அபியை காயப்படுத்தியதால் ஆராத்யாவை அனைவர் முன்பும் பெல்டால் அடித்ததை பார்த்த பிரின்ஸ்பல் பவித்ராவின் தவறையும் அறிந்து இருவருக்கும் ஒரு வாரம் சஸ்பென்ஷன் கொடுத்து அனுப்பி வைக்க தனது நண்பர்களிடம் வீட்டிற்கு செல்வதாக சொல்லி விட்டு சென்றான்.
ஆனால் மனதிற்குள் தன்னவள் என்ன நிலைமையில் இருக்கிறாளோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.
ஆனால் அவள் பேசிய வார்த்தைகள் இன்னும் அவன் மனதில் அனைவர் ஏற்படுத்திய காயத்தை விட மிக அதிகமாக வலித்தது.
தனது தாயினால் ஏற்பட்ட வலியை விட இது மிகவும் கொடுமையாக இருந்தது அவனுக்கு.
மாலை நேரம் வீட்டிற்கு தள்ளாடிக்கொண்டே வந்தவன் தனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டு அடுத்த நான்கு நாட்கள் வரவே இல்லை .
எப்பொழுதாவது பசிக்கிறது என்றால் அவனே கீழே வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் தனது அறைக்குள் அடைந்து கொள்வான்.
செந்தில்நாதன் அப்பொழுது ஏதோ வேலை விஷயமாக வெளியூருக்கு சென்று இருந்ததால் இந்த விஷயம் தெரியாமல் இருக்க பிரச்சனை நடந்து ஐந்தாம் நாள் தான் வீட்டிற்கு வந்தவர் தனது மகனை வந்ததிலிருந்து காணவில்லை என்று தலைமை வேலையாளிடம் கேட்க “தம்பி ரூம் குள்ள போய் அஞ்சு நாள் ஆச்சு! எப்பயாவது வேணும்னா வந்து சாப்பிட்டுக்கும் மற்றபடி தான் அடைஞ்சு கிடக்க என்னன்னு தெரியல ஐயா !” என்று அவரும் கூறிவிட்டு சென்றுவிட
தனது மகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்து மிகவும் வருந்தியவர் அவனை காண சென்றவர் அரை கதவை தட்டினார்.
ஆனால் அதுவோ திறந்த பாடில்லை. “கரண் கரண் அப்பா வந்திருக்கேன் கதவை தர!” என்று கத்த கிட்டத்தட்ட பத்து நிமிடம் கழித்து தான் அவன் கதவை பிறந்தான் பொறுமையாக.
அவன் அறையில் இருந்து சிகரெட் வாசமும் அவன் மீது மது வாடையும் அடித்தது.
அதில் கோபம் கொண்டவர் அவனை அடிக்க கையை ஓங்க அந்த போதையிலும் அதை கரெக்டாக தடுத்து பிடித்தவன் ” என்னை அடிக்க உங்களுக்கு உரிமை கிடையாது என் பேருக்கு பின்னாடி உங்க இனிஷியல் இருக்குங்கிற ஒரே காரணத்துக்காக தான் நான் இன்னும் இந்த வீட்டில் இருக்கேன்! எதுக்காக வந்தீங்க?” என்று அவரது கையை உதறி விட்டு கேட்டான்.
“எதுக்குடா இப்படி குடிச்சிட்டு வீட்டிலேயே கிடக்க காலேஜ் போகல என்னதான்டா ஆச்சு உனக்கு?” என்று மகனின் முகத்தை தொட பார்க்க
அதை உணர்ந்து கொண்டு பின்னால் நகர்ந்தவன் நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு “என்ன திடீரென பாசம் எல்லாம் பொங்கி வழியுது?” என்றவன்
“இதெல்லாம் உங்களோட ஆசை மனைவி ஜெயந்தி கிட்ட இருந்து கத்துக்கிட்டீங்களா போலியா நடிக்கிறதுக்கு? அதுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன்!” என்றவன்
” என்னோட தனிப்பட்ட விஷயத்துக்குள்ள தலையிடாதீங்க!” என்று கூறிவிட்டு கதவை சாத்த செல்ல அதை தடுத்தவர்
” உனக்கு அரை மணி நேரம்தான் டைம் அதுக்குள்ள குளிச்சு தயாராகி கீழே வர்ற இல்லன்னா உன் அம்மாவோட போட்டோ உன் அறையில் இருக்காது!” என்று அவனுக்கு எது சொன்னால் வலிக்குமோ அதைக் கூறிவிட்டு சென்றவர் நன்கு சத்தான உணவாக தனது மகனுக்கு சமைக்க சொன்னார். மகன் மேல் ஏன் இந்த திடீர் கரிசனம் அது அவருக்கு மட்டும்தான் தெரியும்!.
