காதல் இதுதானா ? – காதல் 24

காதலாகும் 24:

என்னதான் மனதிற்குள் முடிவெடுத்து விட்டாலும் இதயம் ‘தொம் தொம்’ என்றுதான் அடித்துக் கொண்டது.

‘அவன் ஒத்துக் கொள்வானா..?மனம் நிறைய காதலை சுமந்து கொண்டு தன்னால் அவனை விலக்கித் தள்ள முடியுமா…?அவன் மனதை காயப்படுத்தி விடுவோமோ…?’,இப்படி பல கேள்விகள் அவள் மனதை குடைந்து கொண்டேதான் இருந்தன.

இரவு நெருங்க நெருங்க அவளுக்கு எதிலுமே கவனம் செல்லவில்லை.தேவையில்லாமல் வியர்த்து விறுவிறுத்துப் போனது. இரவு உணவை முடித்து விட்டு அவளுக்கு கண் காட்டி விட்டு அவன் மேலே அறைக்கும் சென்று விட்டான்.

‘பேசாமல் நேற்று போல் அம்மா அப்பாவுடனேயே படுத்து விடுவோமா…?’,மனம் கூட எண்ணியது.என்றைக்காக இருந்தாலும் இதை தான்தான் எதிர்கொள்ள வேண்டும்.. இந்த நிலை தொடர்கதையாக கூடாது என்ற முடிவுடன் மனதை தேற்றிக் கொண்டு மேலே ஏறினாள்.

இவள் உள்ளே நுழைந்த போது அவன் குளியலறையில் இருந்தான். ஜன்னலின் அருகே சென்று நின்றவள் வான வெளியில் கசிந்து கொண்டிருந்த நிலவை வெறித்தாள்.

அவளுக்குப் பயம்தான்.. தன் கணவனை நினைத்து அல்ல.. தன்னை நினைத்தே அவளுக்குப் பயம்…!மனதில் உறைந்திருக்கும் காதல் அவனை விலக்கித் தள்ளும் தைரியத்தை கொடுக்காதோ என்ற என்ற பயம்..அப்படி அவனுடன் ஒன்றி விட்டால்..காதல் இல்லாமல் தன்னுடன் கூடியிருக்கிறான் இந்த உணர்வே அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று விடும்..இந்த பயம்தான் அவளுக்கு.

ஜன்னல் கம்பியில் முகம் புதைத்து நின்றிருந்தவளை இடையோடு சேர்த்து அணைத்தது இரு வலிய கரங்கள்.அவளது தோள்பட்டையில் முகத்தை வைத்தவன் அவளோடு சேர்ந்து அந்த நிலவை ரசித்தான்.

“உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுனேன் தெரியுமா…?”,குரல் விரக தாபத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்தியது.

‘அவனுடன் பேச வேண்டும்’ திரும்பியவள்,”விஷ்வா…!” என்றுதான் அழைத்தாள். அது மட்டும்தான் அவளுக்கு ஞாபகத்திற்கு இருக்கிறது.எப்பொழுது அவள் இதழ்களைக் கவ்வியிருந்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை.

தனது மோகத்தை அவளுக்குள் இடம் மாற்றுவது போலொரு ஆழ்ந்த முத்தம்.அந்த முத்தத்தில் அவன் என்ன மாயம் செய்கிறானோ தெரியவில்லை..இதழோடு இதழ் பதிக்கும் அவனுடைய ஆழ்ந்த முத்தத்தில் அவள் மொத்தமாய் அவன் காலடியில் விழுந்து விடுகிறாள்.

அன்றும் அதுதான் நடந்தது.அவனைத் தடுக்க வந்தவள்..அவனுடைய முத்தத்தில் கிறங்கி அவளையும் அறியாமல் பதில் முத்தம் வரைய ஆரம்பித்தாள்.

இரு கைகளாலும் அவளை அள்ளிக் கொண்டு படுக்கையை நோக்கி நகர்ந்த போதும் கூட இருவரது இதழ்களும் விலகவில்லை.படுக்கையில் கிடத்தியவன் அவள் மேல் படர்ந்த போதும் இதழ் முத்தம் முடிவிற்கு வரவில்லை.

அவள் இதழ்களிலிருந்து விலகியவனின் உதடுகள் அவளது மேனியில் எங்கெங்கோ பயணம் செய்ய ஆரம்பிக்க..அவள் வேறு ஏதோ ஒரு மாய உலகில் பயணம் செய்ய ஆரம்பித்தாள்.அவனது வலிமையான கரங்கள் அவளை மொத்தமாய் உணர்ந்த போது கூட அவள் விழிகளைத் திறக்கவில்லை.

