“அச்சோ! இவ்ளோ நேரம் பேசிட்டு, பெயர் கூட சொல்லவே இல்ல பாத்தீங்களா?” தன் நெற்றியில் செல்லமாகத் தட்டிக்கொண்டவள், சட்டெனத் தன் மென்மையான கரத்தை நீட்டி..
“என் பேரு அகல்யா…” என மின்னல் வேகப் புன்னகையோடு அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
அவளது வேகத்தைப் பார்த்து வியந்தவன், அவள் நீட்டிய கையைப் பற்றிக்கொண்டு, “நைஸ் நேம்… ஐ ஆம் ஆகாஷ்,” என்றான்.
“ஓ! ஆகாஷ்… அதான் பார்க்க ரொம்ப மாஸ்-ஆஹ் இருக்கீங்க!” என அவள் ஒரு கண்ணைச் சிமிட்டிச் சொல்ல, அவனது இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
ஆகாஷுக்கு அந்தப் பாராட்டு சற்றும் எதிர்பாராதது. மாஸ் என்ற வார்த்தையை அவள் சொன்ன விதத்தில், அவனது கம்பீரம் ஒரு கணம் அசடு வழிதலாக மாற, அவனது முகம் லேசாகச் சிவக்க, கை குலுக்கிய வேகத்தில் ஒரு சில நொடிகள் அப்படியே உறைந்து நின்றான் நம்ம ஊர் லண்டன் ரிடர்ன் மாஸ் ஹீரோ.
அவனது அந்தத் திகைப்பைக் கண்டு சிரித்தவள், “ஜஸ்ட் ஃபார் ஃபன் தான் பாஸ், தப்பா எடுத்துக்காதீங்க… ரியலி வெரி நைஸ் டு மீட் யூ!” என மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கை குலுக்கியவள்,
“ஓகே பாஸ், பை தி வே… இன்னைக்கு உங்களுக்கு ஃபர்ஸ்ட் டே இல்லையா? ஆல் தி பெஸ்ட்! ஆனா ஒன்னு… உள்ள அந்த மங்கூஸ் மண்டையன் கிட்ட மட்டும் கொஞ்சம் உஷாரா நடந்துக்கோங்க. இல்லனா, எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்த நிப்பாட்டி வச்சுத் திட்டுவான். பாவம், உங்களைப் பார்த்தா நல்ல வீட்டுப் பிள்ளை போல இருக்கு… இதையெல்லாம் சமாளிக்கணுமேன்னு தான் கவலையா இருக்கு பாஸ்!”
அவள் சொல்லி முடித்ததும் ஆகாஷ் எதோ சொல்ல முனைய, அதற்குள் அவள் தன் தோளில் இருந்த பையைச் சரி செய்தபடி, “சரி பாஸ், எனக்கு டைம் ஆச்சு, நான் கிளம்புறேன். சீ யூ அரவுண்ட்!” என ஒரு துள்ளலான நடையோடு அங்கிருந்து நகரத் தொடங்க.…
“ஹலோ மேடம்…” என்று சொல்லிக்கொண்டே, காரின் இருக்கையிலிருந்து லாவகமாக வெளியே குதித்தான் ஆகாஷ்.
“மேடம் இல்ல… அகல்யா!” என அவள் இடைமறித்துச் சொல்ல, அந்தப் பெயரில் இருந்த அழுத்தமும் அழகும் அவனைக் கவர்ந்தது.
“ம்ம்.. ஓகே.. மிஸ் அகல்யா…” என அவன் இழுக்க, சட்டெனத் திரும்பி ஒரு செல்லமான முறைப்பை வீசியவள். “அச்சோ! இந்த மிஸ் எல்லாம் வேணாம் பாஸ், வெறும் அகல்யானே கூப்பிடுங்க, அது போதும்” என அவள் கடிக்க, ஆகாஷ் சிரித்துக்கொண்டே சரணடைந்தான்.
“சரி அகல்யா, நானும் உன் கூடவே வரேன். புது இடம்… நீயே எனக்கு ரிசப்ஷன் வரைக்கும் வழி காட்டிடு,” என்று சொல்லிக்கொண்டே தன் லேப்டாப் பையைத் தோளில் மாற்றி, ஒரு புதிய பயணத்திற்குத் தயாரானான் அந்த இளம் CEO.
“யெஸ் பாஸ்! வாங்க போலாம்!” என அவள் முன்னே நடக்க, அவளை பின் தொடர்ந்தான் நம்ம பையன்.
