திரையிட்டு விலகாதே! -25

திரையிட்டு விலகாதே! 

அத்தியாயம் -25

Hiiii வாசகர்களே ✨

வாலண்டைன் வாரம் துவங்கிய முதல் நாள், ரோஸ் டே:

முதலில் எனக்கு அதெல்லாம் தெரியாது! ஆனால் இன்ஸ்டாகிராம் ரிலீஸ் பார்க்கும் போது தான் தெரிந்து கொண்டேன்… ஆகையால் உடனடியாக அவனுக்கு விஷ் பண்ண அவன் உரையாடலுக்கு சென்றேன்!!

ரோஜா பூ போல் அவன் கட்டி அணைத்த தருணம் நினைவுக்கு வரவே நான், “Happy Rose day to my Man who made me feel as light as a Flower with our first hug🫂” என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டேன்!! 

(என்னை ஒரு பூ போல் மெல்ல கட்டிய முதல் அணைப்பில் அனைத்தும் மறந்து லேசாக உணரச் செய்த என்னவனுக்கு ஹாப்பி ரோஸ் டே)

அதை ஜெஷ்வந்த் ஒரு 10 நிமிடம் கழித்து பார்த்து படித்து விட்டு, 💘💘💘💘💘💘 அம்பு கொண்ட இதயமாக அனுப்பி தள்ளியவன், அழைத்தான்… “ஹேய் என்னடி இப்படி எல்லாம் விஷ் பண்ணி என்னையவே வெக்கம் லாம் பட வைக்கிற??!!!!! செல்லம் குட்டி மா ஐ லவ் யூ 😘😘😘😘” என்று அழைப்பிலேயே முத்த மழை பெய்து என்னையும் நானி சிவக்க வைத்தான்…

“இரு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு!” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்… மீண்டும் நான் அழைத்தும் அவன் எடுக்கவே இல்லை!! 15 நிமிடம் கழித்து அவனே அழைத்தவன், என்னை கீழே வர சொன்னான்.!!! நான் அதிர்ந்து போய் நம்ப முடியாமல் மாடியில் இருந்து எட்டி பார்க்க, அவன் அங்கு நின்று இருந்தான்..!!!

குடு குடு குடுவென மூன்று மாடி மூச்சு இறைக்க ஓடி கீழே சென்றேன்!! அள்ளி முடிந்த கொண்டை, அண்ணனின் லூசான ஒரு டி ஷர்ட், கீழே நைட்டு பேண்ட் என்று அணிந்து வந்த என்னை பார்த்து அதிர்ந்து கண்களை பெரிதாய் விரித்து வாயில் கை வைத்தான் ஜெஷ்வந்த்!! 😳🫢

“என்ன டா அப்படி பாக்குற?”

“ஹான் அயன் பண்ணி யூனிஃபார்ம் போட்டு போட்டு பார்த்துட்டு உன்னய இப்படி பாக்குறது கொஞ்சம் ஷாக்கிங் ஆக இருக்கு டி!!” 

“போக போக பழகிருவ!!! வண்டிய எடு…” என ஏறி அமர்ந்தேன்…

“அதுக்குன்னு ஏரியா பையன் மாதிரி வந்து நிப்பியா டி…!!!!!?” 

“ஆமா… சொல்லாம கொள்ளாம வந்தா பின்ன பட்டு புடவை கட்டியா ரெடியாகி நிப்பாங்க உன் மூஞ்சிக்கு?!!!!” 

“சரி இப்போ எங்க போறது!!?” என்ற படி அவன் வண்டியை ஸ்டார்ட் செய்து தெருவை தாண்டி நின்று, அந்த பக்கம் இந்த பக்கம் பார்த்து யோசித்தான்…

“ஒரு ரோஸ் இல்லை… இல்ல… ஒரு மல்லி பூ கூட வாங்கிட்டு வரலையா… மதுரையில கிடைக்காத மல்லியா??!!!”

“எனக்கே நீ சொல்லி தான் தெரியும்!!! அப்புறம் எங்கிருந்து வாங்குறது?!!” என்று கேட்டு கொண்டே அவன் படித்த பழைய பள்ளி இருக்கும் ஏரியாவுக்கு அழைத்து சென்றான்… அது அத்துவான காட்டு பகுதி போல் ஆள் அரவமற்ற நிலையில்,தெரு விளக்குகள் கூட இல்லாமல் இருண்டு இருந்தது..

