திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -22
Hiiii வாசகர்களே ✨
இது போல் வீட்டிலேயே என்னை அற்ப புழுவாக எண்ணி இருக்க, நான் காதல் கொண்டவன் மட்டும் விதி விலக்கு அல்ல என்பது போல் ஒரு காரியம் செய்தான்…
அவன் தினம் அழைத்து பேசும் போது, ஒரு நாளில் பேச்சு வாக்கில் நான் வெகு நாட்களாக கொண்ட என் மனதின் சந்தேகத்தை கேட்டு விட்டேன்.!! “ஹான்…. உங்க அக்காவுக்கு டிசம்பர் மாசமே எங்கேஜ்மண்ட்ன்னு சொன்னீங்களே… இன்னுமா நடக்கல!!!!?” என்க எதிர் முனையில் சப்த நாடி ஒடுங்கி போன மௌனமே அவன் என் கேள்விக்கு பதிலாக கொடுத்தான்…
பிறகு “அது முடிஞ்சு போச்சு!” என்றான் குற்ற உணர்வு கொண்ட மெல்லிய குரலில்… அவன் கொடுத்த வாக்கை என்று காப்பாற்றி, நிறைவு ஏற்றி உள்ளான்? இன்று இதை கேட்டு நான் கோபம் கொள்ள, ஆயினும் தவிர்க்க முடியாமல் வந்த ஏமாற்றம் என் மனதை குத்தி கிழிக்கவும் வலி பொறுக்க முடியாமல்,
“ட்ரைனுக்கு டைம் ஆயிருச்சு… நான் கெளம்பனும்.!! Bye…” என்று அழைப்பை துண்டித்து விட்டேன்.
அழுது கொண்டே, தொண்டை குழி என்னை அந்த தோசையையும் உண்ண விடாமல் அடைக்க பசித்து குளிரும் என்று கஷ்ட பட்டு உள்ளே இறக்கி, மனம் அமைதி கொள்ள வில்லை எனினும் உடை மாற்றி கொண்டு வெளியேறி, ஜங்ஷன் நோக்கி நடந்தேன் 10 மணிக்கு!!
உள்ளே நுழைந்ததும், கண் எதிரில் நிற்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ஏற போக அங்கே அவன் நின்று இருந்தான்… நானே எதிர் பார்க்க வில்லை!! ஆனால் நேரில் வந்தாலும் பேச நேரம் இல்லை, ட்ரெயின் இன்னும் 10 நிமிடத்தில் புறப்பாடு!! அவ்வாறு இருக்க, அவன் சாரி மட்டும் கேட்டான்..
மாப்பிள்ளை அவரின் பெற்றோர் மட்டும் தான் மிக் ஜாங் புயல் தாண்டி வந்தார்களாம்… ஆகையால் தான் எனக்கு சொல்ல வில்லை என்று சாக்கு சொன்னான்! நான் எந்த எதிர் கேள்வியும் தொடுக்கும் நிலையில் இல்லை, நான் இப்போது சென்றால் தான் B எண் வரிசை பெட்டிகள் நோக்கி நடந்து சரியாக ஏற முடியும்!! அந்த டென்ஷனில் அவன் சொல்வதற்கு தலை ஆட்டி கேட்டு கொள்ள, ஒரு முறை நிமிர்ந்து அவன் முகம் காண ஏற் எடுத்தேன்…
அவன் கண்கள் எல்லாம் மெட்ராஸ் எய் வந்தது போல் சிவந்து காண படவே, அதிர்ந்து “என்னாச்சு ஏன் உங்க கண்ணு எல்லாம் ரெட் ஆக இருக்கு???!!!!” என்றேன்… “ஹான் லைட்டா குடிச்சு இருக்கேன்!” என்றான் ஜெஷ்வந்த் சிரித்து கொண்டே…
நான் ஆடி தான் போனேன், எனக்கு உலகிலேயே பிடிக்காத ஒருவர் என்றால் குடிகாரர்கள் தான்!! அவ்வாறு இருக்க, ஜெஷ்வந்த் குடுத்து விட்டு, நேராக நிற்க கூட முடியாமல் கண்கள் சிவந்து வந்து என் முன்னால் நிற்பதை கண்ட எனக்கு, மறு வார்த்தை வாயில் இருந்து வரவில்லை…
உடல் எல்லாம் நடுக்கம் காண, அப்படியே திரும்பி ட்ரெயின் நோக்கி நடந்தேன்!!
சென்னை வந்து சேர்ந்ததும், அவன் இரவு மெசேஜ் அனுப்பி இருந்தது எனக்கு அப்போது தான் வந்தது!! “ரீச் ஆயிட்டியா?” என்று… நான் அப்போதும் கண்ணால் கண்டது பொய்யாக இருக்க கூடுமோ? என்று ஒரு நப்பாசையில் மீண்டும் அவன் இடம் கேட்டேன், “நெஜமாவே நேத்து குடிச்சு இருந்தீங்களா??”
