வெந்து தணிந்த இதயம்-21
நான் உங்கள் AY_84
வெந்து தணிந்த இதயம்-21
“சுவையா இருக்கறதை யார் வேணும்னாலும் சாப்பிடலாம்” என்று சப்புக்கொட்டி சாப்பிட்ட யாழினி அவன் தன் வாயைப் பார்ப்பதை கண்டும் காணாமலும் இருந்தாள்.
தன்னை அவள் சாப்பிட சொல்ல மாட்டாளா என்று ஏங்கியவன் அது நடக்காமல் போகவும், “உனக்கு இன்னைக்கு பேதி தான்டி போகும். வயிறு வலியில துடிப்ப” என்று சாபமிட்டான்.
“அதைக்கூடத் தாங்கிடலாம். ஆனா நீங்க சாப்பாட்டை மென்னு மூஞ்சில துப்பற அவமானத்தை தான் தாங்கிக்கிறது கஷ்டம்” என்றதும், தன் செயலை நினைத்து தானே வெட்கினான்.
சாப்பிடும் போது, “எதுக்கு இப்படி பார்க்கறீங்க?” என்றவள் கேட்க,
“ம்? இதுக்கு தான்” என்று அவள் கையிலிருந்த சாதத்தை தன் வாய்க்குள் திணித்தான்.
மதிய சாப்பாட்டு வேலையை கடந்தும் சாப்பிடாமல் கொலைப்பசியில் இருந்தவனுக்கு அவள் சமைத்த மீன் குழம்பு சொர்க்கமாய் தெரிந்தது.
அவன் முக மாற்றத்தை வைத்தே அவனுக்கு சாப்பாடு பிடித்திருக்கிறது என்பதை அறிந்தவள் தன் இலையில் இன்னும் கொஞ்சம் சாப்பாட்டை போட்டு பிசைந்து அவனுக்கு ஊட்டிவிட்டாள்.
இறாலை சாப்பிட்டவன் அதன் சுவையில் மீண்டும் மீண்டும் அதனை கேட்டுவாங்கி உண்ண, அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
அனைத்தையும் திருப்திகரமாக சாப்பிட்டவனுக்கு அங்கேயே படுத்து உறங்கிவிட உடல் சொன்னாலும் ஏலம் நடக்கும் இடத்திற்கு செல்லும் கடமை இருந்ததால், அவளை உடனே கிளம்பச் சொன்னான்.
அவள் தனது பெட்டியை தயார் செய்ததும் அதைத் தூக்கிக்கொண்டவன் அவளை முன்னே நடக்கவிட்டு வேகமாக மழையில் நனைந்தபடியே காரை அடைந்தான்.
மரத்தின் அடியில் சற்று பாதுகாப்பாக நின்ற காருக்குள் ஏறியதும் காரின் கதவை லேசாக திறந்து வைத்து தனது பாவாடையை அவள் பிழிய, அவனின் கண்கள் முழுவதும் அவளின் சட்டைப்பட்டன்கள் திறந்திருந்த வயிற்றின் மீதும், வழுவழுத் தொடையின் மீதுமே நிலைத்திருந்தன.
அவள் சட்டையின் முதலிரண்டு பட்டன்களும், கடைசி இரண்டு இரண்டு பட்டன்களும் வாயைப் பிளந்திருக்க, அவளின் அங்கங்கள் ஒவ்வொன்றும் சீனிப்பாகில் குளித்த பால்பன் போல் மினுமினுத்தன.
அவன் விழி சொல்லும் மொழியை உணர்ந்து, “முன்னாடிலாம் நான் வெறிச்சிப் பார்க்கறேன்னு சொல்லிட்டு இப்ப வெறிச்சிப் பார்க்கறது யாராம்?” என்றவள் வாய்விட்டு நகைக்க, அவளின் முத்துப்பற்களில் சிக்கிக்கொண்டவன் சிப்பி இதழை வன்மையாக சிறை செய்தான்.
உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த இருவரும் காரின் பின் இருக்கையை மஞ்சமாக்கி ஈருடல் ஓருடல் ஆகினர்.
காற்றின் தழுவலால் இலைகளிலிருந்து சொட்டிய நீர் அவர்கள் கார் சன்ரூப் மீது சடசடவென விழ, கவனம் சிதறவில்லை பத்ரவேல் பாண்டியன். களம் ஆட்டக்காரனுக்கு சாதகமாய் அமைந்தது.
தன் வீட்டில் அடைந்திருந்த நூலாம்படைகளை எல்லாம் காற்றுக் கம்பால் தூசுத் தட்டிய உஷா சந்திரவிளக்கில் தீபமேற்ற, ஆதவனும் வீடு வந்து சேர்ந்திருந்தான்.
