அத்தியாயம் – 7

“இருங்க கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்து பார்ப்போம்.. எனக்கு என்னமோ வலி வந்து விடும் என்று தான் தோன்றுகிறது .. “என்றதும் ஹாஸ்பிடல் வராண்டாவில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்கிறார்கள் ..

மித்ரா டாக்டரைத் திட்டுகிறாள்.. “என்னங்க இவங்க இப்படி சொல்றாங்க.. என்னோட வலி எனக்கு தான் தெரியும்.. உடனே ஏதாவது செய்து குழந்தை எடுத்தால் என்ன .. “

“ஏன்டி அவங்க எத்தனை பிரசவம் பார்த்திருப்பாங்க.. அவங்களுக்கு தெரியாதா இது பிள்ளை வலி எது , பொய் வலி எது என்று .. “

” அம்மாடி இதுவே என்னால் தாங்க முடியவில்லை.. இன்னும் நிஜ வலி வந்தால் எப்படி இருக்குமோ ..நீங்க போய் புவனா வரச் சொல்லிட்டு போய் மாத்திரை மருந்துகளை வாங்கி விட்டு வாங்க .. ” என்று அவனை அனுப்பி விட்டு புவனாவிடம் ஏதோ பேசுகிறாள்…

அவன் வரும் வரையுமே இருவரும் பேசுகிறார்கள் ..இருவரின் முகமும் வியர்த்துக் கொட்டி கிடப்பதை பார்த்ததும் “ஏன் உங்கள் இரண்டு பேருக்கும் இப்படி உயர்த்து கொட்டி இருக்கிறது.. “அரவிந்த் கேட்கிறான் ..இருவருமே பதில் கூறவில்லை என்றதும், “என்ன புவனா உங்க ஆஸ்பிட்டல் நிர்வாகமே சரியில்லையே .. “என்கிறான்..

அவள் பயந்து போய் , “என்ன அண்ணா சொல்றீங்க.. அதெல்லாம் நன்றாகத் தானே இருக்கு..ஏதாவது என்று புகார் சொல்லி விடாதீங்க அண்ணா..உனக்குத் தெரிந்தவர் தான் புகார் கூறியிருக்கிறார் என்று என் வேலையே போய் விடும்.. ” விட்டால் அழுது விடுவாள் போல..

“அடடா நான் சும்மா விளையாட்டுக்கு சொல்கிறேன் புவனா.. இதோ பார் இந்த  பேன் சும்மா கடமைக்கு சுற்றுகிறது. அதனால் தான் இரண்டு பேருமே வியர்த்துக் கிடக்கீங்க ..அந்த இடத்தில் நல்ல வேகமாக சுற்றிக் கொண்டிருக்கிறது ..அங்க போய் உட்கார்ந்து பேசி இருக்கலாம் தானே.. ” சொன்னதுமே மித்ரா கணவனை பாசத்துடன் பார்த்தவள் புவனாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு , “அடியே போயிட்டு வரேன்டி ..இன்னும் இரண்டு நாட்களில் நம்ம சந்திக்கலாம்.. நம்ம பேசியதெல்லாம் நினைவில் வைத்துக் கொள் .. ” அவளும் மையமாய் தலையாட்டி வைக்கிறாள்..

“புவனா நான் வீட்டுக்கு போய் உனக்கு போன் செய்கிறேன் .. “

” இல்லடி எனக்கு இன்னைக்கு நிறைய வேலை இருக்கு.. நீயா போன் செய்யாதே.. நானே என் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு உனக்கு நைட் செய்கிறேன் ..” என புவனா அவசரமாய் மறுக்கிறாள்..

“சரி டி நான் உன் போனுக்காக காத்துக் கொண்டே இருப்பேன் ..இல்லா விட்டால் உன்னிடம் பேசவே மாட்டேன் .. “

“குழந்தையும் பிறக்கப் போகிறது.. இன்னும் சின்ன பிள்ளை மாதிரி தோழிகிட்ட வம்பு செஞ்சுகிட்டு இருக்க..அந்த பொண்ணைப் பாரு பரபரன்னு வேலை செய்து கொண்டே இருக்கு ..அதுக்கு வேற நீ போன் செய்து தொல்லை கொடுக்கற .. அதுதான் வேலை முடித்து போன் செய்கிறேன் என்று சொல்கிறாள்ல  பிறகு என்ன.. ” இரண்டு பேருக்கும் சேர்த்து வைத்து பொதுவாய் கடிந்து வைக்கிறான்..

இருவரும் போன் பேசுவது தான் அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லையே ..இப்படி சொன்னாலாவது கோபித்துக் கொண்டு  போன் செய்யாமல் இருக்கிறார்களா என்று பார்க்கிறான்.. கடைசியில், ‘ இவள்தான் அவளை போன் செய்ய சொல்லி அடம் பிடிக்கிறாள் என்று இங்கு தான் தெரிகிறது ..சரி எப்படியும் குழந்தை பிறக்கும் வரை தானே.. அதற்கு பிறகு என்னுடைய மித்ராவுக்கு பிள்ளையை பார்த்துக் கொள்ளத்தான் நேரம் சரியாக இருக்கும் .. இந்த விஷயத்தைப் பெரிது படுத்தக் கூடாது.., என்று விட்டு விடுகிறான்..

