அர்ஜூன் கார்ல போய்ட்டு இருக்கான்.
அபி காலிங் ன்னு பாத்துட்டு காரை ஓரமா நிறுத்துறான்..
அபி: “ப்ரியா வேண்டா ப்ரியா ப்ளீஸ் கட் பண்ணு டி”.
அர்ஜூன் கால் அட்டன் பண்ணிட்டான். ஆனா இது ப்ரியாக்கும் அபிக்கும் தெரியாது.
ப்ரியா: அக்கா..”நீ தான் மாமாக்கிட்ட பேசவே இல்லையே.. இப்போ பேசு”..
அபி : “நீ அடி வாங்க போற.. ஃபோனை வை டி.. என்ன நினைப்பாங்க”..
அர்ஜூன் என்ன டா இது கால் பண்ணிட்டு நம்மகிட்ட பேசமா இவங்ககுள்ள பேசிக்குறாங்க.
ப்ரியா: அக்கா..” அப்போ என்கிட்ட உண்மையை சொல்லு.. மாமா வை பிடிச்சு இருக்கா இல்லையா”??
அர்ஜூன் அபி என்ன சொல்லுவான்னு ரொம்பவே ஆர்வமா கவனிக்குறான்.
அபி : “அந்த பாட்டி க்கு கொஞ்சம் கூட ஈகோ பாக்க மா ஹேல்ப் பண்ணாரு. என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்காலை. பார்த்தா வரைக்கும் ஓகே தா..ஆனா எனக்கு ஒன்னே ஒன்னு தா இடிக்குது”.
ப்ரியா: “என்னது..அந்த தாடியா..விடுக்கா இது மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”.
அபி: “போடி என்னமோ தேவதாஸ் மாதிரி இருக்கு. முகமே தெரியலை”.
அர்ஜூன்:” ஓஓஓ தாடி பிடிக்கலையா”..
ப்ரியா: “ஃபோட்டோ லா தாடி இல்ல கா. செமயா இருந்தாரு”.
அபி : “ஃபோட்டோ பத்தி பேசுன கொன்றுவேன். எங்க டி என்கிட்ட காட்டுன்ன”..
ப்ரியா : “சாரி…சாரி”..
அர்ஜூன் அவனே கால் கட் பண்ணிட்டு மறுபடியும் அவன் பண்றான்.
அபி: “யாரு டி”.
ப்ரியா: தெரியலை இந்தா..(அது அர்ஜூன் நம்பர் ன்னு தெரியும். வேணும்னே அபிக்கிட்ட பொய் சொல்றா)
அபி: “ஹாலோ”..
அர்ஜூன் : “ஹாலோ, அபி”..
அபி : “ஆமா நான் அபி தா… நீங்க யாரு”.
அர்ஜூன் : “நான் அர்ஜூன்”.
அபி: “எந்த அர்ஜூன் “??
அர்ஜூன்: “அதுக்குள்ள மறந்துட்டீங்களா?? காலையில தானே பாத்தோம்”.
அபி : “அச்சோ சாரிங்க..என் தங்கச்சி தான் சும்மா விளையாட்டுக்கு ரிங் விட்டுட்டா.. சாரிங்க”.
அர்ஜூன்: “பரவாயில்லங்கா”.
அபி ஊருக்கு கிளம்பிட்டிங்களா ??
அர்ஜூன்:”ஹா..கிளம்பியாச்சுங்க”.
அபி: “ம்ம்.. பாத்து போய்ட்டு வாங்க”.
அர்ஜூன் : “ம்ம் சேரிங்க..2 நாளைக்கு அப்புறம் பாக்கலாம்”.
அபி : “2 நாளைக்கு அப்பறம் மா”..
அர்ஜூன் : “ஆமாங்க.. இன்னும் உங்ககிட்ட சொல்லுலாயா”??
அபி: “இல்லையே ?? நீங்களே சொல்லுங்க”.
அர்ஜூன் :” ட்ரஸ் எடுக்கங்க”.
அபி: “ஓ..சேரிங்க”..
அர்ஜூன் : “சரி அப்பறம் பண்றேன்”.
அபி : “ம்ம்”..
அர்ஜூன் போன் வைச்சுட்டு லைட்டா சிரிச்சுக்கிட்டே வண்டி எடுக்குறான்.
அபி லைட்டா சிரிச்சுக்கிட்டே அவ வரைஞ்ச படத்தை பாக்குறா..
நல்லதான் பேசுற… ஓகே தானா எனக்கு. நீ என்னை நல்லா பாத்துப்பீயா..
ப்ரியா:” யாருக்கிட்ட பேசிட்டு இருக்க கான்னு வந்து பாக்குறா”..
“கா. மாமாவை வரைஞ்சு இருக்க. அப்போன்னா உனக்கு மாமா வை பிடிச்சு இருக்கு. இதை கொடு பாக்குறேன்ன்னு வாங்கிட்டு ஓடுறா”..
அபி: “இப்போ எங்க டி ஓடுற”..
ப்ரியா:”மா பா இங்க பாருங்க அக்கா மாமாவை வரைஞ்சு இருக்கா”..
கணபதி : “அட அட என்ன அழகா அப்படியே வரைஞ்சு இருக்கா”..
அபி: “சும்மா வரைஞ்சு பாத்தேன் பா”.
கௌசல்யா: “உனக்கு பிடிச்ச தை தானே வரைவ.. அப்போ மாப்பிள்ளையை பிடிச்சு இருக்கு”.
அபி : “போங்க மான்னு ஓடுறா”..
கௌசல்யா:” மா.. கல்யாண புடவை எடுக்கறது பத்தி”.
அபி: “தெரியும் பா.. போலாம். நான் ரெடியா இருப்பேன் அன்னைக்கு”.
கௌசல்யா :” உனக்கு எப்படி டி தெரியும்”.
ப்ரியா : “மாமா சொல்லி இருப்பாரு அப்படி தானே கா”..
அபி:”ஆமா”..
கணபதி: “நல்லா இருந்தா சரி”..
அர்ஜூன் அவன் வீட்டுக்கு போறான்.
க்ரிஷ்: “என்ன டா ஆச்சு..கல்யாணத்தை கேன்சல் பண்ணிட்டியா”..
அர்ஜூன் :” இல்ல டா..மனசு வரலை”.
க்ரிஷ்: “ஏன் டா..என்ன மனசு வரலை”.
அர்ஜூன் : “கல்யாணம் வேண்டாம்னு தான் டா போனேன். ஆனா அவளை பாத்த அப்பறம் ஏதோ தோணுது. வேண்டாம் சொல்ல முடியலை டா”.
க்ரிஷ்: “அப்போ விழுந்துட்ட. சூப்பர் டா”..
அர்ஜூன் :”சரி நான் வரேன்னு.. ரெஸ்ட்
ரூம் போறான். ஒரு 1/2 மணி நேரம் கழிச்சு வரான்”.
க்ரிஷ் : “வாவ்….செமயா இருக்க டா.. எவ்வளவு நாள் ஆச்சு இப்படி பாத்து”.
அர்ஜூன் : “அது அவளுக்கு தாடி பிடிக்காதாம். அதா சேவ் பண்ணிட்டா. இனி இப்படி தான் இருப்பேன்”.
க்ரிஷ் : “டக்குன்னு மாறிட்ட”..
அர்ஜூன் :” நமக்கு பிடிச்சாவாங்களுக்காக கொஞ்சம் மாறலாம் தப்பு இல்ல டா”.
க்ரிஷ் : “சூப்பரா சொன்னா டா”.
தொடரும்…