போகும் வழியில் ஈகிள் பார்க் பார்த்து, “நான் ரொம்ப நாளா இங்க போகணும்னு அம்மா கிட்ட கேட்டுகிட்டே இருந்தேன்!!” என்றேன் கையை காண்பித்து… அதை தாண்டி அவன் செல்லும் போது கதை சொல்லி கொண்டே வந்தான், “LKG லந்து ஆறாவது வரைக்கும் நான் இப்போ நாம போற பள்ளியில் தான் படிச்சேன்!! இப்போ சுபிக்ஷாவும் இங்க தான் படிக்கிறா…” 

நானோ அரண்டு தான் போனேன், “இவனுக்கு ஸ்கூல் தவிர வேற இடமே தெரியாதா!!?” 

பிறகு அவன் வந்து நிறுத்திய இடத்தில் மொபைல் டார்ச் அடுத்து தான், தரையே கண்ணுக்கு தெரிந்தது!! அப்படியே அந்த பள்ளியை தாண்டி ஒரு பாழ் அடைந்த ஏரி ஒன்று இருக்க, அங்கு இருந்த கல் மேடை பாண்டு ஒரு அமைப்பில் இருவரும் தட்டு தடுமாறி சென்று அமர்ந்தோம்…

10 நிமிடம் பேசி கொண்டு இருந்தான்… பத்திரிகை எல்லாம் வைத்து முடிக்க போகும் நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லியவன், எனக்கும் பத்திரிகையின் புகை படம் காண்பித்தான்… வரும் 22 ஆம் தேதி, தெப்பக்குளம் அருகில் இருக்கும் ஒரு மண்டபத்தில் கல்யாணம் என்று அச்சிட பட்டு இருந்தது!! அது போக அடுத்து ஒரு குட்டி ஃப்ராக் போட்டோ காட்டி, “இது தான் என் அம்மா இன்னிக்கு போய் சுபிக்ஷா எனக்கும் டிரஸ் எடுத்துட்டு வந்தாங்க!!” எனக்கு வேஷ்டி சட்டை செட் எடுத்து கொடுத்தாங்க… 

“அழகா இருக்கு!!” 

“அப்போ நானு!!?” என்றான் கண்களை சிமிட்டி மழலை குரலில்… “பார்த்திட்டு ரிவ்யூ பண்றேன்!!🤣😂” என சொல்லி சிரித்தேன்… என் தோளில் கை போட்டு கொள்ள, படக்கென இருவரும் சிரிப்பதை நிறுத்தி விட்டு ஒரு நிமிடம் மௌனம் ஆகினோம்!! எனக்கு மூச்சு எல்லாம் திணறி, கால் லேசாக நடுக்கம் கொண்டது. ஆகையால் அந்த நிலையை இயல்பாக மாற்ற எண்ணி இருவரும் அப்படியே அந்த சாலை ஓரத்தில் நடந்தோம்!!

அடுத்த நாளும் என்னை அவ்வாறே அதே இடத்திற்கு அழைத்து சென்று மீண்டும் வந்து விட்டு சென்றான்… “Happy propose day 💗 to the one who made me blush for the first time in my life!” என்று வாழ்த்து சொல்லி இருந்தேன்… நாளைக்கு வர முடியாது, என்று சொல்லி எனக்கு ஒரு சாக்லேட் மட்டும் வாங்கி கொடுத்து சென்று இருந்தான்…

10 ஆம் தேதி வரவும், 11:30 மணிக்காக குளித்து கிளம்பி கிரைம் பிராஞ்ச் பஸ் ஸ்டாப்பில் சென்று வழக்கம் போல் அவன் தாமதமாக வர, நான் சென்று காத்து இருந்தேன்… “Happy teddy day டி என் டெட்டி🧸 குட்டி மா.!!” என்று என் மூக்கை பிடித்து ஆட்டி விட்டு ஏறி அமர சொன்னான்…

ப்ரியா சினி காம்ப்ளெக்ஸ் உள்ளே சென்று பைக்கை நிறுத்தி, உள்ளே அழைத்து சென்றான்… பிரேமலு படம்!! கொஞ்சம் இல்லை சரியான மொக்கை, கதையே இல்லாமல் இரண்டு மணி நேரம் ஓடியது கார்னர் சீட் இல்லாமல் இருந்தாலும் தியேட்டர் முழுக்க காலி என்பதால் நிறையவே தனிமை கிடைத்தது!! ஆனால் ஜெஷ்வந்த் எல்லை மீறாமல், சமத்து பிள்ளையாக தான் என் கையை கேட்டு கொண்டு என்னோடு பேசி சிரித்து காமெடி செய்த படி படம் பார்த்தோம்!!