அவர்களிருவருமே கூட அவனைப்போல வீடு வந்து சேர்ந்தபோது, பத்ரி தன் தந்தையின் உயர்தர கார் ஏற்கனவே வந்து நின்றிருப்பதைக் கண்டு குற்றவுணர்வோடு உள்ளே சென்றான்.
அவனைக் கண்டதும் வரவேற்பறையில் கோபமாக உட்கார்ந்திருந்த ரத்னவேல் பாண்டியன் உச்சஸ்தாயில் கத்தினார்.
“பத்ரி எங்கப்போய் தொலைஞ்ச நீ? ஏலம் நம்ம கைய விட்டுப் போயிருச்சி. அந்த கிழக்கூர்க்காரனே ஏலத்தை எடுத்துட்டான். உன்னால எனக்கு மிகப்பெரிய அவமானம். பணத்தை எடுத்துட்டு வரச் சொன்னா தோட்டத்து வீட்டுல உன் பொண்டாட்டி முந்தானையை வாசம் பிடிச்சிட்டு கிடந்தியா?” என்று சுற்றி அத்தனை அடியாட்கள் நின்றிருக்க அவர்கள் முன்பு வைத்து இவ்வாறு கேட்டதும், முதல்முறை அவரை மதிக்காமல் உள்ளே சென்றான் பத்ரி.
ரத்னவேல் பாண்டியனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“பாரு, பாரு, இவன் என்னை மதிக்காம உள்ளப்போறான்” என்று சாவித்ரியிடம் முறையிட்டார்.
சாவித்ரி அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, யாழினியோ, ‘இது தான் சாரே தொடக்கம்’ என்று அவரை தன் வெற்றிப்புன்னகையால் மிரளவிட்டுப் போனாள்.
ரத்னவேல் பாண்டியனுக்கு உண்மையில் ஒன்றும் ஓடவில்லை. இதுவரை தன் கண் அசைவுக்கு கட்டுப்பட்டுக் கொண்டிருந்த மகன் தற்போது தன் மனைவி மோகத்தில் கட்டுண்டிருக்கிறான் என்பதை அவரால் ஏற்கவே முடியவில்லை. உடனே அதற்கொரு முடிவு கட்ட ஆயத்தமானார்.
பத்ரியோ தனது தந்தை மீதிருந்த கோபத்தை யாழினி அறைக்குள் வந்ததும் அவளிடம் காண்பித்தான்.
முதலில் தனது ஈர சட்டையை கழற்றி அவள் மேல் எறிந்தான். அவள் அழவம் காட்டியபடி அதை அழுக்குத்துணி கூடையில் போட, அடுத்து அவன் பேண்ட் வந்து விழுந்தது.
வலியில் முகம் சுருக்கியவள், “ஆமா நான் என்ன பண்ணினேனு ரூமுக்குள்ள வந்ததும் என் மேல எரிஞ்சு விழறீங்க? காருக்குள்ள நீங்க கேட்டீங்க. நான் கொடுத்தேன்.” என்றதும் அவளை முறைத்துப் பார்த்தான் அவன்.
“நீ சரியான கேடி டி. காலைல நாங்க ஏலம் எடுக்கப்போறதை தெரிஞ்சு தான் இப்படி சதி திட்டம் போட்டிருப்ப.” என்றதும்,
“சதி திட்டமா? அடக்கடவுளே! ஏங்க இப்படி அநியாயமா பேசுறீங்க?”
“ஆமா பெரிய நல்லவளாட்டம் நடிக்காதடி. முன்னாடி தாலிங்களை திருடினவ தானே நீ? இப்ப எதை திருடிட்டுப் போக எங்க வீட்ல இருக்கியோ தெரியல?” என்று சொன்னதும், அவள் காயம்பட்டு போனாள்.
“மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லாதீங்க. நீங்க தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் உங்க பொண்டாட்டினு சொன்னீங்க. அதுக்கு என்ன அர்த்தம்? உங்களுக்கு சொந்தமானது எல்லாம் எனக்கும் சொந்தம்னு அர்த்தம். அப்படியிருக்க நான் எதுக்குங்க எனக்கு சொந்தமானதையே திருடப்போறேன்? கொஞ்சமாவது யோசிச்சிப் பேசுங்க.”
“சரி இனி நீ திருடப்போறதில்லைனாலும் முன்னாடி நீ திருடின எங்க பரம்பரை நகைங்களையெல்லாம் எங்க வச்சிருக்க சொல்லு? இன்பேக்ட் அது உனக்கு சேர வேண்டியது தான். சோ, நீ அதை இப்ப என்கிட்ட திருப்பி கொடுத்தாலும் நான் உன்கிட்ட தான் கொடுப்பேன்.”