கரங்களும் உதடுகளும் நடத்திய ஆராய்ச்சிக்குத் தடையாக இருந்த அவளது உடையை விலக்கிய போது கூட,”ம்ஹீம்…”,என்று சிணுங்கினாளே தவிர அவனை விலக்க வேண்டும் என்ற எண்ணத்தை மறந்திருந்தாள்.

தங்கு தடையின்றி அவளது மேனியில் சுதந்திரமாக உலாவின அவனது கரங்கள். இதழ்களும் அதன்வழி பயணிக்க..பெண்ணவளின் நகக் கீறல்கள் அவனது வெற்று முதுகில் தடத்தைப் பதித்தன.

இருவரின் உணர்ச்சிகளும் கரையை உடைத்துக் கொண்டு சீறிப் பாய..”உன் அழகு என்னை பைத்தியக்காரனாக்குது டி…!”, உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் புலம்பினான் அவன்.

அவளைச் சுற்றியிருந்த மாயவலை பட்டென்று அறுந்து விழ, ‘என்ன காரியம் செய்கிறாய் யாழ்வி…?’,அவள் மனம் கடுமையாய் கேள்வி கேட்டது.

‘இப்பொழுது மட்டும் நீ அவனுடன் ஒன்றினால் காலம் முழுக்க உன்னால் உன்னை மன்னிக்க முடியாது…!’, மனம் எடுத்துரைக்க அவள் அவனை விலக்க ஆரம்பித்தாள்.

‘பயத்தில் எதிர்க்கிறாள்’ என்று அவன் தவறாகப் புரிந்து கொண்டு,”ஒண்ணுமில்லைம்மா…ஜஸ்ட் ரிலாக்ஸ்…!”,காதோரம் குனிந்து அவளை சமாதானப்படுத்தியவன் தாம்பத்திய பாடத்தின் இறுதி அத்தியாயத்தை வரைய முன்னேற..அவளது எதிர்ப்பு அதிகமானது.

அவனுக்கு சற்று கோபம் கூட வந்தது.

“வாட் யாழ்வி…?”, முகச் சுளிப்புடனேதான் வினவினான்.

“இ..இது வேண்டாம்…!”,அவளது கண்களில் கண்ணீர் கரையுடைக்கத் தயாராய் காத்திருந்தது.

“பயப்படாதே ம்மா…நான் பார்த்துக்கிறேன்…!”அவன் அப்பொழுதும் அவளுக்குப் பயம் என்றுதான் நினைத்தான்.

”இல்ல..ப்ளீஸ்..இது வேண்டாம்…!”,பதறி தவித்து மறுத்தாள் அவள்.

“யாழ்வி…!இப்போ நாம எந்த நிலையில இருக்கிறோம் தெரியுமா…?என்னுடைய ஃபீலிங்சை கொஞ்சமாவது புரிஞ்சுக்க ட்ரை பண்ணு…!”,என்ன முயன்றும் அவன் குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்தது.

அவளுக்கும் புரிந்தது. உணர்ச்சிகளின் உச்சக்கட்டத்தில் கொண்டு நிறுத்தி அவனை தடாலென்று தள்ளுகிறோம் என்பது அவளுக்கும் புரிந்தது. ஆனால், அதற்காக தன்னை அவனுக்கு கொடுத்துவிட முடியாதே…?

மனதில் நடந்த போராட்டத்தைத் தாங்க முடியாமல் வெடித்து விட்டாள்.

”ஐயோ…!ப்ளீஸ்…எனக்கு வே.. வேண்டாம்…!எனக்கு அ..அருவெறுப்பா இருக்குது…!”,கண்ணீர் விட்டு கதற..அவன் நொறுங்கி விட்டான்.

எந்த ஆண்மகனுக்குமே அவமானத்தைத் தேடித் தரும் வார்த்தை இது.சுள்ளென்று பெருகிய கோபத்தையும் மீறி.. அவனது இதயத்தில் பெரு வலி ஒன்று எடுக்க..அவன் தீச்சுட்டாற் போல் அவளிடம் இருந்து விலகினான்.

