவி சென்றாள்.
மெதுவாக சரஸ்வதி அருகில் அமர்ந்த பத்மா, “உன் மருமகனும் பையனும் சந்தோஷமா தானே இருக்காங்க?”
“ஆமா!”
“இந்த கல்யாணத்துல ரெண்டு பேருக்குமே சம்மதம் தானே?” என கேட்டார் பத்மா.
“இரண்டு பேரும் சம்மதிச்சதுனால தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஏன் அப்படி கேக்குற?”
“இல்ல உன் மருமக முகத்துல அந்த வெட்கம் இல்லவே இல்லையே.”
“நீ என்ன சொல்ல வர? எனக்கு புரியல.”
“புதுசா கல்யாணம் முடிச்ச பொண்ணுங்க புருஷனை நினைத்து அடிக்கடி வெட்கப்படுவாங்க. சிரிப்பாங்கன்னு சொல்லுவாங்க!! ஆனா உன் மருமக சாதாரணமா இருக்காளே. அதனால தான் கேட்டேன்” என கூறிக் கொண்டிருக்கும் சமயம், அப்பொழுதுதான் வீட்டிற்குள் நுழைந்த ராகவன் இதை கேட்டதும் அப்படியே நின்று விட்டான்.
“இந்த ஆன்ட்டி வந்து அம்மா கிட்ட ஏதோ சொல்லி அவங்களை குழப்ப பாக்குறாங்க. இப்ப நாம என்ன பண்றது?” என நினைத்துக் கொண்டிருக்க.
“சரி சரி உன் கல்யாண ஆல்பத்தை காட்டு. நமது பிரண்ட்ஸ் எல்லாரும் வந்து இருப்பாங்களா!!” என பத்மா ஆர்வமாக கேட்க.
“ஆமா.”
“அப்போ அதை காட்டு. நான் பார்க்கிறேன்.”
“இரு. நான் எடுத்துட்டு வரேன்” என சரஸ்வதி செல்ல.
அதற்குள் ராகவுக்கு ஒரு தோன்ற, வேகமாக கிட்சனின் பின்பக்கம் வாசல் வழி வந்தவன் மெல்ல எட்டி பார்த்தான். அகிலா இல்லை. மாடியில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது நைசாக அருவியின் பின்னால் வந்தவன் சட்டென அவளை பின்னால் இருந்து கட்டி அணைத்தான் ராகவன்.
“ஆ…” என கத்தினாள் அருவி.
அவள் வாயை ஒரு கையால் பொத்தியவன் மறு கையால் அவள் இடுப்பை பிடித்திருந்தான்.
“நான் தான். சப்தம் போடாத.”
“சரி” என தலையசைத்தாள் அருவி.
அப்போது கிட்சனில் சப்தம் கேட்டதால் பத்மா வந்து பார்க்க,
அவனுக்கு தெரியும் சத்தம் கேட்டு பத்மா வருவார் என ஆனாலும் பத்மாவை பார்க்காதவன் போல் அருவியை பின்னால் இருந்து கட்டி அணைத்தான்.
அவனின் இந்த திடீர் அணைப்பால் அருவிக்குள் புதுவித உணர்வு தோன்றியது. அவளது இதயம் வேகமாக துடித்தது. அவளுக்குள் சிலிர்ப்பு. பேச்சு வராமல் தவித்து நின்றாள் பெண்ணவள்.
“என்னங்க?”
“சொல்லுடி பொண்டாட்டி…”
“கையை எடுங்க” என்றாள் தவிப்பாக.
“முடியாது” என்றான் அவள் தோள்பட்டையில் முகத்தை வைத்த படி. அவன் செயலில் மேலும் ஸ்தம்பித்து நின்றாள்.
“யாராவது வர போறாங்க…”
“வரட்டும்…”
“பார்த்துடுவாங்க…”
“பார்க்கட்டும்… என் பொண்டாட்டியை நான் கொஞ்சுறேன்” என்றான் ராகவன்.
🫣
பட்ட பகல்ல என்னடா பண்றீங்க?!