முன்னால் நடந்தவளின் நடையில் அதில் ஒரு குறும்புத்தனம் கலந்திருந்தது. நடைபாதையில் தேங்கிக் கிடந்த மழை நீர் சுட்டிக்காட்டியவள், “பாஸ், இதெல்லாம் ஒரு கேம் மாதிரி… கால் நனையாம வரணும், ஓகேவா?” என சொல்லி முடித்த அடுத்த நொடி, ஒரு சின்னஞ்சிறு குருவியைப் போலத் தத்தித் தாவி அந்தத் தண்ணீர்க் குட்டைகளைக் கடக்கத் தொடங்கினாள்.
அவளது பாவாடை நுனி காற்றில் அலைபாய, ஒவ்வொரு தாவலிலும் அவளது கொலுசுகள் “ஜல் ஜல்” என இசை பாடின. பின்னாலேயே வந்த ஆகாஷ், தன் அந்தஸ்தை மறந்து, அவளது அந்த உற்சாகத்தைத் தானும் தொற்றிக்கொண்டான். அவனும் அவளைப் போலவே தண்ணீரில் கால் படாமல் குதித்துக் குதித்து நடக்கத் தொடங்கினான்.
நடைபாதையோரம் இருந்த செடிகளில் மழையின் துளிகள் மின்னிக் கொண்டிருக்க, அதனை கவனித்ததும் சட்டென நின்றவள், அங்கிருந்த செடியிலிருந்து ஒரு இளஞ்சிவப்பு நிற வண்ண மலரை லாவகமாகப் பறித்து, அதைத் தன் காதோரம் கூந்தலில் செருகிக் கொண்டு, சட்டெனத் திரும்பி ஆகாஷைப் பார்த்தவள்
“பாஸ்… இது எனக்கு நல்லா இருக்கா? ஓகேவா?” என அவள் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து, கண்களைச் சுருக்கி ஒருவித எதிர்பார்ப்புடன் கேட்ட அந்தத் தத்ரூபமான நொடியில் ஆகாஷ் அப்படியே உறைந்து போனான். செடியில் இருந்த மலரை விட, அவள் முகத்தில் பூத்திருந்த அந்தப் புன்னகை அவனுக்கு இன்னும் அழகாகத் தெரிந்தது.
“ரொம்ப… ரொம்ப அழகா இருக்கு அகல்யா!” என அவன் மனதாரச் சொல்ல..
“தேங்க்ஸ் பாஸ்! இன்னைக்கு டே ரொம்ப கலர்ஃபுல்லா போகப்போகுது!” எனச் சிரித்துக்கொண்டே மீண்டும் ஓடத் தொடங்கினாள் அவள்.
லண்டனின் குளிர்ச்சியான சூழலில் வளர்ந்த ஆகாஷுக்கு, அகல்யாவின் கலகலப்பான பேச்சு, ஒரு புதிய உலகைக் காட்டிக்கொண்டிருந்தாள். தன் கார் பழுதானது ஒரு சாபம் அல்ல, அகல்யாவைச் சந்திக்கக் கிடைத்த வரம் என்றே அவன் மனம் எண்ணியது.
அலுவலகத்தின் பிரம்மாண்டமான கண்ணாடி கதவுகள் தானாக விலக, ஏசி குளிரும் விலையுயர்ந்த வாசனை திரவியத்தின் மணமும் அவர்களை வரவேற்றன.
அகல்யா நேராக ரிசப்ஷன் மேசைக்குச் சென்றாள். அங்கிருந்த பெண்ணிடம் ஆகாஷைக் காட்டி, “ஹேய் ரம்யா, இவரு நியூ ஜாய்னி… அப்படியே கொஞ்சம் கைடு பண்ணிடு,” என்று சொல்லிவிட்டு ஆகாஷின் பக்கம் திரும்பியவள்.
“சரி பாஸ், நான் கிளம்புறேன். என்னோட டிபார்ட்மென்ட் தேர்ட் ஃப்ளோர்ல இருக்கு… டைம் இருந்தா மறுபடியும் சந்திக்கலாம்,” என்று விடைபெறத் தயாரானாள்.
அவளைப் பார்த்து ஒரு வசீகரமான புன்னகையைச் சிந்திய ஆகாஷ், “கண்டிப்பா… அவசியம் சந்திக்கனும், அகல்யா. ஆனா…” என்று அவன் இழுக்க..
அவள் புருவத்தை உயர்த்தி “என்ன?” என்பது போலப் பார்த்தாள்.