முன்பெல்லாம் ஜெயந்தி உடன் அவருடைய பிடி இருந்தாலும் தற்போது எல்லாம் அடிக்கடி முதல் மனைவியின் ஞாபகம் அவரை வாட்டி எடுத்தது.
வயோதிகம் அல்லவா காமம் எவ்வளவு நாள் தான் ஒரு மனிதனுக்கு இன்பத்தை கொடுக்கும் ஒரு காலகட்டத்தில் அது புளித்து விடும். வயோதிகத்திற்கு தேவை அன்பு மட்டும் தான் ஆனால் ஜெயந்தியிடம் அப்படிப்பட்ட அன்பு இவருக்கு கிடைத்ததில்லை.
ஜெயந்தியே பொறுத்தவரை அன்பு என்றால் அது காமம் என்று கூறுவார்.
அப்படி இருக்க தனது மனைவி காட்டிய அன்பு தற்பொழுது தேனாக இனித்தது.
அதுவும் அவரின் முகமும் குணத்தையும் கொண்டு பிறந்திருக்கும் தனது மகனை தற்பொழுதெல்லாம் பார்க்கும் பொழுது தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேனோ என்று மிகவும் காலம் தாழ்த்தி வருந்தினார்.
ஆனாலும் ஜெயந்தி சூரிய கலாவை பற்றி ஏற்படுத்திய கெட்ட எண்ணம் இன்னமும் அவர் நெஞ்சில் இருந்து கொண்டே இருந்தது.
அவரும் இத்தனை வருடமும் அதை குறையாமல் ஜெயந்தியும் பார்த்துக் கொண்டார்.
கணவன் வீட்டில் இல்லாததால் இவரும் தனது தோழிகளுடன் பார்ட்டி கிளப் என்று சென்று இருக்க
அதையெல்லாம் கண்டு கொள்ளாதவர் மகனுக்காக காத்துக் கொண்டிருக்க சாப்பாடும் தயாராகி உணவு மேஜைக்கு வர அவனும் வேறு வழி இல்லாமல் குளித்துவிட்டு ஐந்து நாள் தாடியுடன் கீழ் இறங்கி வந்தான்.
என்னதான் அவன் குளித்திருந்தாலும் முகத்தில் அந்த தாடியும் கண்களை சுற்றி சரியாக தூங்காததால் கருவளையமும் அவனை மிகவும் சோர்வாக காட்டியது.
ஊருக்கு செல்லும் பொழுது கூட திமிராக கெத்தாக இருந்த தனது மகன் இப்படி இருப்பதை கண்டு அவருக்கு உள்ளம் கணக்க
சாப்பிட்டு முடித்து விட்டு பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாக சாப்பிட்டார்.
அவனும் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து செல்ல
” உன்கிட்ட பேசணும் வந்து சோபால உட்காரு!” என்று கூறிவிட்டு
அவரும் சென்று அமர்ந்தவர் “காலேஜ்ல என்ன பிரச்சனை பண்ணின ஒரு வேலை விஷயமா ஊருக்கு போயிருந்தப்போ உங்க பிரின்ஸ்பல் தான் கூப்பிட்டு விஷயத்தை சொன்னாரு! அதுக்கு அடுத்த மினிஸ்டர் கூப்பிட்டு பேசறாரு நான் தான் அவர்கிட்ட கஷ்டப்பட்டு பேசி என் பையனை வந்து மன்னிப்பு கேட்பான் நீங்க பெருசா எடுத்துக்காதீங்கன்னு சொல்லி வச்சிருக்கேன் ஒழுங்கா போய் அவங்க வீட்ல மன்னிப்பு கேட்டுட்டு வா!” என்றார்.
