ஆடி வரும் வண்ண மயிலே-05
அத்தியாயம்:05
புவனா மயூரி, சக்ரபாணி எங்கே என்று கேட்டாள்..
கல்யாணி “ உன் அங்கிள் வேறு எங்கே போவார்..? கம்பெனிக்கு தான் பாப்பா வழமை போல மொட்டை மாடியில் இருக்கிறாள்…நீ போய் பாரு உனக்கு சாப்பிட ஏதும் எடுத்து வருகிறேன்…” என்றார்.
புவனா “ அச்சோ’ ஆன்ட்டி இப்போ தான் வீட்டில் சாப்பிட்டு விட்டு வருகிறேன்…கம்பெனிக்கு டைமாகி விட்டது இன்று மீட்டிங் ஒன்று இருக்கு.
அது தான் கம்பெனிக்கு போகும் வழியில் மயூவை பார்த்து விட்டு போகலாம் என வந்தேன்…”என்றாள்.
கல்யாணி “ சின்ன வயசு உனக்கு சாப்பிட்டது இப்போ ஜூரணமாகி இருக்கும்…
காலையில் டிபன் வெங்காய ஊத்தப்பம் செய்தேன்… கொஞ்சம் சாப்பிட்டு விட்டு கிளம்பு…அது மதியம் வரைக்கும் பசியெடுக்க விடாது.
போகும் போது பாப்பாக்களுக்கு கொஞ்சம் ஸ்வீட் செய்து தருகிறேன்…எடுத்து கொண்டு போ…” என சொல்லி விட்டு கல்யாணி சமையலறைக்கு போக…புவனா லிப்ட் வழியாக மொட்டை மாடிக்கு வந்தாள்.
அங்கே மயூரி நடராஜன் சிலைக்கு முன்னே….ஆடி கொண்டு இருந்தாள் டேப் ரெக்கார்டரில்… ஜதி ஓலித்தது கொண்டு இருந்தது.
புவனா பல தடவை அவள் நடனத்தை கண்டு ரசித்தாலும் கூட…எப்பவுமே அவள் நடனம் சலிப்பை தராத ஒன்று மயூரி ஆடி கொண்டு இருக்க அவள் கூட…சேர்ந்து அவள் நீண்ட கூந்தலும் நடனம் புரிந்தது.
மொட்டை மாடி கண்ணாடி கதவில் சாய்ந்து கொண்டு… அதை கொஞ்ச நேரம் ரசித்து கொண்டு இருந்தாள் புவனா…
ஜதி நிறைவு பெற மயூரின் வணக்கம் வைத்து விட்டு… திரும்பியவள் புவனாவை பார்த்ததும்…முகம் மலர புவா அக்கா என அழைத்தாள்.
உறவு முறையில் அவளுக்கு புவனா அத்தை என்றாலும் கூட…அவளுக்கு சின்ன வயது என்பதால் மயூரி அக்கா என்று தான் அழைப்பாள்…புவனா மெல்ல கை தட்டி விட்டு மயூரியை நோக்கி நடந்து வந்தாள்.
மயூரி புவனாவை ஓடி வந்து அணைத்து கொண்டவள்…அவள் பின்னால் சுற்றி சுற்றி பார்த்தாள்.
புவனா “ நீ யாரை எதிர்பார்க்கிற என புரிகிறது…அந்த இரண்டு வாலும் ஸ்கூல் போய் விட்டாங்க உன் ஆளு கூட தான்…
உன் கிட்ட வருவதை தர்ஷன் அறிந்து இருக்க… அவ்வளவு தான்.
ஒரு குட்டி ஆர்ப்பாட்டம் போட்டு ஸ்கூலுக்கு மட்டம் போட்டு விட்டு…உன்னை பார்க்க வந்திருப்பான் தியாவுக்கு உன் பெயரை கேட்டால் போதும்…
சித்தி, சித்தி என்று வெளியே கை காட்டுவாள்…வேறு எதற்க்கு எல்லாம் உன்னை பார்க்க வர தான்…” என்றாள்.