“ஹேய் லூசு!! நான் ஒன்னும் மொடா குடி காரன் எல்லாம் இல்ல… எப்போவாச்சும் ஃப்ரெண்ட்சு ஓட வெளிய போனா, என் பழைய காலேஜ் எதிர்ல இருக்கும் கிளப் போய் ஒரு பீர் மட்டும் தான் குடிப்பேன்!!” என்றான் அசால்டாக…
சத்தியமாக அவனை அன்று நான் வெறுத்து விட்டேன்!! காதல் எல்லாம் சுவிட்ச் கண்ட்ரோல் போட்டது போல், இல்லாமல் ஆக்க எனக்கு வழி தெரியாது… ஆனால் என் உள் உணர்வு அடுத்து சொல்லியது, “இவன் உனக்கானவனாக இருக்க வாய்ப்பு இல்லை!!” என்பதை. செய்வது அறியாமல் திக்கு திசை தொலைந்து அத்துவான காட்டில் தனியாக நிற்பது போல் வேறு வழி இன்றி பொங்கல் லீவ் முடிந்து நான் ஊருக்கு திரும்பி வந்தேன்!!
வீட்டில் நிச்சயம் ஆன அக்காவை, அடுத்த மாதம் திருமணம் என வைத்து கொண்டு இவன் இவ்வாறு அம்மா காசில் குடித்து விட்டு ஊர் சுற்றி வருவது எனக்கு சரியாக படவில்லை..!!! என்பதை முகத்துக்கு நேராக சொல்லி விட்டேன்…
அவன் மீண்டும் “எப்போவாச்சும் தான்!” என்று ஆரம்பிக்க, “இப்படி பொறுப்பு இல்லாம குடிச்சு குடிச்சு உன் ஹெல்த், ஸ்பெர்ம் ஹெல்த் எல்லாம் கெடுத்து நாசமா போயிராத!!” என்று கோபத்தில் முதன் முறையாக ஒருமையில் பேசி விட்டு அழைப்பு துண்டித்து விட்டேன்!!
அவன் ஆடி போய் விட்டான், “என்னடி இதெல்லாம் பத்தி, இப்படி ஓபன் ஆக பேசுற!!!?” என்றவன், நான் பதில் சொல்லாமல் இருக்கவும் “அது சரி! நீ சயின்ஸ் ஸ்டூடன்ட் அப்படி தான் பேசுவ… நான் தான் பழகிக்கணும் போல!” என்றான் குறுஞ் செய்தியில் விடாமல் பேசியவன்..
எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை… ஆனால் பிப்ரவரி மாதம் மட்டும் வர தவறவில்லை!!! நாட்கள் அதன் போக்கில் ஓட, இன்னும் மூன்று மாதங்களில் நான் இளங்கலை பட்டதாரி ஆகி விடுவேன் என்பதை என்னாலேயே நம்ப முடியாமல், திணறி தான் போனேன்!
இரண்டாம் தேதி, மீண்டும் ஜெஷ்வந்த் அழைத்து, “தெப்பக்குளம் வரைக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம்! ரெடி ஆகு நான் 10 நிமிஷத்துல வந்துருவேன்…” என தகவல் போல் சொல்லி விட்டு, என் பதிலையோ விருப்பத்தையோ கேட்காமல் அழைப்பை துண்டித்து விட்டான்…
ஹாஸ்டல் வாசலில் வந்து பிரச்னை ஆகி விடும் என்பதால், அதை தவிர்க்க அவன் சொல்லியது போல் நான் கிளம்பி தயார் ஆகி கீழே சென்றேன்!! போன முறை போல் இல்லாமல், அவன் தெரு முனையில் காத்து இருந்தான்… நான் சென்று ஏறி கொண்டதும், வண்டியை எடுத்துக்கொண்டு விரகனூர் செல்லும் பாதையில் தெப்பக்குளம் தாண்டி சென்றான்..!!
நான் தான் எங்கு செல்கிறோம்? என கேட்டு பழகாதவள் ஆயிற்றே… ஆகையால் “எங்கோ செல்லட்டும்!” என்று 4 சுவர் கொண்ட அறைக்குள் அடைத்து கிடந்த, என் மனதை அந்த வெளிக் காற்றை இழுத்து சுவாசித்து ஆறுதல் படுத்தி கிட்னி அமர்ந்து இருந்தேன்!! தடக்டென்ன வண்டி ஏதோ மேட்டில் ஏறவும் தான், கண்ணை திறந்து பார்த்தேன்…
பார்த்தால் நாங்கள் படுத்த பள்ளிக்கு வந்து இருந்தோம்… “மறுபடியுமா??? சரி பிளாக் பண்ண சண்டை கட்ட ரெடியா இங்க கூட்டிட்டு வந்து இருக்கான் போல…” என்று எந்த உணர்வையும் முகத்தில் காட்டாது, இயல்பாக பின்னால் அமர்ந்து கொண்டு அமைதியாக அவனோடு சென்றேன்!
