அத்தியாயம்-8

தனது மகளின் நிலைமையை எண்ணி மினிஸ்டருக்கு கோபம் வர 

உடனே  செந்தில்நாதன் நம்பரை பார்த்து அழைத்து சாந்தமாக தான் பேசினார்.

ஏனென்றால் மகள் சொன்ன விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு தனது மகன் ஒரு பெண்ணை அனைவர் முன்பும் அடித்திருக்கிறான் என்பதிலேயே அவர் அதிர்ந்து விட்டு மினிஸ்டர் இடம் ஆயிரம் மன்னிப்புகளை கேட்டுவிட்டு தான் பார்த்துக் கொள்வதாகவும் இனிமேல் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்கு உறுதி அளிப்பதாகவும் கூறி காலை கட் செய்தார். 

அன்று காலையில் கல்லூரிக்கு வந்த கரண்  யாரிடமும் பேசாமல் எப்பொழுதும் அமரும் இடத்திற்கு சென்று அமர்ந்து கொள்ள

அங்கே அவனுக்காக காத்திருந்த நண்பர்கள் அவனிடம் நலம் விசாரித்து விட்டு பேசிக் கொண்டிருக்க கதிர்வேலுடன் நடந்து வரும்  தன்னவளை பார்த்தவன் அவளை அருகே சென்று கேட்கத் தூண்டும் மனதின் வெறியை அடக்கியவன் அவள் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு அப்பாவும் மகளும்  பார்வையில் இருந்த மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

மகளை வகுப்பறையில் விட்டு விட்டு ஆசிரியரிடமும் பேசிவிட்டு மீண்டும் வெளியே வர வந்தவரை பார்த்த கரண்  நண்பர்களை அழைத்துக் கொண்டு அவரிடம் வர என்னப்பா வேணும் யாரு நீங்க என்றார். 

கரண் கண்ணை காண்பிக்க தேவன் “சார் நான் அபி உடைய சீனியர் தான் அவங்களுக்கு இப்ப பரவாயில்லையா?”  என்றான்.

” இப்ப நல்லா இருக்காப்பா. நீங்க சீனியர்னு சொல்றீங்க கொஞ்சம் அவளை நல்லா பாத்துக்கோங்கப்பா!”  என்றார்.  

“சரிங்க சார் கவலையே படாதீங்க எனக்கு தங்கச்சி மாதிரி நான் பாத்துக்குறேன் நீங்க நிம்மதியா இருங்க!”  என்றான். 

அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அலுவலகத்திற்கு சென்றார். 

அவள் நலமாக இருப்பதை தெரிந்து கொண்ட பின்பு தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

உடனே வேகமாக நண்பர்களிடம் நான் அவள போய் பார்த்துட்டு வந்துடறேன் என்று சொல்லி சென்றவனை பிடித்து இழுத்த தேவா “வேணாண்டா அவதான் உன்ன பார்க்க பிடிக்கலைன்னு சொன்னான்னு சொன்னியேடா?”  என்றான் அவள் மருத்துவமனையில் நடந்து கொண்ட விஷயத்தை மனதில் வைத்து . 

“அவளுக்கு பிடிக்கலடா ஆனா எனக்கு பிடிச்சிருக்கு கவலைப்படாத அவள டிஸ்டர்ப் பண்ணாம தூரத்தில் இருந்து பார்த்துட்டு வந்துடறேன். அவள இந்த ஒரு வாரமா பார்க்காம நடப்பினமா இருந்தேன்.  இப்பதான் எனக்கு உயிரை வந்திருக்கு ப்ளீஸ் டா!”  என்று கெஞ்ச பிடித்திருந்த தேவன் கரண்  கைகளை விட்டான். 

கரண்  அங்கிருந்து வேகமாக தன்னவள் இருக்கும் வகுப்பிற்கு அவள் அமர்ந்திருக்கும் ஜன்னலுக்கு நேராக வந்து நின்றவன் எந்த சத்தமும் எழுப்பாமல் அவளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான் .

அவள் தனது தோழிகளுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தால்.

திடீர் என்று அவளுக்கு ஏதோ ஒன்று தோன்ற இவன் இருக்கும் திசை புறம் திரும்பி பார்க்க வேகமாக ஜன்னலில் இருந்து கீழே குனிந்தவன் அவள் கண்கள் படாத வகையில் அப்படியே இருக்க 

ஏன் யாரோ நம்மள பார்த்த மாதிரியே இருந்தது என்று மனதிற்குள் நினைத்துக் கொள்ள அவளது தோழிகள் அபியின் கவனம் தங்களிடம் இல்லாமல் இருப்பதை உணர்ந்து ” என்னடி ஆச்சு ?” என்றனர். 