படம் முடிந்ததும், அதன் வாசலில் உள்ளே பானி பூரி கடைக்குன்சென்று மசால் பூரி வாங்கி உண்டோம்.. பிறகு அடுத்து சந்திக்கவே இல்லை!! அவன் முழுக்க முழுக்க கல்யாண வேளையிலும், தெருவில் உள்ள அம்மன் கோவில் திருவிழா என்பதாலும் கால் கூட செய்யவில்லை!! கால் செய்தாலும், அவன் வீட்டு எதிரிலேயே கோவில் என்பதால் பாட்டு சத்தம் தான் கேட்டதே தவிர, பேச்சு சத்தம் ஒன்றுமே கேட்கவில்லை!!

அப்படி இருந்தும் பதின் மூன்றாம் தேதி ஐயா சரியாக ஹாஸ்டல் வாசலில் ஆஜர் ஆகி விட்டார்… எனக்கே அதிர்ச்சி தான்!! 

“புது பைக் ரொம்ப நாள் ஓட்டாம வைக்க முடியாது அதான்…” என்றான். நானும் இயல்பாக நாளை சந்திக்க முடியாது என்று இன்னிக்கே வந்து இருக்கிறான் போலும் என்று அவனுடன் ஏறி வெளியில் சென்றேன்… 

மீண்டும் அதே இருண்ட பள்ளி சாலைக்கு தான் சென்று நிறுத்தினான்.!! இம்முறை அங்கே நாங்கள் வழக்கமாக சென்று அமரும் அந்த கல் மேடையில் யாரோ அமர்ந்து இருந்தார்கள், ஆகவே அவன் நிறுத்தாமல் ஒரு ரவுண்டு அதை கடந்து பின் தெருவுக்கு சென்று விட்டு மீண்டும் ஒரு 10 நிமிடம் கழித்து வந்து பார்க்க வந்தோம்… அப்போதும் அவர்கள் இடம் பெயர்ந்த பாடு இல்லை!!

ஆகவே சற்று எரிச்சலோடு, ஜெஷ்வந்த் மீண்டும் யூ டர்ன் எடுத்து அந்த பள்ளியின் பின் தெருவுக்கு சென்று நிறுத்தினான்… அங்கு இருக்கும் ஒரு பெட்டி கடையில் நிறுத்தி அவன் சூயிங் கம் வாங்கி கொண்டு எனக்கு குர்குரே பாக்கெட் மற்றும் ஒரு 10 ரூபாய் டைரி மில்க் சாக்லேட் வாங்கி கொண்டு மேலும் சென்றான்… அங்கு ஏதோ கை விட பட்ட ஒரு தொழிற் சாலை போல் இருந்த ஒரு இருண்ட இடத்தில் நிறுத்தினான்.!!

எனக்கு அந்த மயான அமைதியே முதுகு தண்டை ஜில்லிட்டு போக செய்து இருந்தது!! வீடுகள் இருந்தது தான்… ஆனால் ஒரு ஆள் என்ன? ஈ காக்கா கூட இல்லை அந்த இடத்தில் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை… காடு தாண்டி, அந்த தொழிற் சாலையின் துரு பிடித்த இரும்பு கேட் வேறு அரண்மனை பேய் வீடு போல் தோன்றியது!!

அப்போது தான் கூட்டு வஞ்சனையால் தான் அவன் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி இருந்ததாக சொல்ல ஆரம்பித்து, அப்படியே ஒரு ஃப்ளாஷ் பேக் சொல்ல துவங்கினான் ஜெஷ்வந்த், குர்குரே பாக்கெட் பிரித்து ஒவ்வொன்றாக நான் வாயில் அதக்கிய படி ம்ம் ம்ம் என்று வழக்கம் போல் தலையாட்டி கதை கேட்க…

அப்படி என்ன சாதி நடந்து இருக்கும் ஜெஷ்வந்த் அவன் கனவான கிரிக்கெட் விளையாடுவதை கை விடும் அளவிற்கு?

அந்த இருட்டில் இரு இளையவர்களுக்கும் ஏதேனும் ஆபத்து வருமா…?

வாலண்டைன் டே உடைய முந்தைய நாள் ஒரு முக்கியமான நிகழ்வின் நாள் ஆகும்!! 

அதை ஷ்ரேயா அவள் வாழ்வில் அனுபவிப்பாலா? 

நாளை காதலர்கள் தினம் எவ்வாறு செல்லும் இருவருக்கும்?

அதை கொண்டாட, முதலில் இருவரும் நலமோடு வீடு திரும்பி சென்று சேர்வார்களா??

என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨ 

Thanks for reading மக்களே 🩷 

 

❤️ Loading reactions...
4 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page