மயூரி “ போங்க கா அவங்களை ரொம்ப மிஸ் பண்ணுனேன்…அவங்களுக்கு பாரினில் இருந்து டாய்ஸ், டிரஸ், சாக்லேட் எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன்…
இந்த வாரம் உங்க வீட்டுக்கு வருவதாக… நானும் பாட்டியும் இருந்தோம்.
நீங்களே வந்து விட்டீங்க பரவாயில்ல…நானே அவங்க கிட்ட என் கையால் கொடுக்க வேணும்…சரி என்ன காலையில் தீடிரென இங்கே விஜயம்.
உங்களை அவ்வளவு சீக்கிரமாக காலையில் பார்க்க முடியாதே…ஓ! ஞாபகம் வந்து விட்டது உங்க கூட நியாயமாக பேச கூடாது தான்.
என்ன செய்வது நீங்க கட்டாயமாக போக வேண்டிய ஃபங்ஷன் அது…சரி வாங்க நின்று கொண்டு பேச வேணாம்…” என சொன்னவள்.
அங்கே வெள்ளை கலரில் தங்க டிசைன் போட்ட வட்ட வடிவ டேபிள்…அதை சுற்றி நான்கு குஷன் போட்ட நாற்காலிகள் இருக்க… அதில் புவனாவை அமர வைத்தவள் அவளும் ஒரு சேரில் அமர்ந்தாள்.
அவர்கள் பொதுவாக பேசி கொண்டு இருக்க…மயூரி எதையோ கேட்க வருவதும் பின் தயங்குவதுமாக இருக்க…புவனாவுக்கு புரிந்தது அவள் எதை கேட்க போகிறாள் என்று.
புவனா “ என்ன மயூ தீடிரென அமைதியாகி விட்ட..? என்ன தயக்கம் என் கிட்ட எதை தெரிந்து கொள்ள உனக்கு வேணும் …” என கேட்டாள்.
மயூரி “ அது வந்து அக்கா அவர் எப்படி இருக்கிறார்..? அவருக்கு பாரினில் இருந்து ஒரு வாட்ச் வாங்கி வந்தேன்…
அதை நீங்க வாங்கியதாக சொல்லி அவர் கிட்ட கொடுக்கிறீங்களா..? என கேட்டாள்.
அவளை ஒரு கணம் புவனா உற்று பார்த்தவள்…பிறகு
“ யாரு கிட்ட கொடுக்க சொன்ன பவனிடமா..? முதல் வேலையாக அதை தூக்கி எறிந்து விடுவான்…
அதற்க்கு முன்னே கையால் கூட அதை தொட மாட்டான் பிறகு எங்கே கொடுப்பது…? என கேட்டாள்.
மயூரி “ உங்க கிட்ட அப்படி நடந்து கொள்ள மாட்டார் கா…உங்க மேலே ரொம்ப மதிப்பு வைத்திருக்கிறார் அதனால் வாங்கி கொள்வார்…என்னால் தான் அவரிடம் நெருங்க கூட முடியவில்லை…” என்றாள்.
புவனா “ ம் அது நூறு சதவீதம் உண்மை தான்…ஆனால் அவன் இப்போ வரைக்கும் எங்க கிட்ட இருந்து…
எந்த பரிசும் ஏன் பணம் கூட வாங்கியது இல்லை… அவனுக்கு ரொம்ப செல்ப் ரெக்ஸ்பெட் அதிகம்…” என்றாள்.
மயூரி “ அது தெரியும் கா சரி பரவாயில்ல…நீங்க பெரியவங்க என்பதால் மறுப்பு சொல்ல முடியும்…நீங்க தர்ஷ் கிட்ட கொடுங்க அவன் கொடுத்தால் அவர் மறுக்க மாட்டார்…” என்றாள்.