” இல்ல ஒன்னும் இல்ல யாரோ பார்த்த மாதிரியே இருந்தது !” என்று மீண்டும் பேச்சை தொடர மெதுவாக கண்களை மட்டும் தெரிவது போல் கரண் அவளை பார்த்தான். 

அவள் மீண்டும் தோழிகளுடன் பேசிக் கொண்டு இருந்ததை கண்டவன் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு தனது வகுப்பறைக்கு சென்றான். 

அவனுடைய நண்பர்கள் அவன் முகம் சாந்தமாக இருப்பதை பார்த்து அவன் எந்த பிரச்சனையும் செய்யாமல் பார்த்து  விட்டு மட்டும் வந்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு அமைதி அடைந்தனர். 

அடுத்த ஒரு வாரத்தில் இன்டர்னல் பரிட்சை ஆரம்பிக்க இது இரண்டாவது பரீட்சை அவன் இவளை தொல்லை செய்யும் பொழுதே முதல் இன்டர்னல் எக்ஸாம் முடிந்துவிட்டது. 

இப்பொழுதெல்லாம் அவன் தூரத்தில் இருந்து பார்ப்பதை இரண்டு நாட்களாக அவளும் கண்டுகொண்டால். 

இந்த பரிட்சைக்கு போன முறை போல் அவனும் தானும் ஒரே வகுப்பறையில் இருக்க வேண்டுமா என்று நினைத்துக் கொண்டே பயத்துடன் பரிட்சை அறைக்குள் சென்று நுழைந்தவள் தனது நம்பர் எங்கிருக்கிறது என்று பார்த்து அமர்ந்து கொள்ள அதேபோல் கரண் வந்தவன் தன்னுடைய நம்பரை பார்க்க சரியாக அவள் அமர்ந்திருந்த அதே டேபிளில் அவன் என்னும் இருந்தது. இருவர் என்னும் இரு மூளையில் இருக்க நடுவே காலியாக இருந்தது. 

அந்த நம்பரையும் அவளையும் மாற்றி மாற்றி பார்க்க அவளும் ஒருவித கலவரத்துடன் அவனைப் பார்த்தால். 

கரண் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன்  பரீட்சை நேரத்தில் அவளுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உணர்ந்து கொண்டு 

அந்த அறைக்கு வந்த ஆசிரியரிடம் தான் வேறு ஒரு இடத்தில் அமர்ந்து கொள்வதாக சொல்ல அவரும் அவன் நன்றாக படிக்கும் பையன் என்பதால் கடைசியில் காலியாக இருந்த முழு இருக்கையையும் கண்டவர் அங்கே அவனை அமர்ந்து பரீட்சை எழுத சொன்னார். 

அந்த ஒரு வாரமும் அனைத்து பரிட்சைக்கும் அவன் அதேபோல் அந்த கடைசி இருக்கையில் அமர்ந்து கொள்ள தினமும் வரும் ஆசிரியரிடம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கடைசி இருக்கையில் அமர்ந்தான்.

இவளுக்கு தான் இரண்டு நாட்கள் நிம்மதியாக இருந்தாலும் மூன்றாவது நாள் அவன் ஒவ்வொரு நாளும் இப்படி ஒவ்வொரு விஷயம் சொல்லி வேறு இடத்தில் அமர்ந்து கொள்வது தான் ஓவராக அவனை வதைக்கிறோமோ என்று தோன்றினாலும்  அவன் அருகில் இருந்தால் தன்னால் நிம்மதியாக பரீட்சை எழுத முடியாது என்று உணர்ந்து கொண்டவள் அமைதி காத்தால். 

அடுத்த ஒரு வாரத்தில் இவர்களுடைய பேப்பரும் திருத்தி கொடுத்து விட போன தடவை எழுதியதை விட இந்த முறை நல்ல மார்க் எடுத்திருந்ததாக ஆசிரியரும் பாராட்ட பரவால்ல நம்ம பாவம் பார்த்து அவனை பக்கத்தில் உட்கார விட்டிருந்தோம்னா கண்டிப்பா இந்த மாதிரி மார்க் வாங்கி இருக்க முடியாது என்று அவளும் மனதில் நினைத்து கொண்டு சந்தோஷப்பட்டால்.  இருந்தாலும் அவன் தன்னை தூரத்திலிருந்து பார்ப்பது ஏதோ ஒரு உணர்வை சொல்லத் தெரியாத உணர்வை அவளுக்கு கொடுத்தது. 

மறுநாள் காலை கல்லூரியில் மிகவும் பரபரப்பாக காணப்பட ஆங்காங்கே மாணவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். 