அவரை இவ்வளவு நேரம் முரைத்துக் கொண்டிருந்தவன் நக்கலாக சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்தவன்
” நான் எதுக்காக அப்படி பண்ணனும் என்னோட காதலிய அவ மயக்கம் அடைய வச்சு ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கிறது அவருடைய பொண்ணு தான் காரணம் கண்டிப்பா நான் செஞ்சது சரிதான். என்னால எல்லாம் அவளிடம் போய் கேட்க முடியாது!” என்று சொன்னவன்
அவரிடம் அதற்கு மேல் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பது போல் தனது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
” இவன் படிச்சு முடிச்ச உடனே நம்ம கம்பெனிக்கு எடுத்துக்கலாம்னு பார்த்தா இவன் என்னடா இப்படி எல்லார்கிட்டயும் பிரச்சனை பண்ணிட்டு இருக்கானே ஒழுங்கா படிச்சு முடிச்சு எப்படி இவன்கிட்ட என் பிசினஸ் நான் ஒப்படைப்பேன் ? ஆனா இந்த ஜெயந்தி நவீன் கிட்ட குடுங்க நவீன் கிட்ட குடுங்கன்னு சொல்லிட்டே இருக்கா ஆனா அவனும் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம சுத்திட்டு இருக்கான் இவங்க எல்லாம் என்ன பண்றதுன்னு எனக்கு தெரியவே இல்லை!” என்று புலம்பி கொண்டு இருந்தவர் அறியவில்லை இன்னும் சில மாதங்களில் அவன் ஒரேடியாக அவரை விட்டுப் பிரியப் போவது.
🩷🩷🩷🩷🩷
மறுபக்கம் அபியும் மருத்துவமனையில் இருந்து அப்பொழுதே டிஸ்டார்ஜ் ஆகி இல்லத்திற்கு வந்தவள் பெற்றோரிடம் எதுவும் பேசவில்லை.
வகுப்பாசிரியை அறிவுரை பேரில் இந்த ஒரு வாரம் நன்றாக ரெஸ்ட் எடுத்து கொள்ள சொல்லியவர் அவளுடைய பெற்றோர்களிடமும் அவள் உடல்நிலை தேறி வரட்டும் அட்டனன்சை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லியவர் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு தானும் கல்லூரிக்கு வந்து விஷயத்தை பிரின்ஸ்பல் இடம் கூறினார்.
பவித்ராவும் தனது தங்கையுடன் இருந்த அவளை நன்றாக பார்த்துக் கொண்டால்.
ஆரம்பத்தில் அவர்கள் அவளிடம் எதனால இப்படி இருந்தா என்ன ஆச்சு என்று இரண்டு நாட்கள் கேட்டனர்.
அவளோ எதுவும் சொல்லாமல் இருக்க அவர்களும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தாமல் நன்றாக கவனித்துக் கொண்டனர்.
வந்தனாவும் சமிக்ஷாவும் தினமும் மாலையில் அவளிடம் பேசி தாங்கள் அவளை மிகவும் மிஸ் செய்வதாகவும் கல்லூரியில் நடந்த விஷயங்களையும் பற்றி அரை மணி நேரம் தோழிகள் மூவரும் பேசிக் கொள்வர்.
தோழிக்கு தினமும் நடத்தும் பாடங்களையும் இருவரும் அவளுக்கு அனுப்பி வைக்க அவப்பொழுது அதையும் பார்த்து படித்துக் கொள்வாள்.
ஒரு வாரம் கடந்து இருக்க திங்கட்கிழமை காலை தனது மகளைக் கொண்டு வந்து தானே கல்லூரியில் விட்ட கதிர்வேல் வகுப்பாசிரியை பார்த்து அவளை நன்றாக கவனித்துக் கொள்ள சொன்னவர் கல்லூரி பேருந்து பற்றியும் கேட்டுவிட்டு மாலையே அவளை கல்லூரி பேருந்தில் வந்துவிட சொல்ல அவரும் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி கதிர்வேலை அனுப்பி வைத்தார்.
இந்த ஒரு வாரத்தில் பவித்ரா மற்றும் கரண் இருவருக்கும் சஸ்பென்ஷன் முடிந்து அவர்களும் வந்திருந்தனர்.