புவனா “ யாரு தர்ஷனா..? முதல் வேலையாக அங்கிள் அங்கிள் இது சித்தி கிப்ட்…உனக்கு வாங்கி வந்திச்சு என போட்டு கொடுத்து விடுவான்…பிறகு நேராக விஷயம் அப்பா காதுக்கு போய் விடும்.
அடுத்து என்ன நடக்கும் நீ இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த…விஷயம் வெளிவந்து விடும் பவன் தன் நெற்றி கண்ணை திறந்து விடுவான்…
அதை விட சக்ரா அங்கிள் உனக்கு… உடனடியாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விடுவார்.
நான் கண்டுபிடித்து போல அவங்களுக்கு…இதை எல்லாம் கண்டுபிடிக்க எவ்வளவு நேரமாகும் மயூ…இத்தனை நாள் அவங்க கண்டு பிடிக்காத காரணம் ஹெவி வோர்க் லோட்.
மயூ நீ தீயை அணைக்க ஆசைபடுகிற… அது தான் எனக்கு பயமாக இருக்கு பவன் பற்றி உனக்கு இன்னும் சரியாக தெரியவில்லை…
அப்பா கட்சி தொண்டர்கள் கூட பயப்படும் ஒரு ஆள் என்றால்… அது பவன் தான்…” என்றாள்.
மயூ “ அவரை பற்றி எனக்கும் நன்றாக தெரியும் கா…நீங்க நினைக்கிறீங்க அவர் தீ என்று ஆனால்… நான் தண்ணீர் அவரை அணைத்து விடுவேன்…
அதற்கான வழி தான் எனக்கு தெரியவில்லை… தாத்தாவுக்கு காதல் என்ற வார்த்தையே பிடிக்காது.
அப்படி இருக்கும் போது நான் அவரை காதலிப்பதை எப்படி தாத்தா கிட்ட சொல்ல முடியும்…அது மட்டுமல்ல உங்க அண்ணன் மேலே தாத்தா செம கோபத்தில் இருக்கிறார்.
அவரால் தான் என் அம்மா இறந்து போனாங்க என்று…அதற்க்கு காரணம் பொருத்தமற்ற காதல், சம்பந்தம் என்று…அப்படி இருக்கும் போது எப்படி தாத்தா கிட்ட இது பற்றி பேச முடியும்.
அது போல அவர் என்னை ஒரு தடவை கூட நிமிர்ந்து பார்த்தது இல்லை…இதில் எங்கே அவரிடம் போய் என் காதலை சொல்வது…முதலில் அவருக்கு என்னை ஞாபகம் இருக்குமோ தெரியாது.
அக்கா எனக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ண வேணும்…நான் உங்க வீட்டுக்கு அடிக்கடி வர முடியாது காரணம் உங்க அண்ணன்… அங்கே சில நேரம் வருவார்.
அவர் நிழல் கூட என் மேலே படக்கூடாது என தாத்தா நினைக்கிறார்…அப்படி இருக்கும் போது நான் அங்கே வர முடியாது…
நீங்க அவரிடம் என்னை தெரியுமா..? என்று கேட்டு பாருங்க அக்கா…” என்றாள்.
புவனா “ மயூ நீ இன்னும் சிலதை புரிந்து கொள்ள வேணும் மா…நீ தியா போல இருந்தால் எப்படி நீ சியாமளா அண்ணி போல… ஏமாளியாக இருக்க கூடாது என்று தான்..
நாங்க ஆசைபடுகிறோம் அவங்க ராகவன் அண்ணன் செய்யும்…தில்லு முல்லுலை கண்டு பிடித்து இருக்க இன்று அவங்க… உயிரோடு இருந்து இருப்பாங்க.
இவங்க அவர் எதை சொன்னாலும் நம்பி தொலைத்ததால் தான்…இந்த நிலை இப்போ தீடிரென நான் பவன் கிட்ட போய்.. உனக்கு என் அண்ணன் பெண்ணை தெரியுமா என கேட்டால்..?