அரவிந்த என்னதான் புவனாவைத் தவறாக நினைத்துக் கொண்டாலும் அவளைப் பற்றி நினைத்ததெல்லாம் தவறு என்று பிறகு உணர்ந்து கொள்கிறான்..

மித்ராவுக்கு டாக்டர்  வலி வரவுமே யாரையும் எதிர்பார்க்காமல் காரில் ஏற்றி வேகமாக ஓட்டி வந்து விடுகிறான் ..அவள் உள்ளே வருவதற்குள்ளேயே புவனா கண்டு கொண்டவள் சூழ்நிலையை புரிந்து கொண்டு வேகமாக ஓடி வருகிறாள்..

அங்கு வந்த பிறகு தான் அவனுக்குத் தெரிகிறது ..டாக்டர் ஏதோ அவசர விடுமுறை எடுத்து ஊருக்கு போனது ..புவனாவிடம் கடிந்து கொள்கிறான்..

“என்னம்மா இது உயிர் விஷயம் தானே.. உங்கள் டாக்டர் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள்.. நான் இதை போலிஸில் புகாராக  கூட சொல்லலாம்.. என் மனைவியின் உயிருக்கு ஏதாவது ஆபத்து என்று தெரிந்தது பிறகு நான் ஹாஸ்பிடலையே உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்.. இனி ஒரு நிமிடம் கூட நான் இங்கு இருக்க மாட்டேன்.. வேறு ஏதாவது ஹாஸ்பிடல் அழைத்துப் போகிறேன் .. “

ஆனால் மித்ரா அப்படி அழைத்து செல்லும் சூழ்நிலையில் இல்லை வலியால் துடிக்கிறாள்..

அரவிந்தை தடுத்து நிறுத்தியவள் அவனை சமாதானம் செய்கிறாள்..ஏனோ  சிரிக்கவும் செய்கிறாள்.

” ஏம்மா என்னுடைய நிலைமை உனக்கு சிரிப்பாக இருக்கிறதா .. “

“அண்ணா உங்களுக்கும் மித்ராவுக்கும் தான் இது முதல் பிரசவம் .. அதனால் நீங்கள் பயப்படுகிறீர்கள்.. எங்களுக்கு இதெல்லாம் பழகிப் போன விஷயம். இந்த டாக்டர் இருக்கிறாரே.. முதல்  பத்து பெண்களுக்கு பிரசவம் தொடர்ச்சியாக பார்த்தால், அடுத்த பத்து பெண்களுக்கு ஊரிலேயே இருக்க மாட்டாங்க ..அதை  நாங்கள்தான் பார்த்துக் கொள்வோம் .. “

” அதிலும் நான் தான் தலைமையாய் நின்று  மற்ற நர்சுகளை எல்லாம் சரி செய்வேன் ..நாங்கள் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று பிரசவங்கள் என்றால் நானும் வள்ளியும் ஒன்று, அடுத்த பிரசவங்கள் வேறு வேறு இரண்டு பெண்களுமாய் என்று செய்து விடுவோம்.. இங்கு நாங்கள் இதற்கு தான் படித்து இருக்கிறோம் அண்ணா..”

” எங்களுக்கு இது இலகுவான வேலைதான்.. எங்களை நம்ப மாட்டீர்களா.. ஏன் இப்படி பயப்படுகிறீர்கள் .. அவள் வலியைப் பார்த்தால் வழியிலேயே பிரசவமானாலும் ஆகி விடும் அண்ணா..” தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம் அண்ணா நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள் .. “

பெற்ற தாய் தன் மகனுக்காக பரிதவிப்பதை போல தவிக்கிறாள் புவனா.. அவர்களின் நட்பைக் கண்டு கோபம் வந்தாலும் அவர்களது நட்பில் களங்கம் கிடையாது என்று அவனுக்குத் தெரியும் ..அதனால் அவள் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது.. கொஞ்சம் அமைதியாகிறான்..

“எனக்கு நீ இதை முன்னாலயே சொல்லி இருக்கலாமே புவனா.. இந்த டாக்டர் தொடர்ச்சியாக இருக்க மாட்டாங்க என்று.. இப்பொழுது சொல்கிறாய் பார்.. இனி நான் என்ன செய்வது.. உன்னை நம்பி தான் என் மனைவியும் என் பிள்ளையை விடுகிறேன்.. பத்திரமாக பார்த்துக் கொள்.. “அவள் கையைப் பிடித்துக் கொண்டு அழுகிறான்..

அதைக் கண்டதும் புவனா ஒரு வைராக்கியமாகிறாள்.. ” அண்ணா நான் சொல்வதை நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.. அப்படி அவளுக்கு சிக்கலாக இருந்தால் நான் என் உயிரை கொடுத்தாவது அவளை, குழந்தையை காப்பாற்றுவேன் ..என் மீது சத்தியம்.. ” என்கிறாள் ..