“நீங்க என்னங்க லூசா? நான் அதை எடுக்கவே இல்லைனு சொல்றேன். என்கிட்ட வந்து கொடு கொடுனு உயிரை வாங்கறீங்க? வேணும்னா அந்த நகைங்களை கண்டுபிடிச்சி தரச்சொல்லி என்கிட்ட ஹெல்ப் வேணா கேளுங்க. மத்தபடி அதைப் பத்தி பேச என்கிட்ட எதுவும் இல்ல”
“சீக்கிரமே நகைங்களை கண்டுபிடிக்கறேன்டி. உண்மை வெளிய வரும்போது உனக்கு இருக்கு” என்று மிரட்டினான் பத்ரி.
அவளோ, “நீங்க என்ன கண்டுபிடிக்கிறது? இனி நானே அதை கண்டுபிடிக்கிறேன்.” என்று தன் குருவிமூளையைக் குடையத் தொடங்கினாள்.
“இவ்வளவு வக்கனையா பேசுறவ அன்னைக்கு எதுக்குடி தாலிங்களை திருடின?” -அவன் கோமாவிலிருந்து எழுந்தவன் போல் கேட்டான்.
“நான் ஒன்னும் என் வாயில போட்டுக்கறதுக்காக எடுக்கல. என் அம்மா ஹாஸ்பிடல் செலவுக்காகத் தான் எடுத்தேன்” என்று ரோசத்தில் வாய் தவறி உண்மையை உளறிவிட,
“உண்மையாவா? அப்ப உன் அம்மாவை இங்க கூட்டிட்டு வா. நாம அவங்களை இங்க வச்சு பார்த்துக்கலாம்.” என்றதும்,
‘அம்மாவுக்கு நான் இப்ப எங்க போவேன்? என் வாய் தான் எனக்கு சனி’ என்று தன்னையே நொந்துகொண்டாள் யாழினி.
பின் சமாளிப்பாக, “அது வந்து நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல அம்மாவுக்கு என் மேல கோபம். அதனால நான் கூப்பிட்டாலும் அவங்க வர மாட்டாங்க” என்றவளை நம்பாத பார்வை பார்த்தான்.
அவள் அவனை கண்டுகொண்டால் தானே!
பத்ரி கடுப்பில் ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்க, பாய்ந்து அதனை பிடுங்க எத்தனித்தவள் அவன் அசகாயமாக தடுக்கவும், “எப்பயிருந்து இந்த பழக்கம்?” என்று கோபமாகக் கேட்டாள்.
அவளை துச்சமாகப் பார்த்தவன், “உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட நாள்லயிருந்து தான்” என்று வெறுப்பாக சொன்னான்.
ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவள், ‘என்னால ஆரம்பிச்சதை என்னாலயே நிறுத்தவும் செய்வீங்க’ என்று மனதிற்குள் சூளுரைத்தாள்.
சட்டையில்லாத தன் தேகத்தை அவள் வெறிப்பதைக் கண்டு தவறாக நினைத்தவன் அடுத்த ரவுண்டிற்கு தயாரானான்.
மறுபக்கம் தன் கணவர் ரத்னவேல் பாண்டியனை பத்ரி மதிக்காத விசயமறிந்து உற்சாகமாகினார் பார்வதி.
கட்டிலில் குப்புற படுத்திருந்த தன் கணவருக்கு முதுகு அமுக்கி விட்டபடியே கோள்மூட்டத் தொடங்கினார்.
“பார்த்தீங்களா? அந்த பத்ரி எப்படி உங்களை அவமானப்படுத்திட்டானு? அவனைத் தான் நீங்க எம்.எல்.ஏ.வாக்க மெனக்கெட்டுட்டு இருக்கீங்க. என் புள்ளை என் புள்ளைனு தலையில தூக்கி வச்சி ஆடினீங்க. இப்ப என்னாச்சி? அவன் உங்க மூஞ்சில கரியைப் பூசிட்டான்.” என்றதும்,
“ஆனா அது உன் புள்ளை அளவுக்கு இல்ல” என்று வெடுக்கென்று சொன்னார் ரத்னவேல் பாண்டியன்.