அவள் கூறிய வார்த்தைகள் அவனுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. ‘அருவெறுப்பா இருக்குது…’,இந்த வார்த்தைகள் அவனது ஆண்மையை சீண்டி விட..அவளருகில் இருக்க கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. வேகமாக எழுந்து உடைகளை அணிந்தவன்..கீழே சிதறியிருந்த அவளது உடைகளை அள்ளி அவள் முகத்தில் விட்டெறிந்து விட்டு பால்கனிக்குச் சென்று விட்டான்.

விடாமல் அழுது கொண்டிருந்தவளின் மனம் ரணமாய் வலித்தது.அவள் ஒன்றும் அவன் அருகாமையை வெறுத்து அந்த வார்த்தைகளை சொல்லவில்லை.காதல் இல்லாமல் வெறும் காமத்துடன் கூடும் கூடல் தான் அருவெறுப்பாக இருக்கிறது என்ற எண்ணத்தில்தான் அவள் கூறினாள்.ஆனால்,அவனுக்கு அது தெரியாதல்லவா…?

அவன் மனதை வேதனைப்படுத்தி விட்டோம்..அவளுக்கும் புரிந்ததுதான்.கோபத்தை மீறி அவன் கண்களில் தெரிந்த வலி அவள் மனதை ரம்பம் கொண்டு அறுத்தது.

‘என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் யாழ்வி…?’ காதல் கொண்ட மனம் கோபமாய் முறைத்தது.

எழுந்து அவனருகே செல்ல துடித்த கால்களை அடக்கியவள் தன் நிலையை உணர்ந்தவளாய் அவசர அவசரமாக உடையணிந்தாள்.கண்களில் நிற்காமல் கண்ணீர் பெருகியது.’எவ்வளவு ஆசையுடன் இதை ஆரம்பித்தான்..அவர் மனதை இப்படி கொன்று விட்டோமே…’, மனம் வேறு புலம்பித் தவித்தது.

பால்கனியின் மர கைப்பிடியில் இரு கைகளையும் ஊன்றி நின்றிருந்தவனின் கரங்களின் நரம்புகள் புடைத்திருந்தன.மனமோ உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது.அனைத்தையும் பிய்த்து எறிந்து விட வேண்டும் போலொரு வெறி.இன்னும் சற்று நேரம் உள்ளே இருந்திருந்தால் அவளை மிக மிக வன்மையாய் காயப்படுத்தியிருப்போம் என்பது புரிந்தது.

இந்த அத்தனை ஆத்திரத்தையும் மீறி அவமானம். வேதனை..இதயத்தில் வலி …!

‘அருவெறுப்பா இருக்குது…’,அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

“ஷிட..”,பக்கத்தில் இருந்த தூணில் கை முஷ்டியை மடக்கி ஓங்கி குத்த,

“அய்யோ…”என்ற பதட்டமான குரல் பின்னாலிருந்து வந்தது.

அவனுக்குத் தெரியும்..அவள்தான் என்று.இருந்தும் திரும்பிப் பார்க்கவில்லை.கை முஷ்டியை இறுக மூடியவன் பல்லைக் கடித்துக் கொண்டான்.திரும்பிப் பார்த்தால் இருக்கும் ஆத்திரத்தில் அவளை ஓங்கி அறைந்து விடுவோம் என்பது உரைக்க..அவன் அப்படியே சிலை போல் நின்றான்.

”வி..விஷ்வா…”அவ்வளவுதான் அடுத்த நொடி அருகிலிருந்த பூத்தொட்டியை எடுத்து வீசி எறிந்தான்.

அது அவள் காலடியில் சென்று உடைந்து சிதறியது.

”ஸா..ஸாரி…!”,அவனது ரௌத்திரத்தில் அவளுக்கு சர்வமும் நடுங்கியது.எப்படியோ எச்சிலைக் கூட்டி விழுங்கி மன்னிப்பு கேட்டாள்.

வேகமாக திரும்பியவன் தொங்கிக் கொண்டிருந்த அலங்கார ஊஞ்சலை எட்டி உதைக்க அது ‘க்றீச்’ என்ற சப்தத்துடன் அங்கும் இங்கும் ஆடியது.

உடல் தூக்கிப் போட காதைப் பொத்திக் கொண்டு தள்ளி நின்றாள் அவள்.சற்று முன் அவன் தூண்டிய மோகத்தில் நடுங்கிய உடல்..இப்பொழுது பயத்தில் நடுங்கியது.