அவனுக்கு சந்தேகம் வந்து விடும் அதை விட அவன் யோசிக்க ஆரம்பித்தால்…அடுத்த செக்கன் வேலையை விட்டு போய் விடுவான்…பிறகு நம்ம எங்கே என்று அவனை தேடுவது..?
அவன் போனால் அப்பாவுக்கு என்ன வேற பாடி கார்ட்டா இல்லை…அரசாங்கம் அதை ஏற்பாடு செய்யாதா..?
அப்பாவுக்கு பிடிக்காது என்பது வேற கதை…ஆனால் அவர் சட்டத்தை மதிப்பவர்..அதனால் ஏற்று கொள்வார்.
நான் பவன் கிட்ட ஏன் அதிகமாக உன்னை பற்றி பேசுவதில்லை…ஒன்று அவனுக்கு பெண்ணுங்களை பிடிக்காது…
அடுத்து நான் அதிகமாக பேசி உள்ளதையும்… கெடுத்து விட்டு விட கூடாது என்பதால் தான்.
அவனிடம் எப்படி பேச வேணுமோ…அப்படி பேசி கொண்டு இருக்கிறேன் ஒன்று செய் நீ என் வீட்டுக்கு வாரா வாரம்…ஒரு தடவை என்றாலும் வந்து போ சனிக்கிழமை வர பாரு.
அப்போ தான் அப்பா வீட்டில் இருப்பார் அவர் இருந்தால் பவனும் இருப்பான் …
அங்கிள் உன்னை விட மாட்டார் தான் நீ ஆன்ட்டி கூட வா அப்போ…அவரால் எதுவுமே சொல்ல முடியாது.
நீ வந்து போனால் தான் பவனுக்கும் உன் உருவம் கண்ணில் பதியும்…
நானும் என் அண்ணன் பெண்ணு என… உன்னை அறிமுகப்படுத்த தோதாக இருக்கும்… அதற்க்கு பிறகு மற்றதை பார்க்கலாம்…” என்றாள்.
மயூரிகா தேங்கியூ அக்கா என்று அவளை கட்டி கொண்டாள்…கொஞ்ச நேரத்தில் கல்யாணி வெங்காய ஊத்தப்பம், தக்காளி சட்னி கூடவே பில்டர் காபி…அவரே தன் கையால் போட்டு அனுப்பி இருந்தார்.
புவனாவுக்கு அதை பார்த்தும் லேசாக பசியெடுக்க…அவள் மூன்று ஊத்தப்பம் சாப்பிட்டு காபியும்… சாப்பிட்டு விட்டு கம்பெனிக்கு கிளம்பி விட்டாள்.
மயூரி கல்யாணியிடம் இந்த சனிக்கிழமை புவனா வீட்டுக்கு போக வேணும்…
குழந்தைங்களுக்கு வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கொடுக்க வேணும்… அதனால் தாத்தா கிட்ட பெர்மிஷன் வாங்கி கொடு என சொன்னாள்.
கல்யாணியும் சக்ரபாணி வந்ததும் …இது பற்றி பேசுவதாக சொன்னார்.
அது போல அவர் நைட் வந்து குளித்து சாப்பிட்ட பிறகு… ரூம்க்கு வர கல்யாணி இது பற்றி அவரிடம் பேசினார்.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர்…பிறகு
சக்ரபாணி “கல்யாணி நீ சொல்வது எல்லாம் சரி தான்…ஆனால் நீ ஒன்றை மறந்து விட்ட போல குருவின்…அண்ணன் மகன் யாரென்று அவன் நிழல் கூட என் பேத்தி மேலே விழ கூடாது…
ஒன்று செய்வோம் வாங்கிய பொருட்களை எல்லாம்…நீ அசோக் கூட போய் கொடுத்து விட்டு வா…” என்றார்.
மயில் ஆடி வரும்…