 அதை பார்த்த மூன்று பெண்களும் குழப்பத்துடன் டிபார்ட்மென்ட்க்கு வர அங்கே நோட்டிஸ் போடும் முன்பு மாணவர்கள் சூழ்ந்த நிற்பதை கண்டு அருகில் சென்று பார்க்க கல்ச்சுரல் ப்ரோக்ராம் பத்தி போட்டு இருந்தது. 

என்னென்ன ப்ரோக்ராம் நடக்கப்போகிறது அதில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அந்த நிகழ்ச்சிக்காக முன்கூட்டியே சில போட்டிகள் நடத்தப்படுவதாகவும் எந்தெந்த ஆசிரியர்களிடம் சென்று பேர் கொடுக்க வேண்டும் எந்த நாள் அந்த போட்டி நடக்கிறது என்று இதுபோல் நிகழ்ச்சி அன்று நடக்கும் விஷயங்களும் நிகழ்ச்சிக்கு முன்பு நடக்கும் விஷயங்கள் பற்றியும் இருந்தது. 

 எதில் சேரலாம் எந்த ஆசிரியரிடம் சென்ற பெயர் கொடுக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தனர். 

இவர்களும் அதை பார்த்துவிட்டு வகுப்பிற்குள் வர அங்கிருந்து ஒவ்வொரு மாணவிகளும் தங்கள் தோழிகளுடன் எதில் சேரலாம்  யாரை பார்க்கலாம் யாரெல்லாம் டான்ஸ் ஆடுறாங்க என்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு இவர்களுக்குள் பேச ஆரம்பித்தனர். 

அபி தோழிகளை  பார்த்து “என்னடி பண்ணலாம் நீங்க ரெண்டு பேரும் எதுலையாவது சேர்றீங்களா?”  என்றால். 

“தெரியலடி என்ன பண்றதுன்னு இதுதானே நம்மளுக்கு முதல் வருஷம் என்ன பண்றாங்கன்னு பார்த்துக்கலாம் வேணா அடுத்த வருஷம் சேர்ந்துக்கலாம் அப்படின்னு தோணுது!”  என்றால் சமிக்ஷா. 

“அதுவும் சரிதான் !” என்று கூறியவள் காலை பெல் அடித்தவுடன் அனைவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்ள முதல் பாடவேளை அவர்கள் வகுப்பாசிரியர் வந்துவிட வருகை பதிவு எடுத்து முடித்துவிட்டு நிகழ்ச்சியை பற்றி பேச ஆரம்பித்தார். 

” ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் கல்ச்சுரல் பத்தி கேள்விப்பட்டு இருப்பிங்க எல்லாத்துலயும் கலந்துக்கோங்க அதே மாதிரி காம்பெடிஷன்ஸும் இருக்கு நிகழ்ச்சிகளும் இருக்கு யார் யாருக்கு எதுல இன்ட்ரஸ்ட் இருக்கோ ஜாயின் பண்ணிக்கலாம் அவங்களுக்கு எல்லாம் ஓடி உண்டு!” 

 அதைக் கேட்ட மாணவர்கள் அனைவரும் ஓ என்று கத்தினர். 

அதைப் பார்த்து சிரித்த ஆசிரியரும் “ஓடி லெட்டர் கொண்டு வந்து கொடுத்தா மட்டும் தான் ஓடி இல்லனா சொல்லிட்டு போனா  நான் ஏத்துக்க மாட்டேன்!  டெய்லி எனக்கு லெட்டர்  வந்தாகணும் அப்பப்ப வந்து நீங்க ப்ராக்டிஸ் பண்றத  நான் செக் பண்ணுவேன்!”  என்று கூறியவர் 

“நீங்க எந்தெந்த காம்படிஷன்ல கலந்துக்கரவங்க பேர் குடுத்துட்டு அந்த மேடம் கிட்ட இருந்து ஒரு அப்ரூவல் லெட்டர் வாங்கி நீங்க என்னைக்கு போறீங்களோ அன்னைக்கு கொண்டு வந்து என்கிட்ட கொடுத்துட்டு ஓடி வாங்கிட்டு போகலாம் !  அதே மாதிரி ப்ரோக்ராம்ஸ் கலந்துக்கரவங்க ப்ராக்டிஸ் பண்றதுக்கு அந்த ஆசிரியர் கிட்டயும் எத்தனை நாள் நீங்க ப்ராக்டிஸ் பண்றதுக்கு வேணுமோ அத்தனை நாள் பர்மிஷன் லெட்டர் வாங்கி கொண்டு வந்து கொடுக்கணும்!  யாரும் ஏமாத்த கூடாது நான் எல்லாரையும் காண்டாக்ட் பண்ணி கேட்டுகிட்டே இருப்பேன் கிளாஸ் ஓபி அடிக்கலாம் என  மட்டும் நினைக்காதீங்க!”  என்றவர் பாடத்தை எடுத்து முடித்துவிட்டு சென்றுவிட 

அடுத்த வகுப்பும் நடந்து முடிந்த பிரேக் பெல் அடிக்க அப்பொழுதும் அதே போல் கரண் ஜன்னல் அருகே நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான். 