“ஹும்! நீங்க இப்படி கருகறதாலயோ என்னவோ என் புள்ளை அந்த தெய்வானைய கல்யாணம் பண்ணியும் சந்தோசமா இல்ல. அவன் ஒரு ரூம்லயும், அந்த தெய்வானை ஒரு ரூம்லயும் கிடக்கறாங்க. நானும் தினம் அவளுக்கு பூ வச்சி விட்டு அவ அவனோட ரூமுக்கு போக மாட்டாளான்னு சாமிய கும்பிட்டுட்டு இருக்கேன். அவன்கிட்ட கேட்டா நீங்க எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வராதீங்க. இது புருசன் பொண்டாட்டி பிரச்சனைனு சொல்றான். அது என்னவோ நீங்க தான் அவங்க ரெண்டுபேரையும் கூப்பிட்டு என்னன்னு கேட்கறது. அந்த தெய்வானை உங்க சொல்லுக்கு மறுசொல்லு சொல்ல மாட்டா. அவளை என் புள்ளை மனசுபடி நடந்துக்கச் சொல்லுங்க” என்று முறையிட்டதும்,
“இது உன் புள்ளையா விரும்பின வாழ்க்கை பார்வதி. அதை அவன் தான் சரி பண்ணிக்கனும். என் பேத்திக்கு அவன் பண்ணின சித்து வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும். அதான் அவனை வந்து பாருனு நிற்கறா” என்றதும், அவரின் முதுகை பிடித்து விடுவதை நிறுத்தியவர்,
“என் புள்ளை வாழ்க்கை கேள்விக்குறியானா உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா?” என்று முனகியபடியே அவரின் முதுகெழும்பில் பலமாக ஒரு குத்து விட்டார்.
ரத்னவேல் பாண்டியன் வலியில் கத்தவும் எதுவும் தெரியாதவர் போல் முகத்தை வைத்துக் கொண்டவர், “அந்த பத்ரிக்கு கல்யாணம்னதும் என்னன்ன அமர்க்களம் பண்ணீங்க? ஊருக்கே மூனு வேளைக்கும் விருந்து, பந்தல், ரேடியோசெட், வயல்ல வேலைப் பார்க்கறவங்களுக்கு சேலை வேஷ்டி, ஆயிரம் ரூபா பணம்னு காசை வாரி இறைச்சீங்க. ஆனா என் புள்ள சஷ்டிக்கு ஒரு தகப்பனா என்ன பண்ணீங்க?” என்று முகத்தை தூக்கவும்,
“இப்ப என்ன தெய்வானைக்கும் சஷ்டிக்கும் இன்னொரு தடவை கல்யாணம் பண்ணனுமா?” என்று புரண்டுப் படுத்தார் ரத்னவேல் பாண்டியன்.
“ஒன்னும் தேவையில்ல. நாளான்னைக்கு என் மருமகளுக்கு நான் தாலிப்பெருக்கு சடங்கு செய்யலாம்னு இருக்கேன். அன்னைக்கு எனக்கு புருஷனா என் பக்கத்துல வந்து நில்லுங்க. அது போதும்.” என்று சொன்னதும், இளைய மனைவியின் மனசஞ்சலத்தை தாங்காது சரியென்று சம்மதித்தார்.
அன்றிரவு சாப்பிட்டு முடித்ததும் தெய்வானை நாளை காலை தனது தோழி ஒருத்தியை சந்திக்கச் செல்வதாக அவரிடம் சென்று அனுமதி கேட்க, அவளை ராஜ மரியாதையுடன் தனது அலுவலக அறைக்குள் வரவேற்றார் ரத்னவேல் பாண்டியன்.
“வா! வா! தெய்வானை. நீ என் அம்மா பொன்னம்மா தான். இந்த வீட்லயே என்னை ஏமாத்தாம என் வளர்ப்புனு நிரூபிச்சது நீ மட்டும் தான். இந்த தாத்தா மனம் குளிர்ந்து போயிட்டேன்.” என்றதும், பேந்த பேந்த விழித்தாள்.
பின் அவரே அவளுக்கு விளக்கினார்.
“அந்த சஷ்டி அயோக்கியத்தனம் பண்ணி தான் உன் கல்யாணத்தை நிறுத்தினான்னு புரிஞ்சிக்கிட்டு நீ அவனை பழிவாங்க விலகி இருக்கற பாரு? தாத்தா உன் ஆணவத்துக்கு தலை வணங்குறேன்மா.” என்றதும், இது என்னடா புதுக்கதை என்று இன்னும் திருதிருத்தாள் அவள்.
அவளுக்கு தானும் சஷ்டியும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் மல்லுக்கட்டி கொண்டிருப்பது ஆயாசமாக இருக்க, அவளின் தாத்தா கற்பனை கடலில் மிதப்பது வேறு பாவமாக இருந்தது. அதனால் அவரின் கற்பனைபடியே நம்பிக் கொள்ளட்டும் என்று தேமேவென்று இருந்தாள்.
ஆனால், அவர் அவள் ஆச்சரியப்படும்படி இன்னொரு விசயத்தை சொன்னார்.
தொடரும்…
லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, ஸ்டோரி லிங் ஷேர் பண்ணுங்க தங்கோம்ஸ்:)