அவளை நோக்கி ஒரு அடி எடுத்து நெருங்கியவன், “நீங்க சொன்ன அந்த மங்கூஸ் மண்டையன் கிட்ட இருந்து தப்பிக்கணும்னா, எனக்கு ஒரு சேஃப்டி ஆபிசர் வேணுமே? ஒருவேளை அவர் என்னை ரொம்பத் திட்டிட்டா, நான் யார்கிட்ட வந்து புலம்புவேன்?” என்று குறும்பாகக் கேட்க
அகல்யா சிரித்துக்கொண்டே, “அச்சோ… அதுவும் சரிதான்! ஆனா நான் எப்பவும் ரிசப்ஷன்ல இருக்கமாட்டேனே பாஸ்,” என்றாள்.
“அதான் யோசிச்சேன்… ஒருவேளை மங்கூஸ் அட்டாக் பண்ணா, உடனே உங்களுக்கு ஒரு SOS மெசேஜ் போட உங்க நம்பர் கிடைக்குமா?” என தன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தபடி மிக இயல்பாக, ஒரு ஜென்டில்மேனாகக் கேட்டான்.
அவள் ஒரு கணம் யோசிப்பது போல பாவனை செய்துவிட்டு, “ஸ்மார்ட் மூவ் பாஸ்!” எனச் சிரித்தவள்.
அவனது போனை வாங்கி, தன் விரல்களால் எண்களைத் தட்டி, ‘Ahalya💛’ எனச் சேமித்துக் கொடுத்தாள்.
“இந்தாங்க… ஆனா ஒன்னு, மேனேஜர் திட்டும் போது மட்டும் தான் கூப்பிடணும், ஓகேவா?” எனத் தன் விரலை ஆட்டி எச்சரிப்பது போலச் சொல்ல
“ப்ராமிஸ்!” என அவன் போனை வாங்கிக்கொள்ள, அவள் ஒரு துள்ளலான டாடா காட்டிவிட்டு லிஃப்ட் நோக்கி நடந்தாள்.
அவள் நடந்து செல்லும் அழகையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷ், ஒரு சாதாரண இளைஞனைப் போல அகல்யா கொடுத்த அந்த எண்ணைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
“சார்… யுவர் நேம் ப்ளீஸ்…”
அகல்யா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷை, ரிசப்ஷன் பெண்ணின் குரல் நிஜ உலகிற்கு அழைத்து வந்தது.
மெதுவாக திரும்பி அவளை பார்த்தவனது உதட்டோரத்தில் ஓரமாய் ஒளிந்திருந்த அந்த சின்ன புன்னகை இப்பொழுது குழப்பத்தின் நிழலாக மாறியது.
“உண்மைப் பெயரை சொல்லலாமா… இல்ல வேணாமா?” அந்த ஒரு கேள்வி அவன் மனசுக்குள்ள சுழன்றுகொண்டே இருக்க, கையில் இருந்த லேப்டாப்பை இறுக்கமா பிடிச்சபடியே, கண்களை ஆபிஸ் முழுக்க மெதுவா சுத்தவிட்டான்.
கண்ணாடி சுவருக்குள்ள வேலை பார்த்து கொண்டிருந்த ஸ்டாஃப்கள்… ரிசப்ஷன் மேசை மேல மின்னிய Astra Global நிறுவன லோகோ…
அவள் மட்டும் அவனை விடாம கவனிச்சுக்கிட்டே இருந்தவள். “சார்… சார்…” என சிறு குரலில் அழைத்தாள்.
அந்த குரல் அவனை சிந்தனையிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வர, “என்ன?” என்பது போல அவன் திரும்பிப் பார்த்தான்.
“சார்… உங்கள் பெயரை ரெஜிஸ்டர் பண்ணணும்… விசிட்டர் என்ட்ரி இல்லாம மேல அனுமதி கிடையாது.” அவன் மீண்டும் அமைதியா நின்றான்.
“சார்… நீங்க எந்த டிபார்ட்மென்ட்ல ஜோயின் பண்ணி இருக்கீங்க? உங்க அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கொஞ்சம் காட்ட முடியுமா? யாரைப் பார்க்கணும்னு சொன்னீங்கன்னா நான் இன்பார்ம் பண்ணிவேன்,” என ரம்யா முறைப்படி கேட்டாள்.
ஆகாஷ் தன் கையில் இருந்த லேப்டாப் பையை லேசாகத் தட்டியபடி, ஒரு மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்தவன். “சாரி மேடம், அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் சாஃப்ட் காப்பியா லேப்டாப்ல தான் இருக்கு. ஒரு ஃபைவ் மினிட்ஸ் டைம் கொடுங்க, கனெக்ட் பண்ணி எடுத்துட்டு வந்து சொல்றேன்,” என மிகவும் நிதானமாகக் கூறினான்.