தான் பேச பேச அவனுடைய ஆத்திரம் எல்லை மீறுகிறது என்பதை புரிந்து கொண்டவள் மௌனமாக கண்ணீர் வடித்தபடி உள்ளே செல்வதற்காக திரும்பினாள்.

“என்னைப் பிடிக்கலைன்னா முதலிலேயே என்னைத் தடுத்திருக்கலாமே…இப்படி என் உணர்வுகளோடு விளையாடி கொன்றிருக்க வேண்டாம்…!”,வலியில் தோய்ந்து வந்தன அவனது வார்த்தைகள்.

அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனின் முகம் மட்டும் பக்கவாட்டில் திரும்பி அவளை வெறித்தது.அவன் கண்ணில் அவ்வளவு வலி..வேதனை.

மனம் முழுக்க காதலை சுமந்து கொண்டிருப்பவளால் அவனது இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.பெரும் கேவலொன்று அவள் அடி வயிற்றில் இருந்து எழுந்தது.

எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அவள் கண்ணீரை வெறித்தவன் உள்ளே சென்று விட்டான்.பால்கனியின் தரையிலேயே தொய்ந்து அமர்ந்தவள் கதற ஆரம்பித்தாள்.

சூரியனின் சுள்ளென்ற கதிர்கள் மேலே படவும்தான் கண் விழித்தாள் யாழ்வி. நேற்று இரவு அழுது அழுது ஓய்ந்து அப்படியே பால்கனி தரையில் படுத்து உறங்கியிருந்தாள். நேற்று நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக ஞாபகம் வர வேதனையில் கசங்கிய மனதை சரி செய்து கொண்டு எழுந்து படுக்கையறைக்குள் வந்தாள்.

அவளது கணவன் கிளம்பிக் கொண்டிருந்தான்.காக்கி பேண்ட் அணிந்து பெல்ட்டை மாட்டிக் கொண்டிருந்தவன் மேலே கையில்லா பனியன் மட்டும் அணிந்திருந்தான்.அந்தக் கோலத்தில் அவனைக் கண்டதும் நேற்று இரவு தனது கரங்களால் வெட்கத்தை விட்டு அவனை ஸ்பரிசித்த நினைவுகள் வந்து போக..அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

அழுத்தமான பார்வையை அவளை நோக்கி வீசி வைத்தவன் காக்கி சட்டையை எடுத்து அணிந்தான்.

கிளம்பி வெளியே செல்லப் போனவனின் நடை ஓரிரு நிமிடம் தயங்கி நின்றது.

”உன் அப்பா அம்மாவுக்கு நமக்குள்ள நடந்தது எதுவும் தெரிய வேண்டாம்…!”

“நான் சொல்ல மாட்டேன்…! தேங்க்ஸ்…”,தனது பெற்றோரை பற்றி அவன் சிந்திப்பது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

“உன்னை விட எனக்கு அவங்க மேல அக்கறை இருக்குது…!இல்லாதவங்களுக்குத்தான் அதனோட அருமை தெரியும்…”,உரைத்தவன் வெளியேறி விட்டான்.

அவளுக்குத்தான் மனதில் ஒரு வலி.அனைத்தையும் ஒதுக்கித் தள்ளியவள்..குளித்து கிளம்பி கீழே வந்தாள்.

பெற்றோர் வந்திருக்கிறார்கள் என்று அவள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தாள்.இவள் கீழே வரும் போதே கலாவதி பாதி சமையலை முடித்திருந்தார்.

“ஸாரி ம்மா…!”,தாயை வேலை வாங்கி விட்டோமோ என்ற குற்றவுணர்வுடன் அவள் மன்னிப்பு வேண்ட

“பரவாயில்லை டா…!நான் இல்லைன்னா.. நீதானே சீக்கிரம் எழுந்து வந்து சமைச்சாகணும்…!நான் ஊருக்குப் போகிற வரைக்கும் காலையில நான் சமைக்கிறேன்…!”,வாஞ்சையுடன் கூறினார்.

விஷ்வாவுக்கோ அவள் கையால் கட்டித் தரும் உணவை கொண்டு செல்லவே விருப்பம் இல்லை.அனைவரும் இருப்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கிச் சென்றான்.

ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு அவளது பெற்றோர்கள் கிளம்பிச் சென்று விட,அதுநாள் வரை அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அவள் கேட்கும் கேள்விகளுக்கு நின்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான். இப்பொழுது அவர்களும் இல்லை இல்லையா…அவளிடம் முகம் கொடுத்து கூட பேச மறுத்தான்.

