அத்தியாயம் – 6

“அப்பா அம்மாவுக்கு ஏதாவது உடம்புக்கு வந்து விட்டதா.. ஏன் இப்படி பதட்டமாக வந்து இருக்கீங்க .. அதுவும் இவ்வளவு விடியற் காலையிலேயே..”

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா கொஞ்சம் வழியை மறிக்காமல் நகர்ந்து நில்லுடா ..என் மருமகள் எங்கே.. மித்ராவை தான் தேடிக் கொண்டு வந்தேன்.. உன்னிடம் எனக்கு என்ன பேச்சு .. முதலில் வழியை விடேன்.. “மகனை இடித்துத் தள்ளி விட்டு உள்ளே நுழைகிறார்..

அவர் பின்னேயே வேகமாக வந்தவன், “அப்பா பாவம் அப்பா அவள் ..ராத்திரியெல்லாம் வாந்தி எடுத்து விட்டு இப்பொழுதுதான் அசந்து தூங்குகிறாள் ..அவளையும் ஏன் இப்படி விடிவதற்குள்ளே எழுப்பி தூக்கத்தை கெடுக்கிறீர்கள்.. எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக் கொள்ளலாம் .. உங்களுக்கு தான் தூக்கமே வராது.. அதனால் இருப்பவர்களின் தூக்கத்தையும் ஏன் கெடுக்கறீங்க.. அவள் எழுந்ததும் எந்த செய்தியாய் இருந்தாலும் சொல்லிக் கொள்ளலாம்.. “

இவர்கள் பேச்சு சத்தம் கேட்டதுமே மித்ரா எழுந்து உட்கார்ந்து விடுகிறாள்..குட் மார்னிங் மாமா என்கிறாள்..

“டேய் போடா எங்க வீட்டு மகாலட்சுமியே எழுந்துட்டு .. எழுந்ததுமே நல்ல வார்த்தைகளாய் பேசுது..நீ என்ன என்றால் யாருக்காவது உடம்பு சரியில்லையா என்று கேட்கிற.. “

“அடப்பாவி அப்பா நல்லதுக்கே காலமில்லை ..பதறி கொண்டு ஓடி வரவும் நான் பயந்து போய் அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா என்று கேட்டேன்.. ஹூம் என்ன பண்றது.. காலம் கெட்டுக் கிடக்கு..நல்லது செய்றவங்களுக் எல்லாம் இப்படித்தான் கெட்ட பெயர் ஆகுது.. “

அவன் பேசுவதை மாறன் காதில் வாங்கவே இல்லை ..

“அம்மாடி  உன்னுடைய கை.. “

அவர் பேசி முடிப்பதற்குள்ளேயே  தன் உள்ளங்கையை விரித்துப் பார்க்கிறாள்..

” நன்றாக தானே இருக்கிறது மாமா.. என்ன ஆச்சு .. “

“ஆமாம்மா உன்னுடைய கை ராசியான கை ..எப்படி என்று வந்து பாரேன் உடனே வா..” தன் மகளை கைப்பிடித்து இழுத்துச் செல்வதை போல மருமகளை அழைத்து செல்கிறார்..

அப்பா இவ்வளவு தூரம் பேசுவாரா என்பதே அரவிந்துக்கு ஆச்சரியமாக இருக்கிறது .. இவ்வளவு காலம் இருந்த என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு காசு கேட்பார் ..வந்து கொஞ்ச நாள் ஆனா மருமகளிடம் பக்கம் பக்கமாய் பேசுகிறாரே.. அப்படி என்னதான் இவர்கள் இருவரும் செய்து வைத்திருக்கிறார்களே தெரியவில்லையே .. “ஆர்வத்துடன் அவனும் அவர்கள் பின்னே செல்கிறான்..

அவர் எதற்காக கூட்டி செல்கிறார் என்று மித்ரா புரிந்து கொள்கிறாள்..” மாமா நீங்க செடியை காட்ட தானே போகிறீர்கள்.. “

” ஆமாம்மா..”