அதை உணர்ந்து கொண்டவள் வேகமாக திரும்பிப் பார்க்க அவன் முன்பு போல் விலகாமல் அவள் தற்பொழுது உடல்நலம் நன்றாக இருக்கிறாள் என்பதால் தூரத்தில் இருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை இவளும் கண்டு கொண்டவள் வழக்கம் போல் அவனது பழுப்பு நிற விழிகளில் தொலைய அதை கண்ட தோழிகள் இருவரும்  தங்களுக்குள் பார்த்துக் கொண்டூ” சரி நீ இங்கேயே உட்கார்ந்திட்டு இரு நாங்க போய் தண்ணி குடிச்சிட்டு வரோம் !” என்று இருவரும் எழுந்து கொள்ள

  தோழி வெளியே வந்தால் மீண்டும் கரண்  அவளிடம் பேசி தோழிக்கு ஏதாவது பிரச்சனை செய்வானோ? அவன் நின்று இருப்பதை அவர்களும் கண்டு கொண்டுதான்  அவளை வகுப்பறையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட அவன் உள்ளே நுழைய மாட்டான் அப்படி நுழைந்தாலும் மாணவர்கள் இருக்கும் தைரியத்தில்.

அபியும் சிறிது நேரம்  அமர்ந்து கொண்டிருந்தவள் அப்பொழுது அங்கே அவர்களது வகுப்பு தோழன் ஒருவன் வந்து “அபி உன்ன கிளாஸ் மேம் கூப்பிடுறாங்க !” என்றான். 

“என்னாச்சு சபரி என்னன்னு சொன்னாங்களா?”  என்றால் அவனைப் பார்த்து. 

“தெரியலப்பா நீயே போய் கேட்டுக்கோ சீக்கிரமா வர சொன்னாங்க!”  என்று மட்டும் கூறியவன் தனது இடத்தில் அமர்ந்து கொள்ள இவளும் அவனே பார்த்துக் கொண்டே வெளியே வந்தவள் பார்வையை அவனிடம் இருந்து திருப்பி வேகமாக ஸ்டாப் ரூம் அறைக்குள் அனுமதி வாங்கி நுழைந்தாள். 

அவளைப் பார்த்த வகுப்பாசிரியர் வா அபி  நீ  பரதநாட்டியத்துக்கு பேர் ஏன் கொடுக்கலை?” என்று கேட்டார். 

அதைக் கேட்டு அதிர்ந்தவள் அவரை பார்த்து ” புரியல மேம்?” என்றாள்.

” கல்ச்சுரல்ஸ் ல பரதநாட்டியம் dance இருக்கு. ஏன் உன்னுடைய பெயரை  குடுக்கல உனக்கு தான் டான்ஸ் ஆட தெரியுமே?”  என்று மீண்டும் கேட்டார். 

 இது எப்படி இவர்களுக்கு தெரியும் என்று நினைத்தவள் ” நான் உங்களுக்கு எப்படி ?”…. என்று இழுக்க 

“ஒரு நாள் நீ கிளாஸ்ல ஆடிட்டு இருந்தப்போ நான் பார்த்தேன் அதனால தான் கேட்கிறேன் இந்த வருஷம் ஃபர்ஸ்ட் இயர் இருந்து ஒருத்தர் ஆடனும் இதுவரைக்கும் யாரும் பெயர் கொடுக்கல அதுதான் எனக்கு உன்னுடைய ஞாபகம் வந்தது நீயும் பேர் கொடுத்துட்டு  அந்த ப்ராக்டிஸ் க்கு போ நல்ல ஆடு உனக்கும் கொஞ்சம் நடந்த பழைய சம்பவங்கள் எல்லாம் மறக்கும். டிரஸ் இல்லாமல் இருக்கும்.  கல்லூரி காலத்தில் அழகான நினைவுகளை கிரியேட் பண்ணிக்கோ !” என்றார்.

அவரைப் பார்த்தவள் ” சரி நான் வீட்ல அப்பாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு வந்து உங்க கிட்ட சொல்லட்டுமா? மேம் ! என்றால் தயக்கத்துடன் அவரும் சரி என்று தலையாட்ட 

மீண்டும் வகுப்பறை நோக்கி சென்றவள் தனது தோழிகளிடம் இந்த  விஷயத்தை கூறினால்.

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page