பவித்ரா அன்று வீட்டிற்கு சென்றவள் அவளுடைய அப்பா ஆதி கேசவன் எப்பொழுதும் வந்தவுடன் மகளை பார்ப்பவர் அவருக்காகவே சோபாவில் அமர்ந்து காத்துக் கொண்டே இருப்பவள் இன்று இல்லாமல் போக மனைவி இடம் “மகள் எங்கே?” என கேட்டார்.
அவரோ சாந்தலட்சுமி சாந்தமாக கூறினார் .”அறைக்குள்ள போனாங்க இன்னும் வெளியவே வரல நானும் எவ்வளவோ தட்டி பார்த்துட்டேன் ஆனா என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு மட்டும் குரல் கொடுத்தா வேற எதுவுமே சொல்லல!” என்றார்.
அதைக் கேட்டு போகமடைந்தவர் மனைவியை அறைந்து விட்டு இதை உடனடியா என்கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று வேக வேகமாக படிகளில் ஏறி மகளின் அறைக்கு வந்து பதட்டமாக தட்டினார்.
” என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க நான் சொன்னேன்னா இல்லையா ?” என்று உள்ளிருந்து குரல் கொடுத்துக் கொண்டே கதவை திறக்க அழுததால் கண்கள் வீங்கி சிவந்த நிலையில் இருந்த தனது மகளின் வதனத்தை கண்டவர் பொங்கி விட்டார்.
” தங்கம் என்னடா ஆச்சு ஏன்டா இப்படி இருக்க?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைய வெளிச்சத்தில் மகளின் கை, கால்களில் தெரிந்த காயத்தை கண்டு இன்னும் அதிர்ந்து போனார்.
தனது தந்தை அதிர்ந்ததை பார்த்தவள் ” அப்பா என்ன ஒருத்தன் காலேஜ்ல எல்லாரும் முன்னாடியும் அடிச்சிட்டான் !” என்று தழுதழுத்த குரலில் கூறினாள்.
தனது மகள் இருப்பதால் வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை அடக்கியவர் “எவன் உன்னை அப்படி பண்ணினான் மட்டும் சொல்லு உடம்புல உசுரு இருக்காது பன்னிரென் !” என்றார்.
கண்களை துடைத்து கொண்டவள் தந்தையிடம் அனைத்தையும் கூறி முடித்துவிட்டு ” இல்லப்பா கண்டிப்பா அவன் உயிரோடு இருக்கணும் எல்லாரும் முன்னாடியும் என்ன அவமானப்படுத்தினவன் காலம் ஃபுல்லா என் காலடியில் விழுந்து கிடக்கணும்!” என்றால்.
“சரி மா நீ சொல்ற மாதிரியே பண்ணலாம் வாமா இப்ப நம்ம ஆஸ்பத்திரி போகலாம் !” என்று உடனடியாக தனது மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு அழைத்து வந்தவர், ” இனிமே எதா இருந்தாலும் நீ உடனே அப்பா கிட்ட சொல்லணும்! இந்த மாதிரி என் தங்கை பொண்ணு அழக்கூடாது!” என்று விட்டு உடனடியாக தனது அறைக்கு வந்தவர்
அங்கிருந்த பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து விட்டு சில பல கெட்ட வார்த்தைகளை உதிர்த்தவர்
“உன்ன விட மாட்டேன் டா என் பொண்ண இந்த அளவுக்கு பாடு படுத்தின என் பொண்ணு வேற உன்னையே விரும்புற மாதிரி தெரியுது இருக்கட்டும் கண்டிப்பா உன்னை என் மகள் எந்த அளவுக்கு துடிச்சாலோ அந்த வலியை அதைவிட 100 மடங்கு உன்னை அனுபவிக்க வைப்பேன்!” என்றவர்
உடனடியாக தனது பி ஏ விடம் கூறி மகளிடம் இருந்து அவனைப் பற்றி தெரிந்த விஷயங்களை கூறினார்.
அவனும் அடுத்த அரை மணி நேரத்தில் கரணை பற்றிய அனைத்து டீடைல்களையும் கொண்டு வந்து ஆதி கேசவனிடம் கொடுத்தான்.