“அப்படி  ஒரு நிமிடம் இருங்க மாமா..” நான் முகம் கழுவி வாயை கொப்பளித்து விட்டாவது வருகிறேன் ..பாவம் அதுங்களுக்கு பல் விளக்காமல் போனால் நாற்றம் பிடிக்காது அல்லவா..”

” நீ அதை உயிர் என்று நினைப்பதால் தாம்மா அதுங்க இப்படி ஆயிட்டுங்க..” பரவசமாய் பேசுகிறார்..

” என்னதான் ஆச்சு மாமா . ஏன் இப்படி பேசுறீங்க ..எனக்கு ஆர்வம் தாங்கல.. “

” நீ போய் முதலில் முகத்தை கழுவிட்டு வா.. பிறகு நேரிலேயே போய் பார்க்கலாம்.. “

இருவரும் பேசுவது தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கிலுக்கி மொழி கேட்பது போல மிரண்டு போய் கேட்டுக் கொண்டிருந்தவனை பார்த்து கிண்டல் செய்கிறார்..

“நீ ஏன்டா வெட்டியா நின்னுகிட்டு இருக்க.. உனக்கு ஆயிரத்தி எட்டு  ஜோலி இருக்கும் …இது உனக்கு சம்பந்தம் படாத விஷயம் வேற..போய் உன் வேலையை பாரு ..”என்று விரட்டுகிறார்..

அப்பா கோர்வையாய்  இவ்வளவும் பேசியதும் என்னதான் ஆகிறது என்று பார்ப்பதற்காக ஆர்வத்துடன் அவர்கள் பின்னே சுற்றிக் கொண்டு இருக்கிறான் அரவிந்த்..

தோட்டத்திற்கு போய் அதை கண்டதும் மித்ரா அசந்து போகிறாள்.. ‘ இது எதேட்சையாய்  நடந்ததா இல்லை மாமா சொல்வதை போல இதுகளுக்கும் உயிர் இருக்கிறதா.., என்று அவளால் நம்ப முடியவில்லை ..

‘மாமாவுக்கு என்னை பிடித்து இருப்பதால் மிகவும் புகழ்கிறாரோ ..,என்று அவரிடமே கேள்வி கேட்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்கிறாள்..

” மாமா எல்லாரும் தண்ணீர் ஊற்றினாலும் இப்படித்தானே இருக்கும்.. நேற்றே நான் பார்த்தேன் ரோஜா செடி முழுக்க நிறைய மொட்டுக்கள் இருந்தன.. நான் நினைத்துக் கொண்டே தான் தண்ணீர் ஊற்றினேன். எல்லாமே  பூத்தால் எத்தனை அற்புதமாக இருக்கும் என்று ..அதே போலத்தான் இன்று நடந்திருக்கிறது ..நீங்கள் தண்ணீர் ஊற்றி இருந்தாலும் இப்படித்தான் ஆகியிருக்கும் மாமா..”

“இல்லம்மா நான் ஊற்றினால், இதை எப்படி சொல்வது.. ” என்று யோசித்தவர் செடிகளை செல்லமாய் திட்டுகிறார்..

” இதுங்களுக்கெல்லாம் கொஞ்சம் திமிரும்மா.. தினமும் செய்து கொண்டிருக்கிறேன் என்று திமிரு வச்சிட்டு ..இந்த கிழவனுக்கு வேற வேலை இல்லை .எப்படியும் நம்மை கவனித்துக் கொள்வான் என்ற மமதை ..அதனால பாதி தான் கொடுப்பாங்க ..மிச்ச மொக்கை எல்லாம் கீழே கொட்டி விடுவாங்க.. புதிதாக ஒருத்தங்க வந்திருக்காங்க ..அவங்களை நம்ம பாராட்டணும் என்று எண்ணிக் கொண்டு தான் எல்லாருமே பூத்துக் குலுங்கி இருக்காங்க பார்த்தியா..”

மித்ராவுக்கு மாமனார் தன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதை கேட்கவும் என்னவோ போல் ஆகிறது.. ‘இதற்கெல்லாம் நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் .. நான் இந்த நம்பிக்கையை கடைசி வரைக்கும் உடைக்காமல் இருக்க வேண்டும்.., என்று எண்ணிக் கொண்டவள் லேசாக குரல் கம்ம கண்கள் கலங்க அவரிடம் பேசுகிறாள்..