இவ்வளவு காலம் அவள் மீது இருந்த கோபமான ஒரு பிம்பம் சரிந்து ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் அவளை கொண்டு போய் உட்கார வைக்கிறான் அரவிந்த்.. ரொம்ப நன்றிமா என்று கையெடுத்து கும்பிடுகிறான்..

“இதற்கு மேல் ஒரு நிமிடம் கூட நிற்க முடியாது அண்ணா.. இவ்வளவு நேரத்திற்கு வள்ளி உள்ளே எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருப்பாள்.. நான் போகிறேன் தைரியமாக இருங்கள்.. இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்கு என்ன குழந்தை என்று தெரிந்து விடும்.. ” சொல்லி விட்டு ஓடுகிறாள்..

பாவம் இவனைப் போலவே இன்னொரு நபரும் டாக்டர் இல்லாதது தெரியாமல் இங்கு வந்து மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறார்.. புவனா அடுத்த ரெண்டு பெண்களை அனுப்பி விடுகிறாள்.. அந்த பெண்கள் அவரிடம் பேசி அவரை ஒத்துக் கொள்ள செய்து கொண்டிருந்தார்கள் ..அவர் மனைவியின் உயர் தப்பித்தால் கூட  போதும் என்று உடனே ஒத்துக் கொள்கிறார் …டாக்டரின்  துணை இல்லாமல் இன்று எத்தனை பிரசவங்கள் நடக்கப் போகிறதோ..

அவன் பயந்த அளவிற்கு இல்லாமல் பிரசவம் சிறிது நேரத்தில் நடந்து முடிகிறது.. ”  சார் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது..புவனா சொல்லி அனுப்பி விட்டாங்க .. ” அரவிந்த் ஆச்சரியமாய் கேட்கிறான் ..

“என்னம்மா குழந்தை ஏன் இன்னும் வெளியே கொண்டு வரவில்லை.. “

குழந்தையை நன்கு துடைத்து விட்டு எடை போட்டு குழந்தைக்கு அடையாளப் பதிவு சீட்டை கட்டி விட்டு தான் வெளியே கொண்டு வருவோம் .. “

“என்னம்மா இது புதிதாக இருக்கிறது ..இது எல்லாம் ஹாஸ்பிடலிலும் உள்ள நடைமுறைதான்..அவரவர் குழந்தை என்று அடையாளத்திற்காக தான்.. பிறகு ஏதாவது சிக்கலாகி விடும் என்று தான் டாக்டர் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் .. “

இங்கு பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொருவரிடம் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது என்று கூறவும் அவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் …

“அப்படியா நான் பெண் குழந்தையை தான் எதிர்பார்த்தேன் .. என் நல்ல நேரம் என்னுடைய அம்மாவே எனக்கு வந்து பிறந்து விட்டார்கள்.. நீங்கள் நல்ல செய்தி சொன்னதற்காக ஸ்வீட் வாங்கி சாப்பிடுங்கள் என்று சட்டை பையில் இருந்து பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்.. எல்லா பெண்களுக்கும் பகிர்ந்து கொடுத்து விடுங்கள் என்கிறார்..

அவர் முகம் தெரியா விட்டாலும் அவர் குரலை கேட்டு  அரவிந்தன் இப்படி எண்ணிக் கொள்கிறான்..

இவள் தான் ஆண் குழந்தை தான் வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தாள். பெண் குழந்தையை விரும்பும் ஆட்களும் இருக்கிறார்கள். எனக்குமே பெண் குழந்தை தானே ஆசை.. இவள் தான் ஏற்றுக் கொள்ளவில்லை. சரி பரவாயில்லை அவள் எண்ணிய படியே இதோ ஆண் குழந்தை பிறந்து விட்டது .அடுத்தது நான் ஆசைப்பட்ட மாதிரியே ஒரு பெண் குழந்தையை  பெற்க வேண்டியதுதான்..”

அவர் நிறைய பணம் கொடுத்ததாய் அங்குள்ள நர்சு பெண்கள் பேசவும்  அவனுக்கும் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது ..அதே போலவே அள்ளிக் கொடுக்கிறான்.. டாக்டர் இல்லாததால் கண்டிஷன்கள் இல்லாததால் எல்லாரும் பணத்தை வாங்கி மகிழ்கிறார்கள்..
டாக்டர் இருந்தால் இது போல செய்தால் உடனே அவர்களின் பெயர் புகார் பட்டியலில் சேர்ந்து விடும் என்று.. அன்று மட்டுமே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறக்கின்றன. இவன் மட்டும் தான் ஆண் குழந்தை ..மற்ற மூன்றும் பெண் குழந்தைகள்.. எல்லாக் குழந்தைகளுமே நார்மலாக தான் பிறக்கின்றன .அதனால் தான் அரவிந்து நார்மலாக ஆக வேண்டும் என இங்கு கொண்டு வந்து காட்டினான்.. அவர்கள் பயிற்சிகள் எல்லாம் சொல்லிக் கொடுத்து பிரசவத்தை சுலபமாக்கி விடுவார்கள் என்று நம்பிக்கைக் கொடுத்ததால் ..அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page