பள்ளி வளாகம் எப்படியோ பூட்டி இருக்கும், ஆகையால் அவன் மருத்துவமனை வளாகம் உள்ளே நுழைந்து வாகன நிறுத்தும் இடத்தில் வந்து அவனும் வண்டியை நிறுத்தினான்… அவன் OFF செய்ததும், பழக்க பட்டது போல் நானாக இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டேன்!
அவன் தாலியை கோதி முடித்து, ஹெல்மெட் தூக்கி கொண்டு, என் பின்னால் ஓடி வந்தான்… கையை பிடித்து கொண்டு, மருத்துவர்களின் ஹாஸ்டல் வளாகம் அருகில் நடந்தோம்!! நான் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..
“ஹாஸ்பிடலின் ஆக்சிஜன் சிலிண்டர் வாய்ப்பு இடம் கடந்து வர, அதை நான் உற்று கவனித்த படி வந்தேன்!!”
வாட்ச் மேன் பார்த்து விட்டு, எங்கள் அருகில் நடந்து வந்தார்.. அவர் இடம் வாய் கூசாமல் ஜெஷ்வந்த் பொய் சொன்னான்.
“மருத்துவமனையில் இருக்கும் நோயாளியை தான் பார்க்க வந்து இருக்கிறோம்!” என்று ஆன மட்டுக்கும் பேசி பார்க்க, அவரோ “அப்படி என்றாலும் இங்க எல்லாம் வரக் கூடாது!! வெளிய பெஞ்ச் இருக்கும் அங்க வேணும்னா போங்க…” என்று அனுப்பி வைத்தார்…
“எதாச்சும் பேசு!! இப்படி உம்முன்னு இருக்கவா கூட்டிட்டு வந்து இருக்கேன்?”
“என்ன பேச..? நீ ரவுண்டு போயிட்டு இறக்கி விடுறதா தானே சொன்ன!! அப்புறம் ஏன் நாம இங்க வந்து நிக்கிறோம்..?”
“அது நான்…. நான் வந்து…. உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்!!!” என்று திக்கி திணறி பதில் அளித்தான்… அதற்குள் நாங்கள் குழுமம் உடைய நீண்ட தெருவை அடைந்து, மருத்துவமனையின் வாசலுக்கு வந்து விட்டோம்!! பள்ளி வரை கால் ஆற நான் பாட்டிற்கு அவன் இடம் பேசாமல் நடந்தேன்…
“ஏன் ஏதும் பேச மாட்டேங்குற!!? என்ன? என் மேல எதாச்சும் கோவமா?!!!”
“ஆமா!!”
“என்ன கோவமா!? எதுக்கு??”
“நீ குடிக்கிறது எனக்கு புடிக்கல!!”
இதை கேட்டதும் விடு விடு என முன்னால் நடக்கும் என் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவன், “சரி சாரி!!! அக்கா கல்யாணம் முடியுற வரைக்கும் குடிக்கல… போதுமா!!!!?” என்றவனுக்கு பதில் ஏதும் வாய் மொழியாமல், அமைதியாக இரு கைகளை மார்புக்கு குறுக்க கட்டி புருவம் உயர்த்து முறைத்தேன்!!🤨
“ஹான்… ஹா… ஹ… சரி! சரி!!! இனிமே ஜென்மத்துக்கும் நான் சரக்கை தொட மாட்டேன்… போதுமா?!!!”
“ம்ம்”
“இதுக்கு மேலே முன்னாடி போக வேண்டாம்! திரும்ப போவோம் வா… நான் பேச வந்தது இன்னும் சொல்லவே இல்ல!!” என என் தோள் பற்றி திருப்பி, நடக்க வைத்து மீண்டும் மருத்துவமனை வாசலுக்கு வரும் வேளையில், அவன் சொல்லிய வார்த்தைகளை கேட்டு நான் திகைத்து அதற்கு மேல் நடக்க கால் வராமல் நங்கூரம் அடித்தார் போல் அங்கேயே நின்று அவனை நிமிர்ந்து பார்த்தேன்.!! 😳😳😳
என் முகத்தை பார்த்து லேசாக சிரித்தவன், உறைந்து நிற்கும் என்னை ஒரு பொம்மை போல் அங்கேயே நடை மேடையில் போட பட்டு இருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர வைத்து விட்ட ஜெஷ்வந்த், அவன் பாட்டிற்கு அந்த வளாகம் உள்ளே நுழைந்து பைக் எடுத்து வர சென்று விட்டான்…
அப்படி ஜெஷ்வந்த் ஷ்ரேயா இடம் என்ன கேட்டு இருப்பான்??
ஷ்ரேயா அதற்கு என்ன பதில் சொல்லி இருப்பாள்? என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨
Thanks for reading மக்களே 🩷