” எது எப்படியோ நம்ம தோட்டத்துல ரோஜா பூத்து குலுங்கி கமகமவென மணம் வீசுறதைப பார்க்கவே அட்டகாசமா இருக்கு பாருங்க.. இது ஒன்னு போதும் இந்த நாள் நிறைவாய் இருப்பதற்கு.. “

இருவரும் பேசுவதை கேட்டதுமே அரவிந்துக்கு மண்டையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருக்கிறது..

“வீட்டுல ஒரு பைத்தியம் தான் செடிகள் கிட்ட பேசிகிட்டு இருந்தது என்று பார்த்தால் இப்பொழுது அவருக்கு துணையாய் இன்னும் ஒன்று சேர்ந்து கொண்டதே. போகிற போக்கைப் பார்த்தால் இரண்டு பேரையும் பிரிக்க முடியாது போலயே.. என்னக் கொடுமைடா இது  ..தண்ணீர் ஊற்றினால் செடி தானா முளைக்க போகிறது .. பூத்துக் குலுங்கப் போகுது..என்னமோ வீட்டில் இருக்கும் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி வயிறு நிரம்பியதை போல பேசுகிறார்களே..”
வாயை விட்டுக் கேட்டு  கடைசியில் அப்பாவிடம் திட்டும் வாங்கிக் கொண்டு வருகிறான்..

“அடச்சே இதற்காகத்தான் இத்தனை பரவசம், பதட்டமா ..நான் என்னவோ ஏதோ என்று சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் வந்தால் கடைசியில் இதற்கா இத்தனை பாராட்டுக்கள்.. செடிகளுக்கு தேவை முதலில் சூரிய ஒளி, அடுத்தது தண்ணீர் ..இதை இரண்டும் இருந்தாலே போதும்..இந்த செடிகளுக்கு நான்  தண்ணீர் ஊற்றினாலும் தான் பூக்கப் போகிறது.. “

” சரிடா  இன்றைக்கு சாயந்திரம் நீ ஊற்று எத்தனை பூக்கள் பூக்கிறது என்று பார்ப்போம்.. “

உடனே அரவிந்த் பின் வாங்குகிறான்.. “ஆங் இதெல்லாம் போங்கு ஆட்டம் போங்க.. இருக்கும் எல்லா பூக்களுமே பூத்து விட்டன ..இதற்கு மேல் நான் தண்ணீர் ஊற்றினாலும் ஊற்றா விட்டாலும் எந்த பூவும் பூக்காது இனி மொட்டு வைத்தால் தான் பூவும் வரும்… அப்பா நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க.. புதுசா வந்தவ கிட்ட என்னை மட்டம் தட்டி பேசுறியா.. “

மித்ரா சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.. “அய்யய்ய அப்பா இவளுக்கு புதுசா ஒரு வியாதி வந்துட்டு தெரியுமா..” என்றதும் அவர் பயப்படுகிறார் ..

“அட நீங்கள் பயப்படும் அளவிற்கு எல்லாம் இல்லை .யாராவது சண்டை போட்டால் இவளுக்கு சிரிப்பு வந்து விடுகிறது.. அது என்ன பழக்கமோ .. இவளிடம் நான் எப்படி ஏதாவது என்றால் சண்டை போடுவது ..எனக்கு இது புரியவே இல்லை .இப்படி சிரிப்பவளிடம் நான் என்னவென்று சண்டை 
போடுவது.. “

“டேய் தேவையில்லாமல் என் மருமகளை பேசாதடா.. அந்தப் பெண் இருக்கும் இடம் நந்தவனம் மாதிரி தான் பூத்துக் குலுங்கும் ..சண்டை வம்பு வராது.. “

“அய்ய எல்லாத்துக்கும் தோட்டத்தையே வச்சு பேசுங்க .. நான் வரலடா சாமி இந்த ஆட்டத்துக்கு ..என்னை ஆளை விடுங்கடா சாமி .. “