வலிய வந்து பேசுபவளின் கேள்விகளுக்கும் ‘ஆம்.. இல்லை’ என்ற இரண்டு பதில்தான்.

அதுநாள் வரை மதிய உணவை கொண்டு சென்றவன்..அவளது பெற்றோர்கள் கிளம்பியவுடன் அவளிடம் உணவை மறுத்தான்.

”நான் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்…!”,உரைத்து விட்டு வெளியேறப் போனவனை ஓடிச் சென்று தடுத்தவள்,

”ஏன்…?”,காரணம் கேட்டாள்.

“நான் தொட்டால் அருவெறுப்பா இருக்குதுன்னு சொன்னவள் கையால சமைத்த சாப்பாடு எனக்கு வேண்டாம்…!”,முகத்தில் அடித்தது போல வந்தன வார்த்தைகள்.

சட்டென்று அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.

“ப்ளீஸ் விஷ்வா…!”,

”எந்த உரிமையில நீ என் பெயரை சொல்லி கூப்பிடற..ம்…?”,புருவம் உயர்த்தியவனின் முகம் கடுமையாய் இறுகியிருந்தது.

”அவனவன் என் பெயரை கேட்டால் நடுங்குவான்…ஆனால்..நீ அசால்ட்டா என்னை பெயர் சொல்லி கூப்பிடற..அதுவும் சுருக்கி..”,

அவளுக்கும் கோபம் வந்து விட்டது.

குர்திக்குள் மறைந்திருந்த தாலி சங்கிலியை இழுத்து அவன் முன் காட்டியவள்,”இதை நீங்கதானே காட்டுனீங்க..அந்த உரிமையிலதான் பெயர் சொல்லி கூப்பிடறேன்…!”,என்றாள்.

”ஓ..”,கண்கள் இடுங்க அவளை பார்த்தவன்,”இதுக்கான உரிமையை நான் காண்பிக்க ஆரம்பித்தால் நீ தாங்க மாட்ட…”,அசால்ட்டாய் அவன் கூற அவள் பயத்தில் விழிகளை விரித்தாள்.

“உடனே உன் கண்ணை முழிக்காதே…! ‘நீ தொட்டால் அருவெறுப்பா இருக்குது’ன்னு சொன்னவளைத் தொட எனக்கும் விருப்பம் இல்லை…!”,அவளது கண்களை ஆழ்ந்து நோக்கி உரைத்தவன் வேகமாக வெளியேறி விட்டான்.

அவனுக்காக பார்த்து பார்த்து சமைத்த உணவுகள் அவளை பார்த்து சிரித்தது.

அன்று மட்டுமல்ல..அந்த நிலை தொடர்ந்தது. அவள் கையால் சாப்பிட மறுத்தான் அந்தக் கோபக்காரன்.காலையும் மாலையும் கிளம்பி வெளியே சென்று சாப்பிட்டுக் கொள்பவன்..இரவு வரும் போது கையோடு பார்சல் வாங்கி வந்து விடுவான்.

அவளும் எப்படி எப்படியோ கெஞ்சி பார்த்து விட்டாள்தான்.. ம்ஹீம்..அவன் அசைந்த பாடாக இல்லை. அவனது கோபத்தையும்..முரட்டு பிடிவாதத்தையும் அவள் முழுதாய் உணர்ந்த தருணம் அது.

அவளுக்கே பயம் பிடித்துக் கொண்டது. எங்கே தன்னை மன்னிக்கவே மாட்டானா..என்று அவள் தினம் தினம் மறுக ஆரம்பித்தாள்.

அவள் சமைத்த உணவை மறுத்து விட்டு..ஹோட்டலில் வாங்கி வந்த சாப்பாடை அவன் உண்ணும் போது அவளுக்கு இதயமே வலித்தது.குளம் கட்டிய கண்களுடன் வேதனையோடு அவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள் அவள்.அவனும் அதை உணர்ந்துதான் இருந்தான்.இருந்தாலும் தன் நிலையிலிருந்து இறங்கி வர அவன் விரும்பவில்லை.

அவள் பேசிய வார்த்தை இன்றளவும் அவன் மனதில் ஓயாமல் ஒலித்து அவனை வாட்டிக் கொண்டிருக்கிறதே…?அவனால் எப்படி அவளை மன்னிக்க முடியுமாம்…?

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page