அவனது வசீகரமான தோற்றமும், புன்னகையும் ரம்யாவை ஒரு விதத்தில் கவரவும், “ஓகே சார், நோ பிராப்ளம்… டேக் யுவர் டைம்! அங்க இருக்க சோபால உட்கார்ந்து ரிலாக்ஸா செக் பண்ணுங்க,” என இன்முகத்துடன் சொல்ல வைத்தது.
அங்கிருந்த விலை உயர்ந்த லெதர் சோபாவில் சாய்ந்து அமர்ந்த ஆகாஷின் கண்கள் ரிசப்ஷனில் இருந்த ரம்யாவையும், அலுவலகத்தின் பரபரப்பையும் கவனித்துக் கொண்டே லேப்டாப்பைத் திறந்து ஏதோ தீவிரமாகத் தேடுவது போலப் பாவனை செய்தவன், சட்டெனத் தன் மொபைலை எடுத்து, சித்தார்த்தை அழைத்தான்.
“ஹலோ சித்தா, நான் ஆபீஸ் வந்துட்டேன்,” தன் குரலை மிகத் தாழ்த்தி பேசினான்.
மறுமுனையில் சித்தார்த்தின் குரல் பதற்றத்தில் கிழிந்தது. “என்னடா சொல்ற? என் கிட்ட அவ்ளோ கோவமா கத்திட்டு போனை பாதியிலே கட் பண்ணிட்டு, இப்போ திடீர்னு அங்க போயிட்டேன்னு சொல்ற?! எப்படிடா போன?”
ஆகாஷ் ஒரு குறும்புச் சிரிப்புடன், தன் எதிரே இருந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தைப் பார்த்துக்கொண்டே, “அதெல்லாம் ஒரு மேஜிக் சித்தா! கார் நின்னது எனக்கு நல்லதுக்குதான்னு இப்போ தோணுது.”
ஆகாஷின் குரலில் இருந்த அந்த ஒரு விதமான துள்ளலையும், குதூகலத்தையும் கவனித்த சித்தார்த், “அதெல்லாம் சரி… ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு இப்போ? ரொம்ப strangeஆஹ் இருக்கிற மாதிரி தெரியுது… ஆர் யூ ஆல்ரைட்?”
“பெர்பெக்ட்லி ரைட்!” என்றவனின் கண்களுக்கு முன்னால் அகல்யா அந்த மலரைத் தலையில் சூடிக்கொண்டு கேட்ட அந்தத் தருணம் வந்து போனதும்.
“சரி, இப்போ நான் கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு… என்னை இங்க யாருக்காவது தெரியுமா?”
நக்கலாகச் சிரித்த சித்தார்த், “நீ என்ன Fantastic Four படத்துல வர்ற Sue மாதிரின்னு நினைச்சியா? காத்தோடு காத்தா மறைஞ்சிருக்க? நீ நடந்து போனா எல்லார் கண்ணுக்கும் தெரியுற மாதிரி தான்டா இருப்ப!”
“டேய்… மொக்கை போடாம நான் கேட்குறத கவனி, “நான் தான் CEOனு இங்க எத்தனை பேருக்குத் தெரியும்?”
“ம்ம்… ஒருத்தருக்கு மட்டும் நல்லா தெரியும்,” என்றான் சித்தார்த்.
“யாரு?”
“நான்தான்!” எனச் சித்தார்த் கூலாகச் சொல்ல, ஆகாஷுக்குப் பல்லை கடிக்க வேண்டும் போல இருந்தது.
“டேய் மவனே! கைல மாட்டின கொத்து பரோட்டா போட்டுடுவேன் பார்த்துக்கோ. இங்க மேனேஜ்மென்ட்க்கு நான் தான் CEO-னு தெரியுமா? என் தோற்றமும், என் பெயரும் எத்தனை பேருக்குத் தெரியும்? அதைச் சொல்லு முதல்ல.”
இப்போது சீரியஸானா சித்தார்த், “இங்க பாரு ஆகாஷ்… நாம லண்டன்ல இருந்து இப்போதான் முதல்முறையா சென்னை ஆபீஸ்க்கு வரோம். உன்னை மட்டும் இல்ல, என்னையும் இங்க யாருக்கும் தெரியாது. அதனாலதான் காலையிலே Welcome Function வச்சிருக்கோம். ஆமா, எதுக்குடா இதெல்லாம் கேட்குற?”
ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டவன். “சூப்பர்… அப்போ நான் சொல்றபடி செய்.”
“என்ன செய்யணும்?” சித்தார்த்தின் குரலில் வியப்பு கூடியது.
🌧️தூறல்கள் தொடரும்…