“போடா மண்ணாங்கட்டி ஜடம்.. உன்னை யாருடா இங்க கூப்பிட்டது .. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்..நீ போய் உன் வேலையை பாரு ..அதே போல உன்னோட அம்மா ஒருத்தி இருப்பாளே கயல்னு.. அவளையும் இந்த பக்கம் அனுப்பி விடாதே.. அவளும் உன்னை மாதிரியே ஏதாவது பேசிட்டு போவா. அதுக்கு பிறகு ரெண்டு பேருமே என்னிடம்  திட்டு வாங்கணும் .. “

” மாமா ஏன் அவங்க கிட்ட வம்பு செய்றீங்க.. பாவம் அவர்களை விட்டுடுங்க..” என்று அவரை மித்ரா சமாதானம் செய்கிறாள்….

அவளுக்கும் தோட்டம் ஒரு பொழுது போக்காக தான் போகிறது.. கணவன் வேலைக்கு போன நேரமெல்லாம் தோட்டத்தில் வேலைகள் ஆரம்பித்து விடுகிறாள்..

‘நல்லா இருந்த பெண்ணை போய் இப்படி தோட்டத்தைக் காட்டி கெடுத்து வைத்திருக்கிறார் இந்த மனுஷன்.. அவர்தான் பைத்தியம் மாதிரி செடிகளோட பேசிக் கொண்டு இருந்தார் என்றால் இப்பொழுது இந்த பெண்ணும் அதே மாதிரி  செடிகள் அருகில் நின்று தடவி கொடுத்து பேசிக் கொண்டிருக்கிறது.. இதெல்லாம் சரியா வராது என் மகனிடம் சொல்லி இதை நிறுத்த சொல்ல வேண்டும் .. ,

கயல் மகனிடம் இதை புகாராக எடுத்துக் கூறுகிறார்.. ” அட போம்மா நான் இவ்வளவு நேரம் உன் புருஷன் கிட்ட திட்டு வாங்கிட்டு இப்பதான் உள்ளே வரேன் ..திரும்பவும் திட்டு வாங்க சொல்கிறாயா..என்னால எல்லாம் சொல்ல முடியாது.. அம்மா நாளைக்கு எனக்கும் ஒரு டாஸ்க் இருக்கு ..நான் தண்ணீர் ஊற்றினால் பூக்கள் பூக்கிறதா என்று.. இப்பொழுது என்னம்மா செய்றது.. “

” அச்சச்சோ உன்னையும் அவங்க மாற்றி அவங்க வலைக்குள்ள கொண்டு போக போறாங்கடா.. போய் மாட்டாதடா.. நான் ஒரு ஆளு தப்பித்ததோடு நீயும் எனக்கு துணையா  இருந்த  நம்பிக்கையோடு இருந்தேன்.. இப்பொழுதும் நீயும் போகிறாயே .. “என்று பதைக்கிறார்..

” இல்லம்மா இரண்டு பேரும் சவால் வேற விடுறாங்க.. நான் தோத்து போயிட்டா என்ன பண்றது .. “

“தோத்துப் போடா அதுதான் உனக்கு நல்லது.. ” என்று பாடம் கூறுகிறார் கயல்..

சின்ன சின்ன செல்ல சண்டைகளுடனும் குடும்பத்துடன் ஒற்றுமையாகவும் இருக்கவும் நாட்கள் வேகமாய் ஓடுகிறது… பிரசவ நேரமும் நெருங்கி விடுகிறது..

லேசாக வலி வரவுமே மித்ரா பயந்து அழுகிறாள். ஹாஸ்பிடல் சென்று  காட்டி விட்டு வரவுமே அவளது பிரசவ டாக்டர் லட்சுமி, “சார் இன்னும் பிள்ளை வலி வரவில்லை ..இரண்டு நாட்களாவது ஆகும்.. குழந்தை பொசிசன் திரும்ப.. அப்பொழுது வலி வந்தால் உடனே அழைத்து வந்து விடுங்கள் .. “என்று அனுப்பி விடுகிறார்..இவளுக்கு தான் வலி பொறுக்க முடியவில்லை..

தொடரும்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page